திருச்சிராப்பள்ளி வந்திருக்கிறேன்.
நேற்றிரவு கோவிலுக்குச் சென்றிருந்தேன்.
இந்தக் கோவிலைப் பற்றி ஏற்கெனவே இந்த வலைத்தளத்தில் எழுதி இருக்கிறேன்.
இந்தக் கோவிலில் – நடைமுறை வாழ்க்கைக்கு
உதவக்கூடிய நிறைய விஷயங்களை கல்லில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். அவற்றிலிருந்து ஒரே ஒரு பொருளில் உள்ளது மட்டும் கீழே
– ———————–
பெண் குழந்தையின் வளர்ப்பில் ஒரு அப்பாவின் முதல் கடமை என்ன ?
பொதுவாக ஆண் குழந்தைகளுக்கு அம்மாவிடமும், பெண் குழந்தைகளுக்கு அப்பாவிடமும் – ஈடுபாடும், ஒட்டுதலும் அதிகம் இருக்கும்.
ஒரு மகள் பிற்காலத்தில் தன் கணவனைத் தேர்ந்தெடுக்கும் கால கட்டத்தில் – மனதில் தன் அப்பாவைத்தான் “மாடல்” ஆக வரித்துக் கொள்கிறாள். தனக்கு வரப்போகும் கணவன் – தன் அப்பாவைப் போல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள்.
இதில் ஒரு அப்பாவின் கடமையும் பங்கும் என்ன ?
ஒரு சிறந்த ஆண்மகனை அவள் கணவனாகத் தேர்ந்தெடுக்க உதவக்கூடிய அளவிற்கு தகுதியான – ஒரு மாடலாக அப்பா இருந்தால் போதுமே !




Excellent Sir.
எளிதாக சொல்லிட்டீங்க. இங்கே பெண்ட கழட்டுறாங்க.
அத்தனையும் மகிழ்ச்சி …!
அவரவர் குழந்தைகள் தான் மனிதரை
மென்மையாகவும், மேன்மையாகவும் ஆக்குகின்றனர்!
அல்லவா ஜோதிஜி …. ?
trichy vanthathukkum ithukkum enna sampantham…. Mr.
sivaparkavi
இந்தக் கல்வெட்டு திருச்சியில் உள்ள கோவிலில்
இருப்பது தான் சம்பந்தம் நண்பரே !
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
அருமையான பதிவு.
நன்றி.
நன்றி நண்பரே.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
இந்த கல்வெட்டு திருச்சியில் எங்கே இருக்கிறது ?
நண்பர் நவீன்,
திருச்சி கன்டோன்மெண்ட் பகுதியில்,
(கோர்ட்டுக்கு அருகே) உள்ள
ஐயப்பன் திருக்கோவிலில் – இது போல்
இன்னும் பல கல்வெட்டுக்கள் அங்கே உள்ளன.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
தகவலுக்கு நன்றி..