தமிழ் நாட்டின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை
5.3 கோடி. விஜய்காந்துக்கு ஆதரவாக சுமார் எட்டு
சதவீதம் வாக்குகள் இருப்பதாக வைத்துக் கொண்டால்
அவர் வசம் இருப்பவை சுமார் 40 லட்சம் ஓட்டுகள்.
அவர் தமிழ் திரைப்படங்களில் ஹீரோவாக நடித்த
காலத்திலிருந்தே அவர் மீது அபிமானமும்,பற்றும்,
வெறியும் கொண்ட தமிழ் ரசிகர்கள் தான் அவரது
சொத்து..ஓட்டுகள்..!!
புரட்சிக் கலைஞருக்கு – கட்சியின் எதிர்காலத்தைப்
பற்றியோ, வளர்ச்சியைப் பற்றியோ எந்த கவலையும்
தேவை இல்லை.இருப்பதைத் தக்க வைத்துக் கொள்ளவும்
அவர் போராட வேண்டிய அவசியமே இல்லை.
அவரே துரத்தினாலும் கூட, அவரது ரசிகர்கள் –
சாகிற வரைக்கும் இவர் பக்கம் தான் இருப்பார்கள்..!
இவர் என்ன சொன்னாலும் கேட்பார்கள்.
யாருக்கு ஓட்டு போடச் சொன்னாலும் போடுவார்கள்.!
எனவே ரசிகர்களைப்பற்றி -மன்னிக்கவும் -கட்சித்
தொண்டர்களைப் பற்றி கவலைப்படவே தேவையில்லை.
இந்த 40 லட்சம் ஓட்டுகளை ஏலத்தில் விடுவதற்கான
முயற்சிகளில் தீவிரமாக இருக்கிறார் விஜய்காந்த்.
இது அவர் சொத்து – அவர் என்ன வேண்டுமானாலும்
செய்வார். நாம் யார் கேட்க ?
அவருக்கும் ஆசை தான் -தமிழ்நாட்டின் முதலமைச்சர்
ஆகி மக்களுக்கு சேவை செய்ய ! ஆனால் இருக்கும்
இரண்டு பேரும் வழி விட்டால் தானே ?
இதற்கு மேலே உயர வழியோ-வாய்ப்போ இல்லையென்று
ஆகும்போது, இருப்பதைப் பயன்படுத்திக் கொள்வது
தானே புத்திசாலித்தனம் ?
சரி – இதில் prospective buyers யார் யார் …?
தீவிரமாகத் துடிப்பது – கலைஞர்-ஸ்டாலின்-திமுக

அதே அளவுக்கு – காங்கிரஸ் தலைமை

மிகுந்த ஆசையுடன் (ஆனால் துட்டு இல்லாமல்) – தமிழக பாஜக

மூவரிடமும் தனித்தனியே பேரம் பேசி அவர்களின்
ஆவலை உச்சகட்டத்திற்கு கொண்டு போக முயற்சித்துக்
கொண்டிருக்கிறார் வி.கா.
ஏலம் விடுவதில் இரண்டு தினுசுகள் உண்டு.
ஒன்று திறந்த ஏலம் – open auction.
முதலிலேயே தகுந்த விளம்பரம் செய்யப்பட்டு,
குறிப்பிட்ட காலத்தில், குறிப்பிட்ட இடத்தில்
வெளிப்படையாகக் கூவி, பொருள் ஏலத்திற்கு
விடப்படும். அதிக விலை கொடுக்கத்தயாராக
இருப்பவருக்கு பொருள் விலை பேசி முடிக்கப்படும்.
இரண்டாவது – sealed tender system.
அதாவது அந்த பொருளை வாங்க விரும்புபவர்கள்
ஒவ்வொருவரும், அதற்கு தன்னால் அதிகபட்சம்
என்ன விலை கொடுக்க முடியும் என்பதை ஒரு
காகிதத்தில் எழுதி அதை சீல் செய்யப்பட்ட
கவரில் வைத்து கொடுத்து விட வேண்டும்.
கடைசி நாள் முடிந்தவுடன், அறிவிக்கப்பட்ட
நேரத்தில் அனைத்து உறைகளும் திறந்து பார்க்கப்பட்டு,
யார் அதிகபட்சம் தொகை தெரிவித்திருக்கிறார்களோ,
அவர்களுக்கு பொருள் விற்கப்படும்.
இது இரண்டையும் தவிர்த்து, நம்ம ஊர் கிராமங்களில்
நடக்கும் மாட்டுசந்தைகளில் ஒரு வித்தியாசமான முறை
நடைமுறையில் உண்டு.
மாடு வாங்க விரும்புபவர், மாட்டை பார்வையிட்ட பின்
ஒரு (தோளில் போடும் )துண்டின் உள்ளே –
விற்பவர், வாங்குபவர் இரண்டு பேரும்
கையை நுழைத்துக் கொண்டு,
ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு,
கைவிரல்களின் மூலம் தாங்கள் விற்க-வாங்க
விரும்பும் பொருளின் விலையை –
தொகையை கூட்டி,குறைத்து பேரம் பேசுவார்கள்.
இந்த முறை எதற்காக என்றால் –
வாங்குபவர், விற்பவர் இருவரைத்தவிர –
வெளியில் இருப்பவர்களுக்கு என்ன பேரம் நடக்கிறது,
இவர் எவ்வளவு கேட்கிறார், அவர் எவ்வளவு சொல்கிறார்
என்பதெல்லாம் தெரியாது ! ரகசியமாகப் பேரம் பேசி
விலை படியும்…!!!
படியா விட்டால் ..?
– அடுத்த ஆளுடன் பேரம் நடக்கும்..!
வி.கா. இப்போது பயங்கர டிமாண்டில் இருக்கிறார்.
வாங்குவதற்கு 3 பார்ட்டிகள் அலைமோதுகின்றன..
இவர் யாருக்கு வேண்டுமானாலும் விற்கத்தயாராக
இருக்கிறார். இதில் வேண்டியவர், வேண்டாதவர் –
தெரிந்தவர், தெரியாதவர் என்கிற
பேதமெல்லாம் கிடையாது.
ஒரே க்ரைடிரியா …
யார் அதிகம் கொடுக்கத்தயாராக இருக்கிறார்கள்
என்பதை கண்டு பிடிப்பதே..!
இந்த ஏலத்தில் ஒரு வித்தியாசம் உண்டு..!
ஓட்டுக்களுக்கு விலையாக-
‘நோட்டு’ம் கொடுக்க வேண்டும்,
‘சீட்டு’ம் கொடுக்க வேண்டும்.
சில பார்ட்டிகள் ‘சீட்டு’ எவ்வளவு வேண்டுமானாலும்
கொடுக்கத் தயாராக இருக்கின்றன. ஆனால் ‘நோட்டு’
தான் பிரச்சினை.
சில பார்ட்டிகள் ‘நோட்டு’ எவ்வளவு வேண்டுமானாலும்
தரத்தயார். ஆனால் ‘சீட்டு’தான் பிரச்சினை.
அதிக சீட்டு, அதிக நோட்டு –
எங்கேயிருந்து வருகிறது..?
என்பது தீர்மானமானவுடன்,
பேரம் -sorry – பேச்சுவார்த்தை முடிந்து விடும்-
கூட்டு பிறந்து விடும் …!!
பேரம் முடியும் வரை இவருக்கு ஏகப்பட்ட டிமாண்டு
இருக்கும். ‘நமக்கு தான்’, ‘நமக்கு தான்’ என்று
எல்லா கட்சியினரும் இவர் பின்னால் சுத்துவார்கள்.
சிங்கப்பூர் என்ன, மலேசியா என்ன, அண்டார்டிகா
போய் பெங்குய்ன் பின்னால் ஒளிந்து கொண்டாலும்
விட மாட்டார்கள் – அங்கும் வந்து
பின்னாலேயே சென்று துரத்தி, பேச்சு வார்த்தை (!)
நடத்துவார்கள்..!
“பார் – அத்தனை கட்சிக்காரனுங்களும் நம்ம பின்னால
சுத்தறாங்க” என்று இவரும் தன் தொண்டர்களிடம்
“பிலிம்” காட்டுவார்.
ஆனால் – எதாவது ஒரு கட்சியுடன் தானே
கூட்டணி கைகூடி வரும்..? அது முடிவாகி,
பேரம் முடிந்த பிறகு-
இவர் பின்னால் இவ்வளவு நாட்களாக
நம்பிக்கையுடன் அலைந்த –
கூட்டணி வாய்ப்பு கிடைக்காத –
மற்ற கட்சிக்காரர்கள் – இவரைப்பற்றி என்னவெல்லாம்
சொல்லி திட்டப்போகிறார்கள் என்பது தான்
சுவாரஸ்யம்…!
என்ன ஸார் இது – அக்கிரமமா இருக்கிறதே
என்று நினைப்பவர்களுக்கு ..
டென்ஷன் ஆகி எந்தப் பயனும் இல்லை ..!
இது தான் இன்றைய அரசியல், ஜனநாயகம், கட்சி,
கூட்டணி, தேர்தல் எல்லாமே !
எட்ட நின்று வேடிக்கை பார்ப்பதை விட
வேறேன்ன செய்ய முடியும் நம்மால்…?



இந்தத் தேர்தல் முறையில் இது இப்படித்தான் இருக்கும் ஐயா. இந்த விழிப்புணர்வு வந்துவிட்டால் தேர்தல்களைப் பற்றியே நாம் கவலைப்பட மாட்டோம். அப்படி கவலைப்படாத அந்நாள் நமக்கு இனிய நாளே!! எனக்கு எந்நாளும் இனிய நாளாகவே தெரிகிறது!! 🙂
ரிஷி,
மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் ..
உங்களால் கவலைப்படாமல் இருக்க
முடிகிறதா …?
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
ஐயா, நிறைய மாற்றங்கள் நம் சமுதாயத்தில் தேவைப்படுகின்றன. வெறும் சீர்திருத்தங்கள் நீண்ட கால நோக்கில் உதவ மாட்டா! மனநிலை அடிப்படையில் பலதரப்பு மக்களிடமும் நிறைய்ய்ய மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இதற்கெல்லாம் கவலைப்பட்டுப் பயனில்லை.
அதற்குப் பதிலாக ஆக வேண்டியதைப் பார்க்கலாம். எனக்கு இதில் விருப்பம் இருக்கிறது. மாற்றங்களைக் கொணர என்னால் இயலுக்கூடிய சில விஷயங்களை இப்போது செய்துகொண்டிருந்தாலும் வெகுஜன ரீதியீல் செய்யவதற்கு நிறைய பாதைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. கவலைப்பட்டால் வேலை நடக்காது.
முதற்கண் இன்றைய தேர்தல் அரசியல் ஒரு செல்லரித்த விசயம், தங்கள் நலனுக்கானது இல்லை என்ற விழிப்புணர்வு எல்லா மக்களிடமும் வந்துவிட்டால் அவர்கள் இந்த அரசியல் முறைமையை மாற்றியமைப்பார்கள். அது இன்னும் வரவில்லை. அது முழுமையாக வராதவரை கவலைப்பட்டுக் கொண்டே இருப்பதும் அறிவார்ந்த செயலல்ல என்பது என் பணிவான கருத்து!
ஒரு அரசியல் நபர் ஒரு பகுதியில் கல்யாண வீட்டிற்கு வருகிறார் என்றால் பல கிலோமீட்டர் தூரத்திற்கு போஸ்டர்களும், ஃபிளக்ஸுகளும் ஆக்கிரமிக்கின்றன. இதற்கெல்லாம் காசு எங்கிருந்து வருகிறது? எந்த அடிப்படையில் இவற்றுக்குச் செலவழிக்கிறார்கள் அந்த ஏரியா அரசியல் பிரதிநிதிகள்? அவர்களே அந்த ஏரியாவின் மக்கள் பிரதிநிதிகளாகப் பரிணமிக்கிறார்கள் என்றால் அது நாம் கவலைப்பட வேண்டியது இல்லை ஐயா! அந்த மக்கள் தாங்கள் இப்படி மாக்களாக இருக்கிறோமே என்று வெட்கித் தலைகுனிய வேண்டியது! கட்சிகள் என்ற கருத்தாக்கமே ஒழித்துக்கட்ட வேண்டிய மூட்டைப் பூச்சி எனும்போது அந்த மூட்டைப் பூச்சியை வைத்துக் கொண்டு பட்டு நெய்துவிடுவேன் என்பது எந்த வகைக் கணக்கு என்பதுதான் எனக்குப் புரியவில்லை.
இவ்வளவு ‘ஹைப்’பும் நம்ம மீடியாக்கள் ஏற்படுத்தியதுதானே ஐயா?
தேவையே இல்லாமல் ஒருவரை தூக்குவது பின்னர் அப்படியே விட்டுவிடுவது… இப்படித்தானே இவர்கள் தங்களுடைய பிழைப்பை நடுத்திக்கொண்டிருக்கின்றனர். ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லைதான், நமக்கும்!
ஆனாலும் இந்த அரசியல் வியாதிகளுக்கு சொரணை என்பதே இல்லையே. அரசியல்லே இதெல்லாம் சகஜம்பா-ன்னு வெட்கமே இல்லாம சொல்லி திரிபவர்கள்.
ஆனாலும் பாவப்பட்டவர்கள் அந்த “விசிலட்ச்சான் குஞ்சு”கள்தான்.
HE IS VERY CHEAPLY RUNNING THE PARTY. I DONT THINK NOW HE IS HAVING 8% VOTES.
CONGRESS IS THE BEST BIDDER SO THAT THEY CAN BRING DMK TO THEM.
the moment he finalizes with one, the other two are going to call him mad, drunken, idiot, arrogant…what not and what else… and we don’t know whom all he is going to beat…till May 2014, we all are going to have fun… that’s the only thing for sure
இதெல்லாம் விடுங்க..இப்போ வடிவேலு யாரை ஆதரிப்பார்?
40 லட்சம் ஓட்டெல்லாம் அம்மா தயவால
இப்போ இதில பாதி கொட தேறாது.
இதோ அடுத்த தோசை ரெடி!
இப்போ தினமலரிலிருந்து..சூடாக,,
மும்பை : மகாராஷ்டிராவில், மாதம், 80 ஆயிரம் சம்பளம் வாங்கும், அரசு அதிகாரி ஒருவருக்கு, 200 கோடி ரூபாய் மதிப்பில் சொத்துகள் உள்ள விவரம், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தால் தெரிய வந்துள்ளது.
வருவாய் துறை:
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், பிருத்விராஜ் சவான் தலைமையிலான, கூட்டணி ஆட்சி, மகாராஷ்டிராவில் நடக்கிறது. இங்குள்ள, புனே நகரில், வருவாய் துறையில், கோட்ட கமிஷனராக, பிரபாகர் தேஷ்முக் என்பவர் உள்ளார்.இவர் தலைமையிலான துறையில், அரசு நிலங்களை, குறைந்த விலைக்கு வாங்கி, கட்டுமான நிறுவனங்களுக்கு, அதிக விலைக்கு விற்று, கோடிக்கணக்கில் பணம் சேர்த்துள்ளதாக, அவர் மீது புகார் கூறப்பட்டது.சமீபத்தில் சேர்ந்ததுஇது குறித்து, தகவல் ஆர்வலர் ஒருவர், தகவல் கேட்ட போது, அதிகாரி பிரபாகருக்கு, 200 கோடி ரூபாய்க்கு சொத்துகள் இருப்பது தெரிய வந்தது. அவை, நான்கைந்து ஆண்டுகளுக்குள் சேர்க்கப்பட்டவை என்பதும் தெரிந்தது.அதிகாரி, பிரபாகரின் சொத்து சேர்ப்பு குறித்து விசாரணை நடத்துமாறு, அந்த, தகவல் ஆர்வலர், மாநில முதல்வர், சவானுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கு என்ன தான் தீர்வு? கூட்டணி உருவானால் அடுத்த தேர்தல் வரை, அதே கூட்டணி தான் என்றால்………
நண்பர் பரமசிவம்,
நாடகமே உலகம்…
நாளை நடப்பதை யார் அறிவார்….!!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்