திரு.ப.சி. அவர்கள் ஒரு Apprentice-ஐ அவர் கம்பெனியின் Chief Executive Officer ஆக்கத் துணிவாரா ..?

karan thapar

p.c. with karan thapar

சென்ற வாரம் – தொடர்ந்து இரண்டு நாட்களில்
மூன்று பேட்டிகள்.

முதலில் – தனக்கு உரிமையுள்ள தொலைக்காட்சி
NDTV-யில் பர்க்கா தத்-உடன் , அடுத்து Right to Hear
(Headlines today )-யில், அடுத்து CNN/IBN-ல்
karan thapar-உடன்

சொல்லி வைத்தாற்போல் மூன்றிலும் ஒரே மாதிரியான
கேள்வி – வித்தியாசமே இல்லாமல் -ஒரே மாதிரியான
பதில் –   ராகுல் காந்தியைப் பற்றி திரு ப.சி.அவர்கள் திரும்பத்
திரும்பக் கூறியதைத் தான் சொல்கிறேன்.  ராகுல் காந்தியைப்
பற்றிய ஒரு இமேஜை மக்கள் மத்தியில்
பதிய வைப்பதற்கான முயற்சி..?

கொஞ்சம் விவரமாகப் பார்ப்போமா …!
கரண் தாப்பருடன் திரு ப.சி. –

கரண் தாப்பர் கேட்கிறார் –

ராகுல் காந்தி, மோடியை எதிர்த்து நின்று
வென்றாக வேண்டும். ஆனால் ராகுலின் போக்கும்,
செயல்பாடும் அவருக்கு அந்த பலம் இருப்பதற்கான
தோற்றத்தை உண்டுபண்ணவில்லையே.Times Now
தொலைக்காட்சி பேட்டியைப் பார்த்தால் ஒரு பிரதமருக்குள்ள
பொறுப்புக்களைத் தாக்குப் பிடிக்கும் சக்தி அவருக்கு
இருப்பதாகத் தெரியவில்லையே …!
அவரால் அந்தப் பேட்டியை சரியாகக் கையாள
முடியவில்லையே !

ப.சி.சொல்கிறார் –

அது உங்கள் பார்வைதவறானது..!

எனக்குத் தெரிந்த வரை –
ராகுல் நடிப்பதில்லை …!
(He is not dramatic)

(சென்ற மாதம்,அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
கூட்டத்தில் மைக் பிடித்துப் பேசும்போது, திடீரென்று
ம.மோ.சிங்கைப் பார்த்து,

“பிரதமர் அவர்களே, இந்த நாட்டின் பெண்களுக்கு ஒரு
மிகப்பெரியகுறை இருக்கிறது. 6 சிலிண்டர்கள் அவர்களுக்குப்
போதவில்லை. அவர்கள் குறையை போக்க நீங்கள்
9 சிலிண்டர்களாவது கொடுக்க வேண்டும்”

என்று என்று சொன்னது நாடகம் இல்லையா ?
தொலைக்காட்சி முகபாவங்களை அப்பட்டமாக விளக்கிக்
காட்டியதே…!)

ப.சி. -“தன்னிடம் எல்லா கேள்விகளுக்கும் பதில்
இருப்பதாக அவர் நம்புவதில்லை”…(he doesnot
believe that he has all the answers)

“அவர் நன்கு விஷயம் தெரிந்தவர்” (he is well
informed )

(அவருக்கு எவ்வளவு விஷயங்கள் தெரிந்திருந்தன
என்பது அர்னாப் கோஸ்வாமியுடனான ஒரே ஒரு
Times Now தொலைக்காட்சி பேட்டியில் நமக்கெல்லாம்
தெரிந்து விட்டதே..!)

“அவர் கற்றுக் கொள்ளத்தயாராக இருக்கிறார்” (he is
prepared to learn ..)

(அஜாய் மாக்கனின் செய்தியாளர் சந்திப்பில் திடீரென்று
நுழைந்து, 70-80 வயது நிரம்பிய கேபினட் அமைச்சர்கள்
எல்லாம் சேர்ந்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில்
ஒப்புதல் கொடுத்த அவசர சட்டத்தை – கிழித்து
குப்பைத் தொட்டியில் போடுங்கள் என்று சொன்னாரே –
அதற்கு என்ன அர்த்தம் ..கற்றுக் கொள்ளத்தயார் என்றா
அல்லது கிழட்டு மந்திரிகளே, உங்களுக்கு ஒன்றும்
தெரியாது, நான் சொல்வதைச் செய்யுங்கள் என்றா ..?)

“அவர் கேட்கத் தயாராக இருக்கிறார்” (he is prepared
to listen…)
(யார் சொல்வதை ..?)

கரண் தாப்பர் கேட்கிறார் –

“ராகுலுக்கு அரசாங்கப் பொறுப்பில் அனுபவம் ஏதும்
இல்லையே – அவர் ஒரு சாதாரண அமைச்சராகக்கூட
பணியாற்றியதில்லையே – ஒரு பிரதமருக்கான
பாரத்தை, பணிச்சுமையை –
அவரால் எப்படி சுமக்க முடியும் ..?”

ப.சி.சொல்கிறார் –

“அரசாங்கப் பொறுப்புகளில் முன் அனுபவம் ஏதும்
இல்லாமலே ஒருவர் நேரடியாகப் பிரதமராக பதவி ஏற்ற
சம்பவங்கள் உண்டே..!

முன் அனுபவம் என்பது ஒன்றும் கட்டாயமான
தேவை அல்ல ..!”

(ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்தி ஒருவர்
மட்டும் தான் அரசாங்கத்தில் எந்தவித முன் அனுபவமும்
இல்லாமல், நேரடியாக பிரதமராகப் பொறுப்பு ஏற்றுக்
கொண்டவர்.
திருமதி இந்திரா காந்தியின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட
வித்தியாசமான நிகழ்வு அது. அதை முன் உதாரணமாகக்
கூறித்தான் ராகுல் காந்திக்கும் முன் அனுபவம் என்பது
அவசியமான தேவை அல்ல என்று நியாயப்படுத்துகிறார்
திரு.ப.சி.அவர்கள்..!)

திரு. ப.சி. அவர்கள் மிகச்சிறந்த வழக்கறிஞர்.
அனுபவம் மிக்க மூத்த அரசியல்வாதி.
ஏற்கெனவே இது போல் எத்தனையோ பேட்டிகளையும்,
கேள்விகளையும் சந்தித்தவர். எனவே இந்த பேட்டியையும்
ஊதித்தள்ளி விட்டார் … என்று சம்பந்தப்பட்டவர்கள்
வேண்டுமானால் நினைத்துக் கொள்ளலாம்.

அடுத்த தேர்தலிலோ,
ஒரு வேளை அப்போது அமையும் அரசு –
அற்பாயுளில் போனால்,
அதற்கடுத்த தேர்தலிலோ ஜெயித்து –
(70 வயதிலும், 80 வயதிலும் கூட)
ராகுலின் தலைமையில் அமைச்சராகப்
பணி புரிய விரும்பும் ஒருவருக்கு வேண்டுமானால் –

– இந்த வக்காலத்து அவசியமாக இருக்கலாம்.

ஆனால் நாம் சொல்ல விரும்புவது –

“உங்களுக்கு அத்தனை நம்பிக்கை இருக்குமேயானால்,
உங்களுக்குச் சொந்தமான கம்பெனிகள் எதாவது ஒன்றில்
அவரை Chief Executive Officer ஆக
நியமித்துக் கொள்ளுங்கள்.

நாட்டு மக்களின் நல் வாழ்வில்
அக்கரை கொண்ட,
திறமையான,
அனுபவம் வாய்ந்த –
எத்தனையோ உயர்ந்த தலைவர்களைக் கொண்ட,
இன்னமும் எத்தனையோ தலைவர்களை உருவாக்கவும் கூடிய

இந்த மாபெரும் ஜனநாயக நாடும்,
அதன் மக்களும்,
தங்கள் எதிர்காலத்தை –

இன்னமும் கற்றுக் கொள்ள வேண்டிய
நிலையில் இருக்கும் –
இன்னமும் கேட்டுக் தெரிந்துக் கொள்ள வேண்டிய
நிலையில் இருக்கும் –
எந்தக் கேள்விக்கும் தன்னிடம் முழுமையான பதில்
இல்லை என்பதையும் உணர்ந்தே இருக்கும் –
ஒரு கற்றுக்குட்டியிடம் –
ஒரு Apprentice -டம் எதற்காக ஒப்படைக்க
வேண்டும் ..?
அத்தகைய ஒரு ரிஸ்க் கை இந்த நாடு
வலியச் சென்று எதிர்கொள்ள
வேண்டிய அவசியமென்ன ..?”

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to திரு.ப.சி. அவர்கள் ஒரு Apprentice-ஐ அவர் கம்பெனியின் Chief Executive Officer ஆக்கத் துணிவாரா ..?

  1. GOPALASAMY's avatar GOPALASAMY சொல்கிறார்:

    thanks for one information

  2. Srini's avatar Srini சொல்கிறார்:

    in my view, PC is more dangerous than RG and Sonia. I have some friends from his home district, who used to say that he is very cunning and street smart and more than this… very very very selfish…

  3. Asokaraj's avatar Asokaraj சொல்கிறார்:

    ஸார் எனக்கொன்று புரியவில்லை. இவனை பிரதமராக கொண்டுவர ப சியோ மண்ணுவோ நினைத்தால் போதுமா? மக்கள் ஓட்டு போட வேண்டாமா? அப்படியும் மக்கள் ராகுல்தான் இந்த உலகிலேயே அதி சிறந்த புத்திசாலி என நினைத்து அள்ளி குத்தி அவனும் மெஜாரிட்டியாக ஆட்சிக்கு வந்துவிட்டால் நாம் என்ன பண்ண முடியும்? ப சி போன்ற காங்கிரஸ் கிழடுகள் அவர்கள் சுகமாக வாழ ராகுல் வரவேண்டும் என்றுதான் சொல்லுவார்கள். நமது இந்திய மடையர்களுக்கு சோனியாவும் ராகுலும்தானே தெய்வம்? நாம் வாக்களிக்கும் முன் நினைத்து பார்ப்பது போல நாட்டில் பெரும்பான்மையான மக்கள் நினைத்தெல்லாம், யோசித்தெல்லாம் பார்த்து ஓட்டு போடுவதில்லை. ஏன் இவ்வளவு? தமிழ் நாட்டில் ஏதாவது ஒரு கட்சி இலவசங்கள் இல்லாமல், நாங்கள் வந்தால் இந்த தமிழ் நாட்டை நாட்டின் முதல் இடத்தில் கொண்டுவருவோம் எங்களுக்கு ஓட்டு போடுங்கள் என்றால் யாராவது போடுவார்களா? நமக்கே வெள்ளை தோலும் சினிமா கவர்ச்சியும் தேவைப் படுகிறதே. உத்திர பிரதேசத்திலும் பீகாரிலும், ஒரிசாவிலும், மத்திய பிரதேசத்திலும் வாழும் பல நாட்கள் குளிக்காத, துவைத்து துணி உடுத்தாத வழக்கம் கொண்டுள்ள அந்த மக்களை என்ன குறை சொல்ல முடியும்? நடப்பதுதான் நடக்கும். நாம் ஒன்றும் செய்ய முடியாது. இது போன்ற மக்களை நம்பிதான் இந்தக் கிழடுகள் தொடைகளை தட்டுகிறார்கள். ஊரைக் கொள்ளையடித்து குற்றம் நிரூபிக்கப் பட்டு ஜெயிலுக்கு போனவனுங்க எல்லாம் கொஞ்சம் கூட வெட்கம் சூடு இல்லாமல் ஜாமினில் வெளியில் வரும்போது தாரை தம்பட்டையுடன் பெருமிதமாக ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றது போல வலம் வருகிறார்கள். பசி போன்றவர்கள் ஜனநாயக முறையில் தேர்தலை எதிர் கொள்ளாமல் தகிடுதித்தம் செய்து வென்றதாக காட்டி மந்திரியாகி இஞ்சித்தும் வெட்கம் சூடு இல்லாமல் பேசிக்கொண்டிருக்கிறான். இவனுங்களையே பொறுத்துக் கொண்டிருக்கிறோம். இனி நடக்கப் போவதையா பார்க்க முடியாமல் போகப் போகிறோம்?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் அசோக்ராஜ்,

      உங்கள் வயிற்றெரிச்சல் முற்றிலும் நியாயமானதே.
      ஆனால், இன்னும் கொஞ்சம் …..கௌரவமாகச்
      சொல்லுவோமே…!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  4. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    எனக்கென்னமோ ப சி கூட இருந்தே குழி பறிப்பது போல தோன்றுகிறது. நீங்கள் சொன்ன ‘பிரபல’ பத்திரிக்கையாளர் ஒருவர் கூட நேர்மையானவர் என்று தெரியவில்லை. பர்கா தத் / வீர் சாங்க்வி லட்ச்சணத்தை தான் ராடியா விஷயத்தில் பார்த்தோமே!

    ராகுல் அனுபவமோ அறிவோ இல்லாதவர் என்று தான் ப சி பதிய வைப்பது போல் உள்ளது. நீங்கள் கேட்பது போல தான் எல்லோரும் கேட்கவேண்டும் என ப சி விரும்புவார். இரண்டும் இல்லாத ராகுல் வருவதை விட ப சி வருவது மேல் என்று எல்லோரும் நினைக்க வேண்டும்.. ஒரு அடிமைக்கு (மன்மோகன்) பேர் நிறைய கெட்டுவிட்டதால் நேரம் முடிந்து விட்டது. கொஞ்சம் சுயமாக சிந்திக்கும் புத்திசாலியை வாயை திறக்க முடியாமல் ஜனாதிபதி ஆக்கியாகி விட்டது. அடுத்து ப.சி க்கும் பிரதமர் பதவிக்கும் குறுக்கே நிற்பது ராகுல் மட்டுமே. அதனால் தான் கொஞ்சம் கொஞ்சமாக அவரை ஒழிக்கும் வேலையே செய்துகொண்டிருக்கிறார். நன்றாக பேர் கெட்டவுடன், சோனியா போல ராகுலும் நிழல் ராஜ்ஜியம் நடத்த, பிரதமராக ப சி வரவேண்டும் என காய் நகர்த்துகிறார்!

    • சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

      ஓ… இப்படியும் ஒரு வழி இருக்கா?
      பந்து சார் ராக்ஸ்!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      அள்ளி விட்டீர்கள் நண்பர் பந்து..!

      பேட்டியைப் பார்க்கும்போதே எனக்கும் இது
      தோன்றியது. தான் பிரதமர் ஆகா விட்டாலும்,
      ரா.கா.வை பொம்மைப் பிரதமர் ஆக்கி விட்டு,
      தான் நிழல் பிரதமராக இருக்க நினைத்திருக்கலாம்.

      ஆனாலும் இடுகையில் இதைப் போட்டால்
      குழப்பமாக இருக்கும். எனவே பின்னூட்டங்களில் விவாதிக்கும்போது இதைப்பற்றி பேசலாம்
      என்று நினைத்தேன்.

      நம்மைப் போல் இன்னும் சிலருக்காவது இது போல்
      தோன்றி இருக்கும் என்று நினைக்கிறேன்..

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

    • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

      அப்படியே வழி மொழிகிறேன்..இதுதான் ப.சி.யின் திட்டம்..ஆனால் இவர் சோனியாவை குறைவாக எடை போட்டு விட்டார்.உயிரே போனாலும் ப.சி.யை சோனியா நம்ப மாட்டார்.அடுத்த டம்மிபீஸ் அந்தோணி அல்லது ஷிண்டே யாக இருக்கலாம் எனபது என் ஊகம்.நமக்கு கிடைக்கப்போவது LOTUS ஆ அல்லது (மீண்டும்) LOOT-US ஆ என்று முடிவு செய்யும் இந்த தேர்தலில்,இறைவன் நம்மை காப்பாற்றுவராக..

  5. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    சென்னையில் …த்தா என்றோ அல்லது இன்னாயா என்றோ கேட்டால் கொதித்துவிடும் நாம்,
    மாங்கா என்றாலும் பழம் என்றாலும் அதை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டதால் வந்த தில்லுதான் இதெல்லாம்.
    “இவனுங்களை என்ன சொன்னாலும் கேட்டுப்பானுங்க… ஏனென்றால் இவனுங்க ரொம்ப நல்லவங்க” என்ற எண்ணம்.
    இப்படி பேசுறவனை சப்பு சப்புன்னு அப்போதே அறைந்திருந்தால் இப்படியெல்லாம் பேசிக்கொண்டு திரியமாட்டானுங்க!
    நிச்சயமாக இம்முறை நாம் வைக்கும் ஆப்பு இவர்களை எப்போதுமே எந்திரிக்க முடியாமல் செய்யப்போகிறது என்பது என்னவோ உண்மை!
    (கல்கியில் ஞானியின் அம்மாவுக்கான கடிதம் படித்தீர்களா, காவிரி சார்?)

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      அஜீஸ்,

      இதற்கு ஒரு வரி பதில் போதுமென்றால் –
      “படித்தேன்.”
      இது குறித்து கொஞ்சம் விவரமாக எழுத
      விரும்புகிறேன் – வாய்ப்பு வரட்டும்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  6. N.Paramasivam's avatar N.Paramasivam சொல்கிறார்:

    இந்த தேர்தலில் ப.சி. தேருவாரா? ரா.கா. தேருவாரா?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.