தேவ்யானி விவகாரத்திற்கும், திருமதி சோனியா வழக்கிற்கும் என்ன தொடர்பு …?

நியூ யார்க்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரி
தேவ்யானி கோப்ரகடேயை,அவரது சொந்த பணியாளர்
சங்கீதா ரிச்சர்ட்ஸ் விசா விவகாரம் சம்பந்தமாக
பொய்யான தகவலைக் கொடுத்ததாக அமெரிக்க
போலீஸ் கைது செய்ததும், அது தொடர்பான வழக்கு
இன்னும் தீவிரமாகத் தொடரப்பட்டு வருவதும் தெரிந்ததே.

devyani kobregade

இவ்விதம் இந்திய தூதரக அதிகாரியைக் கைது செய்ததும்,
வழக்குத் தொடர்வதும் ஜெனீவா உடன்பாட்டிற்கு
விரோதமான செயல்கள் என்று இந்தியா ஆட்சேபம்
தெரிவித்ததை அமெரிக்க அரசு சட்டை செய்யாததால் –

பதில் நடவடிக்கையாக, இந்தியாவில் உள்ள அமெரிக்க
தூதரக அதிகாரிகளுக்கும், அவர்களுடைய குடும்ப
உறுப்பினர்களுக்கும் பலத்த அசௌகரியங்களைக்
கொடுக்கும் விதத்தில், பல சலுகைகளை விலக்கிக்
கொண்டும், பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துக்
கொண்டும் – இந்திய அரசு தன் எதிர்ப்பை கடுமையான
முறையில் வெளிப்படுத்திக் காட்டுவதும் தெரிந்ததே..!

இது குறித்து வித்தியாசமான தகவல்கள் சில
இப்போது வெளிப்படுகின்றன.

நியூயார்க் வாழ் freelance செய்தியாளரான
பிரகாஷ் எம்.ஸ்வாமி யை பலருக்கும் தெரிந்திருக்கும்.

அவர் ஒரு வித்தியாசமான தகவலை
வெளியிட்டிருக்கிறார் –

முன்னாள் ஜனாதிபதி திரு. அப்துல் கலாம் –
அமெரிக்கா சென்றபோது, சாதாரண அமெரிக்க
போலீசால் விமான சீட்டிலிருந்து இறக்கி விடப்பட்டு,
சோதனை செய்த பின்னரே மீண்டும் இருக்கையில்
அமர வைக்கப்பட்டார். அப்போது இந்திய அரசு
இதுபோல் கொதித்து எழவில்லை.

இதற்கு முன்னதாக, அமெரிக்காவில் –
திருமதி மீரா சங்கர், திரு.ஹர்திப் சிங் பூரி போன்ற
இந்திய தூதர்கள் -விமான நிலைய சோதனையில்
அவமதிக்கப்பட்டார்கள். திருமதி மீரா சங்கர் தூதர்
என்பது தெரிந்தும், அவரது புடவையைக் களைந்து
சோதனை செய்தனர். சீக்கியரான தூதர் ஹர்திப் சிங்
பூரியை, அவரது தலைப்பாகையை அவிழ்த்து
பரிசோதனை செய்தனர்.

ஷாருக் கான், அம்ஜத் அலிகான், கமல்ஹாசன்,
ஏ.ஆர்.ரெஹ்மான் போன்ற பிரபல இந்தியர்களும்
அவமானப்படுத்தப்பட்டனர்.

அப்போதெல்லாம் வராத, ரோஷம், கோபம்,
ஆத்திரம் – இப்போது மட்டும் இந்திய அரசுக்கு
ஏற்பட்டது எப்படி, ஏன் என்று வினா
எழுப்பப்படுகிறது..!

இந்தியாவில் இந்திரா காந்தி கொலையை அடுத்து,
பழிவாங்கும் செயலாக, ஆயிரக்கணக்கான சீக்கியர்கள்
காங்கிரஸ்காரர்களால் டெல்லியில் கொன்று
குவிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் தற்போது
அமெரிக்காவில்,அமெரிக்க குடியுரிமை பெற்று
வாழ்கின்றனர்.அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து,
Sikhs for Justice என்கிற அமைப்பின் மூலம் –

நியூயார்க் நீதிமன்றத்தில் – திருமதி சோனியா காந்தி,
கமல்நாத், ஜெகதீஷ் டைட்லர் போன்ற
காங்கிரஸ் தலைவர்கள் மீது
இன அழிப்பு வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளனர்.
அது இன்னும் நிலுவையில் உள்ளது.

திருமதி சோனியா காந்தி, சென்ற வருடம்
மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது –
அவருக்கெதிராக நியூயார்க் நீதிமன்றத்தில்,
இந்த வழக்குக்காக, அவசர அவசரமாக ஒரு சம்மன்
பெறப்பட்டு, அவர் இருந்த மருத்துவ மனையிலேயே
கொடுக்கப்பட்டது. விபரீத விளைவுகள் எதாவது
நடக்குமோ என்று அஞ்சி, இரவோடு இரவாக தனி
விமானத்தை ஏற்பாடு செய்துகொண்டு திருமதி சோனியா
இந்தியா திரும்பி வர நேர்ந்தது.
சீக்கிய சங்கத்தினர் – திருமதி சோனியா
ஒரு கட்சித்தலைவர் மட்டுமே. அவருக்கு எந்தவித
விதிவிலக்கும் (immunity) சட்டப்படி கிடையாது
என்று வாதிடுகின்றனர்.

இந்த வழக்கு நிலுவையில் உள்ள வரையில்,
திருமதி சோனியா காந்தி அமெரிக்காவிற்கு சிகிச்சை
எடுத்துக் கொள்ளச் செல்வது சிரமம். சென்றாலும்
பல சட்டச் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
வழக்கு முடியும் வரை இந்தியா திரும்ப
முடியாத நிலை கூட ஏற்படலாம். வழக்கில் தீர்ப்பு
எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றெல்லாம்,
காங்கிரஸ் தலைமை கவலையில் இருக்கிறதாம்.

திரும்பவும் உடல்நிலை காரணமாக – சிகிச்சைக்காக
அமெரிக்கா செல்ல வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டால் என்ன செய்வது என்று யோசனை !

இந்த வழக்கு குறித்து, இந்திய வெளியுறவு அமைச்சர்
சல்மான் குர்ஷித் தனது அமெரிக்க சகாவான ஜான்
கெர்ரியிடம் பல முறை பேசியும் பலனில்லை.
அமெரிக்க அரசு கோர்ட் விவகாரங்களில் தலையிடும்
வழக்கம் இங்கு கிடையாது என்று சொல்லி விட்டதாம்..!

நாடாளுமன்ற தேர்தலின் விளைவாக,
காங்கிரஸ் கட்சி பதவியை இழந்தால்,
திருமதி சோனியா காந்தி அமெரிக்கா போவதில் பல
சிக்கல்கள் வரலாம். எனவே, அதற்குள் இந்த
விவகாரத்தை முடிக்க வேண்டும் என்கிற கட்டாயத்தில்
மத்திய காங்கிரஸ் அரசு இருக்கிறதாம்.

சரியான நேரத்தில் தேவ்யானி விவகாரம்
எதேச்சையாக முளைத்தது.
“இந்த” வழக்கை வைத்து, தீவிரம் காட்டி,
“அந்த” வழக்கை முடிக்க வேலை நடக்கிறது.
அந்த வழக்குக்கு விடிவு ஏற்பட்டால்,
இந்த வழக்கு எதாவது ஒரு வழியில் –
சந்தடி இல்லாமல் முடித்துக் கொள்ளப்படும் –
என்கிறார் நியூயார்க் வாழ் இந்திய செய்தியாளரான
பிரகாஷ் எம். ஸ்வாமி…!

அவர், நியூயார்க்கில் இருப்பதால், நமக்குக் கிடைக்க
வாய்ப்பில்லாத சில தகவல்கள் அவருக்கு கிடைக்க
வாய்ப்பிருக்கிறது…!

என்னென்னவோ நடக்குது – மர்மமாய் இருக்குது
என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்ல
முடியவில்லை…!

பின்குறிப்பு –
மேலேயுள்ள இடுகையை நேற்று நள்ளிரவில்
எழுதினேன். இன்று காலை தொலைக்காட்சியில்
முதல் செய்தியிலேயே – தேவ்யானி
வழக்கில் திருப்பம் ஏற்பட்டு, அவர் இன்றே இந்தியா
திரும்புவதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

அவருக்கு புதிதாக கொடுக்கப்பட்டுள்ள
immunity status-ஐ அமெரிக்க அரசு
ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கு கைவிடப்படாது – ஆனால், அவருக்கு
immunity status இருக்கிற வரையில்,
தொடரவும் படாது….!
இது எப்படி இருக்கிறது…?

அது சரி. ஆனால் ‘டீலில்’ –  “அந்த” வழக்கு பற்றி
என்ன முடிவிற்கு வரப்பட்டது என்று தெரியவில்லையே..!

கத்திரிக்காய் விளையும்போது –
கடைத்தெருவுக்கு வரும்.
அப்போது தெரியும் விளைச்சல் விவரம்…!!
உம் .ம்…காத்திருப்போம்….

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to தேவ்யானி விவகாரத்திற்கும், திருமதி சோனியா வழக்கிற்கும் என்ன தொடர்பு …?

  1. nparamasivam1951's avatar nparamasivam1951 சொல்கிறார்:

    எதுவும் நடந்து இருக்கலாம்.

  2. kinarruthavalai's avatar kinarruthavalai சொல்கிறார்:

    என்னமோ இருக்குது, நடக்குது. இது தேவயாணி கேஸ் போல தெரியலே. சோனியா அன்னை மீது போட்ட கேஸை திருப்பி வாங்கனும்னு இப்படி மறைமுகமா எதாவது திட்டமா? பதிலடியா? முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் ஏற்படாத இழுக்கா? அப்போதெல்லாம் எல்லாத்தையும் மூடிக்கிட்டு இருந்திச்சி காங்கிரஸ்? இப்போ தேவயாணி பேரில் அன்னைக்கு விடியல் போல. குர்ஷிடும், மண்ணும் சோனியான்னா என்னவேனாலும் பண்ணும்.
    —- இது நான் ஜனவரி 6 அன்று தினமலரின் செய்திக்கு -அனுமதி பெறாமல் சினிமா திரையிட்டால் நடவடிக்கை: அமெரிக்க தூதரகத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை நான் எழுதிய கருத்து
    —http://www.dinamalar.com/news_detail.asp?id=888800#1826190

  3. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    18-12-13- ல் நான் பகிர்ந்தது
    கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அன்னை அமேரிக்க ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட போது அங்கேயே SFJ போட்ட வழக்கில் சம்மன் கொடுக்கப்பட்டது. அப்போதே தில்லாலங்கடி செய்து எஸ்ஸாகி வந்துவிட்டார். இப்போது மூன்று நாட்களுக்கு முன், அதாவது 16 டிஸம்பரில் மீண்டும் அந்த கேஸில் உடனடியாக ஜனவரி 2ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அமேரிக்க கோர்ட் மீண்டும் கேட்டுக்கொண்டதை அடுத்து உடனடியாக களத்தில் குதித்த இந்திய அரசு, தேவ்யானி விவகாரத்தை ஊதி பெரிதுபடுத்திவருகிறது. கடந்த பல நிகழ்வுகளில் முன்னாள் ஜனாதிபதிகளிலிருந்து பல முக்கிய பிரமுகர்களையும் அமேரிக்கா அவமானப்படுத்தியபோது ஏற்படாத வன்மம்/கோபம் இந்திய அரசுக்கும் நமது மீடியாவுக்கும் இப்போது மட்டும் ஏன்? (இங்கு மீண்டும் தலைப்பை ஒரு முறை வாசித்துக்கொள்ளவும்)

  4. ரமணன்'s avatar ரமணன் சொல்கிறார்:

    காவிரி மைந்தன்,
    இரண்டு விடயங்கள் இங்கே…..
    ஒன்று இந்த பிரகாஷ் சுவாமி அடிப்படையில் ஒரு பந்தா பம்மாத்துக் கேஸ் !
    ஈரைப்பேனாக்கி எலியை பெருச்சாளி ஆக்கி தன்னைப்பற்றி பந்தா காட்டுபவர். இவரை நான் பலமுறை பார்த்தும் இவரின் எழுத்து (???) களைப் படித்தும் இருக்கிறேன். நானும் இவர் இருக்கும் இடத்துக்கு அருகாமையில் இருப்பதால் இவரின் பம்மாத்துகள் புரியும். இப்படித்தான் ஒருமுறை இங்கே உள்ள கடையில் அறுகம்புல் ஜூஸ் குடிப்பதற்கு அமெரிக்கர்கள் லைனில் நிற்பதாக எழுதினார். எனக்கு அக்கடையின் உரிமையாளரைத் தெரிந்திருந்தது. அங்கே இருந்தது அறுகம்புல்லும் அல்ல லைனும் நிற்கவில்லை. அந்தக்கடை உரிமையாளர் நஷ்டத்தால் கடையையே இன்னொருவருக்கு விற்கும் நிலை ஏற்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படித்தான் இவர் இந்தியர்களை அமெரிக்கர்கள் காலில் விழுந்து கும்பிடுவார்கள் என எழுதுவார். அவர் சார்ந்திருந்த அமைப்பான FeTNA வை 100மில்லியன் டொலர் கேட்டு மானநஷ்ட வழக்குப்போட்டிருக்கிறார். அவரைப்பற்றி பல சுவாரசியமான் விடயங்கள் உள்ளன. அவை இன்னொரு முறை எழுதலாம்.

    அடுத்தது இந்த சோனியா காந்தி வழக்குக்கும் தேவயானி வழக்குக்கும் ஒரு தொடர்பும் இல்லை என நினைக்கிறேன். இந்தியா என்னதான் தலைகீழாக நின்றாலும் அமெரிக்கா வெளிப்படையாக சோனியா வழக்கில் தலையிடாது என்பதுதான் உண்மை. ஒரு வேளை சீக்கிய் அமைப்பிடம் இதை பெரும்தன்மையுடன் விட்டுவிடுங்கள் என கேட்கலாம். அல்லது அவர்களுக்கு மறைமுக அழுத்தங்கள் கொடுக்கலாம். ஆனால் அந்த ழுத்தங்கள் வெளியில் தெரிந்தால் கோவிந்தாதான். சீக்கியர்கள் லேசுப்பட்டவர்கள் இல்லை. இந்த அழுத்தங்களுக்கெல்லாம் பணிய மாட்டார்கள்.
    இங்கே நியூ ஜேசி மானில கவர்னர் (பிரதமருக்கு சமம்) தனக்கு ஆதரவு தர மறுத்த சிறிய நகரின் மேயரை பழிவாங்க அவ்வூரின் சாலையின் இரண்டு தடங்களை 3நாள் போக்குவரத்து ஆய்வு எனும் போர்வையில் மூடினார். மூன்றுமாதங்களில் விடயம் நேற்று லீக் ஆகியது. தொலைக்காட்சி, ரேடியோ பேப்பரில் எல்லாம் கிழியுது. இன்று அரச சட்டத்தரணி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாமா என பார்க்க ஆரம்பித்திருக்கிறார். மட்டுமல்ல அந்த நகரத்தின் பிரஜைகள் சிலர் தனிப்பட்ட வழக்குத்தாக்கல் செய்திருக்கின்றனர். இத்தனைக்கும் அந்த கவர்னர் இரண்டாம் தடவையும் அமோக ஆதரவுடன் வெற்றியீட்டியவர்..
    இந்த சோனியா வழக்குப்போல் ப்ல வழக்குகல் இங்கே நிலுவையில் உள்ளன. எல்லாம் டிப்ளோமற்றிக் இமியூனிற்றி சிக்கலில் மாட்டி நிலுவையில் உள்ளன. இதேபோல ஈழத்தமிழர் அமைப்பான “இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு” எனும் அமைப்பு ராஜபக்சாவுக்கு எதிராக வழக்குதொடுத்து டிப்ளோமற்றிக் இமியூனிற்றியால் தப்பி உள்ளார்.

    சோனியா காந்தி வைத்தியசாலை பின்கதவால் சம்மனை வாங்காமல் தப்பிக்கலாம். ஆனால் அவ்வாறு நிகழும் பட்சத்தில் இரண்டு பத்திரிகைகளில் இந்த சம்மனை பிரசுரித்தால் போதும். இந்தியாவில் இதனைப்பிரசுரிக்க இரண்டு பத்திரிகைகளா இல்லை?

    அமெரிகாவில் அப்துல் கலாம் மட்டும் விமான நிலையத்தில் சோதனை இடப்படவில்லை. அமெரிகக் காங்கிரஸ் உறுப்பினர்கள், செனட்டர்கல் என எல்லோரும் அடக்கம். இத்தனைக்கும் ஒரு காங்கிரஸ் அங்கத்தவர் உடலில் இரும்புத்தகடுகளின் உதவியுடனேயே நடமாடுபவர் அவ்வளவுகு மூட்டுவியாதி. தனது உடலில் இரும்பு தகடுகள் பொருத்தி இருக்கிறார்கள் அதனால்தான் எக்ஸ்ரே எச்சரிக்கிறது எனச் சொல்லியும் காவலர்கள் கேட்கவில்லை. ஆடைகளைந்து சோதனையிட்டே அனுப்பினார்கள். ஆகவே அப்துல்கலாம், அமீர்கான், கமலகாசன் கதை எல்லாம் எடுபடாது!
    நடக்கவேண்டியது நடந்தே தீரும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ரமணன்,

      நீங்கள் கொடுத்த தகவல்களுக்கு நன்றி.
      நாங்கள் தொலைதூரத்தில் இருப்பதால் –
      பிரகாஷ் எம்.ஸ்வாமி பற்றிய மற்ற தகவல்கள் (!)
      எங்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல்
      போய் விட்டது.

      ஆனால் – தேவ்யானி பின்னணியில்
      திருமதி சோனியாவின் கதை பிணைந்தே இருக்கிறது
      என்று தான் தோன்றுகிறது …!

      அடிக்கடி வந்து, உங்கள் பக்கத்திய தகவல்களை
      கொஞ்சம் பரிமாறிக்கொள்ளுங்களேன்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  5. GOPALASAMY's avatar GOPALASAMY சொல்கிறார்:

    Right from beginning, i was thinking, there is a missing link. Prakash swamy’s credentials are not important here. whether this news is true or not, that only we have to see. “America may give pressure to justice for sikhs organisation”. prakash swamy’s news also tells samething in different tone.

  6. Srini's avatar Srini சொல்கிறார்:

    when our soldiers heads were cut, our salman bhai didn’t show this much patriotism, when devyani case up, he told in parliament, he will not return to parliament till she is not saved…. there is something more than what meets our eyes and ears as of now.. congress people are the most cunning and hypocrite leaders in india than any other party. there is also another news going on that devyani is a “triple agent”..the other way to look at is…till now US and India relationship was going fine… is it that salman bhai entered an agreement with paks to break that relationship.. who knows.. anything is possible in politics…..but the fact is Sonia’s health is deteriorating and Rahul needs to take up more responsibility. for sure he will fulfill mahatma;s wish… to shutdown congress party, that will the good news for india

  7. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    நேற்று செய்திகளில் வந்தது போல் தேவ்யானி மாற்றலாகி இங்கு வரவில்லை. அவர் அமெரிக்காவினால் வெளி எற்றபட்டுள்ளார்.

    http://www.bbc.co.uk/news/world-asia-india-25678366

    எனவே முறுகல் நிலை இன்னும் தொடர்கிறது என்று தான் தோன்றுகிறது.

    அமெரிக்கா எதையும் எடுத்தேன் கவுத்தேன் என்று செய்வதில்லை. தேவ்யானி விவகாரத்திற்கும் ஒரு முன்வினை இருந்திருக்க வேண்டும்,. அது என்னவாயிருக்கலாம் என்று எண்ணி பார்க்கையில் தூத்துக்குடி கடற்பரப்பில் பிடிபட்ட அமெரிக்க கப்பல் தான் ஞாபகதிட்கு வருகிறது.

    இது ஒரு புறமிருக்க, தேவ்யானி விவகாரத்தினால் ஈழ தமிழருக்கு சில நல்லவை நிகழலாம். அமெரிக்கா தமிழர் அழிப்பு விவகாரத்தில் ராஜபக்சேவை எவ்வளவு அழுத்திற்கு உள்ளாக்குகிறார்களோ அந்த அளவு அது இந்தியாவையும் பாதிக்கும் என்று அவர்கள் அறிவார்கள்

    இலங்கைக்கு பயணம் செய்துள்ள யுத்தக் குற்றங்கள் தொடர்பான அமெரிக்காவின் தூதுவர் ஸ்டீவன் ஜே ராப், புதுமாத்தளன் பகுதிக்கு விஜயம் செய்த போது எடுக்கப்பட்ட 3 புகைப்படங்கள், அமெரிக்க தூதரகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தரவேற்றம் செய்யப்பட்டிருந்தது இலங்கையில் இப்போது கொந்தளிப்பு நிலையை ஏற்படுத்தி உள்ளது. இது எதிர்வரும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழு கூட்டத்தில் அமெரிக்கா எடுக்க இருக்கும் நிலைக்கு முன்னோட்டமாக இலங்கை பார்க்கிறது.

    எனவே வெகு சீக்கிரத்தில் அமெரிக்காவுக்கும் எமக்கும் எந்தவித முட்டலும் மோதலும் இல்லை என்று சல்மான் குர்ஷித் சொல்லி அமெரிக்கா காலில் விழுவார் என்றே தோன்றுகிறது.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      எழில்,

      நீங்கள் சொல்வதிலும் உண்மை
      இருக்கிறது.

      சல்மானின் ‘பல்டி’யை
      விரைவில் காணலாம் என்றே தோன்றுகிறது..!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.