அதிசயம் …..என்ன ஆயிற்று “ஹிந்து” செய்தித்தாளுக்கு ….. ?

எதேச்சையாகத் தான் பார்த்தேன். இன்றைய “தி இந்து”
செய்தித்தாளின் தமிழ்ப் பதிப்பின் –
தலையங்கத்தை …

என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன் –
கனவல்ல -நிஜம் தான்.
படித்துப் பாருங்கள் – உங்களுக்கும் பிரமிப்பு வரும்…..
ராஜபக்சே யின் ஜிக்ரி தோஸ்த் ( “ஆப்த நண்பர்”) பத்திரிகையில் இப்படி ஒரு தலையங்கமா …..?

4 ஆகஸ்டு தேதியிட்ட தலையங்கம் –

————————————

logo -tamil hindu

இனியும் வாய் மூடி இருக்கலாகாது பிரதமர் மோடி!

தமிழக மீனவர்களிடம் இலங்கைக் கடற்படை நடந்துகொள்ளும்
அணுகுமுறை உலகில் வேறு எந்த இரு நாடுகளுக்கு இடையிலும் காண முடியாதது.

நெருக்கமான கடல் எல்லையைக் கொண்ட இரு நாடுகளிடையே
கடலோடிகள் எல்லை தாண்டிச் செல்வது எங்கும் நடக்கக் கூடியது.

இந்தியாவையே எடுத்துக்கொண்டால், இந்தப் பக்கம் எப்படி மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் செல்கிறார்களோ, அதேபோல, அந்தப் பக்கம் பாகிஸ்தான் எல்லைக்குள் செல்வதும் நடக்கத்தான் செய்கிறது. ஆனால்,

இலங்கை அரசைப் போல பாகிஸ்தான் அரசு கொடூரமாக
நடந்துகொள்ளவில்லை. அதேபோல், இந்திய எல்லைக்குள் தவறி வரும் எந்நாட்டு மீனவர்களையும் நாம் கண்ணியமாகவே கையாள்கிறோம்.

இலங்கை அரசின் அத்துமீறல்கள் சமீப காலமாக அதிகரித்திருக் கின்றன. இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப் படுவதும் அவர்களுடைய வலைகள், தளவாடப் பொருட்கள் சேதப் படுத்தப்படுவதும் அதிகரித்துள்ளன. தவிர, பறிமுதல் என்ற பெயரில் படகுகளைப் பறித்துக்கொண்டு செல்லும் அடாவடிச் செயலிலும் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றனர் இலங்கைக் கடற்படையினர்.

இத்தகைய சூழலில், ஒரு மாநிலத்தின் முதல்வராக, பிரதமருக்கு
இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் அனுப்பியிருக்கிறார்
ஜெயலலிதா. இதை அநாகரிகமான வார்த்தைகளில் அர்ச்சித்து,
அருவருக்கத் தக்க சித்திரங்களை உடன் இணைத்துத் தன்னுடைய அதிகாரபூர்வ இணையதளத்தில் இலங்கை ராணுவ அமைச்சகம் வெளியிடுகிறது என்றால், என்ன அர்த்தம்? அரசின் ஆசியின்றி நடக்கக் கூடிய காரியமா இது?

இன்றைக்கு அல்ல; பல ஆண்டுகளாக இது போன்ற இழிசெயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு.

போர்க் காலகட்டத்தில், தமிழக அரசியல்வாதிகளைக் கேவலமான முறையில் சித்தரித்து, இலங்கைத் தரப்பில் வெளியிட்ட படங்களை யெல்லாம் தமிழகம் இன்னும் மறந்துவிடவில்லை. ஜெயலலிதா மீதான அவதூறுக் கட்டுரை, தனிப்பட்ட ஒருவரின் கருத்து என்கிற இலங்கையின் விளக்கமெல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

இந்த விவகாரத்தில், தமிழகக் கட்சிகளிடையே எழுந்துள்ள ஒற்றுமை அரிதானது. முக்கியமாக, திமுக தலைவர் மு. கருணாநிதி, தமிழக முதல்வருக்குத் தெரிவித்திருக்கும் தார்மிக ஆதரவு முக்கியமானது.

தமிழக அரசியல் கட்சிகளிடம் இதுபோன்ற ஒருமித்த
செயல்பாட்டைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழகத்தின் முன்னணி அரசியல் தலைவர்கள் என்ற முறையில், இப்படியான ஆக்கபூர்வ அரசியலை முன்னெடுக்க வேண்டிய கடமை முதல்வர் ஜெயலலிதாவுக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் உண்டு. அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டிய கடமை ஏனையோருக்கு உண்டு.

தமிழக அரசியல்வாதிகளைக் கிள்ளுக்கீரையாகப் பிறர் அணுகக்
காரணம், நம்மவரிடையே காணப்படும் ஒற்றுமையின்மைதான்.

இன்றைக்கும்கூட சட்டசபையில் நிலவும் ஆரோக்கியமற்ற சூழலை மக்கள் கவலையோடுதான் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம்
முற்றுப்புள்ளி வைப்பதற்கான தொடக்கப் புள்ளியாக, ஒரு படிப்பினையாக இந்த விவகாரம் அமையட்டும்.

பிரதமர் மோடி இனியும் வாய் மூடி இருக்கலாகாது.
இலங்கைத் தூதரை அழைத்து, இந்தியா தன் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.

இந்தியாதான் என்றைக்கும் இலங்கையின் முதல் ஆபத்பாந்தவன்
என்பதையும் இந்த உறவுச் சங்கிலியின் முக்கியமான கண்ணி தமிழகம் என்பதையும் இலங்கைக்கு உணரவைக்க வேண்டும்!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to அதிசயம் …..என்ன ஆயிற்று “ஹிந்து” செய்தித்தாளுக்கு ….. ?

  1. ரங்கராஜன் ராஜகோபாலன்'s avatar ரங்கராஜன் ராஜகோபாலன் சொல்கிறார்:

    காவிரிமைந்தன் சார்,

    மாலையில் பேப்பர் பார்க்கும்போது
    நான் நினைத்துக்கொண்டே இருந்தேன்.
    கரெக்டாக எழுதி விட்டீர்கள்.
    நீங்கள் சொல்வது போல்
    ஹிந்து ராமின் “ஜிக்ரி தோஸ்த்” தானே ராஜபக்சே.
    இலங்கைக்கு எதிராக எப்படி இந்துவில்
    தலையங்கம் எழுதினார்கள் ?

    என்ன ஆச்சு ?
    ஆள் மாறி விட்டாரா இல்லை உரிமை தான்
    மாறி விட்டதா ..?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      கடந்த வெள்ளி முதலான ஹிந்து ஆங்கில நாளிதழ்களை
      மீண்டும் எடுத்துப் பார்த்தேன்.

      இது போன்ற பாதிப்புகள் எதுவும் அதில் இல்லை.

      so – ‘ஜிக்ரி தோஸ்த்’தின் நட்பு ஆங்கிலத்தில் வழக்கம்போல்
      தொடர்கிறது……!

      “தமிழால் இணைவோம்” என்பது ‘தமிழ் இந்து’ வின் கொள்கை…
      -அதாவது தமிழ்ப் பதிப்பில் மட்டும் தமிழருக்கு ஆதரவு ….!

      இது pure business –
      நாம் தான் சரியாகப் புரிந்து
      கொள்ளவில்லை…. மாறி விட்டதோ என்று
      அற்ப சந்தோஷத்தில் ஆழ்ந்து விட்டோம்….

      வாழ்க தமிழ் business….!!!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  2. gopalasamy's avatar gopalasamy சொல்கிறார்:

    Written on the belief, that english readers and tamil readers are different.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் கோபாலசாமி,

      பெரும்பாலும் தமிழ் செய்தித்தாள்களைப் படிப்பவர்கள்
      ஆங்கிலத்திலும் செய்தி படிக்கிறார்கள்.

      ஆனால், அடிப்படையாக ஆங்கில செய்தித்தாள் படிப்பவர்கள்
      பெரும்பாலும் தமிழில் செய்தி படிப்பதில்லை.
      (so ‘the Hindu’ படிப்பவர்கள் ‘தி இந்து’
      படிக்க மாட்டார்கள் …….!!! )

      இது தான் ஹிந்து’வின் லாஜிக் …..!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  3. todayandme's avatar todayandme சொல்கிறார்:

    இந்தத் தமிழ்ப்பதிப்பை இலங்கை உயிர்நண்பர்கள் பார்த்துவிட்டால் என்ன செய்வது? சும்மா லூலாயிக்குப் போட்டேன் என்று சொல்லிவிடுவார்களோ?

    தமிழனின் தமிழ்ப்பற்று? இந்தியனின் தேசப்பற்று !
    ————-

    அன்பின் கா.மை.,

    நீங்கள் இந்தத் தலையங்கத்தை எதேச்சையாகத்தான் பார்த்தீர்கள். ஆனால் இதையே தினமும் காலையில் டீ காபி குடிப்பதுபோல் குடித்துவிட்டு பலரிடம் பகிர்ந்துகொள்ளும் தமிழ்மக்களும் இருக்கிறார்களே.

    Yes. We do exclusive services only for Tamils, by Tamils

    இலங்கை வலைத்தளத்தில் வெளியிட்ட கேவலமான செய்திக்கு தங்கள் எதிர்ப்பினை அனைத்துத் தரப்பினருமே தெரிவித்தாயிற்று. தாங்களும் தெரிவிக்காவிட்டால் தமிழர்கள் தூக்கத்திலிருந்து விழித்துவிடுவார்களே! விழித்துவிட்டால் தனது சுயரூபம் அவர்களுக்கும் தெரிந்துவிடுமே, சர்க்குலேசன் பாதிக்கப்படுமே. அதனால் பாடப்பட்ட ஆராரோ தான் இது.

    தூங்கு தமிழா தூங்கு.

    இது pure business என்பதைவிட pure sedation to tamil, pure support to Jigri Dosht, pure acting to centre and state as showing we too Indian/Tamil என்பது பொருத்தமாக இருக்கும்.

    // Written on the belief, that english readers and tamil readers are different//
    அவர்கள் நம்புவதில் தவறில்லை. அப்படித்தான் தமிழர்களே நினைக்கிறார்கள்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் today and me,

      நீங்கள் கூறுவது பெரும்பாலும் உண்மையே.
      படித்தவர்களிடையே தான் நாம் இதுகுறித்து
      நிறைய விளக்க, நினைவுறுத்த – வேண்டி இருக்கிறது.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  4. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    ஹிந்து, கடித்துக்கொண்டே வாலை ஆட்டவும் செய்யும் ஒரு அதிசய நாய்!.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      கண்பத்,

      உவமானம் பிரமாதம்…..!!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  5. gopalasamy's avatar gopalasamy சொல்கிறார்:

    Well said sri Ganpath.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.