தவறு நடக்கும்போது சுட்டிக் காட்டும் நாம்,
அதே போல் – நல்லது நடக்கும்போது
பாராட்டவும் செய்ய வேண்டுமல்லவா …?
அதுவும் வேறு எந்த நிகழ்வுகளும் வந்து நம் கவனத்தை திசை திருப்பும் முன்னரே சூடாகப் பாராட்டி விட வேண்டும் என்பதற்காகவே அவசரமாக இந்த இடுகை.
கொஞ்ச நாட்கள் (வருடங்கள் ..?) முன் டிவியில் ஒரு
விளம்பரம் வரும் -” கலக்கரே சந்துரு” என்று.
நாங்கள் அலுவலகத்தில் அடிக்கடி அந்த வார்த்தையை
பயன்படுத்திக் கொண்டே இருப்போம். யாராவது
எதையாவது வித்தியாசமாகச் செய்து விட்டால் உடனே
நாங்கள் சொல்வது “கலக்கறே சந்துரு” தான்.
ஜப்பானில் பிரதமர் மோடி கலக்கிக் கொண்டிருக்கிறார்.
எதற்கெடுத்தாலும் மேற்கேயே பார்த்துக் கொண்டிருந்த
மக்களை – முதல் தடவையாக கிழக்கே
பார்க்க வைத்திருக்கிறார்.
ஜப்பான் விஜயத்தில் – ஒரே கல்லில் இரண்டு மாங்கா –
அல்ல – பல மாங்கனிகள்….!!!
இதுவரை எந்த பிரதமரும் செய்யாத ஒரு விஷயம் –
ஒரே பயணத்தில், ஒரே நாட்டிலிருந்து இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு பெறுவது ( இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் – இது கடன் அல்ல …. முதலீடு – வெளிநாட்டு மூலதனம் உள்ளே வருகிறது …!) அதுவும் முக்கியமாக infrastructure development -க்காக…
-மும்பை -அஹமதாபாத் புல்லட் ட்ரெயின் – இது அவசியமா என்று கேட்பவர்கள் இருப்பார்கள். ஆனால் எனக்கு தோன்றுவது –
ஐந்து காசு கூட நம்முடைய முதல் கிடையாது .
முழுவதும் அவர்கள் முதலீடு.
ஜப்பானிய தொழில் நுட்பம் (டெக்னாலஜி) நமக்கு
பரிச்சயமாகிறது. ஆயிரக்கணக்கில் நமது இஞ்சினீரிங்
பட்டதாரிகளுக்கும், ஸ்கில்டு தொழிலாளர்களுக்கும் வேலை கற்றுக் கொள்ளவும், செய்யவும் – வாய்ப்பு உருவாகிறது……
அடுத்து – ஸ்மார்ட் சிடி -க்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம். ஜப்பானிய முதலீடு.
அடுத்து – ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்கள் தொடர்ந்து வசித்துக் கொண்டிருக்கும் உலகின் ஒரே புராதன நகரம் வாரணாசி. அதன் தொன்மையும், பெருமையும் மாறாமல் – புதுமைப்படுத்த வாரணாசி-க்யோடோ ஒப்பந்தம்.
இதில் மிக முக்கியமான விஷயம் – இதெல்லாம் வழக்கம் போல் காகித ஒப்பந்தகளாக நின்று விடாமல், விரைவாகச் செயல்படுத்த பிரதமர் அலுவலகத்திலேயே ஒரு தனி டீம் உருவாக்கப்படுகிறது…
அதில் இரண்டு ஜப்பானிய பிரதிநிதிகளும் சேர்க்கப்படுவார்கள் ….!!!
வெளிப்படையாகச் சொல்லப்படாமல் –
செயல்படுத்தப்படும் இன்னொரு மிக முக்கியமான விஷயம் –
சீனாவின் அத்துமீறல்களுக்கு – இந்தியா-ஜப்பானிடையே
ஏற்படும் புதிய நெருக்கமும், ஒத்துழைப்பும் ஒரு முடிவுகட்டும்.
இந்தியா, ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகளும் இணைந்து ஒரு பலமிக்க சக்தியாக உருவாவது, கிழக்காசியா பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும்.
( இப்போதைக்கு ) – பிரதமர் நரேந்திரமோடியை மனதார பாராட்டுவோம் – வாழ்த்துக்கள் மோடிஜி…..!!!
பின் குறிப்பு –
தலைப்பில் – ‘ஆனா’…. என்று இழுத்திருக்கிறீர்களே –
அதைப்பற்றி இடுகையில் ஒன்றும் சொல்லக்காணோமே
என்று யாராவது கேட்பீர்கள்.
மோடிஜியிடம் நான் சொல்ல விரும்புவது இது தான் –
“அத்வானியையும், முரளிமனோஹர் ஜோஷியயும்
ஒதுக்கத் தெரிந்த உங்களுக்கு, இந்த சுப்ரமணியன் சுவாமியை தூக்கிப் போடத் தெரியாதா ..? தாங்க முடியவில்லை அவர் தொல்லை. ஒன்று அவரைத் தூக்கி வட துருவம் அல்லது தென் துருவத்திற்கு நிரந்தர இந்திய தூதராக அனுப்பி விடுங்கள். அல்லது
ஜப்பானிலிருந்து நல்ல “கோந்து பசை”
வாங்கி வந்து அவர் வாயே திறக்க முடியாதபடிக்கு
ஒட்டி விடுங்கள். வன்முறையில் ஈடுபட விரும்பாத
ஒட்டுமொத்த தமிழர்களின் ஒருமித்த கோரிக்கை இது….!!!







மூலதனம் உள்ளே வருகிறது …!) அதுவும் முக்கியமாக infrastructure development -க்காக// இது தான் முக்கியம். நாம் உண்மையிலயே மனதார மோடியை பாராட்ட வேண்டும்.
மூலதனம் வருகிறது, வரவேற்கிறோம். இப்படித்தான் 4 வழிச்சாலை வந்தது, கூடவே கட்டணமும் வந்தது. அதுவும், இப்போது கட்டணம் அதிகரித்துள்ளது. கட்டணம் இருப்பதில் தவறில்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து விடும். வளர்ச்சி எல்லோருக்கும் சமமாக அமைய வேண்டும். சில நாடுகளில் சுங்க வரி சாலை/ வரியில்லா சாலை என்று இருப்பதாக படித்தது நினைவில் உள்ளது. அது மாதிரி நமக்கும் இருந்தால் நல்லது.
// தவறு நடக்கும்போது சுட்டிக் காட்டும் நாம்,
அதே போல் – நல்லது நடக்கும்போது
பாராட்டவும் செய்ய வேண்டுமல்லவா …?//
Excellant. You are well balanced and unbiassed Sir.
// தவறு நடக்கும்போது சுட்டிக் காட்டும் நாம்,
அதே போல் – நல்லது நடக்கும்போது
பாராட்டவும் செய்ய வேண்டுமல்லவா …?// Hope it applies to Dr.Swamy also.
Yes Srini – certainly.
Earlier, I have written articles in this site
exclusively praising Dr.S.Swamy when he was
active on 2g cases…..!
I will have no hesitation in appreciating
Dr.SSwamy in future also – my articles
are issue /situation based only.
with all best wishes,
Kavirimainthan
//-மும்பை -அஹமதாபாத் புல்லட் ட்ரெயின் – இது அவசியமா என்று கேட்பவர்கள் இருப்பார்கள். ஆனால் எனக்கு தோன்றுவது –
ஐந்து காசு கூட நம்முடைய முதல் கிடையாது .
முழுவதும் அவர்கள் முதலீடு.
ஜப்பானிய தொழில் நுட்பம் (டெக்னாலஜி) நமக்கு
பரிச்சயமாகிறது. ஆயிரக்கணக்கில் நமது இஞ்சினீரிங்
பட்டதாரிகளுக்கும், ஸ்கில்டு தொழிலாளர்களுக்கும் வேலை கற்றுக் கொள்ளவும், செய்யவும் – வாய்ப்பு உருவாகிறது……//
அடடே, அப்படியே கட்டணம் வாங்காம ப்ரீய ஏத்திக்கச் சொல்லுங்க சார்.
DR.SWAMI talks bluntly but correctly. till this boundary limit in waters is fully resolved our fishermen should not indulge in srilankan waters area. our politicians particularly tamil nadu politicians are hypocretes.. never talks truth.. they only talk emotionally… in all issues. someof them even volunterred to go to srilanka and fight the srilankan army… when lttes fought with srilankan army…. The role played by LTTES in srilanka has become the subject of debate even by the all political forces throughout the world… every person has understood what ltte should have done… etc,….
Today’s headlines in “The Hindu” on Modi’s speech in Japan, “Red carpet will replace red tape” is very inspirational – simple words yet quite effective. Someone has described that Modi would turn out to be India’s Lee Kuan Yew. Truly Modi is proving to be the right person at the right time for India’s sake.
I am not sure whether Modi would change India like Lee Kuan Yew did Singapore.But I am certain about one thing.If he can not then none else can.He is our last hope.So rather than criticizing let us pray for his success.
in 1970/80s . only two Indian Ailines flights between bombay and madras. Now all know how many flights are there. But not free trip. when one facility comes up, people will be accustomed to use it. Between chennai and bangalore there so many amny bus trips; no free trip; costly. but all are full. People who are ready to use Bullet trains let them use. Are we fit for only ïlavasa T,V, vilaiillaa aadumaadu”?
ஒரு நல்ல அரசின் கடமை,
சாதாரண குடிமக்களுக்கு கல்வி,மற்றும் நீதியையும்
திறமை மிகுந்த குடிமக்களுக்கு வாய்ப்பையும்
தீய குடிமக்களுக்கு தண்டனையும்
வழங்குவதே.
அதைத்தான் மோடி செய்யப்போகிறார்.
Kaviri Maindhan Sir,
When England started its tube trains,(Bakerloo line was first) it was criticised.Today its the life line of many.I hope the bullet train will also do a lot of good.
yogeswaran
மோடியிடம் ஜெ க்கு உள்ள நெருக்கத்தை விட சு சாமியின் நெருக்கம் குறைவாகவே இருப்பதாக படுகிறது. அம்மாவின் கடித்ததை தொடர்ந்து சு சாமியின் பல்டி இதை தான் காட்டுகிறது.
எழில்,
நீங்கள் சொல்வது சரியே.
மேலும், மோடியும் -சுப்ரமணியன் சுவாமியும் ஒன்றாக கலந்து கொண்ட
எந்த நிகழ்ச்சியையும் நான் இதுவரை பார்க்கவில்லை.
சுப்ரமணியன் சுவாமி – சைனா வின் ‘ஜிக்ரி தோஸ்த்’.
ஆனால், மோடி 4 நாட்களுக்கு முன்னர் தான் சைனா வுக்கு
ஒரு கடி கொடுத்தார்.
மொத்தத்தில் சுப்ரமணியன் சுவாமி பாஜக வில்
தனக்குப் பொருத்தமான எதாவது
ஒரு பதவியை எதிர்பார்க்கிறார். அது கிடைக்கும் வரை
எதாவது வம்பில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்.
பாஜக வைப் பொறுத்த வரை ஒன்று அவருக்கு எதாவது
பதவியைக் கொடுத்து திருப்திப் படுத்த வேண்டும் – இல்லையேல்
வாசல் கதவைக் காட்ட வேண்டும்.
இரண்டில் ஒன்று விரைவில் நடக்கும் என்று தோன்றுகிறது.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்