“சோனியா அம்மன்” புகைப்படம்…!

இது செய்தி மட்டுமே… !

ஹைதராபாத் – பெங்களூரு நெடுஞ்சாலையில்
“சோனியா காந்தி சாந்தி வனம்” என்ற பெயரில்
காங்கிரஸ் தலைவி திருமதி சோனியா காந்திக்கு
ஒரு கோயில் எழுப்பப்பட்டிருக்கிறது.

இதில் ஈடுபட்டிருப்பவர் சங்கர் ராவ் என்கிற
தெலங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ்காரர்.
தெலங்கானா மாநிலம் உருவாக வரம்
கொடுத்தமைக்காக,
“அன்னை”யை தெய்வமாக்கி, கோயிலும் எழுப்பி
இருக்கிறார் இந்த மனிதர். 9 அடி உயரம் கொண்ட
இந்த சிலையை உருவாக்க 500 கிலோ வெள்ளி
பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம்..!

-கீழே இருப்பது தான் –
“சோனியா அம்மன்” புகைப்படம் ..!

sonia amman temple

பின்குறிப்பு –
இந்த சங்கர் ராவ் போன்ற மனிதர்களை எப்படி
கௌரவிக்கலாம் என்பது குறித்து உருப்படியான
யோசனைகள் பின்னூட்டங்களில்
வரவேற்கப்படுகின்றன …!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to “சோனியா அம்மன்” புகைப்படம்…!

  1. Siva's avatar Siva சொல்கிறார்:

    Option 1 – Identify these kind of Loyal Persons towards the family and handover the Government to them and ask them to do good to people as they are doing now. All the people other than these loyal persons should move out of India and settle in other countries as slaves.
    Option 2 – Make them to stand in Srilanka and Pakistan Border and ask their country’s President to place a shawl on them and give them mukthi

  2. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    ஷங்கர் ராவை கௌரவிப்பதற்கு முன், அம்மன் கையில் என்ன அது, ஹல்வாவா அல்லது லட்டா?
    முதலில் தமிழர்களுக்கு ஹல்வா கொடுத்தாச்சு,
    அடுத்து இப்போ தெலுங்கருக்கு லட்டா?
    ஷங்கர் ராவுக்கு தெலுங்கானாவில் ஒரு எம்பி சீட் கன்ஃபர்ம்.
    டாக்டரை கொண்டு போய் மெண்டல் ஹாஸ்பிடலில் சேர்க்கவேண்டியதுதான்!

  3. ravikumar's avatar ravikumar சொல்கிறார்:

    Congress has to be defeated for the sake of mass killing of tamils in srilanka

  4. m.Jeyasingham's avatar m.Jeyasingham சொல்கிறார்:

    அண்ணே சோனியா அம்மன் கையில ஒரு நூறு டொலர் ஒண்ணு வைச்சா ரொம்ப ஜோரா இருக்கும்.(அவங்க பணக்கார அம்மன்)

  5. mahalakshmivijayan's avatar mahalakshmivijayan சொல்கிறார்:

    பணத்தை வைத்து கொண்டு என்ன செய்ய என்று தெரியாமல் முழிப்பவர் போல!

  6. GOPALASAMY's avatar GOPALASAMY சொல்கிறார்:

    500 kg silver costs more than two crores. from where he got the amount. first, I.T dept should enquire this.

  7. k. gopaalan's avatar k. gopaalan சொல்கிறார்:

    சங்கர ராவ் BJP காரங்களுக்கு வெச்சாரு பாரு ஆப்பு.

    இன்னமே யாராவது சோனியா இத்தாலியப் பெண்மணி அவ்ங்க பிரதமர் ஆக அனுமதிக்க மாட்டோம்ன்னு சொல்ல முடியுமா.

    ஒரு புதிய செய்தி : தமது தமிழக அதிமுக காரர்கள் ஒரு தெலுங்கன் நம்மளை முந்திட்டானே அப்டீன்னு கடுப்புல இருக்காங்க.

    கே. கோபாலன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.