
கிட்டத்தட்ட கடந்த 15 ஆண்டுகளாக, அகில இந்திய
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.
நேரடியாகவோ, மறைமுகமாகவோ –
கட்சியில் அவருக்கு எந்தவித போட்டியோ, எதிர்ப்போ –
கிடையவே கிடையாது.
கட்சியில் இருப்பவர்களும் சரி,
கட்சியை விட்டு வெளியேறியவர்களும் சரி,
வெளியேற்றப்பட்டவர்களும் சரி – இவரைக் குறைகூற
இதுவரை யாருக்கும் துணிச்சல் இருந்ததில்லை !
ஏன் அப்படி -தெரியவில்லை ..!
தேசிய ஆலோசனைக் குழுவின் (National Advisory
Committee ) தலைவராகவும்
இவரே இருந்து வருகிறார்.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி
கட்சிகளைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கும்
இவரே தலைவர்.
ஏகப்பட்ட லொள்ளு செய்யும் லொல்லு யாதவும் சரி,
சொன்ன வார்த்தையை எந்த காலத்திலும் காப்பாற்றாத,
சற்றும் நம்பகத்தன்மை இல்லாத முலாயம் யாதவும் சரி –
இது வரை இவரை நேரடியாகக் குறை கூறியோ,
குற்றம் சாட்டியோ பேசியதில்லை.
மெத்தப் படித்தவர். உலக அளவில் தனது தனிப்பட்ட
திறமையால் பொருளாதார நிபுணர் என்று அறிமுகமானவர்,
80 வயதைக் கடந்த முதியவர்.
உலக வங்கியில் உயர் பதவியில் பணி புரிந்தவர் –
டாக்டர் மன் மோகன் சிங்.
பிரதமர் பதவியில் இருக்கும் இவர்,
“அன்னை” என்ன சொன்னாலும்,
ஏனென்று கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொள்கிறார்-
செயல்படுகிறார்.
முதுகெலும்பில்லாதவர்,
கோழை, நைட்வாட்ச் மேன்,
சொரணை இன்றி பதவியில் ஒட்டிக் கொண்டிருக்கிறார் –
என்றெல்லாம் எதிர்க்கட்சியினராலும், பத்திரிகைகளாலும்
விமரிசனம் செய்யப்பட்டாலும் –
சுயமரியாதை எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டாலும் கூட
கவலைப்படாமல் – பதவியில் தொடர்கிறார்.
“அன்னை”சொல்வதைச் செய்கிறார்.
நடைபெற்ற ஊழல்களுக்கெல்லாம் சாட்சியாக இருந்தவர்,
இருப்பவர் – என்று மீடியாக்கள் தொடர்ந்து குறை
கூறுகின்றன. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல்
கொடுக்கின்றன. தங்கள் எதிர்ப்பை எல்லா விதத்திலும்
காட்டுகின்றன. இருந்தாலும் –
“அன்னை” சொல்வதைத் தான் பிரதமர் செய்கிறார்.
சுயமாக எதையும் செய்யும் சுதந்திரம் அவருக்கு கிடையாது.
பிரதமரின் அனைத்துச் செயல்களின் பின்னாலும்
வேறொருவர் இருக்கிறார் என்பது முக்காலே மூணு வீசம்
பேருக்குத் தெரியும் !
இத்தனையும் நடந்தாலும் –
ஆச்சரியப்படத்தக்க ஒரு விஷயம் –
“அன்னை” சோனியா இதுவரை –
தனிப்பட ஒரு பத்திரிகைப் பேட்டி,
ஒரு தொலைக்காட்சி பேட்டி கூட கொடுத்ததில்லை !
அரசாங்கத்திற்கு முக்கிய கொள்கைகளை
தீர்மானித்துக் கொடுக்கும் இடத்தில் இருப்பவர்,
எந்தெந்த சட்டங்களை, எப்படி, எப்போது
உருவாக்க வேண்டுமென்று
உத்திரவு போடும் இடத்தில் இருப்பவர் –
சட்ட மாதிரிகளையும் தயாரித்துக் கொடுப்பவர் –
யார் அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும்,
யாரை அகற்ற வேண்டும், யாரை மாற்ற வேண்டும் –
கட்சியில், ஆட்சியில் –
யார் எந்தப்பதவியை வகிக்க வேண்டும்,
யார் யாருக்கு கவர்னர் பதவி,
காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்
யார் முதல் அமைச்சர் ஆகவேண்டும்,
என்று அத்தனை முடிவுகளையும் எடுப்பவர் –
ஏன் – பிரதமராக இவரே இருக்க வேண்டுமா
மாற்றப்பட வேண்டுமா என்று கூட தீர்மானிப்பவர் –
ஆனால் இப்பேற்பட்ட பெருமைகளுடைய “அன்னை”
பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் பேசுவதில்லை –
வெளியேயும் பேசுவதில்லை.
கட்சிக் கூட்டங்களில் என்ன பேசுகிறாரோ –
எப்படிப் பேசுகிறாரோ –
கலந்து கொண்டவர்கள் கூட யாரும்
அதைப்பற்றி வாயே திறப்பதில்லை.
121 கோடி மக்களைக் கொண்ட இந்த ஜனநாயக குடியரசுக்கு
முன்னோடியாகவும், இந்த மாபெரும் நாட்டை
நடத்திச் செல்லும் தலைவராகவும் இருக்கும்
இவர் எப்படி, ஏன் – இப்படி ஒரு மர்ம மனிதராக காட்சி
அளிக்கிறார் ?
இவரை ஏன் யாரும் பேட்டி காண்பதில்லை ?
இந்தியாவில் இல்லாத பத்திரிகையாளர்களா ?
இந்தியாவில் இல்லாத தொலைக்காட்சி ஆசிரியர்களா ?
இந்தியாவில் இல்லாத freelance எழுத்தாளர்களா ?
அதெப்படி – சொல்லி வைத்தாற்போல் –
யாரும் முயற்சி செய்ய மாட்டேனென்கிறார்கள் ..?
ஒரு வேளை – பேட்டிக்கு முயற்சி செய்து,
தோற்று விட்டார்களா ?
முயன்று தோற்றிருந்தால் கூட –
அதுவே ஒரு செய்தி தானே ?
ஏன் அதைக்கூட எழுத மாட்டேனென்கிறார்கள் ?
ஆனானப்பட்ட ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின் –
ஆகியோர்களைக்கூட பேட்டி கண்டு எழுதியவர்கள் உண்டே !
ஏன் இப்படி ? ….. ஆச்சரியமாக இல்லை ?
“இளவரசரை” பேட்டி கண்டு இந்த நாட்டுக்கு
பெரும் சேவை புரிந்த அர்னாப் கோஸ்வாமி(Times Now)
இன்னொரு பேட்டிக்கு முயற்சிக்கலாமே !
பர்கா தத் ( NDTV ) பேட்டி காணலாமே !
ராஜ்தீப் சர்தேசாய் (CNN/IBN) முயற்சி செய்யலாமே!
–
சரி, யார் பேட்டி கண்டாலும் சரி.
நமக்காக அவர்கள் ஒரே ஒரு கேள்வி கேட்க வேண்டும் !
“திருமதி சோனியா காந்தி அவர்களே, இந்திய மக்கள்
உங்களுக்கு எந்த கெடுதலும் செய்யவில்லையே.
எங்கிருந்தோ வந்த உங்களுக்கு – இந்த நாடும்,
நாட்டு மக்களும், இத்தனை நாட்களாக –
இத்தனை செல்வத்தையும், செல்வாக்கையும்,
பதவியையும், பெருமையையும் கொடுத்தார்களே –
பதிலுக்கு அவர்களுக்கு நீங்கள் ஒன்றுமே கொடுக்கா
விட்டாலும் பரவாயில்லை !
ஏற்கெனவே ஒரு ரெண்டுங்கெட்டான் மனிதரிடம்
10 வருடங்கள் மாட்டி, வதைபட்டு,
நொந்து நூலாகிக் கிடக்கும் இந்த மக்களை –
மீண்டும் ஒரு அறைகுறைச் சிறுவனிடம்
மாட்டிக் கொண்டு விழிக்கச் சொல்வது உங்களுக்கே
நியாயமாகத் தெரிகிறதா ?”
–
யோசித்துப் பார்த்தால் இந்த கேள்வி –
கொஞ்சம் சுயநலம் கொண்டதாகத் தெரிகிறது..!
எனவே இதை மாற்றி, அவரது குடும்ப நலம்
குறித்ததாகவே கேட்போமே –
“அனைத்தும் அறிந்த நீங்கள் பதவியை “விஷம்”
என்று சொன்னீர்கள். நீங்கள் சொன்னால் சரியாகத்தான்
இருக்கும்..!
நீங்கள் பார்த்து வளர்த்த உங்கள் பையனின் சக்தியும்,
தாங்கும் திறனும் (!!) உங்களுக்குத் தெரியாதா ?
இப்போது நீங்கள் பெற்ற பிள்ளைக்கு,
– அந்த ஒன்றும் அறியாப்பாலகனுக்கு –
இந்த நாட்டின் 121 கோடி மக்களை ஆள வேண்டிய
“பிரதம மந்திரி பதவி” என்கிற ஆலகால “விஷத்தை”
கொடுக்கலாமா ?”
அந்த “அறியாப்பிள்ளை” இதைத் தாங்குமா ?



ஆமாந்தானே.தாங்கள் கேட்பது நியாயம்தானே.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
நல்ல கேள்விதான் அதை சோனியா விட்டுமுன் மைக்செட் வைத்துதான் கேட்க்கவேண்டும்.
ஏற்கனவே குட்டி குலைத்து தாய் தலையை உருட்டிடிச்சி. இன்னும் இந்த அம்மாவும் பேசினா இருக்குறதும் போய்டும் நொள்ள கண்ணா தான். இது தெரிஞ்சிதான் இதுவரை வாயை திறக்கலையோ என்னமோ? அதான் இவருக்கு பதிலா இவர்னு ப சி, திக்கு வாய் விஜை, கபிலு சிபிலு எல்லாம் பேசறாங்களே. அதுவே சகிக்கலே. இன்னும் இவங்க பேசிட்டாலும்…..
kalakkal post , as usual…
இளவரசரை அவர் படித்த பல்கலை கழகத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டதாக சு.சாமி தெரிவித்தாரே உண்மையா?-Srinivasanmurugesan
All important english channels are pro congress. They will not go against their master.
Karan thappar can only show his proud to others.
above all, i suspect, most of the important channels are funded by middle east / west / congress politicians. so, there is no chance of viewing sonia’s interview.
Mr K.M.
It is mainly due to useless mainstream media (MSM) which have become so biased that they are scared of the lady. Pl see the following link. Sites like Mediacrooks.com & newslaundry.com,, clearly expose the levels to which the MSM (NDTV, CNN-IBN etc) have stooped down to. Times NOw is an exception (to some extent).
Pl also refer to the news item (indicated in yr earlier post on JV not giving full details), in which NDTV had helped launder the scam money of PC
http://www.mediacrooks.com/2013/06/the-queens-poodles-bending-bunkum.html#.UwCQKPmSyQk
சோனியா பேசாமல் இருந்தது அவர் எவ்வளவு சாமர்த்தியசாலி எனக்காட்டியது
ஆனால் அவர் தன் மகனை பேச விட்டது அவர் எவ்வளவு பெரிய முட்டாள் என
காட்டியது.
அர்நாப் சரிபடமாட்டார். CNN-IBN cash-for-voteல் சரியில்லை. தற்போதைய scam-money TVயான NDTV தான் அதுவும் பிரனாய் ராய் அவர்கள் பார்க்கா உடன் இணைந்து பேட்டி எடுக்க உள்ளார்கள். விரைவில் வருகிறது.