திமுக மாநாட்டிற்கு பரிகார பூஜை …

திருச்சியிலிருந்து நண்பர் ஒருவர் சில நாட்களுக்கு
முன்பாக அனுப்பிய செய்தி இது. மாநாடு முடிந்த
பிறகு போடலாம் என்று வைத்திருந்தேன். எல்லாம்
நல்லபடியாக நடந்து முடிந்து விட்டதால் இப்போது
பதிவில் போடுகிறேன் –

———
திமுக மாநாட்டிற்காக திருச்சி நகரிலிருந்து 4 கிமீ
தொலைவில் உள்ள தனக்கு சொந்தமான 300 ஏக்கர்
நிலத்தை தேர்ந்தெடுத்திருக்கும் நேரு, ஏகப்பட்ட
பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு நிலத்தை
சீர் செய்து கொண்டிருக்கிறார். பிரம்மாண்டமான பந்தலை
அமைக்கும் வேலையை தினமும் நேரில் வந்து
மேற்பார்வையிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போது சில
அசம்பாவித சம்பவங்கள் நேர்ந்து விட்டன.பந்தலுக்கான
இரும்புத்தூண்களை அமைத்துக் கொண்டிருக்கும்போது
மின்சாரம் தாக்கி எலெக்ட்ரிஷியன் ஒருவரும்,
சாரம் கட்டுபவர் ஒருவரும் உயிரிழந்து விட்டனர்.
வெளியில் செய்தி பரவாதபடி, சந்தடி இல்லாமல்
இருவரது உடல்களும் உடனடியாக அவர்களது
சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதேபோல் அந்த இடத்தை சுத்தப்படுத்தும்போது,
சில நல்ல பாம்புகள் பொக்லைன் இயந்திரத்தில்
சிக்கி உயிரிழந்தன. இது காரணமாக சஞ்சலமடைந்த
நேரு – சாமியார்கள், குறிசொல்பவர்கள், ஜோதிடர்கள்
ஆகியோரிடம் குறி கேட்டு, அவர்கள் சொல்லும்
பரிகாரங்களை எல்லாம் ஒவ்வொன்றாக செய்து வருகிறார்.

ஒரு வெள்ளிக்கிழமையன்று, முன்னாள்
சமயபுரம் செயலர் ராஜசேகரின் மூலம் 5 கிலோ மஞ்சள்,
5 கிலோ குங்குமம், 500 எலுமிச்சைப்பழங்கள்
வாங்கி வந்து மாநாடு நடக்கும்
திடலைச் சுற்றிலும் பூஜை செய்து மஞ்சளையும்,
குங்குமத்தையும் கரைத்துத் தெளித்தார்கள். 500 எலுமிச்சை
பழங்களையும் இரண்டாக நறுக்கி, குங்குமம் தடவி,
திடலைச்சுற்றி, வரிசையாகப் போட்டிருக்கிறார்கள்.
இந்த செயல்களை எல்லாம் நேரு பயபக்தியோடு பார்த்து,
கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

————

மாநாடு நல்லபடியாக நடந்து முடிந்து விட்டது.
இதற்கு முதன்மையான காரணம் என்று எதைக் கூறுவீர்கள் ?
நேருவின் அயராத, கடினமான உழைப்பா …?
அல்லது ஜோசியர்களின் சொல் கேட்டு
அவர் அக்கரையுடன் செய்த பரிகாரங்களா …?

எப்படி இருந்தாலும் சரி – நேருவின் அக்கரையையும்,
ஏற்றுக் கொண்ட பொறுப்பை அவர் திறம்படச் செய்த
விதத்தையும் என்னால் பாராட்டாமல்
இருக்க முடியவில்லை.

மாநாட்டிற்காக அவர் செய்துள்ள ஏற்பாடுகள்
பிரமிப்பூட்டுகின்றன. எடுத்துக்காட்டாக கீழே சில
புகைப்படங்கள் …!

dmk-12

dmk con-7

dmk con-12

dmk con-3

dmk con-9

dmk con-10

dmk con-11

 dmk conference-1

ஆமாம் –இந்த மாநாட்டிற்கு நிறைய கோடிகள் 
தேவைப்பட்டிருக்கும் போலிருக்கிறதே ..?
தேர்தல்களில் தொடர்ந்து தோற்றுப்போய், மதிப்பிழந்து
இருக்கும் கட்சியால் இவ்வளவு செல்வம் திரட்ட 
முடிகிறதா .. ? அதிசயமாக இல்லை …?

dmk -thuttu money

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, கருணாநிதி, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to திமுக மாநாட்டிற்கு பரிகார பூஜை …

  1. GOPALASAMY's avatar GOPALASAMY சொல்கிறார்:

    NOT ONLY NEHRU. ALL LEADING DMK LEADERS ARE CAPABLE OF ARRANGING SUCH MEGA EVENT. REGARDING MONEY. A PARTY IN CENTRAL GOVT FOR MORE THAN 15 YEARS CAN AFFORD THIS. “PARIKAARAM” IS A BELIEF. DMK IS NOT EXCEPTION. KARUNA MIGHT HAVE DONE THESE THINGS SECRETLY.

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    நல்ல பதிவு..நன்றிகள் கா.மை.
    1.கேடிகளிடம் கோடிகள் இருப்பதில் அதிசயம் என்ன?
    2.திமுக மேல் மட்ட தலைவராக இருக்க முக்கியமான தகுதிகள்.
    =அடித்து உதைத்து மிரட்டு நிதி வசூல் செய்யும் திறமை.
    =லட்சக்கணக்கான பேரை எங்கிருந்தாவது இழுத்து வந்து மாநாடு நடத்தும் திறமை.
    =மாநாடு முடிந்தவுடன் ஒரு கணிசமான துகையை கழக தலைமையிடம் ஒப்படைக்கும் திறமை.
    3.சோனியாவிற்கும் காந்திக்கும் உள்ள ஒற்றுமையே “இந்த” நேருவிற்கும் உண்மையான நேருவிற்கும் உள்ள ஒற்றுமை.
    4.இந்த முன்னூறு ஏக்கர் சிறிய நிலபரப்பு திருச்சியிலிருந்து 6 கி.மி தூரத்தில் உள்ளது.நேருவின் தம்பி ராமஜெயத்திற்கு சொந்தமானது என சொல்லப்படுகிறது.
    மிக குறைந்த மதிப்பீட்டில் 1200 கோடி தேறும்
    இதன் மேல் தலைவர் கண் வைத்து விட்டார் என்றும் தோன்றுகிறது.தன் உரையின் ஆரம்பத்தில் சகோதர்கள் இருவரையும் அளவிற்கதிகமாக புகழ்ந்து
    “கழக கண்மணிகளாம் என் உடன்பிறப்புகளே”சொல்ல மறந்தும் விட்டார்.
    5.சனிக்கிழமை 9 -10.30 ராகு காலம் என்பதால் 9 மணிக்கு முன் கொடியேற்றம் 10.30 மணிக்குப்பிறகு மாநாடு துவக்கம்.
    6. தி மு க வின் பிரம்மாஸ்திரமான “பார்ப்பன எதிர்ப்பு ” மிக அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டது.தமிழ் நாட்டை அழித்தவர்கள் பார்பனர்களே என்ற அளவில் பலர் உரை ஆற்றினர்.ஆபாச கலப்பும் அதிகம்.

  3. nparamasivam1951's avatar nparamasivam1951 சொல்கிறார்:

    தலைவர் மஞ்சள் துண்டு, தொண்டர் பரிகார பூஜை. செலவழித்தது பத்து வருட வசூலில் 5 சதவீதம் கூட இல்லை.

  4. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    கட்சியை இன்று மட்டுமல்ல, 1977 முதல் 1987 வரை எந்த பொருப்பிலும் அதிகாரத்திலும் இல்லாதபோதும், கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருந்தவர்தான் இவர். உபி-களை அரவணைப்பதிலும் அவர்களை தன்னுடனே தக்க வைத்துக்கொள்வதிலும் கெட்டிக்காரர்.
    ராகுகாலம் முதல் குங்குமப்பொட்டு வரையிலும் எப்போதோ அப்டேட் ஆகிவிட்டது கட்சி!
    மஞ்சத்துண்டை கழுத்தில் போட்டதற்கு பரிகாரமாக இதோ மாநாட்டில் அமரும் இருக்கைகள், மேடை மற்றும் மேற்கூறை அனைத்தும் மஞ்ச மஞ்சேளென்று மின்னிக்கொண்டிருக்கின்றனவே!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.