.
முந்தாநாள் வரையில் – Narcissism என்கிற சொல்லிற்கான
சரியான பொருள் என்ன என்று எனக்குத் தெரியாது …!!!
இப்போது தேடித் தெரிந்து கொண்டேன்…. உங்களில்
சிலருக்கு தெரிந்திருக்கலாம். சரி – பிற்பாடு இதற்குள் வரலாம்.
முதலில் –
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா 3 நாள் விஜயமாக இந்தியா
வந்ததும், அதையொட்டி மோடிஜியும் (அதாவது நரேந்திர
தாமோதர் தாஸ் மோடி …) அவரும் கலந்து கொண்ட
நிகழ்ச்சிகள் பற்றியும், அவர்கள் சந்திப்பின் விளைவாக
இந்தியா-அமெரிக்கா இடையே ஏற்பட்ட ஒப்பந்தங்கள்
விஷயமாகவும், வெளிநாட்டு செய்தித்தாள்கள் ( foreign media )
என்ன சொல்கின்றன என்று தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது.
இரண்டு நாட்களாக, பிரிட்டிஷ், அமெரிக்க, பாகிஸ்தான், சீன
செய்தித்தாள்களை எல்லாம் தேடித்தேடி படித்துக்
கொண்டிருந்தேன்.
– வலைத்தளத்திலும் – வலைமக்கள் இது குறித்து என்ன
சொல்கிறார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தேன்.
இந்தியா-அமெரிக்கா இடையே நிகழ்ந்த இந்த சந்திப்பில் –
அணு மின் உலைகள் அமைப்பது,
ராணுவ தளவாடங்களை கூட்டாக உற்பத்தி செய்வது,
ஏற்கெனவே உள்ள கூட்டு ராணுவ ஒத்துழைப்பு சம்பந்தமான
ஒப்பந்தத்தை மேலும் பத்து ஆண்டுகளுக்கு நீடிப்பது
ஆகிய முக்கியமான செய்திகள் அரசு தொடர்பானவை.
பற்பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு, சுமார் 4 பில்லியன்
அமெரிக்க டாலர் அளவிற்கு அமெரிக்காவில்
வேண்டுவதை வாங்கி இறக்குமதி செய்து கொள்ள
இந்தியாவிற்கு கடன் கொடுப்பதாக ஒபாமா அறிவித்தார்.
(ஆஸ்திரேலியாவில் அதானிக்கு நிலக்கரி சுரங்கம் வாங்கவே
ஒரு பில்லியன் டாலர் கடன் கொடுக்க ஏற்பாடு
செய்த இந்தியப் பிரதமருக்கு இது எவ்வளவு பெரிய்ய்ய்ய தொகை !)
இந்த அறிவுப்புகளெல்லாம் எத்தகைய terms and conditions களுடன்
முடிவெடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த விவரங்களை
இந்திய அரசு இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை
என்பதால் அவை வெளியிடப்பட்ட பிறகு அதைப்பற்றி
பேசுவோமே….!!! ( இவற்றில் அணு மின் உலைகள் தொடர்பாக
விவரமாகவே விவாதிக்க வேண்டிய பல விஷயங்கள் உள்ளன …)
மற்ற விஷயங்களை பார்க்கும்போது –
ஏர்-போர்ட்டில், ஒபாமா தம்பதிகளை வரவேற்கப் போன
ந.தா.மோடி அவர்கள் போட்டிருந்த உடை பற்றி கூறும்போது,
ஒரு அமெரிக்க பத்திரிகை கூறுகிறது –
ஒபாமா கிண்டலாக தன் மனைவியிடம் கூறினாராம் –
” மிச்சல், நீ உன் உடை விஷயமாக அவ்வளவு
சிரமப்பட்டிருக்க வேண்டாம் – எப்படியும் மோடி
காஸ்டியூம் எதிரில் உன் உடை எடுபடாது ” என்று.
அமெரிக்காவின் ஸ்டைல் நம்பர் ஒன் – நம்ம ஆளிடம்
முதல் ரவுண்டிலேயே தோற்ற கதை இது….
அடுத்த சந்திப்பு – ராஷ்டிரபதி பவனில் நடந்த
அதிகாரபூர்வ வரவேற்பும், ராணுவ மரியாதை ஏற்பும்.
பெண்கள் இந்திய ராணுவத்தில் முக்கிய இடம் பெற்றிருக்கின்றனர்
என்று ஒபாமா அவர்களுக்கு உணர்த்துவதற்காக பூஜா என்கிற
விமானப்படை பெண் அதிகாரி ஒருவரின் தலைமையில் ராணுவ
மரியாதை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வு அற்புதமாக அமைந்திருந்தது என்றாலும்,
அது உண்மையை பிரதிபலிப்பதாக இல்லை.
அமெரிக்காவைப்போல், இந்தியாவில் ராணுவத்தில் அனைத்து
இடங்களிலும் பெண்களுக்கு இடம் கொடுக்கப்படவில்லை.
அதிகாரிகள் மட்டத்திலும், மருத்துவப் பிரிவுகளில் மட்டுமே –
அதுவும் குறைந்த அளவிலான பெண்களே இடம்
பெற்றிருக்கிறார்கள் என்பது தான் உண்மை நிலை.
அடுத்து ஒபாமா காந்தி சமாதிக்கு சென்றபோது ந.தா.மோடியும்
கம்பெனி கொடுத்திருக்கலாம். தனியாக விட்டு விட்டார்.
(அமெரிக்காவில் மார்டின் லூதர் கிங் நினைவிடத்திற்கு
ந.தா.மோடி போனபோது, ஒபாமாவும் கூடவே போயிருந்தார்…..!! )
ofcourse – நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது….
பாவம் உடை மாற்றுவதற்கு நேரம் தேவைப்பட்டது போலும்…!!
அதன் பின்னர் ஹைதராபாத் ஹவுசில் நடந்த மதிய விருந்து
ந.தா.மோடியால் கொடுக்கப்பட்டது. விருந்தில் என்ன
பரிமாறப்பட்டது என்று நாமெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டாமா ?
கவலையே வேண்டாம்….
டீ குடிப்பது, பாத்ரூம் போவது போன்ற எல்லா முக்கிய
நிகழ்வுகளையும் அவ்வப்போது ட்விட்டர் மூலம்
உலக மகா ஜனங்களுக்கு தெரியப்படுத்தவென்றே
வெளியுறவுத்துறை செயலர் ஒருவர் பணிக்கப் பட்டிருக்கிறார்.
இதோ அவரது ட்வீட்டும், விருந்து மெனுவும் –
இந்த நிகழ்ச்சிக்கும், இதற்கு பின்னர் ஹைதராபாத் ஹவுஸை
சார்ந்த, மிகப்பரந்த, அழகான புல்வெளியில் நடந்து கொண்டே
கதையளக்கவும், அங்கேயே ஒரு சோபாவில் உட்கார்ந்து
கொண்டு ‘டீ’ கலந்து குடிக்கவும் – ந.தா.மோடி அணிந்து
கொண்டு வந்திருந்த உடை உலக அளவில் புகழ் பெற்று விட்டது.
நான் பார்க்க முடிந்த வெளிநாட்டு செய்தித்தாள்களில் எல்லாம்
மிக விவரமாக இதைப்பற்றி அலசி இருந்தார்கள்.
முதலில் லாங்க்-ஷாட் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டே
இருங்களேன் –
குளோசப் -உடன்
அடுத்த பகுதியில் விவரமாக வருகிறேன்…











பின்னீட்டிங்க கே.எம். சார்.
அடுத்த பகுதிக்காக காத்திக்கிட்டுருக்கேன்.
தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிர்ச்சி தான்….
பக்கத்தில் பார்த்தபின்பு தான் பயிரா களையா என்றெல்லாம் சொல்லமுடியும்.
நண்பர் todayandme,
“பின்னூட்ட சக்கரவர்த்தி” என்று ஏற்கெனவே நண்பர்
கண்பத்’தை அழைத்து விட்டேன். உங்களை வேறு
எப்படி அழைப்பது என்று தெரியவில்லை….!!!
“சுவையான” பின்னூட்டம். பாராட்டுக்கள்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
narcissism என்பதற்கு ஆங்கில அகராதிகள் பல விளக்கங்கள் கொடுத்தாலும் சென்னைப் பல்கலைக்கழக அகராதியின் விளக்கம் இங்கு ஆங்கிலம் தெரியாத நண்பர்களுக்குப் பயன்படும் என நினைக்கிறேன்.
——————
narcissism (noun) – தற்பூசனை, தற்காதல், தற்காதற்கோளாறு.
சென்னைப் பல்கலைக்கழக அகராதி,2010, பக்கம் 658
——————–
நண்பர் todayandme,
பெயர் சொல்லி வாழ்த்தவோ, “படவா ராஸ்கல்”
என்று உரிமையுடன் திட்டவோ
முடியாமல் செய்து விட்டது வலைத்தள பழக்க வழக்கங்கள்.
(பெயரோ, வயதோ – தெரியாமல் ஒருவரை எப்படித் திட்டுவது…? ) todayandme என்று அழைத்து திட்டவசதிப்படவில்லை – !!!
உங்களை விளிப்பதற்கென்று உங்களுக்கு வசதியான
ஒரு பெயரைச் சொல்லுங்களேன் …..!!!!
அடிக்கடி பின்னூட்டம் போடும் நண்பர்கள் எல்லாருக்குமே
ஒரு வேண்டுகோள். original பெயர் தான் போட வேண்டுமென்பது
கட்டாயமில்லை. ஆனால், ஒரு புனைப்பெயராவது வைத்துக் கொள்ளுங்களேன். நமக்குள் உரிமையுடன் உரையாட
வசதியாக இருக்கும்….
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
Missing the wood for the trees -What should be of concern is the outcome of the meeting whether it will bring some good for the country or not- — Coming to the dress worn by the P M if you go to any institution , right from the topmost to the lowest person wears a name badge on his person — It is no more an option but a necessity–
How many of the people from the Indian delegation we were able to identify except the Foreign Minister and Foreign secretary -This debate on the PMs suit has gone further into its price and who paid for it — We may heat about it in the days to come —