“டைம்ஸ் நவ்” ஆங்கில தொலைக்காட்சியின்
பேட்டியாளர் அர்னாப் கோஸ்வாமி செய்திருப்பதை விட
ஒரு பெரிய சேவையை இந்த நாட்டிற்கு இதுவரை
வேறு யாரும் செய்திருக்க முடியாது.

“ராகுல்” என்கிற ஒரு 43 வயது அறியாச் சிறுவனிடம் –
சொல்லிக் கொடுத்ததைக் கூட சரியாக திரும்பச்
சொல்லத் தெரியாத ஒரு அப்பாவியிடம் – 120 கோடி
மக்களைக் கொண்ட இந்த நாட்டை ஆளும் பொறுப்பை
கொடுக்க சில சுயநலவாதிகள் செய்த சதிமுயற்சியை
ஒரே ஒரு பேட்டியில் வெளிக்கொண்டு வந்த
“அர்னாப் கோஸ்வாமி”யை எவ்வளவு பாராட்டினாலும்
தகும்.
(ஒரு சின்ன சந்தேகம் – ராகுலின் உண்மையான
தகுதி, நெருங்கிப்பழக நிறைய வாய்ப்பு இருக்கும்
நம்ம ஊர்க்காரருக்கு தெரியாமலா இருந்திருக்கும் ?
அப்படி இருந்தும் வரிந்து கட்டிக்கொண்டு அவர் பெயரை
பிரதமர் பதவிக்கு முன்மொழிவதன் பின்னணி….? )
நான் இந்த பேட்டியைப் பற்றி எழுதுவதை விட
அவரவர் தானே தொலைக்காட்சியில் நேரில் பார்த்து
ரசிப்பது தான் சுவையாக இருக்கும். இதுவரை
பார்க்காதவர்கள் மீண்டும் அடுத்த முறை மறு ஒளிபரப்பு
செய்யும்போது அவசியம் பார்க்கவும்.
இந்த பேட்டியைப் பற்றி கண்ணில் பட்ட சில
ஒரு வரி விமரிசனங்களை கீழே தருகிறேன் –
“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” …!
——
“தன் அப்பாவி குழந்தைக்கு மீண்டும் இப்படி ஒரு
அநியாயம் நடக்காமல் இருக்க தனியார் டியூஷன்
வாத்தியார்களை தேடிக் கொண்டிருக்கிறார் சோனியா.”
“கேள்வி: உங்களுடைய எதிர்கால திட்டம் என்ன? பதில்:
பெண்கள் முன்னேற்றம்.
கேள்வி: முன்னேற்றம் என்ற வார்த்தையின்
எழுத்துக்களை சொல்லுங்கள் பார்ப்போம்
பதில்: உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்”
” ஒரே மணிநேரத்தில் வேறு யாராலும்
இது போன்று காமெடி செய்ய முடியாது”
“காங்கிரஸ் கட்சி எப்பொழுதுமே சமன் செய்வதில்
கவனம் கொண்டுள்ளது.
பப்பு போன்று உளறுபவர் இருப்பதால் மன்மோகன்
மௌனமாகத் தான் இருக்க வேண்டும்.”
“காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு முறையும் மோடிக்கு குழி
தோண்டினால் அதில் ராகுல் குதித்து விடுகிறாரே !”
“கேள்வி: முதலில் கோழி வந்ததா இல்லை முட்டை
வந்ததா?
பதில்: நாங்கள் கோழி முன்னேற்றத்தில்
கவனம் செலுத்தி, முட்டையை தகவல் அறியும் உரிமை
சட்டத்திற்கு அளிப்போம்”.
“என்ன கேள்வி கேட்டாலும் –
தகவல் அறியும் உரிமை சட்டம்,
பெண்கள் முன்னேற்றம் மற்றும்
இளைஞர்கள் அரசியல் என்கிற
3 வார்த்தைகளை தவறாமல் நினைவில் வைத்து
பதில் சொல்ல வேண்டுமென்று -அம்மா சொல்லிக்
கொடுத்ததை கரெக்டாக
செய்திருக்கிறது வளர்ந்த குழந்தை !”
“பேட்டி முடிந்த பிறகு, அம்மா –
பேட்டி எப்படி இருந்தது ராகுல்?
ராகுல்: எல்லா கேள்விகளும் அவுட் ஆப் சிலபஸ் அம்மா.”



Ragul, Ragul omg.
நானும் நேற்று பார்த்தேன். கோஸ்வாமி என்ற பாவி ஒரு பச்சிளம் பாலகனை அழ வைத்ததை. கொடுமையடா சாமி.
one hour and 20 minutes of crazy Gandhi comedy… Its much much more than vadivelu or vijayakanth or vivek or sv sekar comedy…. he just keeps repeating the same story like a tape recorder… I doubt even whether he understood what was asked….
THANKS TO ARNAB GOSWAMI… god bless you sir… u just exposed him to the whole nation
Thank you Srini.
Good value addition …!
This has made my job much easier..!
-with best wishes,
Kavirimainthan
http://timesofindia.indiatimes.com/india/Rahul-Gandhis-first-interview-Full-text/articleshow/29455665.cms
system – 73 times ( open system, closed system, bottom system top system, bad system right system…. )
women 21 times
RTI – 71 times
corruption – 19 times
BJP – 15 times
don’t miss this…
http://engagedino.com/askrg
you can ask Rahul Gandhi website has been put up so fast….
one more…Pro-Rahul Gandhi speech..
http://farzana-versey.blogspot.in/2014/01/how-he-turned-tables-rahul-gandhi.html?m=1
Rahul Gandhi interview with Arnab in pictures
http://www.campusghanta.com/2014/01/28/rahul-gandhis-interview-with-arnab-in-pictures/
Srini,
This is really fantastic…!
I could not control my laughter even 5 minutes after I finished reading …
How you are finding out this sort of sites …! ?
with all best wishes,
Kavirimainthan
Hitler’s Reaction to Frankly Speaking with Rahul Gandhi by Arnab Goswami
The video
http://www.ibtl.in/video/6777/hitlers-reaction-to-frankly-speaking-with-rahul-gandhi-by-arnab-goswami
unrealtimes in pictures
http://www.theunrealtimes.com/2014/01/27/in-pictures-rahul-gandhis-much-awaited-interview-with-arnab-goswami/
சிறுவர் வதை சட்டத்தின் கீழ் கோஸ்வாமியை சிறையில் தள்ள வேண்டும்
மோடிமொபியா நோய் பிடித்து அலையும் மருதநாய் அகம் என்கிற பதிவர் இந்த பேட்டிக்கு ஏதாவது கருத்து சொல்லுவாரு பார்ப்போம்
கா.மை.ஜி..
நான் மிகவும் ரசித்தது உங்கள் தலைப்பு..“இப்படி என்று சொல்லி இருந்தால் தனியே வருவேனா …?” அருமை..(இங்குள்ள இளைஞர்களுக்காக..இது 1960 களில் வந்த ஒரு MGR படப்பாடலின் பல்லவி..)
அப்போ அந்த பேட்டி..lesser said is better..
“ராகுல்-அர்னாப்” பேட்டி கேட்டதும் இரண்டு உறுதியாச்சு..
1)ராகுல்,Vijay TV யின் ”அது இது எது” நிகழ்ச்சியின் “மாத்தி யோசி” போட்டிக்கு முற்றிலும் தகுதியானவர்.
மா.கா.பா(அர்னாப்):ராகுல்! உங்களுக்கு மோடியை கண்டால் பயமாக உள்ளதா?
ராகுல்:என் பாட்டி அப்பா ரெண்டு பேரும் படுகொலை செய்யப்பட்டார்கள்.!
2)இந்திய பிரதமர் பதவிக்கு இவர் தகுதியானவரே……….
அர்னாப்
BEAUTIFUL CAPTION. PANAKKARA KUDUMBAM SONG.
NEXT TIME RAUL SHOULD TAKE MANISH, ABISHEK, JAYANTHI (?), AAP SOMNATH, SISODIA, VEERSINGH AND KETHKAR. THEN NOBODY CAN HEAR ANYTHING AND NOBODY CAN UNDERSTAND ANYTHING
http://mysay.in/2013/09/14/congress-selects-and-trains-members-to-express-party-viewpoint-in-media/