.
டாக்டர் சுப்ரமணியன் சுவாமிக்கு ஜெ. மீது உள்ள ஆத்திரமும்
வெறுப்பும் அனைவரும் அறிந்ததே…
அவருக்கு பெயில் கிடைப்பதை தீவிரமாக எதிர்த்தவர் சு.சு.
ஆனால் அருண் ஜெட்லி மீது அவருக்கு உள்ள ஆத்திரம் –
பாஜகவில் சிலர் மட்டுமே அறிந்த – பலர் அறியாத விஷயம்.
இப்போது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்துகிறார் –
தன் ட்விட்டர் அக்கவுண்டில் …..
இவற்றில் ஜெ. மீதுள்ள கோபத்தை விட, ஜெட்லி மீதுள்ள
ஆத்திரம் தான் அதிகமாகத் தெரிகிறது…!!!
நாலைந்து நாட்களுக்கு முன்னர் மத்திய நிதியமைச்சர்
அருண் ஜெட்லி அவர்கள் -சென்னைக்கு வந்து
ஜெ. அவர்களை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்தது
செய்திகளில் முக்கியத்துவம் பெற்றது.
இதனால் கடுப்படைந்த சு.சுவாமி தன் ட்விட்டர் கணக்கில்
எழுதியதையும், அவர் அனுமதித்துள்ள சில பதில்களையும்
கீழே காணலாம்……
சரி – அருண் ஜெட்லி அவர்கள் மீது சு.சுவாமிக்கு என்ன கோபம் ….?
தன் 35 ஆண்டுக்கால கனவான,
மத்திய நிதி அமைச்சர் பதவி தனக்கு கிடைக்காமல் இருக்க –
ஜெட்லியே காரணம் என்பது தான்.
சென்ற வாரம், மோடிஜிக்கு தனியே ஒரு கடிதமும் எழுதி
இருக்கிறார்….. வெளிநாடுகளிலிருந்து கருப்புப்பணத்தை
திரும்பக்கொண்டு வர ஜெட்லி எடுத்த நடவடிக்கைகள்
கவைக்கு உதவாது…… தான் கூறும் ஆலோசனைகளின்படி,
இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டுமென்று …..!!!








சுவாமியின் கேள்வியில் என்ன தவறு? ஜெவின் வழக்கே அன்பழகனை கண்டிக்க மட்டுமே என்பது போல் உள்ளதே.?
நண்பர் SSK,
இடுகைத் தலைப்பு –
“சுவாமியின் ஆத்திரம் ஜெ. மீதா இல்லை ஜெட்லி மீதா…?”
இது குறித்து உங்கள் நிலை என்ன …?
அருண் ஜெட்லி போய் ஜெ.யைப் பார்த்தாரா …?
அல்லது ஜெ. போய் ஜெட்லியைப் பார்த்தாரா…?
சு.சுவாமி யாரைக் குறை சொல்ல வேண்டும் …?
யாரைக் குறை சொல்கிறார்…?
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
sir,
facts are stubborn.
history is a cycle.
let us wait and see.
rgs
yogi
ஐயா, உங்கள் கவனத்திற்கு இதை கொண்டு வர விரும்புகிறேன். BCCI / IPL எல்லாம் கறுப்பை வெள்ளையாகும் கொள்ளையர் கூடம் என்பதை மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். BCCI வருமான வரி விலக்கு பெற்றது. IPL அணிகளில் யார் யார் பங்குதாரர், எவ்வளவு சதவீதம் பங்கு வைத்திருக்கின்றனர் என்பதெல்லாம் வெளியுலகுக்கு தெரிய வேவையில்லை, அவர்கள் யாராவும் (உள்நாட்டவர், வெளிநாட்டவர்) இருக்கலாம் என்றெல்லாம் இருப்பது உங்களுக்கு தெரியும்.
அதற்காக தான், பண முதலைகள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் கட்சி பாகுபாடின்றி இணைந்து / சண்டையிட்டு BCCI ஐ தங்கள் கட்டுபாட்டில் கொண்டுவர போட்டி போடுகிறார்கள். இதுவும் இதற்கு மேலாகவும் உங்களுக்கும் இந்த தளத்தை படிப்போரும் அறிவர்.
நான் சொல்லவருவது என்னவென்றால், ஜெட்லி பாஜக தேர்தல் வெற்றி பெறும் வரை இந்த கூடத்தில் ஒருவர். அமைச்சர் பதவி வருகிறது என்று தெரிந்தவுடன் தனது BCCI தொடர்பில் இருந்து வெளி வந்தார்.
அன்று சர்ச்சையை ஏற்படுத்தியதும், இன்று சுப்ரீம் கோர்ட்டினால் குட்டு வைக்கப்பட்ட நிகழ்வுமாகிய ‘சீனி’ ‘சென்னை சுப்பர் கிங்க்ஸ்’ ஒனராகவும், BCCI தலைவருமாக தொடர்ந்து இரு பதவிகள் வகிக்க BCCI சட்டத்தை திருத்திய போது இவரும் தான் ஆதரித்து கையெழுத்து இட்டார்.
நீங்கள் ஜெட்லி பற்றிய உங்கள் பார்வையை ஒரு பதிவாக இடும் போது சுட்டி காட்டாலாம் என்று இருந்தேன் ஆனால் அது சிறிய விடயம் (திருஷ்டி) என்று விட்டுவிட்டேன். ஆனால் இப்போது கறுப்பு பணம் பற்றி வரும் போது சு சுவாமி கூறுவதில் சிறிதேனும் உண்மை இருக்கலாம் என்றே தோன்றுகிறது. காரணம் ஜெட்லியின் தோழர்களும், அவர் முன்னாளில் அங்கம் வகித்த (BCCI) கூட்டணியில் இருப்பவர்களும் நிச்சயமாக இந்த கறுப்பு பண லிஸ்ட்டில் இருப்பவர்கள் என்பது எனது தாழ்மையான எண்ணம்.
சு சுவாமி பற்றிய எனது நிலைப்பாடு உங்களுக்கு நன்கு தெரியும். ஆனால் இந்த விஷயத்தில் சு சுவாமி வெறும் பதவி ஆசையில் தான் இதை சொல்கிறார் என்று முற்றாக கடந்து செல்ல என்னால் முடியவில்லை.
எழில்,
நீங்கள் சொல்வதை நூற்றுக்கு நூறு நான்
ஏற்றுக் கொள்கிறேன். எனக்கும் அந்த கருத்து உண்டு.
அருண் ஜெட்லி ஒரே சமயத்தில் ஏன் இரண்டு படகுகளில்
சவாரி செய்கிறார் ( அரசியல் + கிரிக்கெட் ) என்று
நான் பலமுறை வருத்தப்பட்டது உண்டு.
அருண் ஜெட்லியின் திறமைகளை நான் வியக்கும்
அதே நேரத்தில் – அவரிடம் உள்ள குறைகளையும்
புரிந்து கொண்டிருக்கிறேன். கண்மூடித்தனமாக நான்
யாரையும் ஆதரிக்க மாட்டேன். முடிந்த வரை அவர்களிடம்
உள்ள நல்லவற்றை பாராட்டவும், நல்லன அல்லாதவற்றை
விமரிசனம் செய்யவுமே முயல்கிறேன்.
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி குறித்து –
அவரது அசகாய புத்திசாலித்தனத்தையும்,
விடாமுயற்சியையும்,
தன்னம்பிக்கையையும் நான் வியந்து பார்க்கிறேன்…!
அவரது திறமைகளுக்கு நான் தலைவணங்குகிறேன்.
அதே சமயம், அவரது சுயநல நோக்குடனான
அணுகுமுறைகளும், தீவிர மதவாதப் பேச்சுக்களும்,
எப்போதும் எதிர்மறையாகவே செயல்படுவதும்
– எனக்கு ஏற்புடையனவையாக இல்லை.
நூறு சதவீதம் சுயநலவாதியான அவர் பதவிக்கு வருவது
சமுதாயத்திற்கு ஆபத்தான விஷயம்
அதனால் தான் அவரை விமரிசித்து அதிகமாக எழுதுகிறேன்.
அவரது தகுதிகளைப்பற்றி
எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.
கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வர, அவர் சில
அதிரடித் திட்டங்களை வைத்திருக்கிறார்.
ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்த
பாஜக அரசு முன்வராது.
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. அது தான் என்னை
ஒரு விரிவான விளக்கம் கொடுக்கத் தூண்டியது.
நீங்கள் எப்போதும், எந்தவித தயக்கமும் இல்லாமல்
உங்கள் கருத்தை இங்கு எழுதுங்கள்.
இந்த தளம் – வெளிப்படையான கருத்துப் பரிமாற்றங்களுக்கு
துணை நிற்க வேண்டும் என்பதே என் ஆசை.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
மோடி,ஜெய்ட்லி ,சுவாமி ஆகிய அனைவரும் முற்றிலும் தூய்மையானவர்கள் இல்லை.எதோ ஒரு திட்டத்தின் கீழ்தான் அவர்கள் செயல்பாடு உள்ளது .மேலும் நம் நாட்டில் தேர்தல் என்பது ஒரு கொள்ளி வாய் பிசாசு.அதற்கு கோடிக்கணக்கான ரூபா தேவை.அதை நேர்வழியில் ச்மபதிக்க இயலாது.ஜெயாவை துரத்தி துரத்தி அடிக்கும் சுவாமி மாறன் சகோதரர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? குருமூர்த்திக்கு இவர் உதவுவதில் என்ன சிக்கல்?தயாநிதியை கைது செய்ய என்ன தயக்கம்?ராபர்ட்டை இன்னும் ஏன் விட்டு வைத்துள்ளார்கள்..
யார் சொல்வார்கள் இதற்கான பதில்களை?
ஜி,
தாங்கள் கூறிய லிஸ்ட்டில் உள்ளவர்கள் எல்லாருமே ஆண்கள், ஜெவைத் தவிர. அவர் ஒரு பெண் என்பதாலும், ஒரு பெண் ஆணாகிய என்னை மதிக்காமல் இருப்பதா என்ற ஈகோவாலும், மற்றவர்கள் எல்லாருமே ஆண்கள் என்பதாலும் அவரை மட்டும் குறிவைக்கிறார் என்று கொள்ளலாம்.
அல்லது
ஆண்கள் அவ்வளவு எளிதில் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பாலினம் அல்ல, எல்லாவகையிலும் எதிர்த்து வெற்றியை அடைந்தே தீரவேண்டும் என்கிற ஈகோ உடையவர்கள், அவர்களை எதிர்த்தால் தன் கதி அதோ கதி என்று உணர்ந்திருக்கிறார் என்றும் கொள்ளலாம்.
அல்லது
தனக்கு சமமான எதிரியுடன் தான் மோதவேண்டும் என்ற நேர்மைப்போக்கு (!) காரணமாக இருக்கலாம்.
என்ன என்பது சுவாமிக்குத் தான் வெளிச்சம்.
நன்றி நண்பரே! நம் ஆயுள் முழுவதும் இப்படி ஊகிப்பதிலேயே செலவழிந்து விடும் என நினைக்கிறேன்.அம்மா,தாத்தா இருவரையும் உடனடியாக பகைத்துக்கொள்ள பா.ஜ.க விரும்பவில்லை என்று தெரிகிறது.சுவாமி மூலம் அழுத்தம் கொடு ஜெயிட்லி மூலம் ஒத்தடம் கொடு என்பது அம்மாவிற்கும்,குருமூர்த்தி மூலம் அழுத்தம் கொடு சிபிஐ மூலம் ஒத்தடம் கொடு என்பது தாத்தாவிற்கும் பயன்படுத்தப்படும் formula எனத் தோன்றுகிறது.,
கவுண்டமணி ஒரு படத்தில் சச்சின், ஜாக்கி சான், சதாம் உசேன் ஆகியோருக்கே அவரவர் துறையில் வெல்வது எப்படி என்று பேசியில் ஆலோசனை கூறுவது போல பாவலாக் காட்டுவார். கட்டுரையின் கடைசி வரிகளைப் படிக்கும்பொழுது எனக்கு அந்த நகைச்சுவைக் காட்சிதான் நினைவுக்கு வருகிறது.