இதென்ன வழ வழா- கொழ கொழா ? தமிழக பாஜக தலைவர்கள் விளக்க வேண்டும் ….

இதென்ன வழ வழா- கொழ கொழா ?
தமிழக பாஜக தலைவர்கள் விளக்க வேண்டும் ….
————
இன்று வெளியாகியுள்ள செய்தி கீழே –

venkaiya naidu

நான்கு முறை படித்தும் திரு வெங்கையா நாயுடு
என்ன சொல்ல வருகிறார் என்பது புரியவில்லை !

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இலங்கைப்
பிரச்சினையில் மாற்றம் வரும் என்று நம்பிக்
கொண்டிருக்கையில் இப்படியும் இல்லை அப்படியும்
இல்லை என்று இது என்ன பேச்சு …?

இது தான் பாஜகவின் கொள்கை நிலையா ?
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள
வேண்டும் என்பதைத் தான் தமிழக பாஜக வும்
சொல்லி வருகிறதா ?

தமிழக பாஜக தலைவர்கள் விளக்குவார்களா ?
———–
செய்தி-

காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்டால்தான் மத்திய
அரசின் கருத்தை தெரிவிக்க முடியும் என்று பாரதிய ஜனதா
கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறினார்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான வெங்கையா
நாயுடு எம்.பி., சென்னையில் தியாகராயநகரில் உள்ள
கட்சியின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில்
நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா
கலந்துகொள்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முதலில்,
தங்களது கூட்டணி கட்சிகளின் நிலையை காங்கிரஸ் கட்சி
அறிந்துகொள்ள வேண்டும்.

மேலும், தமிழர்களின் உணர்வுகளை கருத்தில் கொள்வதுடன்,
அண்டை நாட்டுடனான கொள்கைகளையும் மனதில் வைத்து
முடிவு எடுக்க வேண்டும்.

இதுபோன்ற மாநாடுகளில் கலந்துகொண்டால்தான் மத்திய
அரசின் கருத்தை தெரிவிக்க முடியும். இலங்கையில் 13-வது
அரசியல் சட்டத் திருத்தத்தையும் நிறைவேற்ற வலியுறுத்த
முடியும். இலங்கையில் மனித உரிமை மீறல் நடந்தது
உண்மைதான். அதுகுறித்து விசாரணை நடத்துவது அந்நாட்டின்
கடமை ஆகும்.

(http://www.adaderana.lk/tamil/news.php?
nid=47129)

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to இதென்ன வழ வழா- கொழ கொழா ? தமிழக பாஜக தலைவர்கள் விளக்க வேண்டும் ….

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    உங்களுக்கு ரொம்பத்தான் பேராசை காவிரி சார்.
    வெங்காய நாயுடுவும் சரி, மோடி மஸ்தானும் சரி, மண்ணுமோகனும் சரி, அந்த ராகுகாலமும் சரி…. எல்லோருமே அரசியல்வாதிகள்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
    அவர்கள் தங்களை எதிலும் சிக்கிக்கொள்ளாமல் இருக்கவே பார்ப்பார்கள்.
    மோடி திருச்சி வந்தார், சென்னை வந்தார். ஒரு பிரதம வேட்பாளர் அதுவும் பிரகாசமான எதிர்காலம் காட்டக்கூடியவர்…
    தமிழக பிரச்சனைகளில் எதைப்பற்றி பேசினார்?
    காவிரி பிரச்சனையில் எந்த முடிவு?
    தமிழக மீனவர் பிரச்சனையில் என்ன முடிவு?
    இலங்கைத்தமிழர் விஷயத்தில் எந்த மாதிரி நடவடிக்கை?
    சேது சமூத்திர திட்டம் என்னவாகும்?
    எதை பற்றியும் திட்டவட்டமாக எதையும் கூறவில்லை.
    நீங்க என்னடான்னா நாயுடு… வழவழா… கொழ கொழா…ன்னு தலைப்பு வைக்கறீங்க.
    போன முறை ஆட்சியில் இருந்தப்போ ராமர் கோயிலையே கட்ட முடியாதவர்களால் (ஆட்சிக்கு வந்ததே அப்படிச்சொல்லித்தானே!) என்னத்த சொல்லமுடியும் அல்லது செய்ய முடியும் சொல்லுங்க!
    அரசியல் வேறு… ஆட்சி வேறு!
    நாமதான் புரிஞ்சுக்காம இருக்கிறோம்.
    இதை நான் சொன்னா முஸ்லீமல்லாதவர்கள் என்னை தீவிரவாதி என்றும் இஸ்லாமியர்கள் என்னை முஸ்லீமே அல்ல என்றும் ஃபத்வா கொடுக்கின்றனர்.

  2. எழில்'s avatar எழில் சொல்கிறார்:

    தற்போது மோடியின் வெளிவிவகாரங்களுக்கு ஆலோசகராக அறியப்படும் சுப்பிரமணிய சுவாமியின் இலங்கை நாளிதழுக்கான பேட்டி:

    http://www.thesundayleader.lk/2013/11/03/india-must-ignore-lttes-financial-orphans-dr-subramanium-swamy/

  3. reader's avatar reader சொல்கிறார்:

    காங்கிரசோ, பாஜகாவோ எந்தக் கட்சியானாலும் தமிழர்களுக்கும், ஈழ மக்களுக்கும் சாத்துவது நாமம்தான். 2004 வரை இருந்த பாஜக ஆட்சியில் புலிகளுக்கு எந்த ஆதரவும் கிடைத்ததில்லை. ஏன் சமீப காலங்களில் கூட சுஷ்மாவும், சுவாமியும் ராஜபக்சேவிடன் குலாவித்தான் வருகிறார்கள்.

    இரு கட்சிகளுடன் சேர்ந்து அதிகார(ரி)வர்க்கமும் தமிழர்களை எமோஷனல் இடியட்ஸ் ஆகத்தான் கருதுகிறார்கள். இந்த எண்ணப்போக்குக்கு அடித்தளம் எங்குள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.

  4. ராஜகோபாலன்.R.'s avatar ராஜகோபாலன்.R. சொல்கிறார்:

    திரு. காவிரிமைந்தன்,

    இன்று செய்தியாளர் சந்திப்பில் தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கீழ்க்கண்டவாறு பேசி இருக்கிறார்;

    “காமன்வெல்த் அமைப்பில் இருந்து 2 ஆண்டுகளுக்கு இந்தியா விலகி இருக்க வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

    சென்னையில் நடக்கும் பாஜக மாநில நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

    காமன்வெல்த் மாநாட்டினை இலங்கையில் நடத்தக் கூடாது. அங்கு நடத்தப்படுவதை தடுக்கப்பட வேண்டும். இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதை பாஜக எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என்பதே தமிழக பாஜகவின் விருப்பம். இதனை வலியுறுத்த எனது தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு டெல்லி செல்ல உள்ளோம்.”

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      காலம் கடந்த செயல்.

      இனிமேல் தான் இவர்கள் பாஜக தலைமையுடனேயே
      இது குறித்து பேசப்போகிறார்களாம் !

      பொன்.ராதாகிருஷ்ணனை பக்கத்தில்
      வைத்துக்கொண்டே தான் வெங்கையா நாயுடு
      மேற்கண்ட பேட்டியை அளித்தார். அந்த
      பேட்டிக்கு முன்னதாகவாவது இவர்கள் நாயுடுவுடன்
      பேசி இருக்க வேண்டாமா ?

      எப்போதோ பாஜக தலைமையுடன் பேசி
      முடிவெடுக்க வைத்திருக்க வேண்டும்.நேற்றிரவு கூட
      டெல்லி சேனலில் செய்தி வந்தது. பிரதமர் இலங்கை
      செல்வதில் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை
      என்று பாஜக தலைமை கூறி இருக்கிறது.

      இவர்கள் எல்லாம் இங்கே வாய் கிழியப்
      பேசுவதோடு சரி. குண்டுச் சட்டியிலேயே குதிரை
      ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில்
      வைகோவுடன் கூட்டு வைக்க வேறு ஆசை …

      செய்திக்கு நன்றி நண்பரே.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.