யாருக்கும் இல்லை (NOTA option ) -சரியா ?
—————
செப்டம்பர் 27, 2013 அன்று ஒன்பது வருடப் பழைய
வழக்கு ஒன்றில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
தேர்தலில் – ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் –
மேற்கண்ட யாருக்கும் இல்லை (None of the above)
என்று ஒர் பதிவு பட்டன் வைக்க வேண்டும்.
வேட்பாளர்கள் யாரையுமே பிடிக்காதவர்கள் தாங்கள்
பட்டியலில் உள்ள எந்த வேட்பாளருக்கும் ஓட்டுப் போட
விரும்பவில்லை என்பதை இந்த பட்டனை அழுத்திப்
பதிவு செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கி உள்ளது.
தேர்தல் ஆணையம் இதற்கான நடவடிக்கைகளை
மேற்கொள்ளவும் உத்திரவிட்டுள்ளது.
அடுத்து வரவிருக்கும் 5 மாநில தேர்தல்களில்
இந்த வசதி செய்து தரப்படும் என்று தேர்தல் கமிஷனும்
அறிவித்துள்ளது.
இதன் மூலம், அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி
வேட்பாளர்களை தெரிவு செய்து அறிவிக்கும்போது,
கவனத்துடன் செயல்படும் என்று உச்சநீதி மன்றம்
எதிர்பார்க்கிறது.
ஆனால் நமக்கு அந்த மாதிரி நம்பிக்கை
எல்லாம் இல்லை !
நடைமுறையில் – இது எந்தவித பாதிப்பையும்
ஏற்படுத்தாது என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு கட்சியும்
தங்கள் கட்சி வேட்பாளர்களின் –
ஜாதி, மதம்,
பணவசதி,
கட்சிக்கு விசுவாசம் – தலைமைக்கு நம்பகத்தன்மை,
தொகுதியில் செல்வாக்கு(?)
ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் –
-போன்ற தகுதிகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு
தங்கள் வேட்பாளர்களை அறிவிக்கின்றன.
தங்கள் கட்சி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும்போது
உண்மை, நேர்மை, பொதுநலம், சேவை மனப்பான்மை
ஆகிய தகுதிகளைப்பற்றி எந்த கட்சியும்
கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
எனக்கென்னவோ – பொத்தாம் பொதுவாக
இந்த வேட்பாளர்கள் யாரையும் எங்களுக்கு பிடிக்கவில்லை
என்று பதிவு செய்து விட்டுப் போனால் போதும் என்று
தோன்றவில்லை.
மூஞ்சியில் அடித்தாற்போல் – இந்த ஆள் மகா மோசம்,
இவர் அதற்கு அடுத்த மோசம், அவர் அதற்கு அடுத்தது
என்று ரேங்க் அறிவிப்பது போல் இந்த நெகடிவ் ஓட்டு
பளீரென்று இருக்க வேண்டும்.
அத்தோடு நில்லாமல் – நாம் எந்த வேட்பாளரின்
பெயருக்கு எதிரில் நெகடிவ் ஓட்டு பட்டனை
அழுத்துகிறோமோ அதன் விளைவாக அவருக்கு எதிராக
ஒரு நெகடிவ் ஓட்டு பதிவாக வேண்டும்.
கடைசியில் ஓட்டு எண்ணும்போது –
மொத்த ஆதரவு ஓட்டுக்களின் எண்ணிக்கையில் –
மொத்த எதிர்ப்பு ஓட்டுக்களின் எண்ணிக்கையை
கழித்துக் கொண்டு – மீதி ஓட்டுக்கள்
மட்டும் தான் அவருக்கு கிடைத்ததாக எடுத்துக்கொள்ள
வேண்டும் ! அதாவது 100 ஆதரவு ஓட்டுக்களும்
10 நெகடிவ் (எதிர்ப்பு) ஓட்டுக்களும் ஒருவருக்கு
கிடைத்தால் – அவர் 90 ஓட்டுக்கள் பெற்றதாகவே
எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் நெகடிவ் ஓட்டுக்களுக்கு – விளைவு
ஏற்படுவதை நிதரிசனமாகப் பார்க்கலாம்.
வாக்காளரின் பார்வையில் – எந்த வேட்பாளர்
மிக மோசமானவராகத் தெரிகிறார் என்பதும்
அவரவர் ரேங்குடன் வரிசையாகத் தெரிய வரும்.
இத்தகைய நேரடி விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய
நெகடிவ் ஓட்டுக்களால் மட்டும் தான் கொஞ்சமாவது
பலன் எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே …?
————
பின்குறிப்பு – இதைக் குறித்து நமது
கருத்துப் பரிமாற்றல் /விவாதத்திற்குப் பிறகு –
தேர்தல் கமிஷனுக்கு
ஒரு மனு கூட அனுப்பலாம்.
9 ஆண்டுகளுக்கு முன்னர் துவக்கப்பட்ட
ஒரு முயற்சிக்கு இப்போது தானே சுப்ரீம் கோர்ட்
மூலம் பலன் கிடைத்திருக்கிறது.
நமது முயற்சிக்கு – உடனே இல்லா விட்டாலும்,
எதிர்காலத்தில் என்றாவது பலன் கிடைக்கக்கூடும்
அல்லவா ?




negative votes wont make any change, bcs take example total votes polled is 10 party 1 got 30 +Votes party2 got 25 +votes, and other parties gets 45 votes in that way all 45 will mark negative votes for either party1 or party2, almost all party2 voters will vote -ve to party1 vice versa happens, in the end all of them might be in total negative, some one from other will win unexpectedly by just scoring less than 1% votes bcs none of the voters knows about him, but he will be the highest candidate with +ve votes
அன்பர்கள் கவனத்திற்கு:
வேண்டாம் என்பதினால் எழுத வேண்டாமென்று
தீர்மானித்து பல நாட்களாகிவிட்டது. இனி எந்த தலைப்புக்
குறித்த இடுகைக்கும், அதற்கான பின்னூட்டங்களுக்கும்
எதுவும் எழுதுவதில்லை.
உலக நிகழ்வுகள் அனைத்தும் (அனைத்தும் தான்) நொடிகளில்
வந்து விழுமிடத்தில், பொறுப்புள்ள பணியிலிருக்கிறேன்.
விலை கொடுத்து வாங்காமல், சந்தா ஏதும் கட்டாமல்
உள்ளூர், மாவட்டம், மாநிலம், தேசம் பின்னர் தேசம் கடந்து
வரும் நடப்புகளை அனுதினமும் வாசித்துக் கொண்டுடேதான்
இருக்கிறேன். அவற்றுக்கெல்லாம் எனது அபிப்ராயமென்று
எழுதிக் கொண்டா இருக்க முடியும்?
என் அறிவின்மைக் குறித்தோ புத்திசாலித்தனம் குறித்தோ
விவாதிக்க எனது எஜமானரே இடமும் வாய்ப்பும் கொடுத்து
வைத்திருக்கிறார். எனவே, எவர் பெயரிலோ எதையோ
எழுதி “இங்கே” நானிருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள
வேண்டிய அவசியமுமில்லை.
நீங்கள் எல்லாம் (கா மையும் தான்) இவ்விதம் எழுதுவதால்
என்னைக் கொண்டு இன்னொருவரையும் இழிவு படுத்துகிறீர்கள்
என்பதை நினைவில் கொள்ளவும்.
—-
சென்னையை விட்டும் கிளம்பியாகிவிட்டது. வேறு மாநிலம்
வேறு மொழி. என்னதான் என்பதைப் பார்த்துவிட்டு வருகிறேன்.
நன்றியுடனும் வணக்கத்துடனும். bye bye
நண்பர் வெங்கட்ரமணி,
இந்த “விமரிசனம்”வலைத்தளத்தில் இதுவரை –
எழுத வேண்டாம் என்று –
உங்களை மட்டுமல்ல
வேறு யாரையுமே
நான் சொன்னது இல்லை.
பொறுப்புடன் எழுதுங்கள் –
தலைப்பிற்கு சம்பந்தப்பட்டதை மட்டும்
எழுதுங்கள் – திசை மாறிச் செல்ல வேண்டாமென்று
சொன்னதுண்டு.
வாதம் செய்யுங்கள் -விதண்டாவாதம் வேண்டாமே –
என்று சொன்னது உண்டு.
மற்றபடி உங்கள் பின்னூட்டங்களை வியந்து
பாராட்டியும் நான் எழுதியது உண்டு.
தொழில் நுணுக்கங்களும், வசதிகளும்
நிறைந்திருக்கும் இந்த நாட்களில் உலகின்
எந்த மூலையில் இருந்தாலும் –
தொடர்பு கொள்வது
ஒரு பிரச்சினையே இல்லை.
உங்களால் இந்த வலைத்தளத்திற்கு
விஜயம் செய்யாமல் இருக்க
முடியாது என்பதை நான் உணர்கிறேன்.
நீங்கள் எங்கிருந்தாலும் – பயனுள்ள வகையில்
இந்த வலைத்தளத்தில் உங்கள் எழுத்துக்களை
நான் எப்போதும் வரவேற்கிறேன்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
திரு (?!)tmnkin – ன் கருத்தோடு நான் ஒத்துப்போகிறேன்.
இந்த ஒரு எக்ஸ்ட்ரா பட்டனால் ஒன்றும் மாறப்போவதில்லை.
இன்றும் தேர்த்தலில் வெல்பவர் பெறும் வாக்கு என்பது வெறும் 30-35% மட்டுமே. இதிலிருந்தே புரிகிறது மீதியுள்ள 65-70 சதவிகிதத்தினர் அவரை வெறுக்கின்றனர் என்று. ஆனால் என்ன, நம் தலைவிதி “இப்படிபட்ட” ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இருக்கின்றோம்.
அதற்கு பதிலாக, ஒருவேளை மொத்த வாக்குப்பதிவில் “யாருக்கும் என் வோட்டு இல்லை” என்பது வெற்றிபெற்ற வேட்பாளரின் ஓட்டுக்களைவிட அதிகமாக இருக்கும்பட்சத்தில் தேர்த்தலையே மறுபடியும் புது வேட்பாளர்களைக்கொண்டு நடத்தலாம். ஆனால் என்ன செலவுதான் ஜாஸ்தி. வாக்காளர்களுக்கு மறுமுறை ஓட்டுக்கு பணம் தரவேண்டிவரும். இதெல்லாம் நடக்குமா?
நடுவிலே திடீரென்று ஒருவர் வந்து இது நான்ஸென்ஸ், கிழித்தெரியவேண்டியது என்று சொன்னால் நம்மால்தான் என்ன செய்துவிடமுடியும் சொல்லுங்க!
வாழைப்பழமும் மாங்காயும் மீண்டும் ஞாபகத்திற்கு வருதுங்க!
we can mange the election expenses also by increasing the Deposit for the candidate, if NOTA secures 50% then all the candidates will lose their deposit, even when he secures required votes for, this way ec can manage the election.
உங்களோடது utopian dream. இன்றைய சட்டப்படி NOTAவிற்கு 99 சத வாக்குகள் விழுந்தாலும், வேட்பாளர்களுள் யார் அதிக வாக்கு பெற்றாரோ அவரே வென்றவர். எனவே என் கருத்து, NOTA 50% மேல் வாக்குகள் பெற்றால், வேறு (அல்லது மாற்று) வேட்பாளர்களைக் கொண்டு மறு வாக்குப்பதிவு நடத்தலாம். ஆனால் NOTA வாக்குகளைத் தொடர்ந்து பதிவு செய்வது கட்சிகள் தகுந்த வேட்பாளரைத் தெரிவு செய்ய அழுத்தத்தைக் கொடுக்கும்.
அன்பர்கள் கவனத்திற்கு:
வேண்டாம் என்பதினால் எழுத வேண்டாமென்று தீர்மானித்த பின் எதையோ எழுதி “இங்கே” நானிருக்கிறேன் என்று சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியமுமில்லை.
I agree with this
நீங்கள் எல்லாம் (கா மையும் தான்) இவ்விதம் எழுதுவதால்
என்னைக் கொண்டு இன்னொருவரையும் இழிவு படுத்துகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும். Though I am not in agreement with this part of the statement, I refrain from commenting further. Thanks
இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?
நன்றியுடனும் வணக்கத்துடனும். bye bye
ஒரு வாக்காளர் ஒரு முறை தான் பட்டனை அழுத்தலாம் எனும் போது பல திருடர்களில் எந்த திருடனுக்கு எதிர் வாக்கு அழுத்துவது என்ற சிக்கல் வரலாம். எனவே மேலே உள்ள அன்பர்களின் கருத்து படி NOTA தான் தேர்தலில் வெற்றி பெற்றால் தேர்தல் நிராகரிக்கப்பட்டு மறு தேர்தல் வைக்கப்பட வேண்டும். அதே வேட்பாளரை நிறுத்துவதும் நிறுத்தாமல் போவதும் கட்சிகளின் விருப்பம். NOTA வாக்குகள் அதிகமானால் வேட்பாளரை மாற்ற வேண்டும் என்பது அடிப்படை மனித உரிமைகளுக்கு முரணானது.
NOTA looks something which can spark the change, we can claim at least how many people are against those candidates, and so called upper middle class who refrains from voting, blaming all the parties are corrupted cant stay away from polling, if so, they will have no rights to enjoy any facilities of this country without doing basic responsibility for democra(C/Z)y. NOTA is the first step to increase the polling percentage, those who blame the society, want the changes, can now vote NOTA for possible changes we can see in the future hopefully
முதலில் அனைவரையும் வோட்டளிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவேண்டும்,பிறகு NOTA வை அமுல் படுத்த வேண்டும். கண்டிப்பாக வேட்பாளர்களின் quality வித்யாசபடும்.
//முதலில் அனைவரையும் வோட்டளிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவேண்டும்,பிறகு NOTA வை அமுல் படுத்த வேண்டும். //
What about people who is not in their hometown for long time?
If you have vote in TN and live in Bangalore or Hyderabad for more than a decade. As per govt rules, you are suppose to get ration card, voter id card, voter registration, local address everything in your domicile city. And expected to cast vote in that town. Question is, in city like Bangalore where local kannadigas are probably around 30% and rest are other folks, how will it work to select candidates of local flavor? Even if one wish to vote in TN, you may not get leave in other states as is the case of local elections (for MLA or MP seats). Govt is not even willing for postal votes for citizens, It is a right reserved only for armed forces people and those that are deputed in election duties.
I strongly feed election commission should either allow postal ballots or explore remote voting from far-off places through technology innovation.