பொதுவாகவே நல்ல இலக்கியம், ஆன்மிகம்
தொடர்புடைய நிகழ்ச்சிகள் என்றால், என்னால்
இயன்ற வரையில் கலந்து கொள்வது வழக்கம்.
சென்னையில் “பொற்றாமரை” என்றொரு இலக்கிய
வட்டம். அதில் கொஞ்சம்கூட அரசியல் கலப்பில்லாத
கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கும்.
அந்த அமைப்பின் சார்பாக நடந்த நிகழ்ச்சிகள்
சிலவற்றிற்கு போயிருக்கிறேன்.
அவற்றில் திரு. இல.கணேசன் பேசி இதற்கு
முன்னரும் சில தடவை கேட்டிருக்கிறேன்-
பார்த்திருக்கிறேன்.
அதிலெல்லாம் அமைதியாகவும், மென்மையாகவும்
பேசும் இல.கணேசனின் மற்றொரு பக்கத்தை
துக்ளக் ஆண்டு விழாவில் பார்த்தேன் – கொஞ்சம்
ஆச்சரியமாகத் தான் இருந்தது…!
ஓரிரு சமயங்களில் கண்களை மூடிக்கொண்டு, அவரது
பேச்சை மட்டும் கேட்டால், வைகோ பேசுவது போல்
குரலில் அந்த அளவுக்கு ஏற்ற-இறக்கங்கள்..!
இல.கணேசனின் முழு வடிவமும் அன்று தான்
தெரிந்தது ..! கணேசன் ஒரு நல்ல பேச்சாளர்.
விழாவில், பாஜக சம்பந்தமாகவும், மோடி
சம்பந்தமாகவும் அவர் பேசியதை எல்லாம்
இங்கு எழுத வேண்டிய அவசியம் இல்லை-
எனவே அவற்றை விட்டு விடுகிறேன்.
சுவாரஸ்யமான
சில விஷயங்கள் மட்டும் இங்கே –
—
” 1991 முதல் துக்ளக் ஆண்டு விழாவில் தவறாமல்
கலந்து கொண்டிருந்தாலும், இன்று தான் சோ என்னை
அவரது மேடையில் ஏற விட்டிருக்கிறார்.
சோ சில சமயங்களில் எங்களை கடுமையாக
விமரிசித்தாலும் கூட, நாங்கள் அதை சீரியஸாக
எடுத்துக் கொள்ள மாட்டோம் ! பாஜக ஒரு நல்ல
கட்சியாக வளர வேண்டும் என்கிற அக்கரையில் தான்
விமரிசித்திருப்பார். அந்த காலத்தில், ராஜாக்களை –
ஒழுங்காக வழிநடத்திச்செல்ல”குரு” ஒருவர் இருப்பார்.
அது போல் நாங்கள் சோ வை எங்கள் “ராஜகுரு”வாக
மதிக்கிறோம்.
( பிற்பாடு சோ இதை கிண்டல் பண்ணினார் –
“இல.கணேசன் என்னை ராஜகுரு என்று
சொன்னார் -எனக்கென்னவோ ராஜகுரு என்றாலே
வில்லன் நம்பியார் ரோல் தான் ஞாபகம் வருகிறது.
நான் என்ன அந்த அளவுக்கு மோசமானவனா” ?!)
– “கரிகாலன்” உங்களுக்குத் தெரியும்..!
“கரி”யே(நிலக்கரி ஊழல்) இப்போது
காங்கிரஸுக்கு “காலனாக” வந்திருக்கிறான்..!
– வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது
நதி நீர் இணைப்புத் திட்டத்தைத் துவக்க மிக ஆர்வமாக
இருந்தார். 5 மாநிலங்களில், 5 இடங்களில்
அதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு கூட
திட்டமிடப்பட்டிருந்தது..!
மஹாநதியை கோதவரியுடன் இணத்து,
கோதாவரியை கிருஷ்ணாவுடன் இணைத்து,
கிருஷ்ணாவை காவிரியுடன் இணைத்தாலும் –
இறுதியில் கர்நாடகா கொடுத்தால் தானே தண்ணீர் ?
-என்று கேட்டவர்களுக்கு விடையாக, கிருஷ்ணா
நதி நீரை கர்நாடகாவைத் தாண்டி, நேராக தமிழ்நாட்டில்
ஹொகனேக்கல்லில் கொண்டு வந்து சேர்க்கத்திட்டம்
போடப்பட்டிருந்தது…!தென்னக நதிகளின் இணைப்புத்
திட்டத்தை பாஜக நிச்சயம் நிறைவேற்றும்.
-ஆம் ஆத்மி கட்சி குறித்து –
எங்காவது துடப்பம் தானாகவே சுத்தம் செய்யுமா ?
துடப்பத்தை இயக்க ‘கை’ வேண்டும்…!
குப்பையைப் போட்டதே ‘கை’ தான் என்கிறபோது
அங்கே ‘கை’ எப்படி வேலை செய்யும் ?
வெறும் ‘பாவ்லா’ தான்..!
காங்கிரஸ் கட்சி ‘துடப்பத்தை’
‘கை’விட்டு விட்டால் –
டெல்லி மக்கள் இந்த இரண்டு கட்சிகளையும்
சுத்தம் செய்ய ‘தங்கள் கையில்’ ‘துடப்பத்தை’
எடுத்துக்கொள்ள தயாராக இருக்கிறார்கள்…!
——
நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகரின் ‘நாற்காலி’
ஆசை தெரிந்த விஷயம் தான்.
ஆனால் அது இங்கு தமாஷாக வெளிப்பட்டது.
விஹெச்பி யில் இருந்து அதிமுக விற்கு போய்,
பிறகு அதிமுக விலிருந்து திமுக வை நெருங்கி,
பிறகு அங்கிருந்து தங்கபாலு காங்கிரசுக்குப் போய் –
இறுதியாக இப்போது “மோடி என் நண்பர் (!)-
(அவரது ட்விட்டரில் இவர் ‘லைக்’
கொடுத்திருக்கிறாராம் !)
அவரைப் பிரதமராகப் பார்ப்பதற்காகவே பாஜகவில்
சேர்ந்திருக்கிறேன். எனக்கு நாற்காலி ஆசை எல்லாம்
ஒன்றும் கிடையாது” என்று அண்மையில் சொன்ன
எஸ்.வி.சேகரும் விழாவிற்கு வந்திருந்தார்.
(சேகர் பாஜகவில் சேரும்போது எடுத்த புகைப்படம் !
அசட்டு செயற்கைப் புன்னகையுடன் எஸ்.வி.சேகரும்,
விரக்தியில் இல.கணேசனும் ..!)
–
இருக்கை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தவர்,
முதல் வரிசையில் அமர்ந்திருந்த
இல.கணேசன் பேச அழைக்கப்பட்டதால் மேடைக்குப்
போக நேரிட – உடனடியாகத் தாவி அங்கே போய்
இல.கணேசனின் “சீட்”டை பிடித்துக் கொண்டார்
சேகர்..!! வெற்றிச் சிரிப்புடன் இரண்டு பக்கமும்
திரும்பிப் பார்த்துக் கொண்டார் (அந்தப் பக்கம்
இந்து முன்னணி திரு ராமகோபாலன்,
இந்தப்பக்கம் காங்கிரசின் திரு பீட்டர் அல்போன்ஸ்…!)
–
கணேசனுக்குத் தெரியாததல்ல ..!
எதற்கும் இல.கணேசன் எஸ்.வி.சேகரிடம்
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் …!!




oru maarudhalukkaga, konjam comedy post pottu irukinga KM sir…. SV sekar adhuthu enga “thaava” pogiraro…. andha ramanuke velicham
ஸ்ரீநி,
எப்போதுமே சீரியஸாக இல்லாமல்,
அவ்வப்போது கொஞ்சம் நகைச்சுவை கலந்தும்
எழுத முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு கை வருகிறதா இல்லையா என்பதை
நீங்கள் தான் சொல்ல வேண்டும்…!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
“சீட்”டை பிடிக்க ஹா… ஹா… நல்ல தமாசு தான்…!
நல்ல நகைச்சுவையான பதிவு, ஒரு மாறுதலுக்கு.
“விதியே…” என்று நொந்து கொள்ளும் இல கணேசன் அவர்களின் முகபாவம் Priceless!
மிகச்சரி எழில்.
இதற்காகவே மிகவும் தேடிக்கண்டு பிடித்து
இந்த புகைப்படத்தைப் போட்டேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்