திறமையான வக்கீல் – அற்புதமான கேள்விகள்..
ஆனாலும் படுமுட்டாள்தனம் ….!!
——
இன்று மாலை மத்திய அரசின் தகவல்தொடர்பு துறை
அமைச்சரும் புகழ்பெற்ற வக்கீலுமான …..
புரியாது …!
ஜீரோ லாஸ் என்றால் சுலபமாகப் புரியும்….
திருவாளர் கபில் சிபல் செய்தியாளர்களிடம்
பேசும்போது ஆவேசமாகக் கேட்கிறார் –
“நான் நரேந்திர மோடியைக் கேட்கிறேன் –
1) அவர் ஏன் பத்திரிகையாளர் சந்திப்பிற்கு
ஏற்பாடு செய்ய மாட்டேனென்கிறார் ?
பொதுக்கூட்டத்தில் மட்டும் பேசினால் தான் சொல்ல
நினைப்பதை மட்டும் சொல்லி விட்டு போய்க்கொண்டே
இருக்கலாம் – எதற்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம்
இருக்காது என்பதாலா ?
2) நான் அவருக்கு ஒரு சவால் விடுகிறேன்.
எந்த தேதியில் வேண்டுமானாலும்,
எந்த இடத்தில் வேண்டுமானாலும்,
எந்த விஷயம் குறித்து வேண்டுமானாலும்,
எந்தவொரு கேள்விக்கு வேண்டுமானாலும்,
பதில் கொடுக்கவும், விவாதத்திற்கும் நான் ரெடி.
நீங்களே தேதியையும், இடத்தையும் சொல்லுங்கள்.
சவால் விடுக்கிறேன் – விவாதத்திற்குத் தயாரா ?
எவ்வளவு தான் புத்திசாலியாக இருந்தாலும்,
சிலர் ஆத்திரத்தில் யோசிக்காமல் பேசி விடுகிறார்கள்…!
கொஞ்சம் கூட மாற்றாமல் –
இதே கேள்வியை –
பட்டத்து பிரதமர் ராகுல் காந்தி,
சட்டப்படி பிரதமர் ம.மோ.சிங்,
ஒரிஜினல் பிரதமர் திருமதி சோனியா காந்தி
ஆகியோரில் யாரிடமாவது,
நரேந்திர மோடி கேட்டால்
சவாலை ஏற்றுக் கொண்டு தேதி குறிப்பார்களா …?
தாங்குவார்களா இவர்கள் …. ?
தெரியாமலா சொன்னார்கள் –
‘ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு’ என்று ..!




super
your “pattathu”, “sattathu”, original” – super…..
paapuvin thiraimayku, ajay makkan patta avamanam ondru podhum. aanalum, sorani ketta janmangal, they don’t care for the damn thing…..
and modi should not discuss with kapi sibal because kapil is a just a cabinet minister, modi is prospective PM candidate, he has to go for discussion only with congress PM nominee if they have a declared one. meenkashi leki is more than enough to answer kapil
if we go to twitter and type the handle #idiotkapil,/ #idiotsibal then we can see how popular he is in the virtual world.