கலைஞர் அவர்களே கவலை வேண்டாம் –
நீங்கள் நேற்று சொல்லி இருப்பதையும்,
சொல்லாமல் விட்டதையும் – சேர்த்தே
நினைவு கூர்கிறோம்….
——————–
நேற்று கலைஞர் அவர்கள் ஒரு அறிக்கை
வெளியிட்டிருக்கிறார். சாராம்சம் –
1)சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு
25 கோடியே 46 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு,
முந்தாநாள் திறந்து வைக்கப்பட்ட புதிய கட்டிடத்திற்கு
2006-ம் ஆண்டிலேயே அனுமதி கொடுத்தது தான் தான்.
2) 683 கோடியே 19 லட்சம் செலவில்
11,029 காவலர் குடியிருப்புகள் கட்டுவதற்கு
அனுமதி கொடுத்ததும் தான் தான்.
3)இந்தியாவிலேயே மாநில அரசு சார்பில் முதல்
முறையாகக் காவல் ஆணையம் ஒன்றை 1969ஆம்
ஆண்டிலேயே அமைத்ததும் தான் தான்.
4)1973–ம் ஆண்டு முதன் முதலாக பெண்களை காவல்
துறையிலே சேர்ப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க
ஆணையைப் பிறப்பித்ததும் தான் தான். அப்போதே
தான் இந்த ஆணையை பிறப்பிக்கவில்லையென்றால்
ஜெ.யால் பிற்பாடு மகளிர் காவல் நிலையங்களை
உருவாக்க முடிந்திருக்குமா ?
——-
கலைஞர் – எங்கே கொண்டாட்டத்தில் தன்னையும்,
தன் சாதனைகளையும் மறந்து விடப்போகிறார்களோ
என்கிற ஆதங்கத்தில் தான் செய்தவற்றை
நினைவுபடுத்துவது நமக்குப் புரிகிறது.
இன்னும் நிறைய விஷயங்களை அவர் சொல்லாமல்
விட்டு விட்டார்.பாவம் அவரால் எவ்வளவு தான்
நினைவுபடுத்த இயலும். எனவே, அவரது
பொறுப்பில் நாமும் சிறிது பங்கு கொண்டு,அவரது
மற்ற சாதனைகளில் சிலவற்றையும்
நினைவு படுத்திப் பார்ப்போமா..?
– 1968 லிருந்து தொடர்ந்து 45 ஆண்டுகளாக
திமுக விற்கு நிரந்தரத் தலைவராக நீடிப்பது.
1969-71,
1971-76,
1989-91,
1996-2001,
2006-2011 –
என்று 5 முறை, 21 வருடங்கள் தமிழ் நாட்டிற்கு
முதலமைச்சராக வீற்றிருந்து சாதனை புரிந்தது.
– முதல் முதலில் தமிழ்நாட்டில் சாராயக்கடைகளை
திறந்து விட்டது.
– 1.5 லட்சம் ஈழத்தமிழர்களை அழித்த ராஜபக்சே
அரசுக்கு மத்திய அரசுடன் சேர்ந்து தோளோடு தோள்
கொடுத்து துணை நின்றது.
அதே சமயம் -ஈழப்பிரச்சினை தீர்வதற்காக
உலக ரெகார்டாக – சென்னை கடற்கரையில் 3 மணி
நேரம் உண்ணாவிரதம் இருந்தது.
– காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகள்
பற்றிய கவலையே தமிழ் மக்களுக்கு இல்லாமல்
பார்த்துக் கொண்டது.
தன் குடும்பம் வேறு – தமிழ் நாடு வேறல்ல.
தன் குடும்பம் வளர்ந்தால் – தமிழ்நாடே வளர்ச்சி
பெற்றது போல் தான் என்று நினைத்து செயல்பட்டது.
– மூத்த மகனை மத்திய அமைச்சராக்கியது.
– இளைய மகனை மாநிலத்தில் துணை முதல்வர்
ஆக்கியது.
– மகளை 2 முறை ராஜ்ய சபா உறுப்பினராக்கியது.
– பேரனை நேரடியாக மத்திய கேபினட் அமைச்சர்
ஆக்கியது.
-இரண்டு மகன் வயிற்றுப் பேரன்களையும்,
30 வயதிற்குள் தமிழ் நாட்டிலேயே பெரிய திரைப்பட
தயாரிப்பாளர்களாக்கியது.
– 1.76 லட்சம் கோடி ஊழல் செய்தவரை
தக தகத்ததாய சூரியன் என்று சொல்லி வரவேற்று
ஆக்கமும், ஊக்கமும் கொடுத்தது.
– தன் பெயரில் துவக்கப்பட்ட டிவி -க்கு 200 கோடி
ரூபாய் 2ஜி ஊழலில் பங்கு பெற்றதாக சிபிஐ குற்றம்
சாட்டும் அளவிற்கு இடம் கொடுத்தது.
– இந்த வயதில், திரைப்பட கதை,வசனம் எழுத
வாய்ப்பு கொடுத்த திருட்டு லாட்டரி கிங்குடன்
தோழமை பாராட்டியது.
என்னால் எல்லாவற்றையும் ஒரேயடியாக நினைவுகூர
முடியவில்லை ! முடிந்தவர்கள் நினைவு
படுத்தலாம்.




குதிரைப் பந்தையத்தை தடுத்தது
பூம்புகார் அகழ்வாராய்ச்சியை முடித்திருந்தால் தமிழர்களின் பண்பாடு உலகப்புகழ் பெற்று தன் புகழ் தடுக்கப்படும் என்று எண்ணியது
நூலகங்களையும் அந்த துறையையும் கேள்விக்குறியாக்கி இன்று பலருக்கும் சம்பளம் கிடைப்பதே அறிதாக்கியது மற்றும் பல நூலகங்களை தனியாரே தன் சொந்த செலவில் பறாமறிக்கவிட்டதும்….
வாழ்க டமில் வாட்ச்மேன்!
TN was spoiled by DMK with the help of Rajaji. India was spoiled by Indira Gandhi (till today ruling family) with the help of Kamraj. Whatever it may be Rajaji & Kamraj did a blender though they were honest
அரிய சேவைகள் பட்டியல் :-
அரசியல் :-
குசுபூ என்னும் ஒப்பற்ற தியாகத் தலைவரை
திமுகவுக்கு கொண்டு வந்து அரசியலுக்கு அறிமுகம்
செய்து வைத்தது.
தா.கிருட்டினன் கொலை வழக்குக்கு மூடு விழா நடத்திய
ஒப்பற்ற ராசதந்திரம்.
மதுரை தினகரன் ஆபீசு எரிப்பு விழாவும் 3 கொலைகளும்
வழக்கு நடத்திய அருமை.
கலை :- மானாட மயிலாட நிகழ்ச்சியை
அறிமுகப்படுத்தி கலைத்துறைக்கு சேவை செய்தது.
ஆரோக்கியம் :- இந்த வயதிலும் தினம் ஒரு
குலாப்ஜாமூன் சாப்பிடுவது.
காவிரிமைந்தன் நீங்கள் மட்டும் தானா
ஞாபகம் வரும்போது நானும் மீண்டும் வருகிறேனே.
அடுத்த பிரதமர் ராகுல் காந்தியின் அன்னைக்கு
‘மணிமேகலை’ பட்டம் கொடுத்தது. ?
நல்ல நினைவு கூறல்….அந்த படம் சூப்பர் சார்
ஐயா கட்டுமரம் அவர்கள், கச்ச தீவை தாரை வார்க்கும் போது சுயநலத்துடன் பாராமுகமாக இருந்தமை தலையாய துரோகம்.
சும்மா நேரத்தை வீணாக்காதீங்க..
கருணா ஒரு ஸ்பெஷல் கேஸ்.
திருப்பதி பெருமாளே வந்து அவர் ஊழல் பேர்வழி என்று சொன்னால் கூட
தமிழக வாக்காளர்களில் ஒரு 25 % பேர் அவருக்குதான் ஒட்டு போடுவார்கள்.அவர்களில் குறைந்தது 25 % ஆவது பெருமாள் பக்தர்களாக இருப்பார்கள்.
மணிமேகலையின் அமுதசுரபியிலிருந்து ஈழத்தமிழர்களுக்கு அல்வா கிண்டிகொடுத்தது …!!!
மிகவும் ரசித்தேன். ஒரே வாக்கியத்தில் உண்மை, வேதனை, ஏமாற்றம், நையாண்டி என அனைத்தையும் ஒரு சேர கொண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள்.
the next generation is unable to know these truths, if we don’t encourage our children to read and understand this political situation update. of course, at least POLITICIANS.