
———–
எகனாமிக்ஸ் டைம் செய்தித்தாள் மூலம் கிடைக்கும்
செய்திகள்- –
முந்தைய முதல்வர் ஷீலா தீக்ஷித், உபரி பட்ஜெட் போட்டு,
கையிருப்பில் கணிசமான அளவு நிதிவசதி வைத்துவிட்டுப்
போயிருக்கிறார் என்றும்,
குறைந்த பட்சம் 3 மாதங்களுக்கு எந்த கவலையும்
இல்லாமலே இலவச தண்ணீர், பாதி விலையில் மின்சாரம்
ஆகியவற்றை புதிய அரசு மேற்கொள்ளலாம் என்று கூறுகிறது.
அதற்குள்ளாகவே காங்கிரசை வெறுப்பேற்றுகிற மாதிரி சில
காரியங்களைச் செய்தால், மைனாரிடி அரசு கவிழ்ந்து விடும்.
வாக்குறுதிகளை நிறைவேற்றிய மாதிரியும் ஆகும்,
மீண்டும் தேர்தலுக்கு வழி வகுத்தது மாதிரியும் ஆகும் என்று
சொல்கிறது.
—
நடந்தவை, நடப்பவை எல்லாவற்றையும் சேர்த்து
யோசித்துப் பார்த்தால் – ஒரு விஷயம் மிகவும்
தெளிவாகத் தெரிகிறது.
அர்விந்த் கெஜ்ரிவால் – புத்திசாலி – அதிபுத்திசாலி,
மகா சாமர்த்தியசாலி – இதில் எந்தவித சந்தேகமும்
இல்லை. கெஜ்ரிவாலின் தொலைக்காட்சி பேட்டிகளிலிருந்து
இன்னொறு விஷயமும் உறுதியாகிறது –
கெஜ்ரிவால் ஒரு மிகச் சிறந்த ஒரு நடிகர்…..!
ஆனால் –
அவர் புத்திசாலி மட்டும் தானா ?
அல்லது நல்லவர் என்று சொல்லலாமா ?
அல்லது இப்போதிருக்கும் அரசியல்வாதிகளை விட
மிகவும் கெட்டிக்காரர் என்று மட்டும் தான் வகைப்படுத்த
முடியுமா .. ?
தெரியவில்லை …! இன்னும் கொஞ்ச நாட்கள் போக
வேண்டும்.
அது – 6 மாதமாகவும் இருக்கலாம் – 6 வருடங்களாகவும்
இருக்கலாம் …!
——————-
மேலே இருப்பது கடந்த மாதம் 27ந்தேதி இந்த
வலைத்தளத்தில் வந்த
“அர்விந்த் கெஜ்ரிவால் நல்லவரா – கெட்டவரா ?”
என்கிற தலைப்பிலான இடுகையின் சில பகுதிகள்.
நம் மீது கருணை மிகக் கொண்டு,
தன்னைப் புரிந்து கொள்ள 6 மாதமெல்லாம் காத்திருக்க
வேண்டாம் – இப்போதே புரிந்து கொள்ளலாம் என்று
தன் சுய உருவத்தை இப்போதே உரித்துக் காட்டி விட்டார்
அர்விந்த் கெஜ்ரிவால் என்கிற வேடதாரி.
காங்கிரஸ் ஆட்சியில் – ஆதர்ஷ் அடுக்குமாடி கட்டிடம்,
2ஜி ஸ்பெக்ட்ரம், நிலக்கரி ஊழல், விலைவாசி உயர்வு,
என்று அலையலையாக ஊழல்கள் உச்சகட்டத்தில்
வெளிவந்தபோது வெளிப்படாத ஆக்ரோஷம் –
வாத்ரா நில விவகாரங்கள் வெளிவந்தபோது –
கறுப்புப் பணம் பதுங்கியபோது வெளிவராத ஆக்ரோஷம் –
இப்போது எப்படி வெளிவந்தது …?
டெல்லி முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு தான்
போலீஸ் அதிகாரம் டெல்லி முதலமைச்சருக்கு கிடையாது
என்பது தெரிய வந்ததா ?
பொறுப்பில்லாமல் தான் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள்
நிறைவேற்ற முடியாத அளவுக்கு சிக்கலானவை –
அனுபவம் இல்லாத, மண்டைக்கனம் மிக்க அவரது
சகாக்களால் ஏற்படும் விளைவுகள் தொடர்ந்து ஆட்சியில்
இருந்தால் கெட்ட பெயரைத் தேடித்தந்து விடும் –
டெல்லி முதல்வர் பதவியில் தொடர்ந்தால் – அது
பாராளுமன்றத்திற்கு போட்டி போடுவதற்கு தடங்கலாக
இருக்கும் –
எனவே …? மகா புத்திசாலி அல்லவா ..?
ஒரே கல்லில் பல மாங்காய்கள்…!
முதலமைச்சராக இருந்து கொண்டு –
தடையுத்தரவை மீறினால் ..?
சட்டம் ஒழுங்கு பிரச்சினையை முதல்வரே
உண்டு பண்ணினால் …?
ஆயிரக்கணக்கான கட்சிக்காரர்களுடன் சேர்ந்து
போலீசுடன் மோதலை உருவாக்கி கலவரத்தை
உண்டு பண்ணினால் …?
ஆட்சி “டிஸ்மிஸ்” –
மக்களிடையே “பழி வாங்கப்பட்டவர்” என்கிற இமேஜ்.
நல்லது செய்ய முயன்றேன் –
டிஸ்மிஸ் செய்து விட்டார்கள்..என்று வேடம்.
எந்தவித தடங்கலும் இல்லாமல் –
புதிய ஒப்பனையுடன் –
பாராளுமன்ற தேர்தலில் இறங்கலாம்.
சபாஷ் கெஜ்ரிவால் …!!!
(பாஜக குற்றம் சாட்டுகிறது -கெஜ்ரிவால் காங்கிரசின்
‘B team’ என்று. பாஜக வை எதிர்க்க, தோற்கடிக்க –
காங்கிரஸ் கெஜ்ரிவாலை பயன்படுத்திக்க் கொள்கிறது
என்று.இப்போதைக்கு இது உண்மையாக இருக்கலாம் –
காங்கிரஸ் தன் ஆதரவை வாபஸ் வாங்காததற்கு –
இதுவரை கெஜ்ரிவால் அரசு டிஸ்மிஸ் செய்யப்படாமல்
இருப்பதற்கு வேறு காரணங்கள் ஏதும் தென்படவில்லை
என்பது உண்மை தான் !
ஆனால், வெகு விரைவில் கெஜ்ரிவால் காங்கிரசுக்கும்
வில்லன் ஆகி விடுவார் என்பதே உண்மை …!)
——————————————————————–
பகுதி -2
(மேற்பகுதி கெஜ்ரிவால் பல்டி அடிப்பதற்கு
முன்னர் எழுதப்பட்டது. பல்டி அடித்த பின்
கிடைத்த தகவல்கள் கீழே – )
பல்டி அடிப்பதற்கான காரணங்களாக கெஜ்ரிவால்
சொன்னது –
1) லெ.கவர்னர் விசாரணையை துரிதப்படுத்த
ஒத்துக் கொண்டிருக்கிறார்.
2) இரண்டு அல்லது மூன்று போலீஸ்காரர்கள் (கடைநிலையில் உள்ளவர்கள் ) லீவில் அனுப்பப்படுவார்கள்.
என் டெல்லி நண்பர்களிடம் பேசினேன்.
உண்மையான பின்னணி –
முன்பெல்லாம் போராட்டங்கள் ராம் லீலா மைதானத்தில்
நடைபெற்றதால், பொது மக்களுக்கோ,போக்குவரத்துக்கோ
எந்தவித குந்தகமும் ஏற்படவில்லை.
ஆனால் இந்த முறை,கெஜ்ரிவால் மத்திய டெல்லியில்
வழியை மறித்து போராட்டம் நடத்தியதாலும்,
மெட்ரோ ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாலும்
பொது மக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. அதனால்,மக்கள் இதை ஆதரிக்கவில்லை.
கெஜ்ரிவால் மக்கள் வெள்ளத்தையே அழைத்ததற்கு,
அதிகம் போனால் (மொத்தமே)10,000 மக்களுக்கு மேல்,
(அதுவும் கட்சிக்காரர்கள் மட்டுமே) திரளவில்லையாம்.
இன்று காலையிலிருந்தே லெ.கவர்னருடன் பேச
ஆரம்பித்திருக்கிறார்கள். ஆம் ஆத்மி (கொள்கை
பரப்பு )யோகேந்திர யாதவ் – நேரில் சென்று
சந்தித்து, போராட்டத்தை நிறுத்திக் கொள்கிறோம்.
ஆனால் – சலுகையாக நீங்கள் எதாவது அறிவிப்பு
தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டதன் பேரில்
தான் இந்த (லீவு)சலுகை அளிக்கப்பட்டதாம்.
பொதுவாகவே -இத்தகைய விசாரணைகள் நடக்கும்போது
இடமாற்றம் செய்வார்கள் அல்லது தற்காலிக பணிநீக்கம்
செய்வார்கள். இங்கே அது கூட இல்லை. சர்க்கார்
செலவில் லீவு..!
டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு போலீஸ்
அதிகாரம் கிடைக்காமல் ஓய மாட்டோம் என்றவர்
திடீரென்று வாபஸ் வாங்கியதன் பின்னணி இது தான்..!
காங்கிரஸ் முழுக்க முழுக்க ஆம் ஆத்மிக்கு
சாதகமாக வேலை செய்திருக்கிறது. இதுவே வேறு
சந்தர்ப்பமாக இருந்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு
விட்டது என்று கூறி அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டு –
அந்த இடத்தில் இந்நேரத்திற்கு புல் முளைத்திருக்கும்.
மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேயை கெஜ்ரிவால்
படுமோசமாக (பெர்சனலாக) திட்டிப் பேசியதற்கு, ஷிண்டேக்கு சொரணை இருந்தால் – இந்த சமரசம்
வருவதற்கு முன்னரே அவர் ராஜினாமா செய்துவிட்டு போயிருக்க வேண்டும்..!



மக்கள் புரிந்துகொண்டார்கள்…கள்வர்கள் யாரேன்று.
//பாஜக குற்றம் சாட்டுகிறது -கெஜ்ரிவால் காங்கிரசின்
‘B team’ என்று. பாஜக வை எதிர்க்க, தோற்கடிக்க –
காங்கிரஸ் கெஜ்ரிவாலை பயன்படுத்திக்க் கொள்கிறது
என்று.இப்போதைக்கு இது உண்மையாக இருக்கலா//
இது தான் உண்மை.
முதல் நூறு நாட்கள் வெறும் வேடிக்கை!
பின்னரே கமெண்ட்!!
அதுவரை கப்சிப்!!!
மிக அருமையான தெளிவான பதிவு..இந்த கபடதாரியின் முகத்திரையை நன்கு கிழித்துள்ளீர்கள்..இது சம்பந்தமாக நான் FB யில் போட்ட கமெண்ட் இதோ:
2013: Delhi elections Delihiites were wondering how a humble and unknown Kejriwal would win elections!2014:After elections were over,North India was wondering how Kejriwal would form Govt with Just 28 seats.Well he formed the Govt too and after 15 days of his assuming office the whole India is wondering how Kejriwal got admission in to IIT in 1984!
Dear Ganpat,
Your facebook comments are Fine !
But -I feel this gentleman is not only a cheater but also .
highly intelligent.
He has fooled most of the intellectuals of this country…!
with best wishes,
Kavirimainthan
I am also wondering how he got admission in IIT.
for sure, he has an hidden agenda…. even if say he is good person, the team that has formed around him are just example of arrogance to the core…People who have made money but didnt taste power are just joining AAP…. now they want power…Just imagine if he in national politics, India will split and he will bring Anarchy every where….he should be dismissed and put on house arrest…arrogance is not a substitute for non-corruption. non-corruption is not a substitute for growth… he thinks he is the only intelligent and nationalist guy in whole of india…
நண்பர்களுக்கு,
மேற்படி இடுகையிலேயே 2ம் பகுதியை
இப்போது சேர்த்திருக்கிறேன். கவனிக்கவும்.
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
I fully and totally agree with the views of Srini..Kejriwal has to be nipped at the bud.His model will NOT suit us.
Kejrival asked how shinde can sleep when women in delhi are not safe.
After sending two police caps on vacation, delhi women are safe and everybody can sleep peacefully! Karuna, laalu, maya, akilesh, jaya are better than him. He is having a secret ajenda.
I am very sorry to say that people who are supporting this arrogant man are against india.
கேஜ்ரிவால் வேடதாரி என்பதை விட அதிபுத்திசாலி என்றே தோன்றுகிறது. கற்பழிப்பு அதிகம் நடக்கும் டெல்லியின் போலீஸ் அதிகாரம் என் கையில் இல்லை என்பதை இதை விட தெளிவாக மக்கள் மனதில் பதியவைத்திருக்க யாராலும் முடியாது. வருங்காலங்களில் டெல்லியில் நடக்க இருக்கும் பெரிய அசம்பாவிதங்களை இலகுவாக காங்கிரசின் பக்கம் திருப்பி விடவும், இதை தான் நான் அப்போதே போராடி கேட்டேன் என்று கூறுவதற்கும் நல்ல அடித்தளம் அமைத்து விட்டார்.
உண்மையை சொல்வதானால் இவர் போராட்டம் நடத்தும் வரை எனக்கு கூட டெல்லி போலீஸ் உள்துறை அமைச்சரிடம் தான் இருக்கிறது என்பது தெரியாது. எனவே அவரளவில் போராட்டம் இல்லக்கை அடைந்து விட்டது. .
தற்போது இவருக்கும், காங்கிரசுக்கும் நிலைமை தர்மசங்கடமாவதை உணர்ந்து இருவரும் தத்தமது கூடாரங்களுக்கு திரும்பி விட்டார்கள்.
என்னை பொறுத்தவரையில் ஒன்று காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட வேண்டும். இரண்டு ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் இதை யார் செய்தாலும் வரவேற்பு உண்டு. செய்த ஊழலை மறைக்கவும், குடும்பத்தை காப்பாத்தவும் ‘ஸ்டன்ட்’ அடித்தவர்களை பார்த்து புளித்து போன எமக்கு கட்சிக்காகவும், ஆட்சி அதிகாரத்திற்காகவும் ‘ஸ்டன்ட்’ அடிப்பது ஒரு ஜனநாயக நெறி முறைக்குள் ஏற்று கொள்ள கூடியதே. இதில் தவறு பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதே.
அதே வேளை இன்னும் ஒன்றையும் பதிவு செய்தாகவேண்டும். ஒரு மாநிலத்தையோ இல்லை ஒரு யூனியன் பிரதேசத்தையோ 5 வருடங்கள் கூட ஆளாத ஒரு கட்சியை நம்பி நாட்டை ஒப்படைப்பது போன்ற பைத்தியகாரத்தனம் வேறொன்றுமில்லை.
வேண்டாம் எழில்! இந்திய அரசியலில் இப்பொழுது இருக்கும் கபடர்களே நமக்கு சில தலைமுறைக்கு போதும்.இன்னும் புதிதாக சேர்க்க வேண்டாம்.kejriwal has to be kicked out has he would be much more dangerous than Cong/other parties.
நண்பர் எழிலின் – இந்த வார்த்தைகளையும் –
” ஒரு மாநிலத்தையோ இல்லை ஒரு யூனியன் பிரதேசத்தையோ 5 வருடங்கள் கூட ஆளாத ஒரு கட்சியை நம்பி நாட்டை ஒப்படைப்பது போன்ற பைத்தியகாரத்தனம் வேறொன்றுமில்லை.”
நண்பர் கண்பத்தின் – இந்த வார்த்தைகளையும் –
“இந்திய அரசியலில் இப்பொழுது இருக்கும் கபடர்களே நமக்கு சில தலைமுறைக்கு போதும்.இன்னும் புதிதாக சேர்க்க வேண்டாம்.kejriwal has to be kicked out –
as he would be much more dangerous than Cong/other parties.
– நான் வழிமொழிகிறேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
“They are in a hurry to come to Lok Sabha polls. They want instant attention and like in Bollywood when an actress can’t make it, she becomes an item girl. They have become the item girls of Indian politics and item girls do not go very far,” he added.
Just now I saw these comments …
– Guess who could have said this …!
chetan bahat’s item girls comment is absolutely correct.
in times of india one reader mentioned AAP is mercineries of congress. is it also correct?
யாரைத்தான் நம்புவதோ தெரியலையே…………………..
வணக்கம் சகோதரா,
‘கோ’ படம் பார்த்திருக்கிறீர்களா! முதல் பாதியில் நல்லவன் வேஷம் போட்டு விட்டு பின் பாதியில் வேஷத்தை கலைத்து கோர முகம் காட்டும் அந்த கேரக்டர் போல அல்லவா இருக்கிறது டில்லி சீ எம்மின் நடவடிக்கை! மக்களுக்கு புரிந்தால் சரி தான்..
வணக்கம் சகோதரி மஹாலக்ஷ்மி.
அதே கதை தான்.
ஆனால் டெல்லி மக்கள் இவரை
விரும்புவதும், வேண்டுவதும் –
தங்கள் சொந்த நலனுக்காக. அவர்களுக்கென
இவர் கொடுத்திருக்கும் 18 அம்ச திட்டம்
நிறைவேறினால் அவர்களுக்கு நேரடியாக
சில பலன்கள் கிடைக்கும் என்பதால் தான்.
மற்றபடி பாராளுமன்ற தேர்தலில் இதே டெல்லி
மக்கள், இவரை ஆதரிக்க மாட்டார்கள்.
முதலில் டெல்லி மக்களுக்கு கொடுத்த
வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டு –
பிறகு எங்கு வேண்டுமானாலும் போ – என்பது தான்
அவர்கள் நிலையாக இருக்கும்..!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
கெஜ்ரிவால் புத்திசாலித்தனமான திருடர்,
மற்ற அரசியல் வாதிகளும் கள்ளர்களே
ஓ கே.
இப்ப நாட்டுல நடக்கும் ஊழல்களை எப்படி ஒழிப்பது ?
நமக்கு குறை சொல்லி மட்டுமே பழக்கம். மற்றபடி தீர்வு சொல்லும் அறிவு இல்லை .