சிலரைக் கண்டாலே எரிச்சலாக இருக்கும்.
அவர்கள் பேசுவதை கேட்டாலோ மகா எரிச்சலாக
இருக்கும். இவர்கள் எல்லாம் ஏன் தான்
இந்த நாட்டில் வந்து பிறந்து தொலைத்தார்களோ
என்று இருக்கும். எப்போதும், தன்னைத்தவிர
மற்றவர்கள் அனைவரையும் மகா
முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டு பேசுவர்
இத்தகைய மனிதர்.
அத்தகைய மஹா மனிதர்களில் ஒருவர் சசிதரூர்.
ஏற்கெனவே பலதடவை உளறிக்கொட்டி
வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார் இந்த மனிதர்.
ஆனாலும் கொழுப்பு கொஞ்சமும் அடங்கவில்லை.
எப்படி அடங்கும் – அவரை மந்திரியாக வேறு ஆக்கி
அழகு பார்த்துக் கொண்டிருக்கிறாரே காங்கிரஸ்
“அன்னை” ..!
தமாஷான செய்தி தான் –
செய்தியைச் சொல்வதற்கு முன்
இவர் பின்னணி தெரியாதவர்களுக்காக –
அவரைப்பற்றிய விவரம் கொஞ்சம் –
இது வரை இவர் 3 திருமணங்களும்,
2 விவாகரத்துகளும் (!!)செய்து கொண்டிருக்கிறார்..!
முதல் மனைவி கல்கத்தாவைச் சேர்ந்த திருமதி
திலோத்தமா முகர்ஜி. அவரை விவாகரத்து செய்தபின்
மணந்த 2வது மனைவி கனடா நாட்டைச்சேர்ந்த
திருமதி கிறிஸ்டா. அவரையும் விவாகரத்து செய்தபின்
மணந்துள்ள தற்போதைய -3வது மனைவி
திருமதி சுனந்தா.
திருமதி சுனந்தாவிற்கு இது 2வது திருமணம்.
சசியின் முதல் மனைவிக்கு பிறந்த 2 மகன்களும்,
திருமதி சுனந்தாவின் முதல் கணவருக்குப் பிறந்த
ஒரு மகனும் ஆக மொத்தம் 3 பிள்ளைகளும்
இவர்களுடன வசித்து வருகிறார்கள் –
ஆங்கிலத்தில் வரும் சொற்றொடர் –
your children and my children are
playing with our children – க்கு
எடுத்துக்காட்டாக..!
சில நாட்கள் முன்னர் தான் மீடியாவில்
ஒரு செய்தி வந்தது.
இந்த ஆசாமியும், அவரது மனைவியும் நெருக்கமாக
அணைத்தபடி இருக்கும் ஒரு புகைப்படத்தை
அமைச்சர் தன் அலுவலக அறையில் மேஜையின் மேல்
பார்வையாக வைத்திருக்கிறாராம்.
சிலர் “என்ன இப்படி” என்று கேட்டதற்கு,
“என் மனைவியுடன் தானே இருக்கிறேன். இதில்
என்ன தவறு ?” என்றாராம் !
அவர் விருப்பம் அதுவானால்
நாம் என்ன செய்யட்டும் -அப்படியே இருக்கட்டும் ..!

இப்போது விஷயத்துக்கு வருவோம் –
புத்தாண்டு தினத்தன்று (01/01/2014)
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி –
“கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஒருவர்
ஐக்கிய அரபுக் குடியரசில் போதை மருந்து வழக்கு
ஒன்றில் சிக்கி சிறை சென்ற தன் மகனை
தன் பதவியை தவறாகப் பயன்படுத்தி வெளியே
கொண்டு வந்திருக்கிறார்”
-என்று ட்விட்டரில் எழுதி இருக்கிறார்.
உடனே மலையாளச் சேனல்கள்,கேரளாவைச் சேர்ந்த
மத்திய அமைச்சர் யார் யாருக்கு வயதுக்கு வந்த
மகன்கள் இருக்கிறார்கள் –
அதில் யார் UAE-ல் இருக்க
வாய்ப்பு இருக்கிறது என்றெல்லாம் ஆராய்ச்சியில்
இறங்கி மறைமுகமாக சசி தரூரின் பெயரை
உச்சரித்திருக்கின்றன..!
பரபரப்பு பிய்த்துக்கொள்ள – திருவனந்தபுரம் விமான
நிலையம் வந்த சசியை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு
கேள்விகளை வீசியிருக்கின்றனர்.
அதற்குத்தான் சசி அலறி இருக்கிறார்.
“என் மகன்கள் இந்த வழக்கில் இல்லை. யாரையும்
காக்க நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
தேர்தல் நேரம் நெருங்குவதால் சுவாமி வேண்டுமென்றே
என் மீது பழியைப் போடுகிறார்” என்று.
சுவாமி சொன்னதில் உண்மை எதுவோ –
பொய் எந்த அளவோ –
நாமறியோம் பராபரமே ! ஆனால் இந்த ஆசாமிக்கு
இதெல்லாம் தேவை தான். இது நிஜமாகவே இருந்தால்
இன்னும் சந்தோஷமே …!!
—————————–
பகுதி-2
இப்போது கிடைத்துள்ள தகவல் –
டாக்டர் சுப்ரமணியன் சுவாமி விடாது கருப்பு என்று
விடாமல் மீண்டும் ஒரு ட்விட்டர் கேள்வி
எழுப்பி இருக்கிறார் –
“சொந்த மகன் இல்லையென்றால் –
மனைவியின் மகனுக்கும் பொருந்தலாமே” ..என்று !
அதற்கு சசியின் உடனடி பதில் –
“என் 2 பிள்ளைகளும் இப்போது
அமெரிக்காவில் இருக்கிறார்கள்.
சுனந்தாவின் பிள்ளை தான் UAE-ல் இருக்கிறான்.
ஆனால் அவன் எந்த வழக்கிலும் சிக்கவில்லை.
சிறைக்கு போகவுமில்லை ”
டாக்டர் சுவாமி, தரூர் போன்றவர்களால் தான்
அரசியல் ஓரளவாவது நகைச்சுவையுடன் மிளிர்கிறது…




எந்த விதை எங்கே விதைஞ்சி எப்படி மொளைக்குமோ, யாம் அறிவோம் பராபரமே!
தன் மனைவியின் பிள்ளை என கூறி இருக்க வேண்டும்.
Congress has to be defeated for the sake of mass killing of tamils in srilanka