திருமதி சோனியா 70-லும் ரிடையராக மாட்டாராம்..!
சந்தோஷமா -வருத்தமா ? யாருக்கு ?
—–
இன்று வெளிவந்துள்ள செய்தி –
சென்ற வாரம், 24 அக்பர் சாலை என்ற புத்தகம்
வெளியிடப்பட்டது. இதில் காங்கிரஸ் தலைவர்
சோனியாகாந்தி 2016-ம் ஆண்டு – 70 வயது
நிறைவதையொட்டி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவார்
என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இது குறித்து கட்சியின்
மூத்த தலைவர்களிடம் அவர் தெரிவித்துவிட்டதாகவும்
செய்தி பரவியது.
இந்த நிலையில் லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ்
பாஸ்வான் காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்து
பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம்
பேசிய பஸ்வான், 2016-ம் ஆண்டு அரசியலில் இருந்து
ஓய்வு பெறப்போவதாக தான் கூறவில்லை என்றும்,
அரசியலில் இருந்து ஓய்வுபெறும் எண்ணமே தனக்கு
இல்லை என்றும் சோனியா காந்தி என்னிடம்
தெரிவித்தார் என்றார் !
(நன்றி – tamil.oneindia.in )
ஒரு கேள்வி –
இந்த செய்தியால் ஏற்படுவது சந்தோஷமா ?
அல்லது வருத்தமா ?
– யாருக்கு … ??!!
(முதலில் வந்த செய்திக்கும் –
பின்னர் வந்த மறுப்புக்கும் ..!!!!)




பாஸ்வான் எப்போது காங்கிரசில் சேர்ந்தார். ஒன்றுமே புரியவில்லை.
பரமசிவம்
ஆத்தா ஆடு வளத்துது, கோழி வளத்துது,
பொண்ணை வளத்துது, புள்ளைய வளத்துது,
மாப்பிள்ளைய கூட வளத்துது – ஆனா,
நாய் வளக்கல. அந்தோனிய, திக் விஜயை,
குலாம் நபிய, சிதம்பரத்தை, கபில் சிபல
வளத்துது. இவங்க என்னிக்கும் ஆத்தா ‘கை’ய
விட மாட்டாங்க. விட்டா அவங்க பொழப்பு என்ன
ஆறது ? சொல்லுக பாப்போம்.