
சனிக்கிழமை இரவு ஒன்பதரை மணி –
வண்டலூர் கூட்டத்திலிருந்து நரேந்திர மோடி –
5 நிமிடத்திற்குள் 10 தடவை, மீண்டும் மீண்டும்
சவால் விட்டு அழைக்கிறார் –
“மிஸ்டர் ரீ-கவுண்டிங் மினிஸ்டர்”
“மிஸ்டர் ரீ-கவுண்டிங் மினிஸ்டர்”
(“Mr.Re-counting Minister”)
மோடி சப்தமாகக்கூவி அழைப்பது சிவகங்கைக்கே
கேட்கும்போல் இருக்கிறது …!
பொழுது விடிந்ததும் விடியாததுமாக சிவகங்கையிலிருந்து
பதில் வருகிறது – “நான் ஒன்றும் ரீ-கவுண்டில்
வெற்றி பெறவில்லை. “முதல் கவுண்ட்” டிலேயே
வெற்றி பெற்று விட்டேன். எதிராளி தான் ரீ-கவுண்ட்
கேட்டார். மோடி உண்மையைச் சிதைக்கிறார்.”
(fake encountering the truth …!)
(டெல்லி போனபிறகு இன்னும் விவரமான –
பெரிய அறிக்கை வரலாம் !)
ndtv news கொடுத்துள்ள, அந்நாளைய பெட்டிச்
செய்தியை அப்படியே தருகிறேன் கீழே –
The case against the minister has been
filed by AIADMK candidate R.S. Raja
Kannappan, who lost the Sivaganga
constituency to the minister by just over
3,000 votes.
His opponent claims that when votes were
being counted, at 12 PM, he was informally
declared the winner, with the result being
flashed on some local channels. He says Mr
Chidambaram acknowledged defeat and left
the counting centre. But even after
counting officially ended at 12.30, Mr
Kanappan says, he was not formally
declared the winner by the Returning
Officer. He claims that at 4.30 pm, when
nationwide results indicated the Congress
was in the lead, the minister returned to
the counting centre and was hours later
declared elected. The AIADMK alleges that
its candidate’s votes were transferred to
Mr Chidambaram via a conspiracy between
the minister and the Returning Officer.
(-அப்போது ஆட்சியில் இருந்தது –
காங்கிரசின் கூட்டணிக் கட்சியான திமுக.
தேர்தல் அதிகாரியாக இருந்தவர் மாவட்ட கலெக்டர்.)
-மற்ற விஷயங்களை படிப்பவர் யூகங்களுக்கு
விட்டு விடுகிறேன்..!!
நான் சொல்ல வந்தது இரண்டு விஷயங்கள் குறித்து.
முதலாவது – நரேந்திர மோடி இப்படி கோபப்படக்
காரணமாக இருந்தது சிவகங்கைக்காரருடைய
சீண்டல் தான்.
நரேந்திர மோடியைப் பற்றி அவர் கடைசியாகக்
கூறிய ஒரு கருத்து –
“மோடியின் பொருளாதார அறிவு அற்பமானது.
அந்த அற்ப சொற்பம் மொத்தத்தையும்
ஒரு போஸ்டல் ஸ்டாம்பின் பின்புறம்
உள்ள வெற்றிடத்தில் எழுதி முடித்து விடலாம் !”
சும்மா இருப்பாரா மோடி – அதான் சிவகங்கைக்காரர்
வண்டலூரிலிருந்து வாங்கி கட்டிக்கொள்ள
வேண்டியதாகி விட்டது.
அடுத்தது –
ஒரு மிக முக்கியமான கேள்வி –
சீரியஸான கேள்வி …
தேர்தல் நடந்தது மே 2009-ல். வழக்கு போடப்பட்டு
கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகின்றன. அந்த எம்.பி.
பதவி வருகிற மே மாதத்துடன் காலாவதியாகிறது.
இதற்கு மேல் தீர்ப்பு எப்படி வந்து என்ன பயன் ?
ஒரு வேளை ரிசல்ட் தவறு என்று தீர்ப்பு வந்தால் –
பாராளுமன்ற காலமே முடிவடைந்த பிறகு,
அடுத்தவர் இப்போது பதவியேற்க முடியுமா ?
எம்.பி.யாகச் செயலாற்ற முடியுமா ?
அவரது வாய்ப்பு பறி போனது – போனது தானே ?
அவருக்குச் சேர வேண்டிய பதவி,புகழ், பொறுப்பு,
சலுகைகள் அத்தனையையும், மற்றவர் நியாயமற்ற
முறையில் அனுபவித்து விட்டதை
எப்படி ஈடு செய்ய முடியும் ..?
தகுதியற்ற ஒருவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத
ஒருவர் – எம்.பி.யாக 5 ஆண்டு காலம் பதவி
வகித்து, அமைச்சராகவும் பொறுப்பேற்று, 5 ஆண்டுகள்
பிறப்பித்த ஆயிரக்கணக்கான உத்திரவுகள், போட்ட
பட்ஜெட்களை எப்படி நியாயப்படுத்த முடியும் ?
உள்துறை அமைச்சராகப் பதவி வகித்தபோது,எத்தனையோ
ரகசியக் கோப்புகளைக் காண நேர்ந்திருக்கும். சட்டப்படி
அந்த கோப்புகளைக் காணத் தகுதியற்ற ஒரு நபர் –
மத்திய அரசின், உள்துறை அமைச்சகத்தின்,
ரகசியக் கோப்புகளை பார்த்ததையும், அதன் மீது
நடவடிக்கைகள் எடுத்ததையும் எப்படி நியாயப்படுத்த
முடியும் ?
தேர்தல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் உயர்நீதி
மன்றங்களுக்கு(High Courts) தான் இருக்கிறது.
பொதுவாக, தேர்தல் வழக்குகள் 6 மாதங்களுக்குள்
விசாரிக்கப்பட வேண்டும் என்று விதிமுறை இருக்கிறது.
ஆனால், இதுவரை ஒரு தேர்தல் வழக்கு கூட 6
மாதத்திற்குள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வெளியானதாகத்
தெரியவில்லை.
அண்மையில் உச்சநீதிமன்றம் (Supreme Court)-
மரண தண்டனை சம்பந்தமான வழக்கு ஒன்றில்
தீர்ப்பு கூறும்போது, அரசியல் சட்டத்தின்படி –
ஜனாதிபதிக்கு, இத்தனை நாட்களுக்குள்
கருணை மனுவை பரிசீலித்து அதன் மீதான முடிவை
அறிவிக்க வேண்டுமென்று நீதிமன்றம் கட்டுப்பாடு
விதிக்க முடியாது என்றாலும்,
நியாயமான கால வரம்பிற்குள் கருணை மனு
பரிசீலிக்கப்பட்டு அதன் முடிவு தண்டனை பெற்றவருக்கு
தெரிவிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய வேண்டிய
பொறுப்பு உச்சநீதி மன்றத்திற்கு இருக்கிறது என்று கூறியது.
அதே பொறுப்புணர்வை உச்சநீதிமன்றம்,
தேர்தல் தொடர்பான வழக்குகளிலும் காண்பிக்குமா ?
நாட்டிலுள்ள அத்தனை நீதிமன்றங்களும்
உச்சநீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை தான்.
ஜனநாயகத்தைக் காக்கும் பொருட்டு, இதில் ஒரு
கண்டிப்பான நிலையை உச்சநீதி மன்றம் மேற்கொள்ள
வேண்டும்.
தேர்தல் வழக்குகள், குறிப்பிட்ட காலவரைக்குள்
விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு சொல்லப்பட வேண்டுமென்று
இப்போதாவது உச்சநீதிமன்றம் கண்டிப்பான
உத்திரவுகளைப் பிறப்பிக்குமா ?



ஆம். உச்ச நீதி மன்றம் இது குறித்து, ஜனநாயகம் காக்க, ஆணை பிறப்பிக்க வேண்டும். இது T.N.Seshan அவர்களின் காலத்தில் சரி செய்யப்படாமல் எப்படி தப்பியது?
weldon, a very good quistion.