மத்திய அரசுக்கு எச்சரிக்கை – நம்மாழ்வார் மறையவில்லை … ( ம.தெரியாதா-பகுதி-2 )

.

மத்திய அரசுக்கு எச்சரிக்கை – நம்மாழ்வார் அய்யா
மறையவில்லை … நிறைய வாரிசுகளை உருவாக்கி விட்டுத்தான்
சென்றிருக்கிறார். தங்கள் மண்ணைக் காக்க மக்களுக்குத் தெரியும்.
மக்களுக்கு விரோதமான திட்டங்களை மத்திய அரசு
தானாகவே முன்வந்து கைவிடுவதே சிறந்த வழி ….

——–

மீத்தேன் வாயு எடுப்பது குறித்து மேலும் சில விவரங்கள் –

இந்த திட்டத்தின் பின்னே – மறைக்கப்பட்ட இன்னொரு
சதிகாரத் திட்டம் இருக்கிறது. காவிரிப் படுகையின் கீழே
மாபெரும் நிலக்கரிச் சுரங்கத்தை கண்டறிந்திருக்கிறார்கள்.

நிலக்கரிச் சுரங்கத்தின் பாறை இடுக்குகளில் உள்ள மீத்தேன்
எரிவாயுவை முதலில் வெளியே எடுத்தாக வேண்டும்.
இல்லையென்றால் நிலக்கரி சுரங்கத்தை தோண்டும்போது
தீ விபத்துகள் ஏற்படும்.. ஆகவே, உள்ளே இருக்கும் மீத்தேன்
எரிவாயுவை முதலில் வெளியேற்றி விட்டால் பின்னர்
நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவது சுலபமாக இருக்கும்..

நிலக்கரி சுரங்கத்தைப் பற்றி எதுவுமே பேசாமல்,
மீத்தேன் வாயுவை வெளியே எடுப்பது பற்றி மட்டும் தான்
இப்போதைக்குப் பேசி வருகிறார்கள்.

மீத்தேன் எரிவாயு பூமிக்குள்ளே -பாறைகளுக்கிடையே
சிக்கி இருக்கிறது. வயல்களில் போர்வெல் அமைப்பது போலவோ,
எண்ணைக் கிணறுகள் தோண்டுவது போலவோ –
மீத்தேன் வாயுவை எடுத்துவிட முடியாது.
அதற்கு பூமிக்கும் கீழே உள்ள பாறைப் பரப்பை உடைக்க
வேண்டும்.

பூமியின் உள்ளே கிலோமீட்டர் கணக்கில் துளையிட்டு வேதிக்
கரைசல்களை உயர் அழுத்தத்தில் செலுத்தி பாறைகளை
உடைக்க வேண்டும் (Hydraulic fracturing) .
இதற்கு, முதலில் அந்த இடத்தில் நிலத்தடி நீரை முற்றிலும்
வெளியேற்றினால்தான் திட்டத்தையே செயல்படுத்த முடியும்.

நிலத்தடி நீரை வெளியேற்றிவிட்டால், இவர்கள் மீத்தேன் எடுத்து
முடிப்பதற்குள் இந்தப் பகுதியின் நிலத்தடி நீர்வளம் நாசமாக்கப்பட்டு
பூமியின் கீழ் ரசாயனக் கழிவுகள் செலுத்தப்பட்டு,
பூமியின் மேலே நிலம் நஞ்சாகிவிடும்.

மக்கள் வேறு வழியே இல்லாமல் நிலங்களை கிடைத்த
விலைக்கு விற்றுவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம்
ஏற்படும். பிறகு, பெரிய அளவிலான எதிர்ப்புகள் எதுவும்
இல்லாமல் நிலக்கரிச் சுரங்கங்களைத் தோண்ட முடியும்.
அடுத்த சில ஆண்டுகளுக்கான திட்டம் மீத்தேன் எரிவாயுவை
எடுப்பது தான் என்பதால், அதன் பெயரை மட்டும்
இப்போது வெளியில் சொல்கின்றனர்.

மக்களின் எதிர்ப்பையும், தமிழ்நாடு அரசின் தடையையும் மீறி
இப்போதே சில இடங்களில் குழாய்கள் தோண்டப்படுகின்றன.
எதிர்ப்பு காரணமாக, ஈஸ்டர்ன் நிறுவனத்தின் பெயரைப்
பயன்படுத்தாமல், ஒ.என்.ஜி.சி-யின் (Oil and Natural Gas
Corporation) பெயரால் குழாய் பதிக்கும் பணிகள்
மேற்கொள்ளப்படுகின்றன.

geecl-logo

ஓ.என்.ஜி.சி-யும், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் இணைந்துதான்
செயல்பட்டு வருகின்றன. இதற்கு முந்திய ராணிகஞ்ச் திட்டத்தில்
ஓ.என்.ஜி.சி-யின் 25 சதவீத பங்குகளை கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனம் வாங்கி இருக்கிறது. இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை
ஓ.என்.ஜி.சி-யும், கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனமும் பங்காளிகள்(co-operators).

எனவே ஈஸ்டர்ன் நிறுவனத்திற்காக பணியை
பல இடங்களில் ஓ.என்.ஜி.சி. அமைப்பே செய்து வருகிறது.
இந்த திட்டத்திற்கான தற்போதைய பெயர் தான் ‘மன்னார்குடி பிளாக்’ …!

முதன் முதலில் இந்த மீத்தேன் வாயுத் திட்டத்துக்காக
2010-ல் கிரேட் ஈஸ்டர்ன் நிறுவனத்துடன் அப்போதைய
காங்கிரஸ்-திமுக கூட்டணி – மத்திய அரசு ஒப்பந்தம்
மேற்கொண்டது. 2011-ல் அப்போதைய மாநில (தி.மு.க.)
அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.

இந்த Great Eastern Energy Corporation Ltd (GEECL)
நிறுவனத்தைப் பற்றிய சில தகவல்கள் –
(சில விவரங்கள் மர்மமானவை என்றாலும்,
வெளிப்படையாகத் தெரியும் சில விஷயங்களை மட்டும்
கீழே தந்திருக்கிறேன்.

இது ஒரு தனியார் நிறுவனம்.
ஹரியானா மாநிலத்தில் குர்கானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் நோக்கமாக அந்த கம்பெனியால்
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பது –

“The project aims to extract methane gas from coal-bed using
hydraulic fracturing method
of hydraulic fracturing in the Kaveri river basin”.

தமிழ் நாட்டின் நாகப்பட்டினம், தஞ்சாவூர் மற்றும்
திருவாரூர் மாவட்டங்களில் 667 (அறுநூற்று அறுபத்தி ஏழு )
சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவுக்கு தங்கள் பணியை
மேற்கொள்ள 2011-ல் முந்திய திமுக அரசாங்கம்
இந்த நிறுவனத்திற்கு அனுமதி கொடுத்திருக்கிறது.

துவக்கத்தில் 150 முதல் 450 மீட்டர்
( அதாவது சுமார் அரை கிலோமீட்டர் ) ஆழம் வரை
ஆழ்துணைக்கிணறுகளைத் தோண்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

-அடுத்த தகவல் கொஞ்சம் யோசிக்க வைப்பது …!

இந்த கம்பெனியின் சேர்மன் மற்றும் முக்கிய தலைமை
அதிகாரியின் பெயர் – (Chairman and Chief Executive Officer)
(இவர் தான் இதன் சொந்தக்காரர் என்று சொல்லலாம்… )

திருவாளர் யோகேந்திர குமார் மோடி …!!!
( தற்போதைக்கு இவர் பெறும் (அல்லது எடுத்துக் கொள்ளும் )
ஆண்டு சம்பளம் சுமார் 2,35,92,100 (அதாவது இரண்டு கோடியே
முப்பத்தைந்து லட்சம் ரூபாய் ….!!!).

இவருக்கு அடுத்ததாக தலைமைப் பதவியில் இருப்பவர் –
President and Chief Operating Officer –
திருவாளர் பிரசாந்த் மோடி ….!!!
அவரது ஆண்டுச் சம்பளத் தொகை –
சுமார் 1,14,37,400 (அதாவது ஒரு கோடியே பதினான்கு லட்சம்
ரூபாய் …!!!)

இந்த மீத்தேன் எரிவாயுத் திட்டம் குறித்து –
மேற்மொண்டு அவசியம் நேரும்போது,
மீண்டும் இந்த தளத்தில் சந்திப்போம்…!!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to மத்திய அரசுக்கு எச்சரிக்கை – நம்மாழ்வார் மறையவில்லை … ( ம.தெரியாதா-பகுதி-2 )

  1. S.Selvarajan's avatar S.Selvarajan சொல்கிறார்:

    Thiru Yogendhira kumar Modi …….! Thiru Prasanth Modi …..!! Thiru Narendhira Modi ….. ?

  2. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ஆனால் இது காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கும்போது
    முடிவான திட்டம் …..!!!

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • S.Selvarajan's avatar S.Selvarajan சொல்கிறார்:

      இது காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கும்போது
      முடிவான திட்டம் …..!!! இருக்கட்டும் ….” நமோ ” என்ன செய்ய போகிறார் என்பதுதான் கேள்விக்குறி …..?

      • today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

        // நமோ ” என்ன செய்ய போகிறார் என்பதுதான் கேள்விக்குறி …..? //

        காங்கிரஸ் பினாமி போட்டுவைத்த ராஜபாட்டையில் இப்பொழுது பாஜக…

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர்கள் அனைவருக்கும்,
    அவர்களது இல்லத்தவர்களுக்கும் –

    இனிய பொங்கல் வாழ்த்துக்கள்….

    -காவிரிமைந்தன்

  4. Siva's avatar Siva சொல்கிறார்:

    It will be good to scrap this plan and focus more on how to improve rice production in this region. If there is no rice, there is no life!
    Instead of focussing on gas extraction, they can think about how to utilize sun power to get solar energy cheaply. The other alternative is a biofuel production from sugarcane or other agricultural products. This will improve quality of farmers and agricultural laboreres. Currently, sugar cane is sold in cheap price because we do not know how to crush it faster to get more processing. This will be a greener energy. Good for all. I am preparing a proposal how to start a sugar cane based biofuel generation.

  5. புது வசந்தம்'s avatar புது வசந்தம் சொல்கிறார்:

    நல்ல பதிவு, இதன் பாதிப்பு வெறும் காவேரி படுகையோடு முடிந்து விடாது.
    இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  6. yarlpavanan's avatar yarlpavanan சொல்கிறார்:

    தை பிறந்தாச்சு
    உலகெங்கும் தமிழ் வாழ
    உலகெங்கும் தமிழர் உலாவி வர
    வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!

  7. today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

    காவிரி நதிநீர்ப் படுகை இருந்தால்தானே
    விவசாயம் செய்யவேண்டும்.
    அதற்குத் தேவையான காவிரிநீர் வேண்டும்.
    காவிரிநீர் வரத்துக்கு வழியான காவிரிநதி வேண்டும்.
    காவிரிநதி நீர்ப் பங்கீடு வேண்டும், ஒதுக்கிய நீரைத் திறந்து விட கர்நாடகத்தைக் கெஞ்சவேண்டும்.
    படுகையே இல்லாமல் செய்துவிட்டால்…..!

    மிகப்பெரிய கார்ப்பரேட் நண்பர்களுக்கு அழிக்கும் அலாட்மெண்ட்டைக் கொடுத்துவிட்டு அவர்களிடம் பிரதிபலனாக பணமாகவோ பொருளாகவோ தனி விமானமாகவோ எதையாவது அனுபவித்துக்கொள்ளலாம். அவர்களுக்குத் தேவையானது பணியோடு புகழும் பணமும் நிலக்கரியும் வாயுவும் எண்ணையும்.

    இடையில் யார் தடுக்கமுடியும். விவசாயிகளா? விடுங்கள். கொஞ்சநாள் கஞ்சித்தொட்டி வைத்துப் போராட்டம் பண்ணுவார்கள். இப்போது தற்கொலை முயற்சிகூட குற்றத்தில் சேர்த்தி இல்லை. முயற்சிசெய்தார்கள், தற்கொலை செய்துகொண்டார்கள் என்று மொத்தமாக முடித்துவிடுவார்கள். அதற்குள்ளாகவே பிரச்சினை பண்ணினால்…… என்னசெய்வது?

    நம்ம திருவாரூர்க்காரர்தான் தமிழ்நாட்டில் முதல்வராக இருக்கிறார், கேட்டால் தமிழ்நாட்டை எழுதித்தராவிட்டாலும் திருவாரூரையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் எழுதித்தந்துவிடுவார். அவருக்குத் தமிழன் யானை மாதிரி, இருந்தாலும் ஆயிரம் பொன்-இறந்தாலும் ஆயிரம் பொன்.

    காங்கிரஸ் பினாமி போட்டுவைத்த ராஜபாட்டையில் இப்பொழுது பாஜக…

    இதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கவேண்டும் என்றும் அதை கெசட்டில் கொண்டுவந்துவிட்டோம் என்றும் பெருமைப்படுபவர்களைப் பார்த்தால் கண்ணில் நீரோடு சிரிப்புத்தான் வருகிறது.

    கெசட்டும் ஆணையமும் இருக்கும் தமிழ்நாட்டுக்காக
    நதியும் நீரும் இருக்கும் கர்நாடகத்துக்காக.

    ம்ம். இந்த நுண்ணரசியலைக் கரைத்துக்குடித்த சாணக்கிய நரியிடம் மற்ற அரசியல்வாதிகள் கற்கவேண்டியது நிறைய.

    மீண்டும் தலைப்புக்கு வருகிறேன்.
    மந்திரிக்குத் தெரியாதா? இது எப்பேற்பட்ட மோசடித்திட்டம் என்று?
    தெரியும். எல்லாம் தெரிந்ததினால்தான் தெரியாது-இனிமேல்தான் ஆராயவேண்டும்-நல்லதிட்டம்தான்-உங்களுக்கெல்லாம் தீங்காக மாறாது என்றெல்லாம் பொய்சொல்லி சமாளித்துக்கொண்டிருக்கிறார்.

  8. today.and.me's avatar today.and.me சொல்கிறார்:

    சாப்பிடும் அரிசியை குண்டூர் அரிசி, கர்நாடகா பொன்னி என்று சொல்லிப் பழகிவிட்ட நம்மவர்களுக்கு இரட்டைக்காய்ச்சல், ஐஆர் 8, ஐ ஆர் 20, கருணா என்பதெல்லாம் மறந்துவிட்டிருக்கும், சரி, தின்கிற சோற்றில் உப்புப்போட்டுத்தானே சாப்பிடுகிறார்கள். உரைக்காதா என்ன?

    2010 புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புகைப்படத்தோடு அறிக்கையாகவும் சாதனையாகவும் வெளியிட்ட நாளிதழ்கள், இதைப்பற்றியெல்லாம் இவ்வளவு விளக்கமாக தமிழர்களுக்கு அறிவுறுத்தவும், மற்றவர்களுக்கு எச்சரிக்கைவிடவும் வேண்டிய தமிழ்ப் (புலனாய்வுப்….!) பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் இதுவரை குரைக்கவில்லை என்பது வருத்தமாகத்தான் இருக்கிறது.

    ———–
    கா.மை. உங்கள் பெயருக்கு ஒரு நீதி செய்திருக்கிறீர்கள், இந்த மந்தி(ரி)யால்.
    நன்றி.
    ———–

  9. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் todayandme,

    இந்த மந்திரியை நேற்று ஒரு பொது நிகழ்ச்சியில்
    மிக அருகில் நேரில் சந்திக்க நேர்ந்தது. ஐந்து நிமிடங்களுக்கு மேல்
    அவரை கவனித்துக் கொண்டிருந்தேன்.

    ஒரு வருடம் முன்பாகவும் அவரை இன்னொரு நிகழ்ச்சியில்
    மிக அருகில் பார்த்திருக்கிறேன் / கவனித்திருக்கிறேன்.

    அடேயப்பா அவர் body language -ல் தான் எவ்வளவு பெரிய
    வித்தியாசம் …!!! (கூட இருந்த ஆட்களிடமும் கூடத்தான்….!! )

    இடைப்பட்ட காரணம் ஒன்றே ஒன்று தான் –
    சென்ற வருடம் அவர் ஒரு சாதாரண மனிதர்.
    தேர்தலை முன்னிட்டும், கூட்டணி அரசியலை முன்னிட்டும்
    எல்லார் காலையும் பிடித்துக் கொண்டிருந்தார்.

    இப்போது அவர் மந்திரியாகி விட்டார்….!!!

    அடேயப்பா – பதவி மனிதரை எந்த அளவிற்கு மாற்றி விடுகிறது …!!!

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  10. புது வசந்தம்'s avatar புது வசந்தம் சொல்கிறார்:

    நிறம் மாறும் மனிதர்கள்…

  11. S.Selvarajan's avatar S.Selvarajan சொல்கிறார்:

    பதவி வரும்போது ” பணிவும் வரவேண்டும் …. துணிவும் வரவேண்டும் ” தோழா — என்று எம்.ஜி.ஆர். பாடியது பதவியில் உள்ள பலருக்கும் நினைவில் இருக்கவேண்டும் …. !

  12. இ.பு.ஞானப்பிரகாசன்'s avatar இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

    காவிரிமைந்தன் ஐயா!

    இந்த மீத்தேன் திட்டம் பற்றி எத்தனையோ பேர் பதிவிட்டிருக்கிறார்கள். விழிப்புணர்வு விழியப் பதிவு கூட வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால், இந்தப் பதிவில் தாங்கள் கூறியிருக்கும் ‘மோடி’ தகவல் இது வரை அரசல் புரசலாகக் கூடக் கேள்விப்படாதது!! நன்றி ஐயா!

  13. இ.பு.ஞானப்பிரகாசன்'s avatar இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

    மேற்கண்ட கருத்தில் குறிப்பிட மறந்த ஒன்று:

    ஐயா! ‘மோடி தகவல்’ பற்றி மட்டுமில்லை, இந்தத் திட்டமே உண்மையில் நிலக்கரி எடுப்பதற்கானதுதான் என்பதையும் இதுவரை யாரும் கூறவில்லை. நிலக்கரி எடுப்பதுதான் இந்தத் திட்டத்தின் மூல நோக்கம் என்றால், எனக்கொன்று தோன்றுகிறது.

    இதே தளத்தில், இதற்கு முன், ‘அதானி ஆத்திரேலியாவில் தொடங்கவிருக்கும் நிலக்கரிச் சுரங்கம்’ பற்றிய பதிவில், நிலக்கரி விலையே தற்பொழுது குறையத் தொடங்கியிருப்பதாலும், மேலும் சில காரணங்களாலும் உலக அளவில் நிலக்கரிச் சுரங்கங்கள் மூடப்பட்டு வருவதாகத் தெரிவித்தீர்கள். அது மட்டுமில்லாமல், இந்தியாவும் இன்னும் சில ஆண்டுகளில் நிலக்கரி இறக்குமதியை நிறுத்தப் போவதாக அறிவிப்பு வெளியாகியிருப்பதாகவும் கூறியிருந்தீர்கள். ஆகவே, இதன் மூலம் மக்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது! வரும் நாட்களில், “நிலக்கரிச் சுரங்கத்தின் பெயரைச் சொல்லி, இதனால் நாட்டுக்கு நன்மை; நிறைய நிலக்கரி கிடைத்தால் நிறைய எரிபொருள் கிடைக்கும்; நிறைய அனல்மின் நிலையங்கள் தொடங்கலாம்; நாட்டையே மின்சாரத் தடையற்ற நாடாக மாற்றலாம்” எனவெல்லாம் அரசும், அரசுத் தரகர்களும் பேசத் தொடங்குவார்கள். நம் ஊடகங்களும் அந்த நாடகங்களுக்கு ஒத்து ஊதும். நிறைய விளம்பரமெல்லாம் ஒளிபரப்புவார்கள். உடனே, நம் மக்களும் இதனால் உழவர்களுக்கோ தம் சோற்றுக்கோ வரவிருக்கும் ஆபத்தை மறந்து மின்சாரமே அடிப்படைத் தேவையெனத் திட்டத்துக்கு ஆதரவளிப்பார்கள். இதே நிலைதான் இடிந்தகரை அணுமின் நிலையப் போராட்டத்திற்கும் ஏற்பட்டது. எனவே, இப்பொழுதே இது பற்றிய விழிப்புணர்வு பரப்பப்பட வேண்டும்! இதனால் எந்தப் பலனும் இல்லை; அப்படியே இத்தனை சதுர கிலோமீட்டர் பரப்பளவு வேளாண் நிலத்தை நாம் மின்சாரம் போன்ற தேவைகளைக் கருதி நாட்டுக்குத் தாரை வார்த்தாலும், அப்படி எடுக்கப்படக்கூடிய நிலக்கரியால் எந்த இலாபமும் இல்லை என்பது முதலில் நம் மக்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்!

    நான் கூறுவது சரியா ஐயா?

    • Siva's avatar Siva சொல்கிறார்:

      Very true sir! First, we should realize one thing that electricity is not basic commodity, but food is very basic commodity. First food, then only anything else. I am not discouraging plans for power generation, but do not add fuel to the stomach fire of farmers. Agriculture and animal farming are the two processes been vital for survival of human race. These processes have been developed over periods of at least >3000 years ago, as per the evidence from Thirukkural. The modern technologies have been made available in 200 years only. Most of these technologies are for making our life easy and less working model. But food is fundamental need for life. I do not think that we can make foods in factory without input from agriculture farming.

      • இ.பு.ஞானப்பிரகாசன்'s avatar இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

        //I am not discouraging plans for power generation, but do not add fuel to the stomach fire of farmers// – அருமையாகச் சொன்னீர்கள்!

    • Siva's avatar Siva சொல்கிறார்:

      Why not modis encourage a solar power system in TN? Why should he use his influence to establish solar power only in Gujarat? The useless mu.ka and j.j cannot do this because they are not cared for it.

      • இ.பு.ஞானப்பிரகாசன்'s avatar இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

        அட, தமிழ்நாட்டில் இப்பொழுது அவ்வளவு ஒன்றும் வெயில் இல்லையே! மாறாக, மீத்தேன் திட்டத்தையும், நிலக்கரிச் சுரங்கத் திட்டத்தையும் நிறைவேற்றி முடித்தால், மொத்த மாநிலமும் பாலையாகி, வெயில் சுட்டெரிக்கும் இல்லையா? அப்பொழுது தொடங்கலாம் இந்த வெயில் மின்சாரம் போன்றவற்றையெல்லாம் எனத் திட்டமிட்டிருக்கிறாரோ என்னவோ? சும்மாவா சொன்னார்கள் அவர் தொலைநோக்குப் பார்வையுடையவர் என்று? எவ்…வளவு தொலைநோக்கு பாருங்கள்!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் ஞானப்பிரகாசன்,

      உணவில்லாமல் எந்த உயிரும் இல்லை.
      விவசாயத்தை விட அதி முக்கியமான தொழில் உலகில்
      எதுவுமே இல்லை. எனவே, விவசாயத்தை, விவசாயிகளை – பாதிக்கக்கூடிய எத்தகைய செயல்களையும் நம்மால்
      ஏற்றுக் கொள்ள முடியாது. இது தான் அடிப்படை…
      சரி தானே …?

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • இ.பு.ஞானப்பிரகாசன்'s avatar இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

        ஆம் காவிரிமைந்தன் ஐயா! வேளாண்மையை விட அடிப்படைத் தொழில் வேறு எதுவும் இல்லை. எனவே, அதற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் இத்தகைய திட்டங்களை ஏற்கக்கூடாது என்பதுதான் நான் கூற விழைவதும். ஆனால், நான் கூறியதற்கும் தாங்கள் கூறுவதற்கும இடையிலுள்ள ஒரு சிறு மாற்றம் என்னவெனில், வேளாண்மை பாதிக்கப்படும் எனக் கூறினால் மட்டும் போதாது; அப்படியே ஒருவேளை வேளாண்மை பாதித்தாலும் பாதிக்கட்டும் நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி என நம் உழவர்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது; எனவே, அப்படி ஒரு முடிவை நம் மக்கள் எடுத்தால், அந்த ஈகத்தால் (தியாகம்) எந்த ஒரு பயனும் விளையப் போவதில்லை என்பதையும் சேர்த்து அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதே! பதிலளித்ததற்கு நன்றி ஐயா!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.