ஆண்டுகள் மூன்று ஆயிற்று. விருந்தொன்றை தயார்
செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகி.
ப்ரசாந்த் பூஷன் பாவம் – சமையலுக்கு வேண்டிய
அத்தனையையும், தேடித்தேடி கண்டுபிடித்து சேர்த்துக்
கொடுத்தார். சமைக்கச் சொல்லத்தான் அவரால் முடியும்.
ஆனால் சமைக்க வேண்டிய பொறுப்பும், அதிகாரமும் உடையவர் ‘குக்’ தானே…
அது இல்லை. இது சரியாக இல்லை. இன்னும் அது
வேண்டும், இது வேண்டும் என்று இழுத்தடித்துக் கொண்டே இருந்தார் ‘குக்’. கடைசியில் அழுத்தம் அதிகம் வந்ததும் –
மலேசியா விலிருந்து கரிவேப்பிலை வந்தால் தான்
சமையல் சரியாக இருக்கும். அவர்கள் கரிவேப்பிலை
கொடுக்க ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்று ஒரு
ஒன்றரை வருடம் இழுத்தடித்தார்….
அந்த சாக்கில் 3 தடவை மலேசியாவும் போய் வந்தார்.
( சமையலைத் துவங்காததற்கு மலேசியா கரிவேப்பிலையா காரணம் …? …. ‘ நீங்கள் ஆயுசு பூராவும் சமைத்தாலும் சேர்ந்து கிடைக்ககூடிய வரும்படியைப் போல நூறு மடங்கு மொத்தமாகத் தருகிறேன் – சமைக்காமல் இருந்தால் போதும்’ என்று சொல்லக்கூடிய ஆள் இருந்தது தானே காரணம் ….!! )
வீட்டிற்குப் புதிதாக வந்தவர் ஏதோ ஒரு …..ஜெனரல்.
இந்த சமையலுக்கு கரிவேப்பிலை அவசியமே இல்லை. இருப்பவற்றை வைத்துக் கொண்டே ‘பக்கா’வாகச் சமைக்கலாம் என்றாரே பார்க்கலாம்.
வேறு வழி இல்லாமல் போயிற்று ‘குக்’ குக்கு.
இதற்கு மேலும் தள்ளிப்போட வழி இல்லை.
மாதக் கடைசிக்குள் விருந்தை தயார் செய்ய வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.
சரி – சமைக்கத்தானே வேண்டும் – செய்கிறேன்
என்று ஆரம்பித்தார். புளியை 4 மடங்கு அதிகமாகவும்,
மிளகாயே இல்லாமலும், உப்பைப் பாதியாகவும்
போட்டால் போயிற்று.
அப்புறம் விருந்து – விருந்து மாதிரியாகவா இருக்கும்….?
தானாகவே நிராகரிக்கப்படும் நிலை வந்து விடும்….
அது தானே தேவை …!
சரியாக சமைக்கவில்லை என்று தன்னை யாராவது
குற்றம் சொன்னால் …?
“நான் அப்போதே சொன்னேன் – இருப்பவை பற்றாது,
மலேசியாவிலிருந்து கரிவேப்பிலை வர வேண்டுமென்று. அது இல்லாமலே சமை என்றீர்கள். அப்படிச் சமைத்தால் இப்படித்தான் இருக்கும்” என்று சொல்லி விட்டால் போயிற்று…..!
“மிஞ்சி மிஞ்சிப் போனால் என்ன செய்வார்கள் ….?
நீ இனிமேல் வேண்டாம் -வெளியே போ என்பார்கள்.
அதனாலென்ன…. 100 மடங்கு சம்பளம் ஏற்கெனவே
வந்து விட்டதே – இனி இங்கு இருந்தாலென்ன –
போனாலென்ன” ….?
சும்மாவா சொன்னார்கள்
“பணம் பாதாளம் வரைக்கும் பாயும்” என்று….?
சமையலுக்கு வேண்டிய அனைத்தையும் சேகரித்தவர்கள்
பதறுகிறார்கள். பார்த்துப் பார்த்து, பதமாகத் தயாரிக்க
வேண்டியதை இவர் வேண்டுமென்றே கெடுத்து விடுவார் போலிருக்கிறதே என்று துடிக்கிறார்கள்.
அதனால் தான் “அவர் சமைக்க வேண்டாம் -அந்த C(r)ook ஐ ‘kitchen’ கிச்சன் உள்ளேயே விடாதீர்கள்” என்று பதறுகிறார் ப்ரசாந்த் பூஷன்…..





The case cannot be explained sarcastically, much better than this… Good luck sir
can you describe the other virundhu that concocts in bangalooru?
நண்பரே ( ஸோல்….),
உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமைக்கு
வருந்துகிறேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
visu ji you missed an immediate opprtunity to greet appreciate….kaver minden ji
நண்பர் சந்திரா,
நீங்கள் சொல்ல விரும்புவதை
வெளிப்படையாகச் சொல்லலாமே …..
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
Feast? One glass of water also we will not get!
Is there any comparison between bangalore and other case?
It appears “brotheres’ ” soul is very strong!
In 20 yrs 2G will be nothing to compare what becomes current. In 96 TANSI was a talk. Can anyone remember how it is dissipated…
அந்த குக் இல்லாமல் வேறொரு குக் மூலம் விருந்து இம்மாத இறுதியில் ரெடி. நீதி மன்றமும் சரி சொல்லியாகி விட்டது. 2G விருந்து சாப்பிட்டவரே இதற்கும் வருவார் என எதிர் பார்க்கப் படுகிறது. பிரஷாந்த் தான் ஏதேனும் குழப்படி செய்யாமல் இருக்க வேண்டும். ஏனெனில் அவர் அங்கம் வகிக்கும் கட்சி அப்படி.
நண்பர் பரமசிவம்,
படைத்து விட்டார்கள் இன்றே…!!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
அந்நியன் போல , பகத் சிங் போல யாராவது உருவாகி கத்தி மற்றும் இருக்கும் பொருள் கொண்டு சமையலை சிறப்பாக செய்யாமலா போவார்கள்… இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறுமல்லவா…?
பலே விஷ்ணு…!
“சக்தி” இல்லா விட்டாலும் கூட நானும்
‘இந்தியன்’ தான்….!!!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
விருந்து படைத்து விட்டார்கள் நடப்பது நல்லபடியாக நடக்குமா…
நண்பரே (கிரி அனகை),
எக்கச்சக்கமான பணம்…
எதையும் செய்யத்தயார் என்கிற
மனநிலையும், துணிச்சலும் ….!!
எனவே –
நம்மால் யூகிக்க முடியவில்லையே …!!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்