பிரேசில் செய்வதை நாம் செய்ய முடியாதா ..?
———-
உலகம் முழுவதும் தகவல் தொடர்புத் துறையில்
பரிமாறப்படும் தகவல்களை ஒட்டுக்கேட்பதையும்,
ஒற்றறிவதையும், அமெரிக்கா பகிரங்கமாக
ஒப்புக் கொண்டுள்ளதையும்,
அதை நியாயப்படுத்துவதையும் சுயமரியாதையுள்ள
நாடுகள் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்?
நேற்று – இந்தியப் பிரதமர் கூட இதற்கு விதிவிலக்கல்ல
என்றும் அவரது பரிமாற்றங்கள் கூட கண்காணிப்பிலிருந்து
தப்ப வாய்ப்பில்லை என்றும் பெருமையாக அமெரிக்கா
கூறியுள்ளதை கேட்கச் சகிக்கவில்லை.
உலகிலேயே, இந்த விஷயத்தில் சுயமரியாதையை
உறுதி செய்துகொள்ளும் முதல் நாடாக பிரேசில்
தன்னை பிரகடனப்படுத்திக் கொள்கிறது.
தகவல்கள் பிரேசில் நாட்டை விட்டு வெளியே போவதை
சட்டவிரோதமாக்கும் (marco civil )
சட்டத்தை பிரேசில் அரசு வருகிற புதன்கிழமை நிறைவேற்ற
இருக்கிறது.. பிரேசிலில் சேகரிக்கப்படும்
தகவல்கள், அந்த நாட்டிலேயே தான் சேமித்து
வைக்கப்படவேண்டும் (to be stored within
the country ) என்கிற ஒரு சிக்கலற்ற,
மிகச்சிறிய சட்டத்தின் மூலம் அந்நாடு தன் பாதுகாப்பையும்,
சுயமரியாதையையும் காப்பாற்றிக் கொள்கிறது.
பிரேசில் செய்வதை இந்தியாவால் செய்ய முடியாதா ?



உப்பு போட்டு சாப்பிட வேண்டும்.
நீங்க என்ன ஒன்னாங்கிளாஸ் குழந்தையாட்டாம். உள்ளூர்ல இருக்குறவனுக்கு உதவுனா ஆயிரம் ரூபாய் கிடைக்கும்னா வெளிநாட்டுக்காரனுக்கு உதவுனா ஆயிரம் டாலர் கிடைக்கும். இதுல எது லாபம்?
கூட்டிக்கழித்து பார்க்கத் தெரிந்தால் நம்ம அரசியல்வியாதிகளைப் பற்றி புரிந்து கொண்டீர்கள் என்று அர்த்தம்.
அதுக்கு சொரணை இருக்கணும்.அது அடிமைகளுக்கு கிடையாது .