இம்சை இளவரசன் 5-ஆம் காந்தி …!

rahul in bangaluru with youth

             (புது காஸ்டியூமில் …ஜப்பான் டிசைன் ..?)


மகனை கதாநாயகன் ஆக்க வேண்டும் என்று
அன்னை என்னென்னவோ முயற்சிகள் செய்கிறார்.
ஆனால் எத்தனை முயன்றாலும் அது காமெடியாகவே
போய் விடுகிறதுஇது தான் இம்சை இளவரசன்
5-ஆம் காந்தியின் ஒன் லைன் ஸ்டோரி…!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில்
இம்சை இளவரசன் வீர உரை ஆற்றியதை
பார்த்திருப்பீர்கள்.

“பிரைம் மினிஸ்டர்” – “பிரைம் மினிஸ்டர்”
என்று ‘காங்கிரஸ் மக்கள்’ கூக்குரல் இடுகிறார்கள்.
“அன்னை”க்கு முகம் பொங்க சிரிப்பு.

– இளவரசர் எழுந்திருக்கிறார். கர்ஜிக்கிறார்.
(இந்தி தெரியாதவர்கள் புண்ணியம் செய்தவர்கள் –
இதைக் கேட்க வேண்டிய கட்டாயம் இல்லாதவர்கள் !)
“பிரைம் மினிஸ்டரை யார் தீர்மானம் செய்ய
வேண்டும்..? இந்த நாட்டில் சட்டத்தை மதிக்காத,
அரசியல் சட்டம் தெரியாத – பாஜக போன்ற
கட்சிகள் தான் பிரைம் மினிஸ்டரை தேர்தலுக்கு
முன்னரே அறிவிக்கும். தேர்தல் முடிந்த பிறகு,
வெற்றி பெற்ற கட்சியின் எம்.பி.க்கள் சேர்ந்து
தேர்ந்தெடுக்கப்படுபவர் தான் பிரைம் மினிஸ்டர்.
தேர்தல் நடக்கும். காங்கிரஸ் வெற்றிக் கொடியை
நாட்டும். அதன் பின்னர் காங்கிரஸ் எம்.பி.க்கள்
கூடுவர் -அதற்கு பிறகு நீங்கள் பி.எம்.மை பார்ப்பீர்கள்.”

(ஒன்றுபட்ட இந்தியாவாக இருந்தால் ஜின்னா
தன்னுடன் பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார் என்கிற
காரணத்தாலேயே பாகிஸ்தான் பிரிவினைக்கு அவசர
அவசரமாக ஒத்துக் கொண்டார் ஜவஹர்லால் நேரு.

ஆனாலும், சுதந்திர இந்தியாவில் முதல் பிரதமர்
பதவிக்கு ஜவஹர்லால் நேரு – படேலுக்கு இடையே
போட்டி வந்தபோது, காந்திஜியின் சொன்னதன் பேரில்,
படேல் போட்டியிலிருந்து வெளி வந்தார்..

இந்திரா காந்தி மறைந்தவுடன், கட்சியில் சீனியரான
பிரனாப் முகர்ஜி அநேகமாக தன்னைத் தான்
பிரதமராக தேர்ந்தெடுப்பார்கள் என்று நம்பினார் -அதை
வெளிப்படையாகச் சொல்லவும் செய்தார்.
ஆனால், என்ன நடந்தது ?
எந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து
ராஜீவ் காந்தியை தேர்ந்தெடுத்தனர் ?
நான்கைந்து சீனியர் தலைவர்கள் சேர்ந்து மக்களின்
அனுதாபத்தை ஓட்டுக்களாக மாற்றிக் கொள்ள வேண்டும்
என்று நினைத்தனர். அனுபவம் இல்லாத இளைஞர்
வந்தால் தாங்கள் சொல்வதைக் கேட்பார் என்று
நினைத்து, ராஜீவ் காந்தியை பிரதமர் ஆக்கினர்.

2004-ல் தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி
பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி
தேர்ந்தெடுத்தது திருமதி சோனியாவைத்தான். ஆனால்,
பாஜக – அந்நிய நாட்டைச் சேர்ந்தவர்
இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்க கூடாது என்று
பலமாகக் கிளப்பிய ஆட்சேபித்ததால் –
ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் காட்டிய தயக்கத்தால் –

அவசர அவசரமாக தன்னுடைய இடத்தில்
மன்மோகன் சிங்கை நியமனம் செய்தார் திருமதி சோனியா.
ம.மோ.சிங் அப்போது பாராளுமன்ற உறுப்பினரும்
கிடையாது. அவரை பாராளுமன்ற உறுப்பினர்கள்
தலைவராகத் தேர்ந்தெடுக்கவும் இல்லை.

இது போகட்டும் – காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில்
முதல் அமைச்சர்களை தேர்ந்தெடுப்பது யார் ?
அந்தந்த மாநில சட்டமன்ற உறுப்பினர்களா ?
காங்கிரஸ் தலைமை தானே தீர்மானிக்கிறது ?
பின் – இப்போது மட்டும் ஏன் இந்த வேடம் ?

அது தான் “அன்னை”யின் கரிசனம் ..
தேர்தலில் காங்கிரஸ் தோற்று விட்டால்
என்ன செய்வது ? தோல்வியின் சுமை தன் மகனின்
தலையில் விழக்கூடாது.

வெற்றி கிடைத்தால் அது இளவரசரால் –
தோல்வி கிடைத்தால் -அது கடந்த 10 ஆண்டுகளாக
சிங் தலைமையில் நிர்வாகம் சரியாக இல்லாததால்.
பிறகு எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்க
காங்கிரசில் ஆளா இல்லை ?


அடுத்த கர்ஜனை –

“இந்த நாட்டுக்கு என்ன வேண்டும் என்று யாருக்கு
தெரியும் ? காங்கிரசுக்கு மட்டும் தான் தெரியும்…!
ஒரே ஆளை நம்பி அவர் கையில் அதிகாரத்தை
கொடுப்பது பாஜக.
அத்தனை மக்களுக்கும் அதிகாரம் கொடுக்கும் கட்சி
காங்கிரஸ் கட்சி..! இந்த தேர்தலில்
15 % பாராளுமன்ற வேட்பாளர்களை கட்சி பிரதானிகளே –
(பிரதிநிதிகளே) தீர்மானிப்பார்கள்..!”

(அப்படியானால் மீதி 85 % -ஐ யார் தேர்வு
செய்வார்கள் ?..அன்னை சொல்படி,
பிள்ளை சொல்படி எதாவது ஒரு சொத்தை கமிட்டி
தேர்ந்தெடுக்கும் !)

—–
அடுத்த கர்ஜனை –

” பி.எம்.சார்..”
மேடையிலேயே ம.மோ.சி.யைப்
பார்த்து அழைக்கிறார் இம்சை.
(அவரோ பாவம், திடுக்கிட்டு விழிக்கிறார் !)
இந்த நாட்டின் இல்லத்தரசிகள் சொல்கிறார்கள் –
அவர்களுக்கு 9 சிலிண்டர் பற்றவில்லையாம் ..
12 வேண்டும் என்று கேட்கிறார்கள். நீங்கள்
அவர்களின் அவசியம் கோரிக்கையை ஏற்க வேண்டும்…!”
(பலத்த கைத்தட்டல்).

அடுத்த 15 நிமிடங்களுக்குள்ளாக
சிலிண்டர் (!) மந்திரி வீரப்ப மொய்லி அறிவிப்பு
வெளியிட்டு விடுகிறார்…
(இல்லையென்றால், அவரைக் கிழித்து
குப்பைத் தொட்டியில் போட்டு விடுவாரே இம்சை !)

—–

அடுத்த கர்ஜனை –

“வெகு விரைவில் இந்த நாட்டின் முதலமைச்சர்களில்
பாதி பேர் பெண்களாகத்தான் இருக்க வேண்டும்..!”

(அய்யோ பாவம் – காங்கிரஸ் ஆண் முதலமைச்சர்களில்
எத்தனை பேருக்கு பதவி பறி போகப்போகிறதோ ..!)

—————–

அடுத்தது இவர் தான் என்று தீர்மானம் ஆகி விட்ட
பிறகு இம்சை இளவரசருக்கு ஜால்ரா போட முதுபெரும்
தலைவர்களிடம் போட்டா போட்டி…!

நம்மஊர் சிவகங்கைக்காரர் முந்திக் கொண்டு சொல்கிறார் –
“இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
குறைந்த பட்சம் 272 வேட்பாளர்கள் ( 50 % )
35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களாகத்தான் இருக்க
வேண்டும்..!”

(அன்றிரவு அவருக்கு வீட்டில் சாப்பாடு
கிடைக்கவில்லை என்று கேள்வி..!
மகன் 35 வயதைத் தாண்டி விட்டது அவருக்கு
தெரியாதா ? உச்ச வரம்பை உயர்த்திச்
சொல்லி இருக்க வேண்டாமா…?
நாட்டில் 50 வயதில் கூட இளைஞர்கள்
இல்லையா என்ன.. ? !!)

————

பின் குறிப்பு –

ஆமாம் இப்போது இதை ஏன் இவ்வளவு முக்கியத்துவம்
கொடுத்து எழுதுகிறேன் என்கிறீர்களா ?
– ‘இந்த’  ‘இந்த’  மாதிரி துன்பங்கள் வரப்போகின்றன
என்று முன்னதாகவே மனிதருக்கு தெரிந்து விட்டால்,
அதை தாங்கிக் கொள்ளும் பக்குவத்தை ஓரளவிற்கு
உருவாக்கிக் கொள்ளலாம்.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு,
இம்சை அரசனுக்கு  இமேஜ்  ‘பில்ட் அப்’ உருவாக்க
500 கோடி ரூபாயில் ஜப்பானிய விளம்பர
ஏஜென்சி ஒன்றுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக
செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே மே மாதம்
வரையில் இன்னும் அதிக அளவில் இம்சைகள்
தொடரும். அதை “பொறுத்துக்கொள்ள தேவையான
பொறுமையை எங்களுக்கு கொடு இறைவா” என்று
வேண்டிக் கொள்ளவும் தான் இந்த இடுகை…!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to இம்சை இளவரசன் 5-ஆம் காந்தி …!

  1. கொச்சின் தேவதாஸ்'s avatar கொச்சின் தேவதாஸ் சொல்கிறார்:

    தாங்கள் எழுதியுள்ள அனைத்தும் சத்தியமான வார்த்தைகள்.
    வாழ்த்துக்கள்

  2. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    எத்தனை முயன்றாலும் அது காமெடியாகவே
    போய் விடுகிறது

  3. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    *எத்தனை முயன்றாலும் அது காமெடியாகவே *
    *போய் விடுகிறது*

  4. raveendar's avatar raveendar சொல்கிறார்:

    “அவரோ பாவம், திடுக்கிட்டு விழிக்கிறார்!!” நல்ல காமெடி 🙂

  5. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    என்ன காவிரிசார்
    காமெடி பீஸ் என்கிறீர்கள், சில சமயத்தில் “நான்சென்ஸ்… குப்பையில் போடுங்கள்” என்று டெர்ரரா சொல்வதை கேட்டு நீங்க பயப்படுவதில்லையா?

  6. Srini's avatar Srini சொல்கிறார்:

    in baba movie, rajini used to sing “sakthi kodu, sakthi kodu, iraiva….”….. we need to change as “porumai kodu, porumai kodu…. iraiva…”

  7. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    மிக்க நன்றி அய்யா..இவ்வளவு கோர்வையாக செய்தியை கொடுத்தமைக்கு.
    இந்தியாவின் ராகு காலம் இப்போ, தான் உண்மையாகவே தலிவரோ என நம்ப ஆரம்பித்து விட்டாற்போல இருக்கு.மேலும் சக்தி வாய்ந்த மீடியாக்கள் இவரையே ஆதரிக்கின்றன.(நேற்று ஹிந்து நாளிதழ் மோடியின் இந்தியாவிற்கு தேவை 5T என்ற அருமையான பேச்சை இருட்டடிப்பு செய்துள்ளது)பணம் வேறு விளையாடப்போகிறது.நமக்கு இருக்கும் ஒரே சக்தி வலைத்தளம்.அதை உங்களை போன்ற தேச பக்தர்கள் நல்ல முறையில் பயன்படுத்துவது மனதிற்கு ஆறுதலை தருகிறது
    .”கழுதைக்கு போட்டாலும் காங்கிரசிற்கு போடாதீர்.”

    • Srini's avatar Srini சொல்கிறார்:

      .”கழுதைக்கு போட்டாலும் காங்கிரசிற்கு போடாதீர்.”

      Simply Supeeeeeeeeeeeeeeeeer

  8. mahalakshmivijayan's avatar mahalakshmivijayan சொல்கிறார்:

    வணக்கம் சகோதரரே,
    ஒன்று மட்டும் நிச்சயம் இந்த இம்சை இளவரசன் 5 ஆம் காந்தி கண்டிப்பாக ப்ளாப் தான்! அருமையான விமர்சனம்!

  9. GOPALASAMY's avatar GOPALASAMY சொல்கிறார்:

    imsai ilavarasan does not give any comment about kejrival’s agitation. suddenly he may give some order to mannu singh.

  10. nanduonorandu's avatar nanduonorandu சொல்கிறார்:

    ம் …

  11. Srini's avatar Srini சொல்கிறார்:

    please don’t miss this…..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.