Importance கருதி அல்ல – interesting-ஆக
இருப்பதாலேயே இந்த செய்தி இங்கே !
மதுரை அண்ணன் அழகிரி சம்பந்தப்பட்ட எதுவுமே
interesting தான்- இல்லையா ?
இன்றைக்கு (26/01/2014) மதுரையில்
அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டியுள்ள வாழ்த்து
போஸ்டரின் வாசகம் “வீணர்களை வென்ற விபீஷணரே”
அழகிரி விபீஷணரா ?
அப்படியானால் ராவணன் …?
(அழகிரி ஆதரவாளர்களுக்கு கற்பனை கொடி கட்டிப்
பறக்கிறது. ஆனால், பதவுரை, பொழிப்புரையையும்
அவர்களே கொடுத்து விட்டால் நன்றாக இருக்கும் ..!)
அதே போல், ஸ்டாலினுக்கு ஆதரவாக கருதப்படும்
நக்கீரனில் திடீரென்று அழகிரிக்கு முக்கியத்துவம்
கொடுக்கப்பட்டுள்ள “செய்தி”யைப் பாருங்கள் –
“திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி இன்று
சென்னையில் இருந்து மதுரை புறப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் அவருக்கு
மேள தாளத்துடன் வழியனுப்பு விழா நடைபெற்றது.
இதே போல், மதுரை விமான நிலையத்திலும் அவரை
வரவேற்க, ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.” – !!!
மதுரையில் ஒட்டப்பட்டுள்ள சுவையான,
லேட்டஸ்ட் போஸ்டர்கள் சில கீழே –

ஆமாம் – அழகிரியால் திமுகவுக்கு
குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பு ஏதும்
இருக்குமென்று நினைக்கிறீர்களா ..?






ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்,கூத்தாடி ரெண்டுபட்டால் நமக்கெல்லாம் கொண்டாட்டம்.
விபீஷணன், ராமனுடன் சேர்ந்து கொண்டு,
தவறான வழியில் போன தன் அண்ணன்
ராவணனுக்கு எதிராகப் போர் செய்தான்.
அழகிரிக்கு அண்ணனில்லை. பதவிப்போட்டி காரணமாக
தம்பியுடன் தான் விரோதம். வாதத்திற்கு வைத்துக் கொண்டால் ஸ்டாலின் தான் ராவணன்.
ஆனால், நவீன விபீஷணன் யாருடன் சேர்ந்து
கொண்டு ஸ்டாலினுடன் போரிடப் போகிறார்
என்பது தான் தெரியவில்லை.
நீங்கள் சொன்னது போல் quite interesting.
//அழகிரியால் திமுகவுக்கு
குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பு ஏதும்
இருக்குமென்று நினைக்கிறீர்களா ..?//
‘இவர்’ போனால் இழப்பதை விட ‘அவர்’ வந்தால் வரும் லாபமே அதிகம் என்பது தான் ‘அவர்களுடைய’ இபோதைய கணிப்பு. ‘அவர்’ வரவில்லை என்றால் கண்கள் பணிக்கும் இதயம் இனிக்கும்.
எழில்,
நானும் இதையே தான் நினைத்தேன்.
ஒரு வேளை “அவர்” வந்து, “இவர்” வெளியிலேயே
இருக்க வேண்டி இருந்தால் …
“இழப்பு” எந்த அளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்…?
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
நீங்க நினைப்பது போல நடக்க வாய்ப்பில்லை காவிரி சார்.
அவர் வந்தவுடன் இவரையும் அழைத்துக்கொள்வார் தாத்தா.
விவகாரமானவர்தான் அவரும்!
நீங்கள் சொல்வதும் சரி தான் அஜீஸ்.
அதற்கும் வாய்ப்பு இருக்கிறது…!
கலைஞர் நாம் எண்ணாத விஷயங்களையும்
எண்ணக்கூடியவரே.
ஆமாம் -இன்றைய செய்தி பார்த்தீர்களா –
ஸ்டாலின்+ விஜய்காந்த்+ ஜி.கே.வாசன்
கூட்டணி ….!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
அடுத்த தலைமுறை!
பரிணாம வளர்ச்சி!!
“இவரும்” போய் “வரும்” வராது போனால், அய்யகோ…உடன்பிறப்புகள் என்ன ஆவது.
“அவரும்” என்பது தவறுதலாக “வரும்” என வந்து விட்டது.
நண்பர் பரமசிவம்,
“இவர்” எப்போது கூப்பிட்டாலும் திரும்ப
வந்து விடுவார். இது புதிதல்லவே …!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
karuvin
kurrtam;
nanri; nanjil k.manokaran.