காமெடியன் -ஹீரோ வசனம் பேசினால்
எப்படி இருக்கும் ..?…. இப்படித்தானே ?
——
“அவர்கள் என் பாட்டியைக் கொன்றார்கள் “
“அவர்கள் என் தந்தையை கொன்றார்கள் “
என் கோபம் அடங்க 15 ஆண்டுகள் ஆயின.
“அவர்கள் என்னையும் கொல்லலாம் – நான்
உயிருக்கு பயந்தவன் இல்லை – எதற்கும்
தயாராகவே இருக்கிறேன் !”
பாட்டி இறந்ததற்கு காரணம் – சீக்கியர்களின் கோபம்.
விளைவு – காங்கிரஸ் வெறியர்களால் –
பழி தீர்க்கப்பட்டு – டெல்லியில்
3000 சீக்கியப் பெண்கள் விதவை ஆக்கப்பட்டார்கள்.
தந்தை இறந்ததற்கு காரணம் – இலங்கைத்
தமிழர்களின் கோபம். விளைவு – “அன்னை”யால்
ராஜபக்சேயை பயன்படுத்திக் கொண்டு –
பழி தீர்க்கப்பட்டு – 90,000 ஈழப்பெண்கள்
விதவை ஆக்கப்பட்டனர்.
இவை போதாதா ? பிள்ளை இன்னும் கோபம்
அடங்கவில்லை என்கிறதே !
ஆமாம் – பாட்டியைத் தான் அரசியல் காவு வாங்கியது.
தந்தையையும் அதே அரசியல் காவு வாங்கியது.
பின்னரும், அன்னையும் பிள்ளையும் அரசியல்
அதிகாரத்திற்காக இப்படி அலைவது ஏன் ?
பிழைப்பதற்கு வேறு வழியா இல்லை ?
ஏற்கெனவே சேர்த்திருக்கும் சொத்தே
100 தலைமுறைகளுக்கு உட்கார்ந்து சாப்பிடப் போதுமே !
———-
தமிழ்நாட்டில் ஏற்கெனவே ஏகப்பட்ட காமெடியன்கள்
இருப்பதாலோ என்னவோ, பிள்ளையை இங்கு யாரும்
சீரியஸாகவே எடுத்துக் கொள்வதில்லை !
ஆனால் – வடக்கே – பிள்ளை – கார்டூனிஸ்டுகளுக்குச்
செல்லப்பிள்ளை. “பப்பு”,”பப்பு” என்று அவரை
வைத்து ஏகப்பட்ட கார்டூன்கள்.
நக்கலுக்கும், கிண்டலுக்கும் பெயர் பெற்றவர்
ராகேஷ் ஜூன் ஜூன் வாலா. சொல்ல வேண்டியதை
எல்லாம் சொல்லி விட்டு, நான் நகைச்சுவைக்காகச்
சொல்வதை யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம்
என்று கூறி விடுவார். நாமும் அதையே வழிமொழிகிறோம்.
இங்கு கூறப்படுவதெல்லாம் நகைச்சுவைக்காகவே !
யாரையும் புண்படுத்தும் நோக்கம் நமக்கு
(அ ?)சத்தியமாக இல்லை !!
ஜூன் ஜூன் வாலாவின் சில கார்ட்டூன்
புகைப்படங்கள் நீங்கள் ரசிப்பதற்காக – கீழே –







ஹா… ஹா… ரசித்தேன்…
எதுக்கு பச்சபுள்ளய (40 வயதுதான்) கொன்ன பாவம் நமக்கு. எனவே அவனை வீட்டிலேயே இருந்திடசெய்வோம். பிறகு எப்படி கொல்லுவாங்களாம்?
சின்னப்புள்ளத்தனமாயெல்லாம் றோசிக்கிறாங்கபா!!!!
டிவியில் இந்த பேச்சைப் பார்த்தேன். ராஜஸ்தானில்
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொதுக்கூட்டம். நடிப்பு
சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள்.ஆனால் ஐந்து நிமிட
வீராவேச பேச்சுக்குப் பிறகு தாக்குப் பிடிக்க முடியவில்லை.
மீண்டும் flat -வழக்கம் போல் உளறல்.
கொஞ்ச நேரம் முன்பு இந்தூரில் (மத்திய பிரதேசம்)
அதே மாதிரி ஆவேசக் கத்தலை காண்பித்தார்கள்.
இதுவும் 5 நிமிடம் தான். இங்கே சொன்னது அவரையும்,
மத்திய அரசையும் கூட –
பிரச்சினைக்கு உள்ளாக்கக்கூடிய விஷயம்.
முசாபர்நகர் கலவரத்தில் பாகிஸ்தானின் ISI பிரிவு செயல்பட்டதாக சொல்கிறார்.
முசாபர்நகர் கலவரத்தில் ISI செயல்பட்டது என்றால் –
அது இதுவரை மாநில அரசோ, மத்திய அரசோ சொல்லாத
தகவல். காங்கிரஸ் துணைத்தலவருக்கு எங்கிருந்து
உளவுத்துறை தகவல்கள் கிடைத்தன ? இந்த தகவல்
உண்மை என்றால், மத்திய உள்துறையும்,
உளவுப் பிரிவுகளும் என்ன செய்து கொண்டிருக்கின்றன ?
கூடிய சீக்கிரத்தில் எல்லாரையும் பைத்தியம் பிடிக்க
வைத்து விடுவார் என்று நினைக்கிறேன்.
பாவம் – அன்னை எவ்வளவோ முயற்சி செய்கிறார் –
பிள்ளையை தேற்ற. ஆனால் …
email message from r.v.ramani –
சீக்கியர்கள் கோபப்பட்டர்கள் இந்திராவைக் கொன்றார்கள்
இலங்கைத் தமிழர்கள் கோபப்பட்டர்கள் ராஜீவைக்
கொன்றார்கள் என்கிற உங்களது பொதுமைப் படுத்தப்பட்ட்
வாதம் வியப்பளிக்கிறது. மாறாக, அகாலி புரட்சியாளர்களின்
கோபம் என்றும் விடுதலைப்புலிகளின் கோபம் என்றும் விவரிக்கப்
பட்டிருந்தால் நியாயமாக் இருந்திருக்கும். ஏனென்றால்,
அகாலிதள் இயக்கத்தைச் சாராத சீக்கியர்களும் இருக்கிறார்கள்.
காங்கிரஸ் ஆதரவு சீக்கியர்களும் இருக்கிறார்கள். அதுபோலவே
புலிகளைச் சாராத தமிழர்கள் இலங்கையில் இருக்கிறார்கள்.
அவர்களில் ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை ஆதரிக்கும்
ஈழத் தமிழர்களும் (இன்றும் கூட அதை அமுல்படுத்தக் கோரும்
ஈழத் தமிழர்களும்) இருக்கிறார்கள்.மேற்சொன்ன குற்றங்களில்,
சார்பற்ற மக்களுக்கும் “பங்கு” இருப்பதாக கருதுகிறீர்களா?
பொற்கோவிலுக்குள் ராணுவம் நுழைந்தது எதற்காக?
ராஜீவ் ஜெயவர்த்தனேவுடன் தன்னிச்சையாகவா ஒரு
உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்? ஆரம்ப கட்டத்தில்
அதை புலிகள் ஏற்கவில்லையா? பின்னர், சினம் கொண்டது
எதற்காக?
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களின் முடிவு, ஒரு இனத்திற்கு
எதிராக அமைந்தால் அது அவர்களைப் பெருஞ்சினம் கொள்ள
வைக்கும் என்பதும், அதன் அடிப்படையில் சம்மந்தப்பட்ட அரசியல்
தலைமையைக் கொல்லவும் துணிவார்கள் என்பதும், அத்தகைய பெருஞ்சினம் முற்றிலும் நியாயம்தான் என்கிற பொதுமைப்படுத்தப்பட்ட வாதம் ஏற்புடையதாக இல்லை.
தமிழ்நாட்டில் திரு.கருணாநிதியும் முதல்வர் ஜெயலலிதாவும் கூட உயிருக்கு ஆபத்து இருப்பதாக்ச் சொல்லி, கருப்பு பூனைகளுடன்
வலம் வருகிறார்கள். அவர்களையும் அரசியலை விட்டுவிடச் சொல்வீர்களா?
மீண்டும் விதண்டாவாதம் ….!
மீண்டும் ஒரு முறை இடுகையைப் படித்தால்
தேவலை. சீக்கியர்களின் கோபம்,
இலங்கைத் தமிழர்களின் கோபம் –
காரணம் என்று தான் சொன்னேன்.
என் பாட்டியை கொன்றார்கள் –
என் தந்தையை கொன்றார்கள் –
என்று ஒப்பாரி வைப்பவர்கள் மீண்டும் மீண்டும்
ஏன் அதே அரசியலுக்கு வர வேண்டும் ?
இந்திய மக்களுக்கு சேவை செய்யவா ?
நண்பர் வெங்கட்ரமணி அவர்களே –
விதண்டாவாதம் செய்பவர்களை
வேலை மெனக்கெட்டு convince பண்ண
வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.
நீங்கள் தாராளமாக,
தீவிரமாக களத்தில் இறங்கி,
முயற்சி செய்து,
இவர்களையே மீண்டும் பதவிக்கு கொண்டு
வர ஆவன செய்யலாம் !
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
Dear Kavirimainthan,
please donot encourage venkatramani type of people to write here.
He is always trying to distract, distort, irritate and divert the
discussion from the main issue.
What People wish today is to free india from one dynasty rule.
I fully support your efforts in
exposing corrupt and dishonest people in public life.
Thank you.
Srinivasan.R.
//ராஜீவ் ஜெயவர்த்தனேவுடன் தன்னிச்சையாகவா ஒரு
உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்? ஆரம்ப கட்டத்தில்
அதை புலிகள் ஏற்கவில்லையா? பின்னர், சினம் கொண்டது
எதற்காக?//
சந்தடி சாக்கில் உண்மையை வளைக்கிறீர்களே வெங்கட்ரமணி. டெல்லி ஹோட்டல் அசோகாவில் எவ்வாறான சூழ்நிலையில் பிரபாகரன் ஒப்பந்தத்துக்கு சம்மத்க்க வைக்கப்பட்டார் என்பது உங்களுக்கு தெரியாதா?
ramani mama,
neengal enn eppadi irukireergal?. indru illavitaal, naalayavathu maruveergal endru nambukiren.
vazhthukaludan
Srini
Here is the latest speech by Mr.RahuL Kaalam.(courtesy:Dimalar 25/10)
பா.ஜ.,வை சேர்ந்த, முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, ம.பி., மாநிலத்தில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக, அம்மாநிலத்தில், இரண்டாவது நாளாக, காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சாகர் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், அவர் பேசியதாவது: இந்த சட்டசபை தேர்தல், ‘இந்தியா ஒளிர்கிறது’ என, பிரசாரம் செய்த கட்சிக்கும், சாமானிய மக்களுக்கும் இடையேயான தேர்தல். பா.ஜ., இந்தியா ஒளிர்கிறது என பிரசாரம் செய்கிறது; நாங்கள், ஏழைகள் முன்னேற வேண்டும் என்கிறோம். கொளுத்தும் வெயிலில், வயலில் வேலை செய்யும் விவசாயி, விமானங்களையும், கோட், சூட் அணிந்தவர்களையும் பார்த்து, தன் மகனும் இது போல் எப்போது வருவான் என, கனவு காண்கிறார்; அவர் கனவை நாங்கள் நிறைவேற்றுவோம்.
சாலைகள் அவசியமா?
கடந்த, 2008ல், இந்த பகுதியில் ஏற்பட்ட வறட்சியை பார்வையிட, நான் வந்திருந்தேன். அப்போது என்னை கொசு கடித்தது; விவசாயி வழங்கிய தண்ணீரை குடித்தேன்; வயிற்றை புரட்டிக் கொண்டு வந்தது. நாங்கள் சாலைகளை அதிகமாக போட்டுள்ளோம்; விமான நிலையங்களைக் கொண்டு வந்துள்ளோம் என, பா.ஜ., பிரசாரம் மேற்கொள்கிறது. சாலைகளும், விமான நிலையங்களும், ஏழைகளின் பசியைப் போக்குமா? வயிறு நிறைய உண்ண வேண்டுமா? காங்கிரசுக்கு ஓட்டளியுங்கள். வரும் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சியை அமைக்கும் என, நான் உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு ராகுல், பிரசாரத்தின் போது குறிப்பிட்டார். நேற்று முன்தினம், ராஜஸ்தானின் சூரு என்ற இடத்தில் நடைபெற்ற, காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல், ‘என் பாட்டி இந்திரா, தந்தை, ராஜிவ் போல், நானும், கொல்லப்படலாம்’ என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.