முதலில் இந்த இடுகைக்கு சம்பந்தம் இல்லாத ஒரு விஷயம் –
அதைச்சொல்ல இது தான் பொருத்தமான நேரம் என்பதால்
அந்தக் கருத்தை இங்கேயே சொல்லி விடுகிறேன்.
தேர்தலில் வாக்களித்து விட்டு, முடிவு தெரிய 22 நாட்கள்
காத்திருக்க வேண்டும் என்பது மிகக்கொடுமையான விஷயம்.
நமக்கே இப்பயென்றால், தேர்தலில் தீவிரமாக பங்குகொண்ட
வேட்பாளர்கள், கட்சித் தொண்டர்கள், தீவிர அனுதாபிகள்,
முக்கியமாக – அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆகியோருக்கு
எவ்வளவு டென்ஷன், படபடப்பு – இருக்கும் ….?
தேர்தல் நடைமுறைகள் அறிவிப்பு, வேட்பு மனு தாக்கல்,
பிரச்சாரம், 9 கட்ட தேர்தல், தள்ளிப்போன வாக்கு எண்ணிக்கை
என்று மாதக்கணக்கில் தேர்தல் நடைமுறைகளை இழுத்தடித்துக் கொண்டு
போவதை தவிர்த்து, சிறிய அவகாசத்தில் தேர்தல்களை நடத்தி
முடிக்கும் வழிகளைப்பற்றி, தேர்தல் கமிஷன் தீவிரமாக யோசிக்க
வேண்டும். இவ்வளவு தொலைக்காட்சி வசதிகள் இருக்கும்போது,
தலைவர்கள் ஏன் இன்னும் தெருத்தெருவாக அலைய வேண்டும்.
இதைத்தவிர்த்தால், அவர்களுக்கும் நிம்மதி, பொதுமக்களுக்கும்
நிம்மதி. அநாவசியமான தேர்தல் செலவுகளும் குறையும்.
தேர்தல் கமிஷனும், மத்திய, மாநில அரசுகளும், அரசியல் கட்சித்
தலைவர்களும் இது குறித்து தீவிரமாக யோசித்து ஒரு முடிவுக்கு
வர வேண்டும். இந்த கருத்தை அநேகமாக, நீங்கள் அனைவருமே
ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
அடுத்து – தலைப்பில் உள்ள விஷயம் –
ஒரு கட்டத்தில், ரஜினிக்கும் தனக்கும் உள்ள நெருங்கிய நட்பைப்பற்றி
விவரிக்கிறார் சோ. அப்போது அவர்களுக்குள் எழுந்த ஒரு
சிறிய பிரச்சினை பற்றி சோ கூறியது – சோவின் வார்த்தைகளிலேயே –
—————————————————————–
“ரஜினி, தன்னை நன்றாகப் புரிந்துகொண்ட சில நண்பர்களிடம் மிகவும்
மனம் திறந்து பேசுவார். ‘ஹ்யூமர் சென்ஸ்’ அவரிடம் அதிகம்.
எல்லாரையும் எடை போடுவதில் அவர் மன்னன்….
என்னிடம் நெருங்கிப்பழகியதால் என்னைப்பற்றி
அவர் ஒரு தீர்மானத்திற்கு வந்து என்னிடம் ஒருமுறை சொன்னார் –
“உங்களுக்கு ஈகோ ரொம்ப அதிகம் சார் “
“எனக்கு ஈகோவா ? என்ன சார் சொல்றீங்க..? ” என்று ரஜினியிடம்
திருப்பிக்கேட்டேன்.
“நிச்சயம் உங்களுக்கு ஈகோ ரொம்ப ஜாஸ்தி. உங்க அளவுக்கு ஈகோ
உள்ள ஆளை நான் பார்த்ததே இல்லை சார்…”
இப்படிச் சொல்ல சொல்ல “அப்படி எல்லாம் கிடையாது சார்” என்று
நான் அவரிடம் கெஞ்சவே ஆரம்பித்து விட்டேன்.
“அதெல்லாம் கிடையாது. நீங்க பெரிய ஈகோ உள்ள மனுஷன் தான்.
அதில் சந்தேகமே கிடையாது ” என்று பிடிவாதமாகச் சொன்னார் ரஜினி.
அவரிடம் மேற்கொண்டு பேசிப்பிரயோஜனம் இல்லை. நான் கெஞ்சிப்
பார்த்தேன். என்னைப்பற்றிய அபிப்பிராயத்திலிருந்து அவர் மாறவே
இல்லை
“சரி சார். அப்படியே வெச்சுக்குங்க” என்று சொல்லி அதோடு விட்டு
விட்டேன். ஆனால் ஈகோ என்பதற்கு டிக்-ஷனரியில் அர்த்தத்தை
எடுத்துப் பார்த்தால், அதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன.
ஒன்று ‘தன்னைப்பற்றி மிகவும் உயர்ந்த அபிப்பிராயம் உள்ளவன்’ என்பது.
இரண்டாவது, ‘தன்னைச் சுற்றியுள்ளவற்றின் தன்மையை உணர்ந்த
உள்மனது’ என்றும் இன்னொரு அர்த்தம் இருக்கிறது.
ரஜினி எந்த அர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை. ஆனால்
நான் என்னைப்பற்றி ரஜினி சொன்னதற்கு இந்த இரண்டாவது
அர்த்தத்தை எடுத்துக்கொண்டு போய்விடலாம் என்று தீர்மானித்து விட்டு அதோடு விட்டு விட்டேன்.”
——————————————————————–
45 ஆண்டுகளாக நாம் பார்க்காத “சோ”வா ….!!
“சோ”வைப்பற்றி ரஜினி சொன்னதில் நமக்கு எந்தவித சந்தேகமோ,
கருத்து வேறுபாடோ இல்லை….!!!
இருந்தாலும் சோ சொன்ன அந்த இரண்டாவது அர்த்தம் என்று
ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா அல்லது சோ வழக்கம்போல
டபாய்க்கிறாரா என்று தெரிந்து கொள்ள விரும்பினேன்.
– பிறகு நானும் சில டிக்-ஷனரிகளில் தேடிப்பார்த்தேன்…..
எனக்குக் கிடைத்தவரையில் அது இப்படித்தான் இருக்கிறது …..!!!
oxford dictionary – ” A person’s sense of self-esteem or self-importance ”
cambridge dictionary – “the self of an individual person ” or “one’s image of oneself”
“சோ” சொல்கிற அந்த இரண்டாவது அர்த்தம்
என் கண்களில் தென்படுவதாக இல்லை ……..!!!!
நீங்கள் யாராவது இரண்டாவது அர்த்தத்தை எந்த அகராதியிலாவது
பார்த்திருந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்…….!!!




ஈகோவுக்கு நீங்களே தேடி குறிப்பிட்டுள்ள அர்த்தங்களை தவிர வேறெதுவும் கிடையாது… மற்றபடி அரசியல்வாதிகளுடன் பழகி பழகி சோவுக்கும் அரசியல் வார்த்தை விளையாட்டு பழகிவிட்டதுபோலும் ! அதுவுமல்லாமல் சோ என்றைக்கு தன் கணிப்புகள் தவறு என ஒத்துகொண்டுள்ளார் ?! இந்த குணம் ஈகோ அல்லாமல் வேறென்ன ?!
இந்த இடுகையின் ஆரம்பத்தில் நீங்கள் குறிப்பிட்ட தலைவர்களின் தொலைக்காட்சி பேட்டி பற்றி எனது ” தேர்தல் திருவிழா ” கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதியவும்
“…பிரான்ஸ் நாட்டின் தேர்தல் எனக்கு இன்றுவரை ஆச்சரியம் ! அதிபர் தேர்தல் அறிவிக்கபட்ட பிறகு தொலைக்காட்சியும், பத்திரிக்கைகளும் மட்டுமே களைகட்டும். கட்சிகளை பற்றியும் கட்சிகளின் தலைவர்கள், அவர்களின் கொள்கைகள் பற்றியும் அரசியல் வல்லுநர்களுடன் கலந்துரையாடல் நடக்கும். முதல் வாரம் நீல கட்சி என்றால் அடுத்த வாரம் பாராபட்சமின்றி ரோஸ் கட்சி பற்றிய கலந்துரையாடல். இங்கே அம்மா, அய்யா, டாக்டர், கேப்டன் அனைவருக்குமே அரசு தொலைக்காட்சியில் ஒரே அளவு அலவன்ஸ் நேரம்தான் ! தினசரி, வார, மாத இதழ்களிலும் அதே !…”
தேர்தல் திருவிழா
http://saamaaniyan.blogspot.fr/2014/04/blog-post_18.html
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
கா.மை.ஜி ,
Ego என்பதற்கு இரண்டாவது அர்த்தம் எதுவும் கிடையாது.அதை சொன்னாலும் சோ ஒத்துக்கொள்ள மாட்டார் அது அவர் ஈகோ
.EGO என்பதின் விரிவாக்கம் Edging God Out என்றும் சொல்லுவர்.
மற்றபடி ..
சோவிற்கு உள்ளது superஈகோ
super ஸ்டாருக்கு உள்ளது super அடக்கம்.
கருணாவிற்கு உள்ளது superகர்வம்
ஜெயாவிற்கு உள்ளது superஆணவம்;
நமக்கு உள்ளது super பொறுமை.
நாளை முதல் இந்தியர்களுக்கு உள்ளது super எதிர்காலம்.
என்னமா திங்க் பண்ணுராருப்பா!
கண்பத்,
சுஷ்மா ஸ்வராஜ், அத்வானி ……??
ரிசல்ட் அதிகாரபூர்வமாக வருவதற்கு முன்பேயா …..!
பழம் பெரும் தலைவர்களை எல்லாம் ஆளுக்கு ஒரு மாநில கவர்னராக
அனுப்பி விட்டு, முற்றிலும் புதிய ஒரு டீமை உருவாக்கினால் தான்
மோடி – சொன்னது எதையாவது செய்ய முடியும் என்று நினைக்கிறேன்..
ஊஹூம் ….உங்கள் அளவிற்கு எனக்கு நம்பிக்கை வரவில்லை……
பார்ப்போம்…
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
//ஊஹூம் ….உங்கள் அளவிற்கு எனக்கு நம்பிக்கை வரவில்லை……
பார்ப்போம்…//
அடாடா! என் மனோபாவம் உங்களையும் பற்றிக்கொண்டதா?sorry Sir!
இன்று காலை தேதி 16/5/2014ஆக இருந்தது.
ஆனால் சற்று முன் பார்க்கிறேன்..
15/8/1947ஆக ஆகிவிட்டது..
என்ன விந்தையிது?
J A I H I N D..
உங்களின் இன்றைய இடுகையின் இரண்டாவது பகுதியை பற்றி அல்ல இது. முதல் பகுதியை பற்றியது. ஏன் சார் உங்களுக்கு நமது அரசியல் கட்சிகள் மேலும், தலைவர்கள் மேலும் அவ்வளவு கோபம். இதை கேள்விப்பட்டால் அவர்களே உங்கள் மீது நஷ்ட ஈடு கேஸ் போடுவார்கள். ஏதோ இன்றைக்கு தேர்தல்கள் இப்படியெல்லாம் இருப்பதால்தான் தாங்கள் அடிக்கும் கொள்ளையில் ஒரு சிறு பங்கை செலவு செய்துவிட்டு பல கோடி செலவு செய்ததாக கணக்கு காட்டி கறுப்பை வெள்ளையாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அது உங்களுக்கு பொறுக்க வில்லையா? தொலைக் காட்சியிலும் மற்ற செலவற்ற வகையிலும் தேர்தலை பிரசாரம் செய்தால் ஹெலிகாப்டரில் பயணம் செய்ய முடியுமா? கோடிக்கணக்கில் பிரசார ஊர்தி செய்ததாக காட்டமுடியுமா? சற்று யோசிப்பீர்களாக. அவர்கள் வயிற்றில் அடிக்க வேண்டாமே.
World English Dictionary
ego (ˈiːɡəʊ, ˈɛɡəʊ)
— n , pl egos
1. the self of an individual person; the conscious subject
2. psychoanal the conscious mind, based on perception of the environment from birth onwards: responsible for modifying the antisocial instincts of the id and itself modified by the conscience (superego)
3. one’s image of oneself; morale: to boost one’s ego
4. egotism; conceit
[C19: from Latin: I]
Collins English Dictionary – Complete & Unabridged 10th Edition
2009 © William Collins Sons & Co. Ltd. 1979, 1986 © HarperCollins
Publishers 1998, 2000, 2003, 2005, 2006, 2007, 2009
இதில் இருக்கும் இரண்டாவதைத் தான் சோ சொல்லியிருக்கிறாரோ?
–taken from http://www.dictionary.com
Egoist or Egotist?