மத்திய அரசுக்கு கெடு வைத்த ஜெயலலிதாவின் வேகமும், புத்திசாலித்தனமும் ….

chief minister of tamil nadu  -jayalalithaa
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று,
23 ஆண்டுகளாக சிறையில் வதங்கியவர்களுக்கு
நேற்று உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை ஆயுள்
தண்டனையாக மாற்றி தீர்ப்பு கொடுத்ததும்,
என் மனதில் எழுந்தது ஒரே ஒரு கேள்வி தான்..

மத்திய அரசாவது, வேறு எந்த கிறுக்கனாவது,
இதில் உள்ளே புகுந்து குட்டையைக் குழப்பும் முன்னர்
தமிழக அரசு வேகமாக செயல்பட்டு இவர்களை விடுதலை
செய்ய முன்வருமா ? என்பது தான் அது.

இன்று காலை – சில நிமிடங்களுக்கு முன்னால்,
தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் தமிழக
அமைச்சரவை எடுத்துள்ள தீர்மானத்தை அறிவித்ததும்
மனதில் மிகுந்த மகிழ்ச்சியும், நிம்மதியும் ஏற்பட்டது.
நான் தான் என்றில்லை – என்னைப் போல்
இந்த விஷயத்தில் கருத்தோட்டம் உடைய எல்லாருக்கும்
மகிழ்ச்சி தரும் விஷயம் தான் இது.

தமிழக அரசு இது விஷயத்தில் சாதகமான முடிவு
எடுக்கும் என்பது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது தான்.

.
ஆனால், இதில் ஏற்படும் ஒவ்வொரு நாள் தாமதமும்
எதிர்மறையான விளைவுகளை தானாகவே ஏற்படுத்தக்
கூடியது. ஏனென்றால் – அரசியல் சட்டத்தின்படி,
தண்டனை பெற்ற கைதிகளின் தண்டனைக்காலத்தை
குறைக்கவோ, மாற்றவோ -மத்திய அரசு, மாநில அரசு
இரண்டுக்குமே அதிகாரம் உண்டு.

மத்திய அரசு இதில் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி,
எதிர்மறையாக செயல்படத் தீர்மானித்தால், அல்லது
மீண்டும் ஒரு ரிவிஷன் அப்பீல் போட்டால்,
மாதக்கணக்கில் விஷயத்தை மீண்டும் இழுத்தடிக்க
முடியும். வேறு வக்கிரபுத்திக்காரர்கள் யாராவது
உள்ளே புகுந்து குழப்பவும் முடியும்.

மத்திய அரசோ – முடிவெடுக்காமலே
தன் முழுக்காலமும் தூங்கி விடும் சாத்தியமும் உண்டு.

எனவே,
மாநில அரசு உடனடியாக இந்த விஷயத்தில்
ஒரு முடிவை எடுத்ததும்,
மாநில அரசு இதில் தன் அதிகாரத்தைப் பயன்படுத்த
தீர்மானித்துள்ளது என்பதை –
மத்திய அரசுக்கு உடனடியாகத் தெரிவித்து,

மத்திய அரசுக்கு கருத்து மாறுபாடு எதாவது இருந்தால்
3 நாட்களுக்குள் அதைத் தெரிவிக்க வேண்டும் என்றும்
கெடு வைத்தது மிகவும் புத்திசாலித்தனமான செயல்.

தமிழக அரசு முந்திக்கொண்டு ஒரு முடிவை அறிவித்து
விட்டதால், மத்திய அரசு இப்போது எதிர்மறையாக
வேறு வகையில் முடிவெடுத்தால் – அது பலத்த எதிர்ப்பை
எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, மத்திய அரசு
மௌனமாக இதற்கு சம்மதிக்க வேண்டிய சூழல் உருவாகி
இருக்கிறது.

இந்த விஷயத்தில் – மிக வேகமாகவும்,
புத்திசாலித்தனமாகவும் செயல்பட்ட தமிழக முதல்வர்
ஜெயலலிதா அவர்கள் பாராட்டுதலுக்குரியவர்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to மத்திய அரசுக்கு கெடு வைத்த ஜெயலலிதாவின் வேகமும், புத்திசாலித்தனமும் ….

  1. Siva's avatar Siva சொல்கிறார்:

    KM Sir
    As the election gets nearer, the frequency of your blogs getting hotter and faster which makes us to complete the current blog before we get the next one. I know the situation is so demanding you to act faster in writing, but still your speed is very important for sharing such information as next crazy or critical thing happens even faster in this environment
    Arivukku theeni vanthu kondey irukkirathu. now waiting for the next

  2. todayandme's avatar todayandme சொல்கிறார்:

    // மிக வேகமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்பட்ட தமிழக முதல்வர்
    ஜெயலலிதா அவர்கள் பாராட்டுதலுக்குரியவர்.//

    நமது முதலமைச்சர் நிர்வாகத் திறமை மிக்கவர் என்பதற்கு அநேக சான்றுகளைக் கூறலாம். மீண்டும் நிரூபித்திருக்கிறார். பாராட்டுகள்.

  3. nparamasivam1951's avatar nparamasivam1951 சொல்கிறார்:

    முதல்வரும் நீங்களும் படு வேகம். மு.க.வோ மத்திய அரசோ சுதாரிக்கு முன் முதல்வர் முடிவு. Nice.

  4. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    உங்களை போலவே நானும் எண்ணி வியந்து கொண்டிருக்கிறேன். போலீசார் முன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலே தீர்ப்பு வழங்கப்பட்ட விசித்திரமான வழக்கு இது. காலம் கடந்தது ஆயினும் நல்ல முடிவு. முதல்வர் அவர்களின் வேகத்தையும் விவேகத்தையும் பாராட்டும் அதே வேளையில், நீதிபதி சதாசிவம் அவர்களிருக்கும் திக்கு நோக்கி கை தூக்கி தொழுகிறேன்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      எழில்,

      நீங்கள் கூறுவது முற்றிலும் சரி.
      நீதிபதிக்கு தான் முதல் நன்றி சொல்ல வேண்டும்.
      அதை வெளிப்படையாகச் சொன்னால், நீதிக்கும்
      ஒரு உள்ளர்த்தம் கற்பித்து விடுவார்களே என்று
      அஞ்சித்தான் இடுகையில் நான்அதைப்பற்றி ஒன்றும்
      கூறவில்லை.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

    • S. Krishnaraj's avatar S. Krishnaraj சொல்கிறார்:

      இந்த விஷயத்தில் – மிக வேகமாகவும்,
      புத்திசாலித்தனமாகவும் சமசயோசிதமாகவும் செயல்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பாராட்டுகள்.

  5. todayandme's avatar todayandme சொல்கிறார்:

    நீதிபதி சதாசிவம் அவர்கள் தங்கள் பணியைச் செவ்வனே சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பை அவர்கள் அளித்தது அவர்களது பணிமகுடத்தில் ஒரு வைரம்.

    வை.கோ.அவர்கள் தன் முயற்சியை நம் இனத்திற்காக செய்த முயற்சியாகக் கொண்டு பாராட்டலாம்.

    கா.மை.அவர்கள் பதிவை மீண்டும் ஒருமுறை படித்தாலே தெளிவாகும், காலத்தின் அவசியமும், காலதாமத்தின் விபரீதமும்.

    ஒட்டைப்பானையில் ஊற்றிய பாலைப்போல இவ்விரண்டும் வீணாகாதபடி, சரியான முடிவை சரியான நேரத்தில் எடுப்பதற்கு கொஞ்சம், இல்லை, நிரம்பவே தில்லு வேண்டும்.

    இந்த முடிவு தனக்காக எடுக்கப்பட்டதா? தன் கட்சிக்காக எடுக்கப்பட்டதா? எதிரிகளை நிர்க்கதியாக்க எடுக்கப்பட்டதா? தன் இனத்தின் உணர்வுகளுக்கு அளிக்கும் மரியாதையாக எடுக்கப்பட்டதா? அல்லது இவ்வளவுகாலம் சிறையில் வாடிவிட்டவர்கள் இனியாவது வெளியில் வரட்டும் என்ற மனிதாபிமானத்தோடு எடுக்கப்பட்டதா? என்றெல்லாம் ஆராய்ச்சிசெய்யாமல் நீதிபதி சதாசிவம் அவர்களின் பணியும் வை.கோ.அவர்களின் முயற்சியும் வீணாகாமல் முதல்வர் காப்பாற்றியிருக்கிறார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

    எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
    செய்தற் கரிய செயல்.

    கலைஞர் உரை:
    கிடைப்பதற்கு அரிய காலம் வாயக்கும்போது அதைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செயற்கரிய செய்து முடிக்க வேண்டும்.

    • சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

      காற்றுள்ள போதே தூற்றிக்கொண்டுள்ளார் என்றே சொல்லத்தோன்றுகிறது, எனக்கு.
      ஒரு சில நாட்களுக்கு முன் நளினியை பரேலில் விட்டால் நாட்டில் சட்டம் ஒழுங்கு குலைந்துவிடும் என்று வாதிட்டது எந்த வாய்?
      இப்போது இந்த “அதிரடி” முடிவுக்கு, வரக்கூடிய தேர்தலே காரணம் என்பது ஏன் யாருக்கும் புரியவில்லை?
      ஓட்டு அரசியலால் ஏழு உயிர்கள் பிழைத்தன என்பதே உண்மை!
      CREDIT GOES TO NO INDIVIDUALS BUT TO இந்திய தேர்தல் முறை!

  6. R.Murugesan's avatar R.Murugesan சொல்கிறார்:

    Realy she is Mother of Tamil People

  7. palaniappan's avatar palaniappan சொல்கிறார்:

    this is election stund-

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.