துக்ளக் கார்ட்டூன் + ராகுல் ஸ்பெஷல் வலைத்தளம்

துக்ளக் கார்ட்டூன் + ராகுல் ஸ்பெஷல் வலைத்தளம்
———–
முதலில் இந்த வார துக்ளக் அட்டைப்பட கார்ட்டூன்.

thuglaq rahul cartoon

ராகுலின் கோமாளித்தனங்களை கிண்டல் செய்து
அதற்காகவென்றே ஒரு வலைத்தளம் pappupedia.com
என்கிற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
சூத்திரதாரிகள் யாரென்று வெளிப்படையாகத்
தெரியாவிட்டாலும், பிஜேபி-மோடி
ஆதரவாளர்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
கொஞ்சம் ஒவர் என்று தான் சொல்ல வேண்டும்.
வடக்கிலிருந்து வெளிவரும் முக்கியமான ஊடகங்கள்,
இந்த அளவிற்கு எல்லாம் இறங்குவது தவறு என்று
சொல்லிக்கொண்டே அந்த வலைத்தளத்திலிருந்து பல
பக்கங்களை வெளியிட்டு விட்டன.(எல்லாம் வியாபாரம் !)

நாம் அந்த அளவிற்கு எல்லாம் போகிறவர்களல்ல.
சாம்பிளுக்கு முதல் பக்கத்திலிருந்து கொஞ்சம் மட்டும்
கீழே. மேற்கொண்டு காண ஆர்வம் இருப்பவர்கள்
சம்பந்தப்பட்ட வலைத்தளத்திற்கே சென்று பார்த்துக்
கொள்ளலாம் ..! நமக்கெதற்கு வீண் பாவம் !!

pappupedia first page

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to துக்ளக் கார்ட்டூன் + ராகுல் ஸ்பெஷல் வலைத்தளம்

  1. ராயன்-சென்றாயன்'s avatar ராயன்-சென்றாயன் சொல்கிறார்:

    காவிரிமைந்தன்,
    ஆசையா பப்புவைப் பார்க்கப் போனா நிறைய சமாச்சாரங்கள்
    இந்தில இருக்கே.அதில் இன்டெரெஸ்டிங்கான விஷயங்களை

    நீங்கள் தமிழ்ப்படுத்திப் போட்டால் என்ன ?

  2. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    நீங்கள் சொன்னீர்களே என்று அங்கு உள்ள சில ஹிந்தி வாக்கியங்களை மொழிபெயர்த்தால் அனைத்திலும் எனக்கு வந்த தமிழ் வாக்கியம்..

    “பப்பு ஒரு முட்டாள்”

    சரி எங்கேயோ தவறு ஏற்பட்டுள்ளது என நினைத்து அங்குள்ள அத்தனை வாக்கியங்களையும் ஒன்றாய் சேர்த்து கலக்கி காய்ச்சி வடிகட்டி வந்த சாரத்தை மொழிபெயர்த்தால் எனக்கு வந்த தமிழ் வாக்கியம்…
    ..
    “பப்பு ஒரு வடிகட்டிய முட்டாள்”

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      அப்பாடா ….
      நண்பர் ராயனுக்கு என்ன சொல்வது – அதை எப்படிச் சொல்வது
      என்று புரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தேன்.
      நல்ல சமயத்தில் உதவிக்கு வந்தீர்கள்.
      மிக்க நன்றி கண்பத்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  3. sridhar's avatar sridhar சொல்கிறார்:

    எனக்கு பிடித்தது “The bank sends Pappu a mail, ‘Your payments are outstanding’. He replies: ‘thanks for the compliment’”

    Meaning of “Outstanding” in a different context is “superior; excellent; distinguished”

  4. கண் ஆயிரம்'s avatar கண் ஆயிரம் சொல்கிறார்:

    வேண்டாத பொண்டாட்டி கைப்பட்டாலும் குத்தம் கால்
    பட்டாலும் குத்த்ம்னு எங்க பக்கம் ஒரு வசனமுண்டுங்க.
    என் நெனவுக்கு அதுதான் வருது. சோத்துக்காக சேத்தை
    வாரி அடிக்கிறானுவ. உங்கள மாதிரி ஆசாமிங்க அதை
    நெசமுன்னு நம்பி, வேற விதமா பரப்புறீங்க. காங்கிரச
    கொற சொல்றீங்களே, நாட்டுல ஆட்சில இருக்கிறவன்ல
    முழு யோக்கியன்னு ஒருத்தன் இருந்தா அடையாளம்
    காட்டுங்க. நீங்கள்லாம் நம்புற மோடி பிரதமரா ஆவலாம்னா
    ராகுல் ஆவக்கூடதா? ராகுல் மேல தனிப்பட்ட குற்றச்சாட்டுகள்
    அத பத்தின ஆதாரம் இருக்குதுங்களா? ஆனா மோடி மேல பல
    இருக்குதுங்க. அவருக்கு கொடி பிடிக்கலாம்னா, ராகுலுக்கு
    கொடி பிடிக்கக் கூடாதுங்களா? ஒங்க ஒரு ஓட்டு ராகுலோட
    எதிர்காலத்த தீர்மானிக்காதுங்க. அது மாதிரியே மோடிய
    பிரதமரா ஆக்கிடாதுங்க.
    papppedia-வுல உள்ள தகவல்ல பாதிக்கு மேல
    குறிப்பா இந்திரா கல்பாணத்தப்ப மதம் மாறினங்கன்றதுக்கு
    ஆதாரம் இல்லீங்க. அவங்க கல்யாணம் இந்து முறைப்படி
    அலகாபாத்துல நடந்ததுன்னு சொல்ற, பெரியவங்க
    ஏத்துக்கிட்ட ஆதாரமெல்லாம் இருக்குற விசயம்
    தெரியுங்களா?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நான் இந்த பின்னூட்டத்தை –
      நண்பர் கண்பத்’திற்கு
      சமர்ப்பிக்கிறேன்…. !!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

      • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

        நண்பர் கா.மை.அவர்களே!

        கண் பத்தை ,கண் ஆயிரத்துடன்
        மோதவிடுவது நியாயமா?
        இருப்பினும் நீங்கள் சொல்லிவிட்டீர்கள்..
        நான் தொடர்கிறேன்.

        அவர் என்ன சொல்ல வருகிறார் என்றால்.
        மன்மோகனையே சகித்துக்கொண்டீர்கள்
        ராகுலை சகித்துக்கொள்ள கூடாதா?

        அவருக்கு ஒன்று சொல்லிக்கொள்வேன்.
        சோனியாவையும்,
        ராகுலையும்,
        பிரியங்காவையும்
        தங்கள் பெயரில் உள்ள
        காந்தி எனும் பகுதியை
        நீக்கி விட்டு
        தேர்தலை சந்திக்க சொல்லுங்கள்.
        அப்புறம் பாருங்கள் வேடிக்கையை!

        நண்பர் Eyeஆயிரத்திற்கு முடிவாக சொல்கிறேன்..

        மோடி எப்பொழுதும் ஐந்து நிமிடம் தாமதமாக ஓடும் கடிகாரம்
        ராகுல் ஒருபொழுதும் ஓடாத கடிகாரம்..
        எனவே
        மோடி எப்பொழுதும் தப்பான நேரம் காண்பிப்பார்.
        ராகுலோ ஒரு நாளைக்கு இரண்டு வேளையாவது சரியான நேரம் காண்பிப்பார்.
        எனவே ராகுலையே தேர்ந்தெடுங்கள் என்கிறீர்கள்..

        எல்லாம் (எங்க) நேரந்தான்!

        • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

          v o w …!

          “உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே
          இடுக்கண் களைவதாம் நட்பு …” !!!

          நன்றி கண்பத்.

          -வாழ்த்துக்களுடன்,
          காவிரிமைந்தன்

          • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

            ஏதோ ராமருக்கு உதவிய அணில் போல..
            பி.கு:இதற்கும் “பாதாள கரண்டி” என்ற புனைப்பெயரில் யாராவது வந்து
            பின்னூட்டமிடகூடும் !!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.