.
ரேஷன் கடை கியூ வரிசைக்காக மண்ணெண்ணை கேன்
வைத்து விட்டுப்போவது போல் –
தமிழகத்தின் முதலமைச்சர் பதவிக்கான கியூவில்
அவரவர் பங்குக்கு – ஆளாளுக்கு பெயரை ” அறிவிப்பு ” செய்து
கொண்டிருக்கிறார்கள். ஆனந்த விகடன் அருமையாக அதை
கார்ட்டூன் வடிவில் தந்திருக்கிறது.
நான் ரசித்தது – நீங்களும் ரசிக்க -கீழே –





யாரோ ஒரு முக்கியமான ஒருவரை மறந்து விட்டார்கள். அதனால் தான் காமெடி இருந்தும் களை கட்டவில்லை. அவரும் போட்டியில் தான் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.
தவறாக அடித்துவிட்டேன், “முக்கியமான நபரை”
எப்படி விட்டார்கள்
புரட்சிக் கலைஞர் விஜய்காந்தை ?
Captain court-la stay vaangi irukkaarey !!! Yaaravadhu FB,Tweeter (even magazine also) message pottanganna , ulla pidichi pottura maathiri case potturuvaanga.
That’s Why Aaa.Vi ignored Captain.
இதை கேள்விப் பட்டதில்லை. நல்லது, அவருக்கும் அவரை சார்ந்த மக்களுக்கும். தமிழகம் புதுதில்லியைப் போல் மாற முடியும் என்றால், மாற்றத்தை இவரால் மட்டும் தான் கொண்டு வர முடியும் என்பது சிலரின் நம்பிக்கை.
அன்பின் கா.மை.
எண்ணொன்பதிலும்
மூவொன்பது இளைஞராய்
இடுகையோ இம்மாதம்
ஏகமாய் முப்பத்தொன்று
நாளேட்டை மிஞ்சும்
வலைப்பதிவுச் சாதனை
இது நாள்தோறும் தொடரட்டும்
உள்ளத்தொய்வு சற்றுமின்றி
இடுகைக்கு அகவை
ஒரு பொருட்டாமோ?
நண்பர் todayandme,
கவனித்து, வாழ்த்தியதற்கு நன்றி.
வயதை மறந்து விட்டுச் செயல்படுவதாக –
உங்களுக்கு வாக்கு கொடுத்திருக்கிறேனே …!
கொஞ்சமாவது செயல்பாட்டைக் கூட்ட வேண்டாமா …!!!
அதான்…..
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
மன்னிக்கவும் Mr. today.and.me.
தங்களின் கற்பனைக் குதிரையை உபயோகபடுத்தியதற்கு.
இருகை நாலெட்டாய் துள்ளும்
இடுகை நாளெட்டைத் தள்ளும்
அறிவை எண்ணாளும் தூண்டும்
அகவை எண்பதைத் தாண்டும்
நண்பர் divmee,
நீங்களும் சேர்ந்து கொண்டீர்களா…. ?
நான் தொலைந்தேன்…..!
இருந்தாலும் – தமிழார்வமும், நல்ல ரசனைகளும் கூடிய
நண்பர்களைப் பெறுவதில் எனக்கு மெத்த மகிழ்ச்சியே..!
நன்றி.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
இடுகைகளும் பின்னூட்டங்களும் தமிழ் வளரவும் தமிழ் அறிவை தூண்டவும் துணை போக உதவும்.
வாழ்த்துக்கள் .