துக்ளக் ஆண்டு விழாவும் – ஆசிரியர் “சோ”வின் நிலையும்…

துக்ளக் ஆசிரியர் சோ வை கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக நான் நன்கு அறிவேன். இரண்டு முறை நேரிலும் கூட சந்தித்துப் பேசி இருக்கிறேன். (முக்கியத்துவம் இல்லாத சந்திப்பு – அவருக்கு நினைவிருக்காது ).

அவரை சில விஷயங்களுக்காக எனக்கு மிகவும் பிடிக்கும். சில விஷயங்களுக்காக சுத்தமாகப் பிடிக்காது – எரிச்சலாக வரும். cho-1 சினிமாவிலும், அரசியலிலும் இத்தனை ஆண்டுகளாக இருந்தும் கூட ஒழுக்கமும், நேர்மையும் மிகுந்தவர்.

அதி புத்திசாலி. அசாத்திய துணிச்சல். மிகப்பெரிய அரசியல் தலைவர்களுடனான தன் நெருக்கங்களையும், செல்வாக்கையும் சுயநலத்திற்கு சற்றும் பயன்படுத்திக் கொள்ளாதவர். தனக்கென தனிப்பட்ட எழுத்து நடையை உருவாக்கிக் கொண்டவர் –என்னுடைய இளம் வயதிலேயே அவர் மீது எனக்கு ஏற்பட்ட அபிமானம் –

–இதெல்லாம் அவரைப் பிடிப்பதற்கான காரணங்கள்.

பிடிவாத குணம். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்.. தன் கொள்கை-நிலை -தவறு என்று தெரிந்தாலும், மாற்றிக் கொள்ள மறுப்பவர். மதுவிலக்கை ஏற்க மறுப்பது, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அவரது கண்மூடித்தனமான எதிர்நிலை-

-இவையெல்லாம் பிடிக்காமல் போவதற்கான சில முக்கிய காரணங்கள்.

நான் அவரை -சிலமுறை இந்த வலைத்தளத்தில் பாராட்டியும், பலமுறை திட்டியும் எழுதி இருக்கிறேன்.

ஆசிரியர் சோ உடல்நிலை சரி இல்லாமல் இருப்பது வெளிப்படையாகவே தெரிகிறது. மிகவும் நலிவுற்றிருக்கிறார். மூச்சு வாங்குகிறது. பேசவே கஷ்டப்படுகிறார். அவர் எழுத்துபணியில் ஈடுபடா விட்டாலும் பரவாயில்லை.,ஆனால் – அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டுமென்று மனதார விரும்புகிறேன்.

இனி – “துக்ளக்”ஆண்டு விழா பற்றி –

வழக்கம்போல் பொங்கலன்று சென்னையில் நடைபெற்றது. வித்தியாசமாக இந்த முறை பாஜக, இடது கம்யூனிஸ்ட், மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில அளவிலான தலைவர்கள் மேடையேற்றப்பட்டனர். இந்த மாறுதல் ரசிக்கத் தக்கதாக இல்லை ..!

பேசிய 3 மாநில தலைவர்களின் பேச்சில், இல.கணேசனின் பேச்சு மட்டும் கொஞ்சம் ரசிக்கும்படி இருந்தது (அவர் சார்ந்த கட்சியை வைத்துச் சொல்லவில்லை – அவரது பேச்சுத் திறமைக்காக சொல்கிறேன்..!)அதில் நான் கண்ட சில சுவையான அம்சங்களை பிறகு தனியே எழுதுகிறேன்.

ஆசிரியர் சோவைப் பொறுத்த வரையில் – மிகவும் தர்மசங்கடமான நிலையில் இருக்கிறார். அதை அவரே வெளிப்படையாகவும் சொல்லி விட்டார். அவருக்கு மோடியையும் பிடிக்கும் – ஜெ யையும் பிடிக்கும். இருவருமே பிரதமர் பதவிக்கான வேட்பாளர்கள்.

தமிழ்நாட்டு மக்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று சொல்வதில், அவருக்கு பாவம்- மிகுந்த தயக்கம் ..!

சோ – சில வாசகர்களின் நேரடி கேள்விகளுக்கு மேடையில் கூறிய பதில்களிலிருந்தும், அவரது உரையிலிருந்தும் –வெளிப்படுத்திய சில கருத்துக்கள் –

-மதுவிலக்கை அமுல்படுத்துவது நடைமுறை சாத்தியம் இல்லாத விஷயம். அதிக பட்சம் – விற்பனை நேரங்கள், நாட்கள், இடங்கள் – ஆகியவற்றை வரைமுறை செய்யலாம்.

பாஜக வும், அதிமுகவும் சேர்ந்து கூட்டணி அமைக்காததன் முக்கிய காரணம் – இரண்டு கட்சிகளுமே சேர்ந்து கூட்டணி அமைப்பதில் ஈடுபாடு காட்டவில்லை.

-40 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலின் நடுவே இருந்தும் -நான் தீவிர அரசியலில் இறங்காததற்கு காரணம் – என்னால் பல விஷயங்களில் compromise பண்ணிக்கொள்ள முடியாது.அனுசரித்துப் போகும் தன்மை (Flexibility) என்னிடம் இல்லை. பெரும்பாலான மக்களை ஈர்க்கக்கூடிய சக்தியும் என்னிடம் இல்லை.

– திமுக வை விமரிசிக்கும் அளவிற்கு அதிமுக வை நான் விமரிசிக்காததற்கு காரணம் – திமுக ஒழிக்கப்பட வேண்டிய கட்சி. முழுக்க முழுக்க ஒரு குடும்ப நலன்களுக்காக மட்டுமே என்றாகி விட்ட கட்சி. அதை ஒழிக்க ஜெ.யால் மட்டும் தான் முடியும்..!

– நதிநீர் இணைப்பு -மாநிலங்களிடையே விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாததால் இது மிகவும் கடினமான விஷயமாகி விட்டது. வலுவான, நேர்மையான, ஊழலற்ற – இவர் நல்லதைத் தான் செய்வார் என்று அனைத்து தரப்பட்ட மக்களும் நம்பக்கூடிய ஒரு தலைமை மத்தியில் ஏற்பட்டால், அந்த தலைமை 10 ஆண்டுகளுக்கு நீடித்திருந்தால் – தென்னக நதிநீர் இணைப்பு சாத்தியமாகலாம்.

(இதைச் சொல்லும்போது கொஞ்சம் நகைச்சுவை சேர்த்து – குர்த்தா பைஜாமா போட்ட, மோடாவிற்கு பெண்பாலான பெயருடைய, மக்கள் விரும்பக்கூடிய ஒரு தலைவர் – என்று வர்ணனை …!)

– ஆம் ஆத்மி கட்சியை, பாஜக விற்கான ஓட்டுக்களை பிரிக்க, பிளக்க – காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக் கொள்கிறது.

– தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் –

– மின்வெட்டு ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது. இப்போது ஓரளவு சீரடைந்திருக்கிறது. விரைவில் முற்றிலும் சரியாகி விடும் என்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது.

– சட்டம் ஒழுங்கைப் பொறுத்த வரையில், கொலை, கொள்ளைகள் நிலவரம் கவலையளித்தாலும், பெரும் அளவிலான மதக்கலவரங்கள், தீவிரவாத அச்சுறுத்தல்கள் ஆகியவை முற்றிலுமாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

– தீவிரவாதிகள் தொடர்புடைய சில சம்பவங்களில், மாநிலம் தாண்டிச் சென்று கூட காவல்துறை சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடித்திருக்கிறது. அதே போல், ஆள் கடத்தல், வங்கிக் கொள்ளைகள் போன்றவற்றை கண்டுபிடிப்பதிலும் காவல் துறை சிறப்பாக செயல்பட்டிருக்கிறது.

– மக்கள் நல திட்டங்கள் பல சிறப்பாக மேற்கொள்ளப் பட்டுள்ளன. கடைத்தட்டு மக்களுக்கு என சேஷமாக பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

-பொதுவாக, ஜெ.மிகத்திறமையாக நிர்வாகம் செய்கிறார்.

நீண்ட காலங்களுக்குப் பிறகு தமிழகத்தில் நேர்மையான, திறமையான அதிகாரிகள் கண்களில் தென்படுகிறார்கள் -பலர் திறமையாகச் செயல்படுகிறார்கள்.

– இறுதியாக, பாராளுமன்ற தேர்தலில் யாரை ஆதரிக்கலாம் என்று கேட்டால் – காங்கிரஸ், திமுக – மற்றும் இந்த இரண்டுடன் சேருகின்ற வேறு எந்த கட்சியும் ஆட்சிக்கு வரக்கூடாது.

நான் சென்ற ஆண்டு நடந்த விழாவில் அத்வானி, நரேந்திர மோடி இருவரையும் மேடையில் வைத்துக் கொண்டே “அடுத்த பிரதமராக நரேந்திர மோடி வர வேண்டும். அதற்கு அத்வானி முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் எதாவது ஒரு காரணத்திற்காக, மோடி வர முடியாது போனால், ஜெயலலிதா பிரதமர் ஆவதற்கு பாஜக ஒத்துழைக்க வேண்டும்” என்று.

“இப்போது மீண்டும் அதையே தான் சொல்கிறேன்” – என்றார்.

சோ வைப் பொறுத்த வரையில், தேர்தலுக்கு முன்னதாக இல்லா விட்டாலும், தேர்தலுக்குப்பின் பாஜக, அதிமுக கூட்டணி ஏற்பட வேண்டும் என்று விரும்புவது தெரிகிறது.

பின்குறிப்பு –

எனக்கு நன்கு பழக்கமான, தமிழக பாஜக உள்நிலவரங்கள் தெரிந்த, பாஜக நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். பாஜக தலைமை, தேர்தலுக்கு முன் இல்லா விட்டாலும் தேர்தலுக்குப் பின் அதிமுக வுடன் கூட்டு வைக்க விரும்புகிறது. எனவே, அதிமுக வை பகைத்துக் கொள்ளாத விதத்தில் தான் தேர்தல் பிரச்சாரங்கள் தமிழகத்தில் நடைபெற வேண்டுமென்று விரும்புகிறது.

ஆனால், தமிழக பாஜக முன்னணி தலைவர்கள் இதை விரும்பவில்லை. அதிமுக வுடன் பாஜக தலைமை நெருங்கினால், தங்களுக்கான அமைச்சர் வாய்ப்புகள் குறையும் என்று நினைக்கிறார்கள்..! எனவே, அவர்கள் இதில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை…!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

25 Responses to துக்ளக் ஆண்டு விழாவும் – ஆசிரியர் “சோ”வின் நிலையும்…

  1. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    கெட்ட வார்த்தைகள் இங்கே எழுதினால் என்னை திட்டுவீங்க என்று பயந்து கொண்டு சோ குறித்து எதுவும் எழுதாமல் நகர்கின்றேன்.

    • Srini's avatar Srini சொல்கிறார்:

      Ketta varthaiyil thittum alavirku, avar ondrum naatuku keduthal seiya villai. Podhu sothai kollai adika villai.

      avarudya karthukal ungalukku verupaadu irukalam. Pidikavillai endral, ungaloodya karuthukalai eduthu koorungal… vivathikalam….

      Sorry, Tamil font is not working for me..

      vanakam, Srini

      • John's avatar John சொல்கிறார்:

        மதுவிலக்கு சாத்தியமில்லை ஏன் சொல்லுறார்(ன்)ன்னா , அடித்தட்டு மக்கள் குடிச்சு அழியனும், தன் சாதிக்காரன் ராஜபோகமா ஆளனும்ன்னு கெட்ட எண்ணம் . திருட்டு கொள்ளை க்கூட்டத்தை விட இது மகா கேஏவலமான் பிழைப்பு

        • Ganpat.'s avatar Ganpat. சொல்கிறார்:

          உண்மைதான்.! மது விலக்கை கொள்ளவோ நீக்கவோ சர்வ வல்லமை படைத்த,தன்னை கீழ் சாதிக்காரர் என பறைசாற்றி கொள்ளும், ஒரு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர், தன் சாதிக்காரன் ராஜபோக வாழ்க்கை வாழ வேண்டும் என்று விலக்கிய மதுவிலக்கை, அதை கொள்ளவோ நீக்கவோ எந்த அதிகாரமுமற்ற,ஒரு சாதாரண பத்திரிகை ஆசிரியர் தன் சாதிக்காரன் ராஜபோகமா ஆளனும்ன்னு ஆதரிக்கிறார்.

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          நண்பர் ஜான்,

          தயவு செய்து இனியாவது ஜாதியை இந்த
          தளத்திற்குள் கொண்டு வராதீர்கள்.

          எதற்கெடுத்தாலும் ஜாதியை இழுப்பது –
          நமக்கு வாதிக்க வேறு வலுவான காரணங்கள்
          இல்லை என்கிற அபிப்பிராயத்தையே உண்டு
          பண்ணும். உண்மையைச் சொல்லி வாதிப்போம்.

          நண்பர் கண்பத் சொன்னது போல், மதுவை
          தமிழ் நாட்டில் கொண்டு வந்து – மதுவை அறியாத
          அடுத்த தலைமுறைக்கு மதுப் பழக்கத்தை
          அறிமுகப்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி
          தான்.

          அந்த பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்கிற
          முயற்சி தான் இப்போது நடப்பது.

          -வாழ்த்துக்களுடன்,
          காவிரிமைந்தன்

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ஜோதிஜி,

      கெட்ட வார்த்தை எதற்கு ..?
      அது இல்லாமலே உங்கள் கருத்துக்களை –
      தாராளமாக இங்கே கூறலாமே…!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  2. balaji's avatar balaji சொல்கிறார்:

    “சோ” பற்றி நீங்கள் கொண்டுள்ள கருத்து தான் என்னுடையதும். அவரின் முகம்மது பின் துக்ளக் நாடகத்தை ஒலித்தட்டில் (78 RPM) பலமுறை கேட்டு ரசித்தவன். 69-70 -ம் வருடங்களில் என்று நினைக்கின்றேன். அப்பொழுது நான் பள்ளி மாணவன். அவர் நினத்திருந்தால், இந்நேரம் எங்கேயோ போயிருக்கலாம். ஒன்றுமில்லாதவர்களெல்லாம் இன்று கோடீஸ்வரர்கள். அவரின் எளிமை, நேர்மை இன்றைய அரசியல்வாதிகளிடம் காண்பது அரிது.

    பாலாஜி

  3. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    சோ ஒரு சிறந்த வக்கீல் என்பதால் நீதி வெல்லவேண்டும் என்பதைவிட தன் வாதம் தான் வெல்லவேண்டும் என்ற குணத்தை கொண்டவர். இல்லையென்றால் திமுக/அதிமுக/தாமக/ரஜினி என்று எல்லோரையும் வெவ்வேறு காலகட்டங்களில் ஆதரித்திருக்கமாட்டார். தன்னை நன்றாக புரிந்துக்கொண்டவர்! அவரின் உடல் நலத்திற்காக பிரார்திப்போம்.
    கடைசியாக பின் குறிப்பில் சொன்னதுதான் சூப்பர் ஜோக்!
    தமிழக பாஜக-வினரின் மத்திய அமைச்சர் ஆசை!!

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      அஜீஸ்,

      தொலை தூரத்தில் இருப்பதாலோ என்னவோ,
      நீங்கள் தரை நிலவரத்தை (ground realities)
      புரிந்து கொள்ளாமல் எழுதுகிறீர்கள் என்று
      நினைக்கிறேன்.

      பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் பாஜக கூட்டணி
      ஆட்சிக்கு வர வாய்ப்புக்கள் இருப்பதாகவே
      தெரிகிறது. எனவே தமிழக பாஜக தலைவர்களின்
      விருப்பமும் நடைமுறை சாத்தியமானதே..

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • reader's avatar reader சொல்கிறார்:

        //பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் பாஜக கூட்டணி
        ஆட்சிக்கு வர வாய்ப்புக்கள் இருப்பதாகவே
        தெரிகிறது. எனவே தமிழக பாஜக தலைவர்களின்
        விருப்பமும் நடைமுறை சாத்தியமானதே..//

        அதற்கு அவர்கள் தமிழகத்தில் தனியே நின்றாலும் வெல்லும் நிலையில் ஆசைப்பட்டால் நியாயமுண்டு. மற்றவர் முதுகில் தொற்றிக் கொண்டிருக்கும்போது முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படும் செயல்.

        ஒருவேளை, வாஜ்பாய் கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காக திருநாவுக்கரசரை மத்தியபிரதேசத்திலிருந்த எம்.பி ஆக்கியதை நினைத்துச் சொல்கிறார்களோ என்னவோ!

  4. K. Jayadev Das's avatar K. Jayadev Das சொல்கிறார்:

    Good……………..

  5. today.and.me's avatar todayandme சொல்கிறார்:

    சாரி கா.மை சார்.
    டென்சனால பின்னூட்டம் (கொஞ்சம் ) நீளமாப் போயிருச்சு.
    வேணும்னா எடிட்பண்ணிருங்க.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் Todayandme
      (அதென்ன இப்படி ஒரு பெயர்
      வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்…!)

      மன்னிக்க வேண்டும் நண்பரே –
      என்னால் எடிட் பண்ண முடியவில்லை..!

      இவ்வளவு பெரிய்ய்ய பின்னூட்டத்தைப் போட்டால்
      இந்த தளத்தை படிக்க வருபவர்கள் ஓடி விடுவார்கள்.

      தயவு செய்து நீங்கள் நினைக்கும், சொல்ல வரும்
      கருத்தை நீங்களே சுருக்கமாகச் சொல்லுங்களேன்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  6. N.Paramasivam's avatar N.Paramasivam சொல்கிறார்:

    நீங்கள் பதிவிட்டபடி சோ விடம் உங்களுக்கு பிடித்தவர் தான் எனக்கும். 80களில் அதுவும் துக்ளக் திரைப் படத்திற்கு பின் நாங்கள் ஏராளமான மாணவர் பின்பற்ற தொடங்கினோம். இங்கு சாதிகளின் இல்லை. ஆளும் கட்சிகளை மிகச்சரியாக இடித்துரைக்கும் நக்கலடிக்கும் இன்னொரு தமிழ் எழுத்தாளர் இனி தான் வரவேண்டும். தேர்தலுக்க பின் கூட்டணி பற்றி ………என்ன சொல்ல.

  7. sivakumar-coimbatore's avatar sivakumar-coimbatore சொல்கிறார்:

    good one…sir.

  8. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    மாசற்ற நதியாக,நன்றாக போய் கொண்டிருக்கும் இந்த வலைதளத்தில் சாதி என்ற நஞ்சை கலக்க சிலர் வந்து விட்டனர்.இனி நண்பர் கா.மை.இத்தளத்தின் நிர்வாகி எனும் அதிகாரத்தை பயன படுத்தி தேவையற்ற பின்னூட்டங்களை நீக்குவதை தவிர வேறு வழியில்லை.

  9. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

    ஜாதிகளில் உயர்வு, தாழ்வு என்கிற
    விஷயத்தை நான் ஏற்கவில்லை.

    எனவே, ஜாதிபேதத்தை
    உண்டு பண்ணக்கூடிய,
    வளர்க்கக்கூடிய –
    எந்த செய்தியும், கருத்தும் –

    இந்த வலைத்தளத்தில் வெளிவரக்கூடாது
    என்பதில் நான் உறுதியாக இருக்க விரும்புகிறேன்.
    இது நாள் வரையில், இங்கு வரும் நண்பர்கள்
    யாவரும் அத்தகைய பின்னூட்டங்களை
    தவிர்த்தே வந்தனர்.

    துரதிருஷ்டவசமாக, இப்போது ஒன்றிரண்டு
    பின்னூட்டங்கள் அப்படி வர ஆரம்பித்தன.
    எனவே இத்தகைய பின்னணியை தவிர்க்க
    வேண்டுமென்று துவக்கத்திலேயே மேலே உள்ள
    என் பின்னூட்டத்தின் மூலம்
    கேட்டுக்கொண்டேன்.

    ஆனால், அப்படி கூறிய பின்னரும் வந்த
    காரணத்தால், கடைசியாக வந்த இரண்டு
    பின்னூட்டங்கள் நீக்கப்பட்டு விட்டன.

    ஆரோக்கியமான விவாதம் நடைபெற –
    தயவுசெய்து ஒத்துழையுங்கள் என்று
    நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  10. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    சரியான முடிவெடுத்து அதை உடனுக்குடன் நிறைவேற்றியமைக்கு…
    மிக்க நன்றி நண்பரே!

  11. N.Paramasivam's avatar N.Paramasivam சொல்கிறார்:

    சரியான முடிவு. சாதிகள் நமக்குத்தேவை இல்லை. உடன் செயல் படுத்தியது பாராட்டுக்குரியது. நன்றி சார்.

  12. BC's avatar BC சொல்கிறார்:

    //மிகவும் நலிவுற்றிருக்கிறார். மூச்சு வாங்குகிறது. பேசவே கஷ்டப்படுகிறார்.//
    உண்மையை துணிவுடன் எழுதும் தமிழ்நாட்டில் உள்ள மதிப்புக்குரிய சோ அவர்களின் உடல் நலம் அறிந்து வருத்தமாக உள்ளது. அவர் உடல் நலம் பெற இலங்கையர் நாம் விரும்புகிறோம்.
    அவர் மட்டும் ஒரே ஒரு பொய்யை புலிகள் நல்லவர்கள் என்று சொல்லியிருந்தால் மட்டும் போதும் முறைப்படி படித்து சட்ட வல்லுனாராகி பத்திரிக்கை ஆசிரியராக வந்த மாமேதை சோ கண்ணியத்திற்க்காக சர்வதேச ரீதியில் மதிக்கப்படும் பத்திரிக்கையாளர் சோ
    தமிழர்களாகிய எமக்கு எல்லாம் பெருமை தேடி தந்தவர் என்று வந்து பின்னோட்டமிட்டிருப்பார்கள்.

  13. சாந்தன்'s avatar சாந்தன் சொல்கிறார்:

    //…உண்மையை துணிவுடன் எழுதும் தமிழ்நாட்டில் உள்ள மதிப்புக்குரிய சோ ..///

    எஸ்.ஜே இதயா என யாழ்ப்பாணம் போய் துக்ளக்கில் “உண்மையை துணிவுடன்” எழுதினாரே..பார்த்தோமே!
    அவரின் உண்மையை சிதம்பரம் முதற்கொண்டு ஐநா வரை ஏற்றுக்கொண்டதையும் பார்க்கிறோமே!

  14. GOPALASAMY's avatar GOPALASAMY சொல்கிறார்:

    RIGHT FROM BEGINNING (SINCE 1970) I WAS READING THUKLAQ MAGAZINE. HE IS TELLING HIS OPINION BOLDLY. HE IS NOT A CORRUPT POLITICIAN. HE AEDMITTED THAT HE COULD NOT ANYTHING BY BECOMING RAJYA SABA MEMBER. HE SPENT THE WELFARE AMOUNT GIVEN TO MP MOSTLY FOR SCHOOLS. HOW MANY MPS ARE REDY TO DECLARE THE WAY OF THEIR SPENDING THAT MONEY.
    HE NEVER SUPPORTED LTTE. HE WANTED THE GUN CULTURE SHOULD NOT COME TO TAMIL NADU.
    REGARDING TASMAK I WANT TO ASK, WHETHER THE PEOPLE WANT TOTAL PROHIBITION OR THE SHOPS SHOULD BE OWNED BY PRIVATE PEOPLE.

  15. BC's avatar BC சொல்கிறார்:

    //அவரின் உண்மையை சிதம்பரம் முதற்கொண்டு ஐநா வரை ஏற்றுக்கொண்டதையும் பார்க்கிறோமே!//
    தமிழ் இனவெறி அடிப்படையிலான வரும் தமிழ்நாட்டு தேர்தலை எதிர் நோக்கிய பிரசாரத்தில் வெற்றி கொள்ள வேண்டிய அவசிய தேவை சிதம்பரம் அவர்களுக்கு.
    அமெரிக்காவின் உத்தரவை நிறைவேற்றுவதை தவிர வேறு எதுவும் தெரியாத ஐநா.

  16. சாந்தன்'s avatar சாந்தன் சொல்கிறார்:

    //..தமிழ் இனவெறி அடிப்படையிலான வரும் தமிழ்நாட்டு தேர்தலை …//

    புலிகளைத்தடை செய்த லண்டனுக்கும் , வோஷிங்ரனுக்கும் தமிழ் இன வெறியா?
    ஸ்ரீலங்கா ராணுவத்துக்கு சகல உதவிகளும் செய்த சீ.ஐ. ஏ/எஃப்.பி.ஐ மற்றும் எம்.ஐ.-5 க்கும் தமிழ் இனவெறியா?
    தருஸ்மனுக்கும், யஸ்மின் சுக்காவுக்கும் தமிழ் இனவெறியா?
    ஐ.நா மனித உரிமை ஆணையத்துக்கும் தமிழ் இனவெறியா?

    இந்த வேகத்தில் போனால்….
    கிறிஸ்தவ தேவாலயங்களை அடித்து நொருக்கி, பைபிளை எரிக்கும் சிங்கள மக்கள் மற்றும் புத்த பிக்குகளுக்கு தமிழ் இன பாசம் என்பீர்களோ?
    பிசி லொஜிக்கை உங்களிடம் எதிர்பார்த்து ரொம்ப நாளாச்சு!
    யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டபோது அது ஒரு திட்டமிட்ட நிகழ்வல்ல ஒரு சில கேடிகளின் அநாகரிகச் செயல் என பூசி மெழுகிய கிறிஸ்தவ திருச்சபை (குருநாகல்) இன்று ஒரு பைபிளைக் கொழுத்தியதற்கு அழுது ஒப்பாரிவைப்பது காலத்தின் கோலம்!

  17. சாந்தன்'s avatar சாந்தன் சொல்கிறார்:

    அண்னை பிசி….
    இன்னொன்று சொல்ல மறந்து விட்டேன். நேற்று பொது பல சேனா பிக்கு ஒருவர் ”…இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்கா ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் முன் வைக்­க­வுள்ள பிரே­ர­ணைக்கும் இலங்­கையில் இயங்கும் சர்­வ­தேச வை.எம்.எம்.ஏ.அமைப்பு முன்­வைக்­க­வுள்ள முறைப்­பாட்­டிற்கும் இடையே தொடர்­புள்­ள­தோடு இதன் பின்­ன­ணியில் சர்­வ­தேச முஸ்லிம் அடிப்­ப­டை­வா­தி­களும் உள்­ளனர்.” எனச் சொல்லி இருக்கிறார். நீங்கள் என்னவென்றால் லண்டனிலும் நியூயோக்கிலும் தமிழ் இனவெறி என சொல்கிறீர்களே?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.