ஜெமினி கணேஷ் – சாவித்ரி பயன்படுத்திய மடிக்கணினி (laptop) ….!!!

 

இதை நம் திரைக்கலைஞர்களின் கற்பனை வினோதம் என்று  சொல்வதா அல்லது வெறும் தற்செயல் (just co-incidence ) என்று சொல்வதா என்று தெரியவில்லை……

இன்றைய laptop-ன் வடிவமைப்பை (design)
59 ஆண்டுகளுக்கு முன்னரே நம் தமிழ்த் திரையுலகத்தினர் யூகித்திருக்கிறார்கள் பாருங்கள் ….!!
பழைய பாடல்கள் என்றாலே எனக்கு தனி விருப்பம்.  அதுவும் சி.எஸ்.ஜெயராமன், கண்டசாலா, திருச்சி லோகநாதன் போன்றோர் குரல்கள் முற்றிலும் வித்தியாசமானவை.  மாறுதல் வேண்டி, சில நாட்களில், இரவு 11 மணிக்கு மேல்  தொலைக்காட்சிகளில் – பழைய படங்கள், பாடல்கள் கிடைத்தால் பார்ப்பேன்.

இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தப் பாடல் காணக்கிடைத்தது. ஏற்கெனவே இந்த படத்தையே நீண்ட நாட்களுக்கு முன்னர் பார்த்திருக்கிறேன். ஆனால் அப்போது தோன்றவில்லை….
இப்போது தான் தோன்றியது – லேப்டாப் பற்றிய எண்ணம் …….

நான் ரசித்தது – நீங்களும் ரசிக்க – கீழே –
மாயாபஜார் திரைப்பட பாடல் ஒன்று…..
பாடல் முடிந்த பிறகு அடுத்த 2 நிமிடங்களுக்கு வரும் காட்சியும்  சுவையாக இருக்கும். எனவே அதையும் சேர்த்துக்  கொடுத்திருக்கிறேன்……

 

 

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to ஜெமினி கணேஷ் – சாவித்ரி பயன்படுத்திய மடிக்கணினி (laptop) ….!!!

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    தன் நேசத்துக்குறியவருக்கு புதுமையானதை (மடிக்கணணி) பரிசளிப்பது அந்தக்காலத்திலேயே இருந்திருக்கிறது. அதோடு internet கனெக்ஷண் வீடியோ கான்ஃபெரன்ஸோடு! படு லேட்டஸ்ட்… அப்புறம் இன்னும் கண்டுபிடிக்கப்படாத, மனதில் எண்ணியதை அப்படியே காட்டும் புது டெக்னாலெஜி!
    வாழ்க தமிழ் சினிமா!
    (இதைத்தான்போல கமலஹாசன் வருத்தப்பட்டது. இன்னும் அரசு ஆதரவளித்தால் இன்னும் பலவற்றை கண்டுபிடித்து கொடுப்பார்கள் போல, சினிமாக்காரர்கள்!!!… ஹி ஹி ஹீ!!)

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    அருமை அருமை மிகவும் ரசித்தேன்.

  3. பழனி. கந்தசாமி's avatar பழனி. கந்தசாமி சொல்கிறார்:

    ரசித்தேன்.

  4. johan paris's avatar johan paris சொல்கிறார்:

    அப்போ SKYPE ம் இருந்திருக்குமோ?

  5. ரேகா பக்தவத்சலம்'s avatar ரேகா பக்தவத்சலம் சொல்கிறார்:

    நல்ல ரசனை சார் உங்களுக்கு.
    அருமையான காட்சி, பாடல்.

  6. chandraa's avatar chandraa சொல்கிறார்:

    km sir bramahstram and other weapons used in our mahabaratham ramayanam period remind us the modern weapons used nowadays….osamabil laden was correctly spotted by U S intelligent force thousands of miles away…. sujatha sir used to tell in eighties that husband would talk to wife from another room or fromupstairs of the house… it is happening now…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.