இவை எல்லாம் செய்திகள் மட்டுமே..
நீங்களாக எதையாவது கற்பனை செய்து கொள்ளாதீர்கள்…..!
இந்த புகைப்படம் –
இனி காங்கிரசுடன் உறவு இல்லை என்று கலைஞர்
கருணாநிதி அறிவித்தவுடன், அறிவாலயம் வாசலில்
திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்த காட்சி –
இந்த புகைப்படம் –
வியாழன் மாலை – திருமதி கனிமொழியின் வீட்டில்,
கருணாநிதி மற்றும் கனிமொழியை, தங்கபாலுவுடன்
சென்று சந்தித்த காங்கிரஸ் சீனியர்குலாம் நபி ஆசாத்.
– காங்கிரஸ் -திமுக கூட்டணியைப் பற்றி பேச
தான் வரவில்லை என்றும்,
வேலூரில் வெள்ளிக்கிழமை உள்ள ஒரு நிகழ்ச்சிக்காக
வந்தவர், தான் கலைஞரைப் பார்த்து 6 மாதங்களுக்கு
மேல் ஆகி விட்டதால், அவரை மரியாதை நிமித்தம்
சந்திக்கவே வந்ததாக குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் கலைஞர் வீட்டிற்கு
வந்து, மாடியில் இருந்த அவரை சந்திக்காமலே
திரும்பிச் சென்ற அழகிரி-
இன்று ஸ்பெஷலாக
கோபாலபுரம் வந்து சந்தித்து விட்டுச் சென்றார்.
-கருணாநிதியை சந்தித்த பிறகு வாசலில் இருந்த
செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி,
“அப்பா என்ற முறையில் கருணாநிதியிடம்
பொங்கல் வாழ்த்து பெற வந்தேன். என்னைப் பற்றியும்,
அமெரிக்காவில் உள்ள பேரன், பேத்தி, மகள் குறித்து
விசாரித்தார். நல்லா இருக்காங்க என்று சொன்னேன்
அவ்வளவு தான்” என்றார்.

ஸ்டாலினின் லேடஸ்ட் செய்தி மற்றும் புகைப்படம்
கிடைக்கவில்லை. எனவே symbolic ஆக செய்தியைச் சொல்லும்
இந்த புகைப்படம் –







யாருங்க அது.
இதுவரைக்கும் சூடு சொரணை இல்லாத தமிழன் எவனாவது காலை முதல் மதியம் வரை உண்ணா விரதம் இருந்திருக்கானா.
கே. கோபாலன்
தூத்தேறி. சூடாவது சொறணையாவது
வீட்ட விட்டு முன்னால பத்து பேர் பின்னால் பத்து பேருடன் வெளில வர்ற அழகிரி அஞ்சா நெஞ்சனா அப்டீன்னா என் சம்சாரம், முன்னால் மத்திய அமைச்சரப் பத்தி இப்ப்டில்லாம் பேசாதயா, எவனாவது லூசும்பான் அப்டீங்கறாங்க.
இந்துன்னா திருடன் என்று அவங்க சாத்திரத்தில் சொல்லி இருக்கிறது அப்டீன்னு முன்னாள் முதல்வர் சொல்றாரு. “கருணாநிதின்னா மக்கள் கருணையுடன் குடும்பத்துக்கு நிதி சேர்ப்பவர்ன்னு தமிழ்ல சொல்லிருக்கு” அப்டீன்னு நான் சொன்னா தமிழகப் பகுத்தறிவுவாதிகள் கும்பல் கும்பலா சாதிப்பேரை சொல்லி திட்ராங்க.
“இலவசப் பொருளுக்கும் விலையில்லாப் பொருளுக்கும் என்னயா வித்தியாசம். மக்கள் பணத்திலேந்து மிக்சீ க்ரைண்டர் அரிசில்லாம் தன்னோட படத்தைப் போட்டு குடுப்பதெல்லம் ஒரு புரட்சியா” அப்டீன்னா அதிமுக காரங்க எல்லாம் திட்ராங்க.
ஏம் மானம் மரியாதை எல்லாம் எப்பவோ போச்சு.
எல்லாத் தமிழர்களும் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் பகுத்தறிவுடனும் பொங்கலைக் கொண்டாட படியுங்கள் : kgopaalan.blogspot.in
கோபாலின் பொங்கல் வாழ்த்துக்கள்
CONGRESS WILL COME ALONG WITH DDMK (VIJAYAKANTH) TO DMK. CONGRESS WILL NOT ALLOW DMK TO GO ALONE IN THE ELECTIONS. STILL CONGRESS IS RULING. KARUNA HAS FEAR IN MIND.
உங்கள் பதிவும் நன்று. திரு கோபால் அவர்கள் பதிலும் மிக மிக நன்று.
VMSS (அல்லது தமிழில் வெ.மா.சூ.சொ) கல்லா கட்டுவதற்கு முதல் எதிரி..
தமிழர்கள் ஒட்டு போடுவது ஜாதி அடிப்படையில் மற்றும் ஓட்டிற்கு கொடுக்கப்படும் விலையை வைத்து.எனவே பொறுத்துதான் ஆகவேண்டும்.
வேறு வழியில்லை.