ஸ்கூட்டரில் போன 6 கோடி ரூபாய் ஆப்பிள்..!!!

இந்த நாட்டில் விவசாயத்தின் மூலம் கிடைக்கும்
வருமானத்திற்கு வருமான வரி கிடையாது. தனக்கு
கிடைத்த லஞ்சப்பணத்தை /கருப்பை வெள்ளையாக்க
இந்த சலுகையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்
– 3 முறை முதலமைச்சராகவும், 2 முறை மத்திய
அமைச்சராகவும் இருந்த ஒருவர்.

2009-10, 2010-11, 2011-12 ஆகிய மூன்று
ஆண்டுகளுக்கு தான் ஏற்கெனவே சமர்ப்பித்த வருமான
வரி கணக்குக்கு 2013ஆம் ஆண்டில் திருத்தம்
சமர்ப்பிக்கிறார். இந்த மூன்று ஆண்டுகளில் தனக்கு
விவசாயத்தின் மூலம் மொத்தம் 6.56 கோடி ரூபாய்
வருமானம் வந்ததாகவும், வரி கட்ட வேண்டியிராத
கணக்கில் இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்
என்றும் கூறி.

இதற்கான நியாயங்களையும்,
காரணங்களையும் எப்படிக் கூறி இருக்கிறார்
தெரியுமா ?

இவருக்கு 95 ஏக்கர் நிலத்தில் இருக்கும் ஆப்பிள்
தோட்டங்களில் விளைந்த ஆப்பிள்களை விற்றதன்
மூலம் கிடைத்த பணம் இது. இந்த தோட்டங்களை
நிர்வகிக்கும் பொறுப்பை (லீஸ்..)ஆனந்த் சௌஹான்
என்கிற ஏஜென்டிடம் கொடுத்திருந்ததாகவும், அவர்
மூலம் தாமதமாக இந்த பணம் கிடைத்ததால், முந்திய
கணக்கு அறிக்கைகளில் இந்த வருமானத்தைக் காட்ட
முடியவில்லை என்றும் காரணம் கூறி இருக்கிறார்.

இது எந்த அளவிற்கு உண்மை என்று கண்டறிய
ஒரு செய்தி நிறுவனம் முயற்சி செய்திருக்கிறது.

அந்த ஏஜென்டிடம் பேசி அறிய அவர்கள்
முயற்சி செய்தது பலன் அளிக்காமல் போகவே,
அவர்கள் யாருக்கு ஆப்பிளை விற்றதாக
ஆவணங்களில் சொல்லி இருக்கிறார்களோ,
அந்த நிறுவனத்திற்கே ( Universal Apple
Associate in Parwanoo)
நேரில் சென்று விசாரித்திருக்கிறார்கள்.

ஆப்பிளை வாங்கிய அந்த நிறுவனம் வைத்திருக்கும்
ஆவணங்களையும் நேரடியாகப் பார்த்திருக்கிறார்கள்.
6 கோடி ரூபாய் பெறுமானமுள்ள ஆப்பிள்கள் அந்த
நிறுவனத்திற்கு வந்து சேர்ந்த விதம் அதில் பதிவு
செய்யப்பட்டிருக்கிறது.

மொத்த ஆப்பிளும் – 18 வாகனங்களில் கொண்டு
வரப்பட்டதாகப் பதிவு பண்ணப்பட்டிருக்கிறது..!!

அந்த வாகனங்களின் எண்களைத் தேடி எடுத்து,
விசாரித்ததில் – 18-ல் ஒரு வாகனம்
ஆயில் டேங்கர் என்றும், 2 வாகனங்கள் ஸ்கூட்டர்கள்
என்றும் தெரிய வந்திருக்கிறது…!இன்னொரு நம்பர்
போலி – அதாவது அந்த எண் எந்த வாகனத்திற்கும்
RTO-வால் கொடுக்கப்படவில்லை.. !

ஆக – இது தான் இவர் 6.56 கோடி ரூபாய்க்கு
ஆப்பிள் விற்ற லட்சணம்..! இது எந்த அளவிற்கு
நிஜமாக இருக்க முடியும் என்பதை இதைப்படிக்கும்
யாரும் யூகித்துக் கொள்ள முடியும்.

இது வாங்கிய லஞ்சப் பணத்தை வெள்ளையாக
கணக்கிற்கு கொண்டு வந்த விதம்.

அந்த லஞ்சப் பணம் எப்படி வந்தது – யாரால்
எப்போது கொடுக்கப்பட்டது ? எந்த தொழிலதிபரால்
எந்த காண்ட்ராக்டு முறைகேடுகளை கண்டுகொள்ளாமல்
இருப்பதற்காக கொடுக்கப்பட்டது – என்பதை எல்லாம்
இனி தான் விசாரித்தறிய வேண்டும்…!

சரி – ஆசாமி யார் என்கிறீர்களா ?
79 வயதுப் பெரியவர் –
ஹிமாசல பிரதேசத்தின் காங்கிரஸ் முதல்வர் ..!
மாண்பு மிகு வீர் பத்ர சிங் அவர்கள்…!

Virbhadra_Singh

சென்ற அக்டோபர் மாதத்தில் நான் ஹிமாசல்
பிரதேசத்திற்கு சென்றிருந்தபோது, இந்த ஆசாமி
ஒரு தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்ததை
நேரில் பார்த்தேன் /கேட்டேன். மக்கள் மிகுந்த
பயபக்தியுடன், பரவசத்துடன்  இவர் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
பாவம் – ஹிமாசல் பிரதேச மக்களில் 95 சதவீதம்
பேர் ஒன்றுமே தெரியாத அப்பாவிகள் – வெள்ளை மனசுக்காரர்கள்.
மீதி 5 சதவீதம் பேர் –  -கொள்ளை மனசுக்காரர்கள். இமயத்தின்வளங்களை கொள்ளை அடிக்கும்   இவரைப் போன்ற அரசியல்வாதிகளும், தொழிலதிபர்களும்…!

இவர் மீதான லஞ்சப்புகாரை 800 பக்க ஆவணங்களுடன்
ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி
சில நாட்களுக்கு முன்னர் மவுன சாமியாருக்கு அனுப்பி
வைத்திருந்தார்.

பிரதமரின் செய்தியாளர் சந்திப்பில், ஒரு நிருபர்
இதைப்பற்றி கேட்டபோது, தான் இது குறித்து
இன்னும் கவனம் செலுத்தவில்லை என்று
ஒரே வரியில் பதில் கொடுத்து விட்டு போய்விட்டார்
மவுன சாமியார். அவரென்ன செய்ய முடியும் ?
“அன்னை”யும் “பிள்ளை”யும் என்ன செய்ய வேண்டும்
என்று உத்தரவு கொடுத்தால் தானே இவர் எதுவும்
செய்ய முடியும் ..?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to ஸ்கூட்டரில் போன 6 கோடி ரூபாய் ஆப்பிள்..!!!

  1. Srini's avatar Srini சொல்கிறார்:

    aiyyo aiyyo…. nethu pulla kadhai… ennaiku apple kadhaya….. sir…. enga irundhu news pidikiringo?? 🙂

    all the best

    srini

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி ஸ்ரீநி.

      சசி தரூர், வீர் பத்ர சிங்
      போன்ற ஆசாமிகளுக்கு தகுந்த
      விளம்பரம் கொடுத்தே ஆக வேண்டும்
      என்று தான்
      தேடித் தேடிப்பிடிக்கிறேன்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  2. நல்லாயிருக்கு லட்சணம்… பாவிகளா…!

  3. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
    நண்பர்கள் படித்து பார்க்க வேண்டுகிறேன்.
    நன்றி திரு காவிரி மைந்தன்.

  4. தக்குடு's avatar தக்குடு சொல்கிறார்:

    ஆயில் டேங்கர்ல ஆப்பிள் சப்ளை பண்ணியே 6 கோடி ரூபாய் வருமானம்னு நினைச்சா அப்பிடியே புல்லரிக்குது சார்! 🙂 வருமானவரித்துறை மேதாவிகள் இதை பத்தி எல்லாம் விசாரிக்கவே மாட்டாங்களா?? 😦

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      வருக தக்குடு..!

      வருமான வரித்துறை இப்போது தான் விசாரணையை
      துவக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறது..!
      இன்னும்”மேலிடம்”உத்திரவு கொடுக்கவில்லையே !

      நண்பர் தக்குடு,

      உங்கள் வலைத்தளத்தை இவ்வளவு நாட்களாக
      நான் எப்படி பார்க்கத் தவறினேன் என்றே
      தெரியவில்லை – நன்றாக இருக்கிறது.
      நிறைய எழுத வாழ்த்துக்கள்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • தக்குடு's avatar தக்குடு சொல்கிறார்:

        உங்களோட பதிவுகள் எல்லாத்தையும் தவறாம படிச்சிருவேன். வித்தியாசமான & நடுநிலையான உங்களோட பதிவுகள் ரொம்ப பிடிக்கும். தொடர்ந்து எழுதவும்!

  5. senthilkumar's avatar senthilkumar சொல்கிறார்:

    Sir such a business, we are not able to do. really i am proud (shame) about these people.How they are thinking about public, i do not know but definitely i can say we all are foolish.I can remember madam jeya also did same once.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.