மஹாபாரதத்தின் சகுனி பாத்திரத்திற்கு சற்றும் குறையாத
சுப்ரமணியன் சுவாமி திடீரென்று ரஜினிக்காக சோழியை
உருட்ட ஆரம்பித்திருக்கிறார்.
ரஜினி குறித்த அவரது லேடஸ்ட் ட்வீட் கீழே –
பாஜக வில் உள்ள ரஜினி ரசிகர்கள் ( !!! ??? ) ரஜினி “திவால்”
ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள்
விடுத்திருக்கிறார்.
ரஜினி திவால் ஆகும் நிலையிலும் இல்லை –
பாஜக வில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு
ரஜினி ஆதரவாளர்கள் யாரும் இருப்பதாகவும் தெரியவில்லை.
இது நம்மை விட –
டாக்டர் சு. சுவாமிக்கு நன்றாகவே தெரியும்….
இருந்தும் இப்படி ஒரு ட்வீட்……!!!
சோழியை உருட்டி இருக்கிறார் – சுப்ரமணியன் சுவாமி….!!!
எதை எதிர்பார்த்து என்பது
இனிமேல் தான் தெரிய வேண்டும்.
சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தி எப்படியாவது
ரஜினியை பாஜக விற்குள் கொண்டு வந்து விட முயற்சிகள்
நடக்கின்றன….!!!





நடக்கட்டும் நடக்கட்டும்! ரஜினி மீது மக்களுக்கு ஏற்கெனவே மதில் மேல் பூனை மனப்பான்மை இருக்கிறது. அதாவது, நல்ல நடிகர், நல்ல மனிதர் என்றாலும் அரசியலுக்கு இவர் எந்த அளவுக்குச் சரிப்பட்டு வருவார், எந்த அளவுக்குத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்பதாக. ரஜினி பா.ஜ.க-வில் இணைந்து விட்டால், அவர் பற்றி மக்கள் ஒரு சரியான இறுதி முடிவுக்கு வர அது மிகவும் உதவியாய் இருக்கும். 🙂
avaraip pondiyaakka avarathu kudumbame pothum . avarathu rasikarkal avarukku kaamadhenu .
arasiyalil nulainthaal athanayum ambel aaki meendum kanductor aavaar