ஆசிரியர் சோ அவர்கள் இன்று வெளிவந்துள்ள துக்ளக்
இதழில் 7 பேர் விடுதலை குறித்து “நடந்திருப்பது
நல்லதற்கல்ல” என்கிற தலைப்பில் தலையங்கம்
எழுதி இருக்கிறார்.
சோ எப்போதும் மூளையால் மட்டும் தான் யோசிப்பார்.
மனம் என்கிற – மனசாட்சி என்கிற – ஒன்று அவரது
வாதங்களில் எப்போதுமே இருந்ததில்லை.
“மனம் ஒரு குரங்கு”என்று நாடகம் போட்ட அன்றிலிருந்தே
நமக்கெதற்கு இந்த குரங்கின் சகவாசம் என்று நினைத்து
விட்டார் போலிருக்கிறது.
தமிழக முதல்வருடன் அவருக்கு இருக்கும் நட்பு காரணமாக,
ஒரு வேளை இந்த விஷயத்தை மென்மையாக அணுகுவாரோ
என்று ஒரு சந்தேகம் இருந்தது. தனக்கு மூளையும்,
வாதமும், பிடிவாதமும் தான் முக்கியம் என்று மீண்டும்
காட்டி விட்டார்.
மனசாட்சி – அவரிடம் இல்லை என்பதால், அதை
விட்டு விடுவோம்.
சட்ட நிபுணரான அவரது சட்ட விளக்கம் கூடத் தவறு
என்பது என் வாதம்.
அவரது தலையங்கத்திலிருந்து சில பகுதிகளும், அதன்
மீதான நமது விவாதங்களும் –
——–
தலையங்கத்திலிருந்து –
1) “நமக்கு ஒரு சந்தேகம் வரத்தொடங்கியுள்ளது. சுப்ரீம்
கோர்ட்டில், ஒரு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு
அதன் பிறகு மறுபரிசீலனை மனுவும் நிராகரிக்கப்பட்டால்-
அந்த நிலையில் கைதிக்கு இருக்கும் ஒரே வழி –
ஜனாதிபதியிடம் (கவர்னரிடம்) கருணை மனு சமர்ப்பிப்பது
தான். அந்தக் கருணை மனு மீது முடிவு எடுக்க நீண்ட
தாமதம் நேரிட்டால் கூட, அந்த விஷயத்தில் தலையிட
சுப்ரீம் கோர்ட்டிற்கு அதிகாரம் இருக்கிறதா?” என்கிற
கேள்வியும் நம் மனதில் எழுகிறது.
———-
நாம் முன்வைக்கும் கேள்வி –
ஒன்று – இந்த சந்தேகம் இன்று தான் வருகிறதா ?
ஏற்கெனவே, கடந்த ஜனவரி மாதம் தூக்கு தண்டனை
விதிக்கப்பட்டிருந்த வேறு 15 கைதிகளின் தண்டனையை
ஆயுள் தண்டனையாக சுப்ரீம் கோர்ட் மாற்றியதே –
அப்போது ஏன் வரவில்லை ?
இரண்டு –சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என்று
தோன்றினால், அதை எதிர்த்து ஏன் யாரும் வழக்கு
தொடுக்கவில்லை ? மத்திய அரசே கூட ரிவிஷன் பெடிஷன்
போடுகிறதே தவிர, சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரத்தைக்
கேள்விக்கு உள்ளாக்கவில்லையே !
மூன்று – சில ஆண்டுகளுக்கு முன்னர்,100 கொலைகளுக்கு
மேல் பண்ணியிருந்த ‘பூலான் தேவி’ கூட மன்னித்து
விடுவிக்கப்பட்டு, பின்னர் உத்திரப் பிரதேச அரசியலில்
கூட ஈடுபட்டாரே – அப்போது ஏன் தோன்றவில்லை ?
—————-
2)”‘கலந்தாலோசனை’ என்பதற்கு என்ன பொருள் ?
“என்ன சொல்கிறீர்கள் …சரி, நாங்கள் எங்கள் முடிவை
நிறைவேற்றுகிறோம்” என்கிற மாதிரி நடக்கிற கடமை
இல்லை. இது 3 நாட்களில் முடிய வேண்டுமென்று
சட்டம் கூறவில்லை. அதற்காக முப்பது மாதம் ஆனாலும்
இழுத்துக்கொண்டே போகலாம் என்றும் சொல்லவில்லை.
நியாயமாக ஒப்புக்கொள்ளக்கூடிய அவகாசத்தைத்தான்
சட்டம் ஏற்கும்”
——
நாம் முன்வைப்பது –
‘சோ’முன்னுக்குப் பின் முரணாக
மாட்டிக்கொண்டாரே இங்கு –
கலந்தாலோசனைக்கு சட்டம் கால அவகாசம் எதுவும்
விதிக்கவில்லை என்று இங்கு கூறும் சோ அவர்கள்
“நியாயமாக ஒப்புக்கொள்ளக்கூடிய அவகாசத்தைத்தான்
சட்டம் ஏற்கும்” என்றும் கூறுகிறார்.
அதே அடிப்படையில் தானே சுப்ரீம் கோர்ட்டும்
தண்டனையை மறுபரிசீலனை செய்திருக்கிறது ..?
“நியாயமாக ஒப்புக்கொள்ளக்கூடிய கால அவகாசத்தில்”
கருணை மனு மீதி முடிவு எதுவும் எடுக்கப்படாததால்
தானே சுப்ரீம் கோர்ட் தலையிடுகிறது.
“கருணை மனு மீது முடிவு எடுக்க நீண்ட
தாமதம் நேரிட்டால் கூட, அந்த விஷயத்தில் தலையிட
சுப்ரீம் கோர்ட்டிற்கு அதிகாரம் இருக்கிறதா?”
என்று முதல் பத்தியில் கேள்வி எழுப்பியதற்கு இங்கு
அவரே முரணான பதிலும் கொடுத்து விடுகிறாரே …!
————
3)”மத்திய அரசுக்கு 3 நாட்கள் நோட்டீஸ் அனுப்பி,
இதை முடித்து வைக்க முனைவதும்,
‘மத்திய அரசு இதை ஏற்றாலும் சரி,
ஏற்கா விட்டாலும் சரி -பதில் வராவிட்டாலும் சரி,
எங்கள் முடிவு நிறைவேற்றப்படும்’
-என்று அறிவிப்பதும்,
எப்படி கலந்தாலோசனை ஆகும் ?
இது சட்ட ரீதியாகவோ,
மற்றபடியோ ஏற்கத்தக்கதாக இல்லை.
—-
நமது கேள்வி –
ஒன்று – அதென்ன “சட்டரீதியாகவோ, மற்றபடியோ ?”
இங்கு சட்டத்தைப்பற்றி மட்டும் தானே பேச வேண்டும் ?
‘மற்றபடி’ இங்கு எப்படி வருகிறது ?
இரண்டு – சட்டம் என்ன சொல்கிறது ?
அரசியல் சட்டப் பிரிவு 161ம் சரி,
criminal procedure code விதிகளின்படியும் சரி,
கைதிகளின் தண்டனையை மாற்றவோ, குறைக்கவோ,
மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது.
பிரிவு 435ன்படி மத்திய அரசு விசாரணை ஏஜென்சிக்கள்
எதாவது வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்தால்,
தண்டனைக் குறைப்புக்கு முன் மாநில அரசு, மத்திய
அரசுடன் “கலந்தாலோசிக்க” வேண்டும்.
இங்கு இந்த சட்டப்பிரிவில் கூறப்பட்டிருக்கும்ஆங்கில
வார்த்தையை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
“consultation”(கலந்தாலோசனை ) வேறு,
“concurrence” (சம்மதம் ) வேறு,
“approval ” (அனுமதி) வேறு,
குறிப்பிட்ட சட்ட விதிகள் கூறுவது “consultation”
என்பதைத் தான்.
மாநில அரசு எந்த பின்னணியில் 3 நாள் காலக்கெடு
விதிக்கிறது ? மத்திய அரசுடன் அது பெறும் அனுபவங்களின்
அடிப்படையில் தான். மாநில அரசு எழுப்பும் எந்த
பிரச்சினைக்காவது – அது காவிரியாகட்டும், பெரியாறு
ஆகட்டும், கச்சத்தீவு ஆகட்டும், மீனவர் பிரச்சினை
ஆகட்டும், ரேஷன் மண்ணெண்ணை, அரிசி –
அளவுகுறைப்பு ஆகட்டும், மின்பகிர்வாகட்டும் –
எந்தப் பிரச்சினையிலும் மத்திய அரசு ஆண்டுகள் எத்தனை
ஆனாலும் பதிலே கொடுப்பதில்லை. எனவே இத்தனை
நாட்களுக்குள் பதில் கொடுக்கவில்லை என்றால், நாங்கள்
மேல் நடவடிக்கை எடுத்துக் கொள்வோம் என்று
சொல்வதில் என்ன தவறு ?
மத்திய அரசுக்கே நோட்டீசா என்றால் –
இங்கு மத்திய அரசு உயர்வும் இல்லை –
மாநில அரசுகள் தாழ்வும் இல்லை.
அனைத்து அதிகாரங்களையும் அரசியல் சட்டம் வகுத்துக்
கொடுத்துள்ளது. அந்த அதிகாரங்களின்படி தான் ஆட்சி
நடக்கிறது.இங்கு யாரும் “அதிகாரங்களை” பிச்சையிட
முடியாது.
—————
3) “ஏழு பேரில் ஒருவரை, ஒரு மாதம் வெளியே
விடக்கூட சம்மதிக்காத தமிழக அரசு – பத்தே நாட்களில்,
ஏழு பேருக்குமே விடுதலையையே தந்து விட முன்வந்தது
ஏன் ?”
—
நமது விளக்கம் –
ஒரு மாதம் ஒருவர் பரோலில் வருவதால் ஏற்படக்கூடிய
பிரச்சினைகள் வேறு வகைப்பட்டவை. அவருக்கு
24 மணி நேரமும் பாதுகாப்புக்கு போலீஸ் போடப்பட
வேண்டும். அவரை சந்திக்க வருபவர்களை கட்டுப்படுத்த
வேண்டும். அரசியல்வாதிகளால் ஏற்படக்கூடிய
சங்கடங்களும், பரபரப்பும் நிச்சயமாக உண்டு தான்.
அவர் யாரைப் பார்க்க வருவதற்காக பரோல் அனுமதி
கேட்டிருந்தாரோ, அந்த தந்தையே தன் மகள் பரோலில்
வருவதால் ஏற்படக்கூடிய சங்கடங்களைத் தவிர்க்கவே
விரும்புகிறார் – நிரந்தரமான விடுதலை
பெற்ற பின் வருவதையே விரும்பினார். இது குறித்து
நீதிமன்றத்திற்கும் தெரிவித்திருக்கிறார். மேலும் கடந்த
மாதம் இதே போன்ற வேறு 15 பேர் வழக்கில் தண்டனை
குறைப்பு தீர்ப்பு வெளிவந்திருந்ததால், இவர் வழக்கிலும்
அத்தகைய மாறுதல்கள் வரவும் வாய்ப்பு இருந்தது –
அதைப் பார்த்துக் கொண்டு செய்வோம் என்றும் மாநில
நிர்வாகம் கருதி இருக்கலாம்.
———–
– தனிமைச்சிறையில், ஒரு மரண தண்டனைக்கைதி
ஒவ்வொரு நாளும் அனுபவிக்கும் மனவேதனை மிகக்
கொடியது.அதைவிட தண்டனை விதிக்கப்பட்டதும், அப்பீல் காலம்
முடிந்தவுடன் தூக்கில் போடுவது எவ்வளவோ மேல்.
வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி சுப்ரீம் கோர்ட்டில்
தூக்கு தண்டனைக்கு எதிராக வாதாடும்போது கூறுகிறார் –
“ஒரு குற்றத்துக்கு ஒரு தண்டனை தானே வழங்க முடியும் ?
அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
ஆனால், தண்டனை நிறைவேற்றத்தை தள்ளிப்போடுவதன்
மூலம் அதற்குள்ளாகவே அவர்கள் 5 ஆயுள் தண்டனையை
அனுபவிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறையில்
கழித்த ஒவ்வொரு நாளும் 5 நாட்களுக்கு சமம். மொத்தம்
23 ஆண்டுகள் அவர்கள் சிறையில் மரண அவஸ்தையுடன்
ஒவ்வொரு நொடியையும் கடந்திருக்கிறார்கள்.
ஆறுக்கு ஆறு அளவுள்ள தனிமைச்சிறையில் ஒரு மனிதன்
23 ஆண்டுகளைக் கழிப்பது எத்தனை கொடூரமான
தண்டனை”.
அவர்கள் இன்னமும் சிறையில் தான் இருக்க வேண்டும்
என்று சொல்பவர்கள் மனோவியாதிக்கு உள்ளானவர்கள்
என்று தான் சொல்ல வேண்டும்.
இதில் அரசியல் இருந்தால் என்ன ?
அதுபாட்டுக்கு இருந்து விட்டுப் போகட்டுமே !
நமக்கு பாவப்பட்ட மனிதர்களின் விடுதலை தானே,
நல்வாழ்வு தானே முக்கியம்.
ஆசிரியர் “சோ” அவர்கள் இந்த வயதிலாவது,
மூளையை மறந்து விட்டு, தன் மனதைத்திறந்து
மனசாட்சியோடு உரையாட வேண்டும்.




இதற்கே இப்படி என்றால். அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைப் பார்த்தால் நெற்றிக்கண்ணை திறந்துவிடுவார் என நினைக்கிறேன்.
விளக்கமான , நியாயமான பதிவு! வாழ்த்து!
விட்டுத்தள்ளுங்க காவிரி சார்!
வயசானாலும் நாய் வாலை நிமிர்த்த முடியாது!
அதற்கு இவர் இரண்டாவது உதாரணம்.
அவ்வளவுதான்.
அஜீஸ்,
சுவையான பின்னூட்டம்.
இந்த முறை நீங்கள் நண்பர் கண்பத்தை
முந்தி விட்டீர்கள்…!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
மிக்க நன்றி கா.மை.ஜி..
இந்த விஷயத்தில் பலர் என்னை முந்த வேண்டும் என்பதே என் விருப்பம்.
மிகவும் தெளிவாக பதிவு போட்டுள்ளீர்கள்.நன்றி.கா.மை.ஜி..
நான் சொல்ல வந்ததை நண்பர் அஜீஸ் இன்னும் சுவைபட சொல்லி என் வேலையை எளிதாக்கி விட்டார்.
ungalukku viruppamanathai avar sollavillai endral ippadithan eluthuveerkal….
நண்பரே,
“சோ” எனக்கும் பிடித்தவர் தான். யாராக
இருந்தாலும், கருத்து மாறுபடும்போது அதை
எடுத்துச் சொல்வதில் என்ன தவறு ?
நான் எடுத்து வைக்கும் வாதங்களில்
தவறு எதாவது இருந்தால்
நீங்களும் அதை தாராளமாக இங்கு கூறலாம்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
CHO’S ARGUMENT IS NOT CORRECT. I AM ALSO READING THUKLAK MAGAZINE FROM THE FIRST ISSUE. MOST OF THE TIME, HE WRITES WHAT HE BELIEVES. BUT IN THIS MATTER HE IS WRONG.
I READ ONE ARTICLE IN “TRUE TAMILAN’ BLOGSPOT. IT ALSO TELLS ONE IMPORTANT MATTER CONNECTED WITGH Mr ROSAIAH. THE ARTICLE IS ABOUT SURIYANARAYANA REDDY VS PARITHALA RAVI. CAPTIONED AS ” RAHUL, WHY DIFFERENT YARDSTICK FOR ANDHRA AND TAMILNADU”
SAVUKKU QUOTED LEELAVATHI MURDER CASE ALSO. I DONT THINK THUKLAK DID NOT WRITE ANYTHING ON EDITORIAL COLOUMN. ABOUT THAT.
THERE IS NO QUESTION OF WISHFUL THINKING IN THIS ISSUE. WE ARE TELLING WHAT WE BELIEVE
Mr.Gopalsamy,
You are absolutely right.
Even another example related to an
accused involved in gandhiji’s
murder was also quoted.
with best wishes,
Kavirimainthan
காவிரிமைந்தன் அய்யா,
மோடி, ஜெ. இரண்டு பேருமே “சோ”வுக்கு
வேண்டியவர்கள். தேர்தல் வந்து விட்டதால்,
இரண்டு பேரில் யாரை ஆதரிப்பது, யாரைக்
கைவிடுவது என்று தர்மசங்கடமாக இருப்பதாக
அவரே சொல்லி இருக்கிறார்.
“நல்ல சந்தர்ப்பம் இது நழுவ விடுவாயோ” என்று
இந்த விஷயத்தை வைத்து, ஜெ.வைக் கைகழுவி
விட்டு, மோடி பக்கம் போய் விடுவார்.
ஒரு விதத்தில் இது சோவுக்கு நல்ல சான்ஸ்.
மேலும் சோ யாரை ஆதரிக்கிறாரோ அவர் “அபார”வெற்றி பெறுவார் என்பதும் சரித்திரம் நமக்கு காட்டும் உண்மை.எனவே அவர் ஜெயா பக்கம் இருப்பதே நமக்கு நல்லது.;-)