நேர்மையாக இருந்தால் துன்பம் தானா ?

நேர்மையாக இருந்தால் துன்பம் தானா ?

thiru sagayam
பொது வாழ்வில் தூய்மையும், பணியிடத்தில் நேர்மையும்
இருந்தால் தான் – சமுதாயம் உருப்படும்; மக்கள் நலமுடன்
வாழ முடியும் ; இந்த நாடு முன்னேறும் –
பொது நலத்தில் அக்கரையுடைய ஒவ்வொருவரின்
சிந்தனையும் இதே தான்.

இதைச் செயல்வடிவத்தில் கொண்டு வருவது எப்படி ?
மனசாட்சிக்கு பயந்து ஒருவர் நேர்மையாக நடந்து
கொண்டால் சரி. ஆனால் மனசாட்சியே இல்லாத
மனிதர்களை வழிக்கு கொண்டு வருவது எப்படி ?

நேர்மையான மனிதர்களை ஊரறிய,
உலகறிய உயர்த்துவதும்,
அல்லாதவர்களின் செயல்களை அம்பலப்படுத்துவதன்
மூலமும் தான் …!

சமுதாயத்தில் அக்கரை கொண்டவர்கள் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு விதத்தில் இந்த குறிக்கோளை நோக்கிப்
பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.அதிக அளவிலான
மக்கள் இந்த முயற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டால் தான்
நம்மிடையே ஊழலற்ற சமுதாயம் உருவாகும்.

சென்னையில் -ஊழலுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக்
குழு என்கிற தனியார் அமைப்பு வெளியிட்டிருக்கும்
அறிவிப்பு இது –
“தமிழ்நாட்டில் லஞ்ச ஊழல் புகாரில் ஒரு மாநில அரசு
ஊழியர் கைது செய்யப்படும்போது, அவரைப் பற்றிப்
புகார் செய்த பொது நபருக்கு எந்த நிபந்தனையும்
இல்லாமல் ஒருலட்சம் ரூபாய் வழங்கப்படும்!”

வெறும் அறிவிப்பாக மட்டும் அல்லாமல், அப்படிப் புகார்
செய்த பத்து பேருக்கு 10 லட்சத்தை வழங்கியும்
இருக்கிறது இந்த அமைப்பு. அந்த பரிசளிப்பு விழாவில் –

“இப்போது நாங்கள் கொடுத்திருக்கும் 10 லட்சம்
ரூபாய் தமிழகத்தின் மீது அக்கறை கொண்ட அமைப்புகள்
மூலம் திரட்டப்பட்டது. எங்கள் அமைப்பு மூலம்
10 கோடி ரூபாய் வரை திரட்டி, எதிர்காலத்தில்
ஊழலை அம்பலப்படுத்துபவர்களுக்கு வழங்கத்
திட்டமிட்டுள்ளோம்” – என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திரு சகாயம், ஐ.ஏ.எஸ். அவர்கள்
– தமிழகம் முழுதும் நன்கு அறியப்பட்ட ஒரு அரசு
அதிகாரி. இந்த விழாவில் கலந்து கொண்டு அவர்
பேசும்போது – ஊழலுக்கு எதிரான போராட்டத்தில்
ஒரு வித்தியாசமான கோணத்தை முன் நிறுத்தி
இருக்கிறார்.

அவரது உரையிலிருந்து ஒரு பகுதி –

“என்னுடைய 21 ஆண்டுக்கால அரசுப்பணியில்
20 இடங்களுக்கு மாற்றலாகி இருக்கிறேன்.
அது எனக்கு மகிழ்ச்சியே.

ஊழலற்றவன் என்கிற அடையாளத்துடன்
என்னைப் பார்ப்பதை விட,
ஊழலை எதிப்பவன் என்கிற அடையாளத்துடன்
என்னைப் பாருங்கள். அது தான் எனக்குப் பெருமை !

மதுரை கலெக்டராக இருந்த என்னை சென்னைக்கு
மாற்றினார்கள். அப்போது என் மகன் பத்தாம் வகுப்பு
படித்துக் கொண்டிருந்தான். அதனால் என் குடும்பம்
மதுரையிலும், நான் சென்னையிலும் இருந்தேன்.
வாரா வாரம் நான் மதுரைக்குச் சென்று அவர்களைப்
பார்த்து வந்தேன்.

அப்போது என் மகனிடம் –
“நீ நன்றாகப் படிக்க வேண்டும்.
அப்பா உனக்காகத்தான் கஷ்டப்படுகிறேன்” என்று
சொல்வேன். அதற்கு என் மகன் –

“நன்றாக யோசித்துப்பாருங்கள் அப்பா..
எனக்காக நீங்கள் கஷ்டப்படுகிறீர்களா
அல்லது உங்கள் கொள்கைக்காக – நாங்கள்
கஷ்டப்படுகிறோமா ?”
என்று கேட்டான் !
என்னுடைய நேர்மைக்காக என் குடும்பம் கஷ்டப்படுகிறது
உண்மை தான். அந்த நேர்மைக்கு உறுதுணையாக
இருப்பதும் என் குடும்பம்தான் “

உண்மை தான். பெரும்பாலும் –
நேர்மைக்கு போராடுபவர்களோடு சேர்ந்து அவர்களது
குடும்பத்தினரும் கஷ்டப்படுவது உண்மை தான்.

ஆனால் – நேர்மையான மனிதர்களுக்கு கிடைக்கும்
மன நிம்மதியும், சந்தோஷமும் – சமுதாயத்தில்
அவர்களுக்கு கிட்டும் மரியாதையும்
எத்தைனை பணம் கொடுத்தாலும் மற்றவர்களுக்கு
கிடைக்காது என்பதும் உண்மையே !

இந்த செய்திக்கும், நிகழ்ச்சிக்கும் உரிய முறையில்
விளம்பரம் கிடைக்கவில்லை. இத்தகைய செய்திகள்
அதிக அளவிலான மக்களிடம் போய்ச்சேர வேண்டும்.

என்னாலானது இந்த இடுகை.

இந்த செய்தி அதிக அளவில் பரவ உதவுமாறு
நண்பர்களை வேண்டுகிறேன்.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to நேர்மையாக இருந்தால் துன்பம் தானா ?

  1. பகிர்ந்து கொண்டேன்… எனது வட்டத்தில் g+… நன்றி…

  2. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    எத்தனையோ லட்ச தறிக்கூட மக்களுக்கு இந்த தீபாவளி சிறப்பான பண்டிகையாக வந்துருக்குமே அதற்கு ஈடு இணை ஏது? அதுவே போதுமே?

  3. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    வேஷ்டி தினம் என்று ஒன்றை உருவாக்கி கைத்தறி வேஷ்டிகளை மார்க்கெட்டிங் செய்கிறவர்!
    NIFT (national institute of fashion technology) எனும் மத்திய அரசு நிறுவனத்தில் ஒரு லட்சம் டிஸைன் வாங்கி அதை இந்த தீபாவளிக்கு கோ-ஆப்டெக்ஸ் மூலம் பட்டுப்புடவைகளை தயார் செய்து அதிலும் நவீனத்தை புகுத்தி (உங்களின் திருவுருவப்படமும் பொரித்து!) மார்க்கெட்டிங் செய்கிறார்!

    இதுபோல உள்ளவர்களை நாம் எள்ளி நகைக்காமல் (பிழைக்கத்தெரியாதவன்!!) இப்படி ஒரு அங்கிகாரம் கொடுப்பேமேயானால் அதுவே அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய உற்சாகமாக இருக்கும். அதனால் அடுத்த தலைமுறையாவது மாறுவதற்கு வாய்ப்புண்டாகும்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர்களே –
      இதைப் போன்ற value addition-களை
      எதிர்பார்த்து தான் நான் இந்த தளத்தில் எழுதுகிறேன்.
      இவை இடுகைக்கு கூடுதல் பலம் கிடைக்க
      உதவுகின்றன.

      நேர்மையாக இருப்பதால் –
      ரொம்ப நாள் வரை – வருவது துன்பம் தான்.
      தாங்க வேண்டும். தொடர்ந்து தாங்க வேண்டும்.
      மற்றவர்கள் புரிந்து கொள்ளும் வரை
      பொறுமையாகத் தொடர வேண்டும்.
      என்றோ ஒரு நாள் நிச்சயம் இதற்கு
      பலன் கிடைக்கிறது.
      40 வருட அரசுப் பணி எனக்கு அனுபவபூர்வமாக
      உணர்த்திய உண்மை இது.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  4. rathnavelnatarajan's avatar rathnavelnatarajan சொல்கிறார்:

    நேர்மைக்கு போராடுபவர்களோடு சேர்ந்து அவர்களது
    குடும்பத்தினரும் கஷ்டப்படுவது உண்மை தான்.

    ஆனால் – நேர்மையான மனிதர்களுக்கு கிடைக்கும்
    மன நிம்மதியும், சந்தோஷமும் – சமுதாயத்தில்
    அவர்களுக்கு கிட்டும் மரியாதையும்
    எத்தைனை பணம் கொடுத்தாலும் மற்றவர்களுக்கு
    கிடைக்காது என்பதும் உண்மையே ! =
    அருமையான பதிவு. நன்றி திரு காவிரி மைந்தன். என் பக்கத்தில் பகிர்கிறேன்.

  5. GANESAN V's avatar GANESAN V சொல்கிறார்:

    I share and I will try

  6. Shyam thayumanavan's avatar Shyam thayumanavan சொல்கிறார்:

    True……nallavarkal arasiyaluku vara vendum

  7. k. gopaalan's avatar k. gopaalan சொல்கிறார்:

    சகாயம் மதுரையை விட்டுச் சென்றபோது ஊரே அழுதது. இவரை அடுத்து வந்த நேர்மை மிக்க அதிரடி அன்சுல் மிச்ரா ஒரெ வருடத்தில் தூக்கி எறியப்பட்டார். அது போன்றே நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி உமா சங்கர் பலமுறை மாற்றப்பட்டிருக்கிறார்.

    தமிழகத்தில் பணம் பத்தும் செய்கிறது. ச்காயம் தமிழகத்தின் அரவிந்த் கேஜ்ரிவால் ஆக நினைத்தாலும் அது நடக்குமா. நான் கனவு காணத் தொடங்கியிருகிறேன்.

    கோபாலன்

  8. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    kaa.mai ji..
    Do you know why Mr.Rajaraman, CEO of Metro Project was shunted?(He worked here for almost five years) Kindly share with us.Thanks

  9. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    Please read “Chennai Metro rail project,,”

  10. Genes's avatar Genes சொல்கிறார்:

    Dear Kaviri,

    May I know your mail id? I will be coming to Chennai during pongal. If it is convenient for you, I wish to meet you. Please drop me few lines to genes174@yahoo.com

  11. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    திரு சகாயத்தின் இன்றைய செய்தி..
    சென்னை: மூத்த நெசவாளர்களை கவுரவிக்க, அவர்கள் நெய்த சேலைகளில், அவர்களின் புகைப்படத்தை இணைத்து, கோ ஆப்டெக்ஸ் விற்பனை செய்கிறது.
    சென்னை, தலைமைச் செயலகத்தில் உள்ள, கோஆப்டெக்ஸ் வானவில் விற்பனை நிலையத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி, புதிய ரகங்களின் அறிமுகம் மற்றும் விற்பனை, துவக்க விழா நடந்தது. கோ ஆப்டெக்ஸ் தலைவர் மனோகரன், தலைமை தாங்கினார். கைத்தறித்துறை முதன்மை செயலர் ஹர்மந்தர்சிங், இயக்குனர் பிரகாஷ் ஆகியோர், முன்னிலை வகித்தனர். அமைச்சர் சுந்தர்ராஜ், முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
    புதிய சேலைகள்:
    சரித்திரப் புகழ் பெற்ற, பாரம்பரிய சின்னங்கள், கோவில்களின், சிற்ப மற்றும் ஓவிய வேலைப்பாடுகளில் உள்ள, வடிவமைப்புகளை பயன்படுத்தி நெய்யப்பட்ட சேலைகள், கோடம்பாக்கம் சேலை, கண்டாங்கி சேலை, சின்னாளபட்டி சேலை, நெகமம் சேலை, உறையூர் சேலை, சுங்குடி சேலை, புதுமணத் தம்பதியரை கவரும் வகையில் உருவாக்கப்பட்ட, தேனிலவு படுக்கை விரிப்பு, சிறுவர்களை கவரும், குட்டீஸ் படுக்கை விரிப்பு, ஆயத்த சட்டை ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்ட
    கைத்தறி நெசவில் ஈடுபட்டுள்ள, 75 வயதிற்கு மேற்பட்ட, நெசவாளர்களின் உழைப்பை போற்றும் வகையில், அவர்கள் நெய்யும் சேலையுடன், அவர்களின் வண்ண புகைப்படம், அவர்கள் ஊர், எத்தனை ஆண்டுகளாக, நெசவுத் தொழில் செய்கின்றனர். அவர்கள் நெய்த சேலையை, உருவாக்க தேவைப்பட்ட நேரம், அதற்காக, அவர்கள் கை மற்றும் கால்களை எத்தனை முறை அசைத்தனர் என்ற விவரம், அட்டையில் அச்சிடப்பட்டு, சேலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு, பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அனைத்து சேலைகளுக்கும், ஜனவரி 31ம் தேதி வரை, 30 சதவீதம், தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. படிப்படியாக, அனைத்து சேலைகளிலும், சம்பந்தப்பட்ட நெசவாளர் விவரங்களை இணைக்க, நடவடிக்கை எடுக்கப்படுவதாக, கோஆப்டெக்ஸ் மேலாண் இயக்குனர் சகாயம் தெரிவித்தார்.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி கண்பத்.

      திரு சகாயம் தமிழக அரசில் உள்ள அனைத்து இலாக்காக்களுக்கும்,
      பணி மாற்றலில் ஒரு ரவுண்டு சென்று வர வேண்டுமென்று
      வேண்டுவோம்..!

  12. vedhag's avatar vedhag சொல்கிறார்:

    Reblogged this on vedhag's Blog.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.