ஜூனியர் விகடன் சர்வே முடிவுகள் …. எந்த அளவிற்கு சரி …?

ஜுனியர் விகடன் இதழ் ஒரு பெருத்த முயற்சியை
மேற்கொண்டு வருகிற பாராளுமன்ற தேர்தலைப்
பற்றி தமிழ்நாடு அளவில் ஒரு மெகா சர்வேயை நடத்தி,
அதன் முடிவுகளை இன்று அறிவித்திருக்கிறது.

இவை எந்த அளவிற்கு சரியாக /பொருத்தமாக
இருக்கும் என்பது விவாதத்திற்குரிய விஷயம்.
நண்பர்களுடன் இது குறித்து ஒரு கருத்துப் பரிமாற்றம்
செய்து கொள்ளலாமே என்பதற்காக –

அவர்கள் வெளியிட்டிருக்கும் சர்வே முடிவுகளையும்,
கூடவே நமக்கு எழும் சில ஐயப்பாடுகளையும் கீழே
தந்திருக்கிறேன்.

jv-1

 jv-2

திமுக+காங்கிரஸ,அல்லது
திமுக+தேமுதிக, அல்லது
திமுக+காங்கிரஸ்+தேமுதிக
ஆகிய கூட்டணிகளில் எதாவது ஒன்று நிச்சயம்
உருவாகும் என்கிற இன்றைய நிலையில்
இந்த இரண்டு கேள்விகளுக்குமே முக்கியத்துவம்
அடிபட்டுப் போகிறது.

jv-3

jv-4

jv-5

jv-6

jv-7

மற்றவர்கள் -1486 என்கிற செய்தியை இன்னும்
விரிவாக்கி அந்த மற்றவர்கள் யார், யார் என்பதையும்
அவர்களில் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு எண்ணிக்கை
என்பதையும் கொடுத்திருக்கலாம்.

jv-8

உண்மையில் இது தான் இந்த சர்வேயின்
மிக மிக முக்கியமான கேள்வி.
ஆனால், அதன் அடிப்படையை மிக அபத்தமாக
அமைத்திருக்கிறார்கள்.

பாமக மட்டும் தனி அணி என்று
தீர்மானம் செய்து கொண்டு, மற்ற அணிகளுக்கான
எண்ணிக்கையை கொடுத்திருக்கிறார்கள்.

இந்த மிக முக்கியமான கேள்விக்கு பல
option-கள் இருக்கின்றன.

இந்த மற்ற அணிகளில் –
தேமுதிக வை இவர்கள் எந்த அணியுடன்
சேர்த்திருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கவில்லை.

அது திமுக வுடன் சேர்ந்தால் ரிசல்ட் வேறு விதமாகவும்,
பாஜகவுடன் சேர்ந்தால் வேறு விதமாகவும்,
காங்கிரசுடன் சேர்ந்தால் வேறு விதமாகவும் இருக்கும்.
இந்த தேர்தலைப்பற்றிய வரை – தேமுதிக யாருடன்
(அல்லது யார் யாருடன்) கூட்டு சேரப்போகிறது
என்பது ரிசல்டை தீர்மானிக்கக்கூடிய மிக முக்கியமான
விஷயம்.

அதே போல், பாமக(கொங்கு கட்சிகளுடன் சேர்ந்து),
பாஜகவுடன் சேரக்கூடிய வாய்ப்பும் இருக்கிறது.
அப்படிச் சேர்ந்தாலும் முடிவுகள் மாறலாம்.

99 % -திமுகவும் காங்கிரசும் சேரும் என்றே
வைத்துக் கொள்ளலாம்.
இந்த இரண்டும் மட்டும் சேர்ந்தால் –
அது முடிவை மாற்றாமல் இருக்கலாம்.

ஆனால் இவை இரண்டும் சேர்ந்து தேமுதிக வையும்
தங்களுடன் இணைத்துக் கொள்ளும் முயற்சியில்
வெற்றி பெற முடிந்தால் – அது முடிவுகளை
நிச்சயம் மாற்றும்.

நண்பர்களே – வழக்கம் போல்
உங்கள் கருத்துக்களையும் பின்னூட்டங்களில்
கூறுங்களேன்…

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

25 Responses to ஜூனியர் விகடன் சர்வே முடிவுகள் …. எந்த அளவிற்கு சரி …?

  1. ராமச்சந்திரன்.எஸ்.'s avatar ராமச்சந்திரன்.எஸ். சொல்கிறார்:

    hats off to you !

    எப்படி சார் இவ்வளோ சுடச்சுட
    செய்தியோட எழுதறீங்க ?

  2. tmnkin's avatar tmnkin சொல்கிறார்:

    if BJP aligns with PMK+Kongu might get them 3-5 seats
    and DMK aligns with DMDK without congress they might get 8-10
    and admk will get 24-29 seats

    if BJP aligns with DMDK+PMK+Kongu might get them 6-8 seats
    and DMK aligns with congress they might get 3-5
    if dmk stands alone might get 6-8 seats
    and admk will get 24-29 seats

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      Mr. tmnkin, (why not you please have
      a comfortable name …!)

      – That is fine.

      How about if –
      DMK, Congress and DMDK join together
      and fight the elections….?

      with best wishes,
      Kavirimainthan

  3. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    திமுக(S)
    திமுக (A)
    இவை யாரோடு கூட்டு என்பதையும் சேர்த்து போட்டிருந்தால் மேலும் சூடாக இருந்திருக்கும் சர்வே முடிவுகள்

    • today.and.me's avatar todayandme சொல்கிறார்:

      இப்போ புதுசா 2
      திமுக (மொழி)
      திமுக (விழி)

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் அஜீஸ்,

      இதெல்லாமே திமுக (க.க.)வின் நாடகங்கள்
      தானே !
      இப்போதைக்கு அவருக்கு திமுக(மொழி)யின்
      எதிர்காலம் தான் முக்கியம்..!
      எனவே அதற்கு தக்கன தான் கூட்டு, குழம்பு
      எல்லாம் அமையும்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  4. today.and.me's avatar todayandme சொல்கிறார்:

    நீங்கள் இடுகையைப் போட்டு நான் அதைப்படித்து பின்னூட்டம் இடுமுன், இன்றைய சூடான செய்திகளில், கனிமொழி மீது புதிய 2G ஊழல் குற்றச்சாட்டு, திமுக காங்கிரசுடன் கூட்டு சேரவில்லை என்றால் கனி கைது செய்யப்படலாம்.

    CM ஜெயலலிதா மேல் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு தினசரி வழக்காக விசாரிக்கப்பட்டு வருகிறது என வழக்கை நடத்தி வரும் பெங்களூர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. வரும் பாராளுமன்ற தேர்தலுக்குள் அனைத்து விசாரணையும் முடித்து (காங்கிரஸ் ஆதரவுடன் முடிக்கப்பட்டு) லல்லு பிரசாத் யாதவ் போல குற்றவாளி என நீதிமன்றம் அறிவிக்கும் பட்சத்தில், சிறை தண்டனை கிடைக்கும் பட்சத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தம் முதல்வர் பதவியை இழந்து சிறை செல்லவேண்டிவரும். உச்சநீதி மன்றத்தின் புதிய சட்டத்தின்படி எதிகாலத்தில் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

    பாராளுமன்ற தேர்தல் வரும்முன் தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்றவுடன் அதிமுக கட்சிக்கு அவ பெயர் வந்து அதிமுக உடன் சேரும் கூட்டணி கட்சிகளின்(யின்) பாராளுமன்ற தேர்தல் வெற்றி வாய்ப்பும் பறிபோகும் என்பது காங்கிரஸின் பிளான்.

    ஜெயலலிதா மேல் உள்ள சொத்து குவிப்பு வழக்குக்கு வேகம் கொடுத்து பாராளுமன்ற தேர்தலுக்குள் முடித்து ஜெயலலிதாவை அரசியல் களத்திலிருந்து விரட்ட காங்கிரஸ் சதி செய்துள்ளது. (இதில் கருணாநிதியின் பங்கு இல்லாமலா? Here in TN no trace of Congress and DMK is their counterpart.)
    •••••••••••••••••••••••
    ஆயிரத்தில் ஒரு சதவீதமாக, ஒருவேளை, கடைசி நேரத்தில் திமுக காங்கிரஸ் கட்சியுடன் காய்விட்டுவிட்டால் 2ஜி வழக்குக்கு மீண்டும் உயிர் கொடுத்து கனிமொழி, ராஜா மற்றும் திமுக குடும்பத்திலிருந்து சிலரையும் சிபிஐ செய்து சிறையில் அடைத்து திமுகவின் அரசியல் இமேஜை கெடுத்து (இனிமேல் தானா கெடவேண்டும் என்று சிலர் முறைப்பது தெரிகிறது. ஆனாலும் இன்னுமுமே ஊர் இவிங்களை நம்புதேப்பா) காங்கிரஸ் தனித்து நின்று அதிகபடியான MP சீட்டை பிடிக்க திட்டமிட்டுள்ளது.

    எனவே முதல் செக் – தி.மு.க.,வுக்கு புதிதாக ஒரு நெருக்கடியை சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகும் கூடுதல் சொலிசிட்டர் (காங்கிரஸ் சார்பாக?) தொடுத்துள்ளார். அதாவது கனிமொழிமீது பண வர்த்தனையில் பெரும் மோசடி செய்ததாக ஒரு புதிய குற்றச்சாட்டை பதிவு செய்யலாம் என்று இந்திய அமலாக்க துறைக்கும், மத்திய சட்ட அமைச்சகத்துக்கும் ஒரு யோசனையை தெரிவித்துள்ளார்.

    இந்த குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படும்போது கனிமொழியை மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க வாய்ப்பு இருப்பதாக சட்டவல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

    காங்கிரஸின் இரண்டாவது செக், எப்போன்னு தெரியலை, திக்.! திக்.!

  5. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    கா மை ஐயா. நீங்கள் எங்கள் கருத்து கேட்டதால் சொல்கிறேன்.

    கடந்த சட்ட மன்ற தேர்தலில் அதிமுக தற்போது உள்ள பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும் திமுக மூன்றாம் நிலைக்கு போகும் என்றும் எந்த கருத்து கணிப்பும் சொல்லவில்லை. எனவே இதில் எனக்கு எள்ளளவேனும் நம்பிக்கை இல்லை.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி எழில்.

      நம்ம ஊர் கருத்துக் கணிப்புகளைப் பற்றி
      எனக்கு எந்தவித அபிப்பிராயமும் இல்லை.

      ஆனால் – டெல்லி சேனல்கள்,
      4 மாநில தேர்தல்களின் போது சொன்ன
      கணிப்புகள் ஓரளவு பலிக்கவே செய்தன..

      இன்னமும் நாட்கள் இருக்கின்றன –
      கட்சிகளின் நிலையில்
      நிறைய மாற்றங்கள் வரக்கூடும் …!
      பொறுத்திருந்து பார்ப்போம்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

        ஐயா, நக்கீரன் ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது. உற்று நோக்கையில் அதன் பின்புலம், காங்கிரசுடன் திமுக கூட்டு வச்சால் மனதுடைந்து போக இருக்கும் வாரிசு மற்றும் ‘உடன் பிறப்புகளை’ தேற்றுவதற்கு காங்கிரஸ்க்கு ஒரு பெரிய வாக்கு வங்கி உள்ளது போல் அமைக்கப்பட்டிருப்பது தெரியும். லயோலா கல்லூரியை விட மற்ற கருத்து கணிப்புகளுக்கு பின்னணியில் ஒரு agenda இருப்பது தான் உண்மை.

  6. ravikumar's avatar ravikumar சொல்கிறார்:

    Whatever be the Ally congress Ally has to routed out from TN due to anti Tamil Elam Activity

  7. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    என்னுடைய கருத்துக்கள்.
    1.அம்மா யாருடனும் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டார்.இவருக்கு 30
    சீட் வரை கிடைக்க வாய்ப்புண்டு.
    2.BJP இருக்கும் கூட்டணிக்கு 10
    சீட் வரை கிடைக்க வாய்ப்புண்டு.
    3.மிகவும் பலவீனமான நிலையில் காங்.
    4.காங்.+தி.மு.க கூட்டணி அமைந்தால்.அம்மா உணவகத்தில் தேர்தல் முடியும் வரை 250cc பால் பாயசம் ரூ.4 க்கு கிடைக்கும்.
    5.அம்மா+மோடி கூட்டணி தேர்தலுக்குப்பிறகு வர வாய்ப்புண்டு.
    6.ராமதாஸ்,திருமா,விஜயகாந்த் வைகோ ஏனையோர்.எங்கு பிரசாதம் அதிகம் கிடைக்கிறதோ அந்த பஜனை கோஷ்டியில் சேருவர்.

    • தக்குடு's avatar தக்குடு சொல்கிறார்:

      //ராமதாஸ்,திருமா,விஜயகாந்த் வைகோ ஏனையோர்.எங்கு பிரசாதம் அதிகம் கிடைக்கிறதோ அந்த பஜனை கோஷ்டியில் சேருவர்// முடியலடா சாமி! விழுந்து விழுந்து சிரிச்சேன் இந்த இடத்துல 🙂

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      கண்பத்,

      யாருடனும் கூட்டு இல்லாத நிலையில்,
      அம்மா கட்சிக்கு எப்படி 30 இடங்கள்
      கிடைக்குமென்று எதிர்பார்க்கிறீர்கள் கண்பத் ..?
      (logic behind your expectations …?)

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

        அய்யா!
        என்னைப்பொருத்தவரை..
        இப்போ மக்கள் மனதில் இருக்கும் பிம்பம்..
        காங்கிரஸ்..உதவாக்கரை, ஊழல்
        தி.மு.க..குடும்ப நலம், ஊழல்
        பா.ஜ.க..சந்தேகம்.
        தே.தி.மு.க…உதாவாக்கரை,குழப்பம்
        ராமதாஸ்..திருமா..சந்தர்ப்பவாதிகள்
        வை.கோ..வை.கோ who?
        அம்மா..கர்வம் மர்மம்,ஆனால்
        மேற்கண்டவர்களை விட தேவலை..
        அம்புட்டுதே!

        • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

          ஒரு சிறு திருத்தம் செய்ய அனுமதியுங்கள்..
          காங்கிரஸ் ..உதவாக்கரை ஊழல் என்பதை இப்படி மாற்றவேண்டும்..
          காங்.(உள்ளூர்)…. அடிமைகள் சோப்ளாங்கிகள்
          காங்.(வெளியூர்)……தமிழ் விரோதிகள்,உதவாக்கரைகள்.
          காங்.(வெளிநாடு)…..கொள்ளை,ஊழல்,மர்மம்.

          • todayandme's avatar todayandme சொல்கிறார்:

            I like this
            காங்.(உள்ளூர்)…. அடிமைகள் சோப்ளாங்கிகள்
            காங்.(வெளியூர்)……தமிழ் விரோதிகள்,உதவாக்கரைகள்.
            காங்.(வெளிநாடு)…..கொள்ளை,ஊழல்,மர்மம்.

  8. குறும்பன்'s avatar குறும்பன் சொல்கிறார்:

    காங்கிரசு – 00
    திமுக – 5~10 காங்கிரசுடன் சேர்ந்தால் 3~6
    பாசக +மதிமுக+பாமக+கொங்கு- 8~12
    பாசக +மதிமுக+பாமக+கொங்கு+தேமுதிக – 12~16
    காங்கிரசு +தேமுதிக – 0
    திமுக + தேமுதிக – 6~12
    பாசக +மதிமுக+கொங்கு+தேமுதிக – 10~13
    பாசக – 0000
    அதிமுக + கம்யூனிசுட் – 15~25

    கடைசி நேரத்துல எப்படி அலை அடிக்குதோ தெரியலையே. பெரிய அலை அடித்தால் போட்ட கணக்கு தவறாகும்.

    இப்போதைய கணக்குப்படி அதிமுக தான் முன்னனியில் உள்ளது. பலமான கூட்டணி வைத்தால் பாசக+ க்கு இரண்டாம் இடம் உறுதி. திமுகவுக்கு மூன்றாம் இடம் தான் (இன்னும் அதன் மேல் உள்ள வெறுப்பு போகலை) தமிழ் உணர்வாளர்களை பகைத்துக்கொண்டது (ஈழ நாடகத்தில்) அதற்கு பெரிய அடி.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் குறும்பன்,

      ஆக மொத்தம் – காங்கிரசுடன் கூட்டு
      வைக்கும் யாருக்கும் முதலுக்கே மோசம்
      என்கிறீர்கள்….

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  9. Karthi's avatar Karthi சொல்கிறார்:

    By looking at photos in Junior Vikatan, only literates participated in Survey

  10. gandhi's avatar gandhi சொல்கிறார்:

    veetukku oru cell phone –cylinder maniyam 12 cylinder ku varudam sumar rs4000-education loan matrum vivasaya kadan thallupadi ahdanal meendum congress than jayikkum

  11. GOPALASAMY's avatar GOPALASAMY சொல்கிறார்:

    CONGRESS, DDMK, DMK, VC, PUDHIYA THAMILAKAM, MOSLEM LEAGUE, MANIDHA NEYA KATCHI WILL JOIN TOGETHER AND WILL GET 35 SEATS. CONGRESS ALREADY THREATENED “FRUIT”. NO CHOICE FOR KARUNA. I WILL NOT WONDER IF PMK ALSO JOINS WITH THIS MEGA ALLIANCE ON SECULAR LABLE. WILL ANYBODY THINK THIRUMA AND ESRA ARE DOING FREE SERVICE TO CONGRESS?

  12. kanna's avatar kanna சொல்கிறார்:

    communist kootaniay serkalya

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.