ஹூ ஆர் தி உண்மையான “மேங்கோ மடையன்ஸ்” ….??

ஹூ ஆர் தி உண்மையான “மேங்கோ மடையன்ஸ்” ….??

——————–

நேற்று – காந்தி ஜெயந்தி – காலை 11 மணியளவில் –
டெல்லியின் அனைத்து ஆங்கில தொலைக்காட்சிகளிலும் ஒரே “லைவ்” காட்சி.  

 20 வாகனங்கள் புடைசூழ – தன்னந்தனியாக –இந்த நாட்டின் பிரதமர்
ஜனாதிபதியைச் சந்திக்கச் செல்லுகிறார். சுமார் அரை மணிநேரம் கழித்து
மீண்டும் அதே போன்ற காட்சி “லைவ்”.

அவசரச் சட்டத்தை வாபஸ் பெறுவது
என்கிற முடிவை ஜனாதிபதியிடம் தெரிவித்து விட்டு வெற்றிகரமாகத் திரும்புகிறார்…..
யாரோ செய்த பாவத்திற்கு எந்த சொரணையும் இல்லாமல்
மன்னிப்புக் கேட்டுக்கொண்டு வருகிறார்….

இதற்கு முன்னணியாக ஏற்கெனவே விமானத்தில் திரும்பும்போதே பேட்டியாளரிடம் கூறி விடுகிறார் ” எல்லாரும்
எதிர்பார்ப்பது போல் நான் எல்லாவற்றிலும் மாஸ்டர் இல்லை. எத்தனையோ  ஏற்றத்தாழ்வுகளைச் சந்தித்து விட்டேன் –

இது என்ன பெரிய விஷயம் –
(எப்படி இருந்தாலும் – நான் ராஜினாம செய்வது என்கிற பேச்சுக்கே இடமில்லை…….! ..)

இதன் பின்னணி …..?

முதலில் சுமார் -15 நாட்களுக்கு முன்னர் காங்கிரஸ் “கோர்” கமிட்டி மீட்டிங்கில் –
“அன்னை”யின் உத்திரவுப்படி – முக்கியமாக லாலுவையும், அவரைப் போல்  கிரிமினல் வழக்குகளில் சிறை செல்லவிருக்கும் காங்கிரசுக்கு வேண்டப்பட்ட மற்ற சிலரையும் – சிறை செல்லாமல் கா ப்பாற்றுவதற்காகவே – –

கிரிமினல் அரசியல்வாதிகளைக் காப்பாற்றும் அவசர சட்டத்தைக்
கொண்டு வருவது என்று தீர்மானிக்கப்படுகிறது. இந்த “கோர” கமிட்டியில்
முக்கிய உறுப்பினர்கள் அன்னையைத் தவிர, பிரதமர், ப.சி., ஏ.கே.அந்தோனி, சல்மான் குர்ஷித், கபில் சிபல், குலாம் நபி ஆசாத் ……மற்றும் சிலர்.

இதன் பின்னர் – முறைப்படி அரசின் கேபினட் கமிட்டி 2 முறை கூடி
வழி முறைகளை விவாதிக்கிறது. கடைசியாக பிரதமர் வெளிநாடு செல்லும்
சில மணி நேரங்களுக்கு முன்னர் இரவு 11 மணியளவில், அவசர சட்டம்
கேபினட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டு ஜனாதிபதிக்கு கையெழுத்துக்காக
அனுப்பப்படுகிறது. இந்த கேபினட் கமிட்டி மீட்டிங்கில் கலந்து கொண்டவர்களில்   சிலர் பிரதமர் தவிர, அதே ப.சி. ஏகேஏ., குர்ஷித், கபில் சிபல், குலாம் நபி ஆசாத்

ஆகியோரைத் தவிர – கூட்டணிக்கட்சிகளின் கேபினட் அமைச்சர்களான
சரத் பவார், பரூக் அப்துல்லா மற்றும் சிலர்.

குறைந்த பட்சம் 15 நாட்கள் இந்த செய்தி தொடர்ந்து மீடியாவிலும்,
செய்தி நாடேடுகளிலும், எதிர்க்கட்சிகளாலும் விவாதிக்கப்படுகிறது.
அவசர சட்டத்திற்கு தீவிரமான எதிர்ப்பு கிளம்புகிறது.

பட்டத்து இளவரசர் – இருக்கும் இடமே தெரியவில்லை.
ஆனால் – அவருக்கு விஷயம் தெரியாது என்று சொல்லவே வாய்ப்பில்லை !
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும்,
மத்திய அமைச்சருமான அஜைய் மாக்கன் – அவசர சட்டத்தின் அவசியத்தை  ஆதரித்து – தீவிரமாக பேசிக்கொண்டிருக்கிறார்.

திடீரென்று உள்ளே நுழைகிறார் –
காங்கிரஸ் தலைவி திருமதி சோனியாவின் அருமந்த புத்திரனும்,
காங்கிரஸ் துணைத்தலைவருமான ராகுல் காந்தி –

ஊரையே கலக்கிய டெல்லி காமன்வெல்த் போட்டி – ஊழல்களின்போது –
மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஆயிரம் கோடி ரூபாய் ஊழலின்போது –
லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் 2ஜி அலைக்கற்றை ஊழலின்போது –
ஹெலிகாப்டர் ஊழல் வெளிவந்தபோது –
ராபர்ட் வாத்ரா நில பேர ஊழல்கள் வெளிவந்தபோது –
கணக்கில் சொல்ல முடியாத அளவிற்கு நிலக்கரி ஊழல் வெளிவந்தபோது எல்லாம்
வாயையே திறக்காத ராகுல் காந்தி – திடீரென்று –
“இந்த சட்டம் முட்டாள் தனமானது – கிழித்து குப்பைத் தொட்டியில்
போடத்தான் லாயக்கு ”

– என்று சொல்லும்போது –அவர் கூடவே சொல்ல வருவதும்
சொல்லாமல் போவதும் –
காட்டிக் கொள்ள விரும்புவதும் –

யென்ன யென்ன யென்ன……. ??

தன் “அன்னை”யின் அனுமதியின்றி கோர் கமிட்டியிலோ -கேபினட்டிலோ யாரும் தும்மவோ, இருமவோ கூட முடியாது என்று
இளவரசருக்கு தெரியாதா என்ன ? இந்த அவசர சட்டம் தன் அன்னையின்
உருவாக்கம் தான் என்பது இளவரசருக்கு தெரியாதா ?

இந்த அவசர சட்டத்தை உருவாக்கிய “கோர் கமிட்டியில்” உள்ளவர்கள் –
“கேபினட் மீட்டிங்கில் ” கலந்து கொண்டு
இதை ஒருமனதாக நிறைவேற்றியவர்கள் –
அதை ஜனாதிபதிக்கு அனுப்பிய பிரதமர் –
“இத்தனை பேரும் கிரிமினல்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் –
அல்லது அறிவில்லாதவர்கள் -!!!!!”
( முட்டாள்கள் என்று சொல்வது மரியாதைக்குறைவானது !)

” நான் (ஒருவன் மட்டுமே) அரசியலில் தூய்மைக்காகப் போராடுபவன்” என்றா ?

காங்கிரஸ் கட்சியின் அவசர சட்டம் கடுமையான எதிர்ப்புக்கு
உள்ளாகி இருப்பதையும், ஜனாதிபதி கையெழுத்து போட மறுப்பதையும் –
அவரால் திரும்ப அனுப்பப்படுவதை தவிர்க்கவும் –

தன் மகனுக்கு “ஊழலைப் பொறுக்காத புதிய புரட்சியாளர்” ,
“அரசியலை சுத்தம் செய்ய புறப்பட்டுள்ள இளஞ்சிங்கம் “
என்று ஒரு பின்னணியை உருவாக்கி —

இதுவரை கடந்த ஒன்பதரை ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில்
ஏற்பட்டுள்ள ஊழல், மற்றும் செயலின்மை, குறித்த அத்தனை
புகார்களுக்கும் ம.ம.சிங்க் தலைமையிலான அரசே காரணம் என்று
ஒரு வலுவான தோற்றத்தை உருவாக்கி –

– சாதிக்கப் புறப்பட்டுள்ள இளைஞன் –
ஊழலைப் பொறுத்துக்கொள்ளாத புதிய புரட்சித் தலைவன்
அரசியலில் கிரிமினல்களை பூண்டோடு அழிக்கப் புறப்பட்ட
புதிய அவதாரம் “ராகுல் காந்தி”

என்று இளவரசரின் பர்சனாலிடியை பில்டப் செய்வதற்காக
“அன்னை” இந்த அவசர சட்ட சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு
போடும் மகத்தான திட்டம் ..!!
இதைப் புரிந்து கொள்ளாமல் –
முன்னால் அவசர சட்டத்தை கொண்டு வருவதற்கும் –
பின்னால் இப்போது அதே சட்டத்தை வாபஸ் பெறும் தீர்மானத்திற்கும் –

காங்கிரஸ் “கோர் கமிட்டி” உறுப்பினர்களும்,
மற்ற கேபினட் உறுப்பினர்களும்
எந்தவித எதிர்ப்போ, மறுவார்த்தையோ கூறாமல் –
ஏகமனதாக ஆமாம் சாமி போடுவது எப்படி ? – என்று சிலர் யோசிக்கிறார்கள்.

அய்யா அப்பிராணிகளே –
அவர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டாமா ?
அவர்களும் என்ன
இந்த நாட்டு மக்களைப் போல் “மேங்கோ மடையர்களா ” ?!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to ஹூ ஆர் தி உண்மையான “மேங்கோ மடையன்ஸ்” ….??

  1. nparamasivam1951's avatar nparamasivam1951 சொல்கிறார்:

    நான் என்ன எண்ணுகிறேன் என்றால், கெட்டதிலும் ஒரு நல்லது என்பது போல, நாம் ஒரு மட்டமான அவசர சட்டதிலுருந்து தப்பித்தோம். ராகுலுக்கு நன்றி.
    இந்த விதமான மூத்த அமைச்சர்களுக்கு பதில் ……..
    பரமசிவம்

  2. Srini's avatar Srini சொல்கிறார்:

    sir,
    I was talking to one of my friend, he gives a different scenario. he is from Andhra and is close to kiran team. what is your views on this?
    1. Rahul is surrounded by young turks – they are also called backstage boys . milind deora, sachin pilot, jayram Ramesh etc…. they scripted the whoel drama
    2. young turks don’t like old hats – like diggy, pc, shinde, kapil etc
    3. Sonia is surrounded by old hats – she is influenced heavily by them + ahmed patel
    4. young turks are waiting for an oppty to grab power
    5. there is a power struggle between young turks team and old hats team
    6. Sonia is caught between all these… she is not able to come out of this… that’s why she told power is poison to her son
    7. young turks are advising Rahul to behave like Rajiv.. grab power, bring young team in place, send the old people out…
    even my mind is not accepting this views.. but just thought of sharing this with you.

    long live mango people in banana republic

    regards
    srini

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நன்றி ஸ்ரீநி.

      நீங்கள் கேள்விப்படுவதில் ஓரளவு உண்மையாகவும் இருக்கலாம்
      என்றே தோன்றுகிறது. கீழே விரிவாக எழுதி இருக்கிறேன்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்.

  3. reader's avatar reader சொல்கிறார்:

    //I was talking to one of my friend, he gives a different scenario. //
    Third perception is Rahul is out to teach a lesson to Lalu for insulting congress by offering just 3 seats in the 2009 parliamentary election. Hence he used the opportunity.

    In all this pappu ignored the dignity of the PM’s position (not talking of MMS dignity here) by undermining it when he is abroad.

  4. separa's avatar separa சொல்கிறார்:

    அட அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!!
    வரும் பாராளும்னறத் தேர்தலுக்கு, இளைஞர் ராகூலுக்கு வேண்டியது குறைந்த பட்ச ஊழல் செய்த வேட்பாளர்கள் பீகாரின் தற்பொழுதைய Mr Clean நித்திஷ் குமாருக்கு எதிராக லாலு பாஜகவுடன் இணைந்தால் காங்கிரசுக்கும் இழப்பு. நித்திஷ் குமாருக்கும் இழப்பு பீகார் காங்கிரஸ் வசம் வரவேண்டும். காங்கிரஸ் Mr Clean வேட்பாளர்களையே நிறுத்துகிறது என்று மக்கள் அறியவேண்டும். அதற்காகத்தானே ராஜன் 2008 ல் தயாரித்த அறிக்கையை 2013ல் ப சி மேற்கோள்காட்டி பீகாருக்கு அதிக நிதியுதவி அளித்தார். இனி Mr Clean நித்திஷ் குமார் காங்கிரஸ் வசம் லாலுவை பாஜக ஆதரித்தால் அவர்களை ஊழலுக்கு துணை போகும் கட்சி என்று சொல்லியே வாக்கு பெறலாம் கோடிக்கணக்கில் கொள்ளையடித்து 20 வருடங்களில் அதன் வட்டியே பலகோடிகளை எட்டியிருக்கும் இதற்கு ஒரு 3 அல்லது 5 வருடம் தான் என்றால் லாலுவுக்கு ஒன்றும் நஷ்டமேயில்லை கொள்ளையடிக்கலாம் என்பது வெளிப்படையாக தெரிகிறது. இவர்களின் சொத்தைப் பறிமுதலா செய்யப் போகிறார்கள்? அது நடக்காதவரை இவையெல்லாம் நாடகமே 3 ஆண்டு சிறையிலிருந்து வெளிவரும் இவர் Mr Clean அப்பொழுது கொள்ளையடித்த பணத்தை இவர் மறுபடி முதலீடு செய்து மகனை அரசியலில் புகுத்துவார் பிறகென்ன இப்பொழுது விட்ட சட்டத்திருத்தம் அடுத்த முறை நிறைவேற்றப்படும் அதனால் அவரை இப்பொழுது பலிகடாவாக்குவதில் தவறில்லை..
    அடுத்து காங்கிரஸ் மானிலவாரியாக Mr Clean வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் தமிழகத்தில் கலைஞரைவிட செல்வி Mr Clean எனவே கலைஞரை பலி போடலாம் அதற்கு வழி கான முயற்சிக்கப்படும். ஏர்கனவே முலயாம் சமாளிக்கப்பட்டார் அவரை Mr Clean என்று சி பி ஐ அறிவித்தாயிற்று இதுதான் காங்கிரஸ் கணக்கு அன்னைக்கும் தெரியும் அவரது அடிமைக்கும் தெரியும் அவர் “ஸ்திதபிரக்னர்” எவ்வெவர் தீமையும் பாரார் காங்கிரசைக் காக்க (அட) கருமமே என்று பணியாற்றுபவர்
    பாஜக என்ன கணக்கு போடும்? (இன்னும் மோடி லாலு கைது குறித்து எதுவும் சொல்லவில்லை கவனிக்கவும்) லாலு மட்டுமே குற்றவாளி!! அவரது மகன், மோடி விரும்பும் இளைய தலைமுறை! (குற்றம் செய்ய இன்னமும் வாய்ப்பில்லாதவர்!) அவருக்கு மறைமுகமாக ஆதரவு தந்து Mr Clean நித்திஷ் குமாருக்குக் குடைச்சல் கொடுக்கலாம் லாலுவின் ஆதரவாளர்கள் பாஜகவிற்கு வாக்களிப்பார்கள். (பாஜக மட்டுமென்ன யோக்கியமா?) இப்பொழுது விட்ட சட்டத்திருத்தம் அடுத்த முறை நிறைவேற்றப்படலாம் பீகாரின் அடுத்த முதலமைச்சர் லாலுதான்
    இன்று னாட்டின் “மாங்கா மடையர்கள்” மக்களே என்று தீர்ப்பு கூறி வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி அமைகிறேன்

  5. எல். நாராயணன்'s avatar எல். நாராயணன் சொல்கிறார்:

    திரு.காவிரிமைந்தன் –

    நான் படித்த ஒரு அரசியல் கட்டுரையில் இந்த விஷயம்
    மிகவும் சுவையான நடையில்
    விவரிக்கப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் இது விறுவிறுப்பாக இருக்கும்
    என்பதால் அதிலிருந்து சில பகுதிகளை எடுத்து கீழே எழுதி இருக்கிறேன்.
    தவறு என்றால் பொறுத்துக் கொள்ளவும்.

    ஜனாதிபதி அவசர சட்டத்தை திருப்பி அனுப்பப் போகிறார் என்று தெரிந்ததும்
    அன்னை, அதை திசை திருப்பவும், பிள்ளையை அரங்கேற்றவும், சிங்கின்
    கையாலாகத்தனத்தை வெளிப்படுத்தவும் பயன்படுத்திக் கொள்கிறார்
    என்கிற வகையில் போகிறது அந்த கட்டுரை.

    கட்டுரைப் பகுதி …
    மக்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு தைரியமாகவும், வெளிப்படையாகவும்
    பேசியுள்ள ஒரே மக்கள் தலைவர் ராகுல் காந்தி என்று மஞ்சள் தெளித்து
    மங்கலம் பாட வேண்டாமொ ? இந்த தேசத்து இளைஞர்களின் இணைந்து
    குரல் எழுப்பிய ஆவேச எழுச்சி என்று நாட்டு மக்கள் அத்தனை பேரும்
    ஆர்ப்பரித்து எழுந்து ஆனந்த கும்மி அடிக்க வேண்டியது அவசியந்தானே ?

    நாங்கள் இத்தனை நாள் தேடிக்கொண்டிருந்த தேவன் தெய்வலோகத்திலிருந்து
    இறங்கி வந்து டெல்லியில் நின்று அருள் பாலிக்கிறான் என்று பொங்கலிட்டு
    குலவை பாடிக் குதூகலம் கொள்ள வேண்டியது தானே ?

    பிரதமர் சிங் சுயமாக எதையும் செய்து விடுவார் என்று சுய அறிவுள்ள
    எந்த இந்தியனும் நம்ப மாட்டான். நம்பர் 10, ஜன்பத்திலிருந்து உத்தரவு வர
    தாமதமானால் உச்சா போவதையே லுச்சா செய்து விட்டு அவர் உட்கார்ந்திருப்பது
    உலகத்திற்கே தெரியும். பல சமயங்களில் உத்தரவு திக்விஜய் சிங்,
    அகமது படேல் போன்ற தொண்டரடிப்பொடிகள் மூலமாகத்தான் வருகிறது
    என்பதால், வாசல் பக்கம் வாழைப்பழம் விற்பவரைப் பார்த்தால் கூட
    வேர்த்து விறுவிறுத்துப் போகும் நிலையயிலுள்ளவர். அப்படிப்பட்ட
    அஞ்சானெஞ்சர் இந்த அவசர சட்டத்தை அன்னையின் அருளாசி இல்லாமல்
    நினைத்துக் கூடப் பார்க்க வாய்ப்பில்லை. ஏர்கெனவே அடுத்த தேர்தலில்
    ராகுல்காந்தியின் கீழ் பணி புரியத்தயார் என்று டிக்ளெர் செய்தவர்
    யாருடைய நலனுக்காக இந்த அவசர சட்டத்தைக் கொண்டு வந்திருக்க முடியும் ?
    இவரை நம்பி கட்சியும் இல்லை, ஒரு தொண்டன் என்ன ஒரு வாக்காளர் கூட
    இல்லை. யாருக்காக இவராக அவசர சட்டத்தை கொண்டு வரப்போகிறார்.

    காங்கிரஸ் பீகாரில் லாலுவோடு சேர்ந்தாலென்ன – நித்திசோடு
    சல்லாபித்தாலென்ன ? பிரதமர் தானாக அவசர சட்டத்தைக் கொண்டு வந்தார்
    என்று மடையனும் கூட சொல்ல முடியாது.

    ராகுல் காந்தி நினைத்திருந்தால் முதலிலேயே அவசர சட்டத்தை தவிர்த்திருக்க
    முடியும். தாயாரின் காதோடு காதாக சொல்லி இருந்தால் காங்கிரஸ் ஆட்சியின்
    மானம் கப்பலேறாமல் தடுத்திருக்க முடியும்.
    இது – அவசர சட்டம் ஜனாதிபதியிடமிருந்து திரும்ப வருகிறது என்று
    தெரிந்த பிறகு எழுதப்பட்ட ஸ்பெஷல் நாடகம்.

    ஆனால் இதற்கப்புறம் கேபினட்டில் இருக்கும் பல அமைச்சர்களும் ராகுல்
    சொல்வது தான் சரி என்று உஜாலாவுக்கு மாறி விட்டார்களெ.
    இவர்கள் ராகுல் வாயைத்திறக்கும் வரையில் அவசர சட்டத்திற்கு வாழ்த்துப்பா
    பாடியது ஏன் என்று மக்களிடம் சொல்லட்டுமே.
    ராகுலின் கருத்தை எதிர்க்கட்சிகளினால் ஜீரனம் செய்ய முடியவில்லை என்கிறார்
    அமைச்சர் வாசன். பல மூத்த காங்கிரஸ்காரர்களெ ஜீரணிக்க முடியாமல்
    பாத்ரூம் வாசலில் கியூ நிற்கிறார்கள் என்பது தான் உண்மை.

    யுபிஏ ஆட்சியில் நடந்த அத்தனை தவறுகளுக்கும் சிங்கின் திறமையின்மையே
    காரணம் என்று திட்டமிட்டு காரணம் காட்டி, அவரைக் கழுவேற்றி விட்டு
    ராகுலைக் களத்தில் இறக்கும் னாடகமே இது. நாடகமோ, பூடகமோ
    சிங்கை பார்த்தால் பாவமாக இருக்கிறது என்பது தான் உண்மை.
    “நல்லவன்னு” சொல்லியெ அடிச்சூட்டாங்க அப்பூ” என்று அழும் வடிவேலு

    நிலைக்கு வந்து விட்டார்.
    எல். நாராயணன்

  6. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    Mr.Manmohan singh is just an employee of central govt and is due for retirement in a few months.Like any other employee at the verge of retiremnt he would not dare to oppose his boss or criticise the organisation at this juncture and spoil his retirement benfits.Just wait for a few more months and he would vanish in to thin air and will neither be seen nor heard ever..But the damage he did by not doing anything would hamper our nation’s growth for many more years..He is the worst thing that has happened to free India

  7. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    இது குறித்து மேற்கொண்டு
    பொதுவாக என் கருத்துக்கள் கீழே –

    ————————-

    ராகுல் காந்தியைப் பொறுத்த வரையில் – முழு அதிகாரம்
    அவர் கைக்கு வருவதாக இருந்தால் மட்டுமே
    அவர் பிரதமர் பதவியேற்கவும், செயலாற்றவும்
    வர விரும்புகிறார். அவரைச் சுற்றி இருக்கும் இளைய தலைமுறையோ –
    எப்படியாவது ராகுல் பொறுப்பேற்க வேண்டும் என்று விரும்புகிறது.
    அவர்கள் பதவிக்கு வரவும், பலம் பெறவும் அதுதான் உதவும் ..!

    அம்மாவிற்கும் பிள்ளைக்கும் போட்டியோ- பிணக்கோ இருப்பதாகத்
    தெரியவில்லை. அடுத்த தேர்தலில் ஜெயித்தாலும் சரி –
    ஜெயிக்காவிட்டாலும் சரி – எப்படி இருந்தாலும் கட்சி தங்கள்
    கையை விட்டு போகக்கூடாது. கட்சி அதிகாரம் தங்களிடத்திலேயே
    தொடர்ந்து இருக்க வேண்டும் என்பது அவர்கள் விருப்பம்.

    அதிகம் சிரமம் இல்லாமல் ஓரளவு சுயபலத்திலேயே அரசு அமைக்கும்
    அளவிற்கு காங்கிரஸ் பலம் பெற்றால் மட்டுமே ராகுல் காந்தி பிரதமராகப்
    பொறுப்பு ஏற்கக்கூடும். கூட்டணியை எல்லாம் சமாளிக்கும் சாமர்த்தியமோ,
    பொறுமையோ அவருக்கு இல்லை என்பதால் – அந்த வேலையை
    அன்னையே தொடர்ந்து செய்யக்கூடும்.

    அரசு அமைக்க சிறிதும் வாய்ப்பு இல்லாமல் போனால் – தோற்றதற்கான
    பழியை ம.மோ.சி. யின் செயல் திறமையின்மை மேல் போட்டு விட்டு
    கட்சியை தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்வார்கள்.

    எப்படி இருந்தாலும் – ராகுல் காந்தியின் இமேஜ் சரியாமல்
    பார்த்துக்கொள்வது தான் அவர்களின் இப்போதைய முக்கிய குறிக்கோள்.
    ———————-

    நேற்று இளவரசர்- குஜராத்தில் – மீண்டும் திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.

    தான் பயன்படுத்திய வார்த்தைகள் வேண்டுமானால் கடுமையாக
    இருந்திருக்கலாம். தான் சொல்லியவை தன் இதயத்திலிருந்து வந்தவை
    என்றும் பெரும்பாலான காங்கிரசாரின் எண்ணங்களின் பிரதிபலிப்பும்
    அது தான் என்றும் கூறி இருக்கிறார்.

    அது சரியாகவே இருக்கட்டும்.

    ஆனால் – அவர் அதை எங்கே சொல்லி இருக்க வேண்டும் …?
    நாலு சுவர்களுக்குள் கட்சியின் ஆலோசனை கமிட்டி கூட்டத்தில்.

    எப்போது சொல்லி இருக்க வேண்டும் …?
    முடிவு எடுக்கப்படும் முன்னர். ஆர்டினன்ஸ் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும்
    முன்னரே. (அதற்கு நிறைய வாய்ப்புகளும், அவகாசமும் இருந்தது )

    கட்சி ஒரு முடிவை எடுத்து – அதன் அடிப்படையில் அவசர சட்டமும்
    பிறப்பிக்கப்பட்ட பிறகு – அதை எதிர்த்து, ஏளனம் செய்து
    இவர் பேசியது – கட்சியின் கட்டுப்பாட்டை மீறிய செயல் தானே ?

    இதையே வேறு யாராவது செய்திருந்தால் –
    பொறுத்துக் கொண்டிருப்பார்களா ?
    முடிவைத்தான் மாற்றிக் கொண்டிருப்பார்களா ?

    துரதிருஷ்டவசமாக – இந்த கேள்விகளை யாருமே – மீடியாக்காரர்கள்
    உட்பட – அவரிடமோ, அன்னையிடமோ – கேட்க மாட்டேன் என்கிறார்கள்..!!

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

  8. separa's avatar separa சொல்கிறார்:

    எது எப்படியானால் என்ன? யார் எப்பொழுது என்ன செய்தார்கள் என்பதைவிட, நல்லது நடந்தது! நன்றாகவே நடந்தது! நடக்க இருப்பதுவும் நன்றாகவே நடக்கும். இது அவர்களின் உட்கட்சி விவகாரம் இச்சட்டம் நிறைவேறாததால், குற்றவாளிகள் தண்டனை பெறுகிறார்கள். இதுதானே நாம் விரும்பியதுவும்; பின் நாம் ஏன் கவலைப்படவேண்டும்? பின் ஏனிந்த புலம்பல்? இப்பொழுது செய்ய வேண்டுவதெல்லாம், குற்றவாளிகளின் சொத்தையும் பறிமுதல் செய்ய வேண்டுமெனப் போராடுவதுதான் செய்வோமா? அப்பொழுதுதான் இச்செயல் முழுமையடையும். திரு சோ சொல்வது போல “அப்பீல்” செய்ய வாய்ப்பிருக்குமானால், இந்த சட்டம் நடைமுறைபடுத்தாமலே இத்தண்டனைகள் நீர்த்துப் போகும் டெல்லி கற்பழிப்பு, வன்புணர்ச்சி கொடூரமான கொலை என்ற வழக்கிலேயே ஒருவர் சிறுவர் என்ற வகையில் 9 மாதங்கள்தான் சிறையிலிருப்பார்;மற்றொருவர் “B.A படிப்பதால் தண்டனை ரத்தாகும் போலிருக்கிறது மற்ர இருவரின் குற்றம் அத்தகு கொடூரமானதல்ல அவர்கள் உடந்தையாகவே இருந்தார்கள் என்று வாதாடி மரண தண்டனை ரத்து செய்யப்படலாம். இது கொடூரமான ஒன்று என்றறிந்தும்,மரண தண்டனை மனிதநேயத்திற்கு எதிரானது என்று ஒரு பெண்ணே கட்டுரை எழுதும் அளவிற்கு நிலைமை இருக்கிறது.
    “The brutality that brings their crimes into the ambit of the rarest of rare is bred into their lives. They have gone to bed hungry as children, suffered illnesses without medicine, defecated in the open, been savaged on the whims of adults, treated like dirt. Compassion has never touched them. Life has beaten sensitivity out of them. Men forced to live like brutes will kill like brutes. When these men, society’s victims, find a victim, they take a lifetime’s frustrations out on him or her. Their murders and rapes are unlikely to be refined. Their brutality might appal a court and nauseate the middle class, by whose standards they are judged, but it is a product of what the community has made of them. This is what should shock the collective conscience of the community.” என்றொரு பெரிய மனிதர் கூட எழுதுகிறார். அந்த வகையில் இந்தக் குற்றமெல்லாம் கால்தூசு

  9. ganpat's avatar ganpat சொல்கிறார்:

    //என்றொரு பெரிய மனிதர் கூட எழுதுகிறார்.//
    அவர் எழுதியிருப்பது முற்றிலும் உண்மை separa.
    பிறந்து முதல் சமுதாயத்தால் நிராகரிக்கப்பட்டவனுக்கு அதன் மேல் என்ன
    அக்கறையோ அன்போ இருக்க முடியும்?
    எந்த அரசு மருத்துவ மனையில் ஏழைகளுக்கு முறையான கவனிப்பு காட்டப்படுகிறது?
    எந்த அரசு பள்ளியில் ஏழைகளுக்கு முறையான கல்வி அளிக்கப்படுகிறது.?
    யார் செய்த புண்ணியமோ நம் நாட்டில் மிக்ககுரைறைவான அளவிலேயே ஏழைகள் சமூக விரோதிகளாக மாறுகிறார்கள்.அதையே சமாளிக்க நம்மால் முடிவதில்லை.
    அத்தனை பிரச்சினைகளுக்கும் மூல காரணம் ஊழல் மலிந்த அரசு,சுயநலமிக்க மக்கள்.

    • செந்தில்குமார்'s avatar செந்தில்குமார் சொல்கிறார்:

      மன்னிக்கவும்!

      எந்த அரசு பள்ளியில் ஏழைகளுக்கு முறையான கல்வி அளிக்கப்படுகிறது.?
      என்ற வாக்கியமே தவறானது.
      அரசுப்பள்ளிகளில் படித்து நிறைய மாணவர்கள் உயர்ந்த நிலையை அடைவதில்லையா?
      பெரும்பாலான அரசுப்பள்ளிகளில் தான் உண்மையான அக்கறையுடன் பாடங்கள் கற்பிக்கபடுகின்றன.
      தனியார் பள்ளிகளில் பணம், பணம், பணம் ஒன்றே தான் குறி.
      பணத்தை, பணத்தை அளிக்கும் அட்மிஷனை மனதில் வைத்து பாடங்கள், கேள்வி-பதில்களை மனப்பாடம் செய்து மதிப்பெண் பெரும் கோச்சிங் மட்டும் தான் நடைபெறுகிறது.
      அரசுப்பள்ளிகளில் தான் ஏழைகளுக்கு முறையான கல்வி அளிக்கப்படுகிறது!

      நன்றி!
      செந்தில்குமார்,
      அரசுப்பள்ளி ஆசிரியர்.
      திருச்சிராப்பள்ளி

      • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

        Sorry Mr.Senthilkumar.
        I never praised the private schools or the styles in which they are run.Like your self there are good persons in politics,Govt offices too but they are insignificant exceptions.
        If most of them are like you then our country would not have been in a pathetic state like now.
        However I thank you for highlighting this and my regards also to you.Pl keep it up.

  10. Srini's avatar Srini சொல்கிறார்:

    very good post, lots of different views… very interesting to read… like how paapu said that he spoke from his heart, i am saying from my heart… something is missing this time… I was trying to see what it is…nobody knows each other here.we havent seen each other.. even i don’t know the real name of kaveri mainthan, even other regular commentators…. yes, I am missing venkatramani…whatever be his comments, in the arusuvai unavu that we are getting here, oru suvai is missing…. God bless you sir

    • separa's avatar separa சொல்கிறார்:

      இதனைச் சரியென்று சொல்வது ஒரு பண்பட்ட சமுதாயத்தின் அடையாளமல்ல.
      The brutality that brings their crimes into the ambit of the rarest of rare is bred into their lives. They have gone to bed, hungry as children, suffered illnesses without medicine, defecated in the open, been savaged on the whims of adults, treated like dirt. Compassion has never touched them. Life has beaten sensitivity out of them. – இது சோமாலியா, எதியோப்பியா போன்ற நாடுகளுக்குப் பொருந்தும். ஆனால் இந்தியா இன்னமும் அந்த நிலைக்குத் தள்ளப்படவில்லை என்பதுடன், குற்றம் புரிந்தவர்கள், தாக்குதலுக்கு ஆளான அப்பெண்ணைப் போலவே, ஒரு சராசரி நடுத்தர வர்க்கத்து குடும்பம் என்ன வசதிகளை அனுபவிக்க முடியுமோ,அவற்றை அனுபவித்துக் கொண்டுதானிருந்திருக்கிறார்கள்.. இவர்கள் இது போல பேருந்தில் பயணம் செய்யும் பொழுதே இந்தத் தொழிலுக்கு பழக்கமான பல பெண்களை அனுபவித்திருக்கிறார்கள் என்றும் இந்த முறை மாட்டிக் கொண்டவள் ஒரு குடும்பப்பெண் என்பதால் பிரச்சினையில் சிக்கிக் கொண்டார்கள் என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக கூட்டமாக ஒரு தவறு செய்தால், எளிதில் தப்பிக்கலாம் என்றொரு எண்ணம் இந்த சமுதாயத்தில் நிலவுகிறது. எனவே மேற்சொன்ன வரிகள் இவர்களுக்குப் பொருந்தாது. அவர்களை இந்த நிலைக்குத் தள்ளியது “மதுப்பழக்கம், “இளமைத் திமிரு” மற்றும் இவர்களுக்கு ஆதரவாகப் பேசும் சில மனநிலை சரியில்லாதவர்களும் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.
      Men forced to live like brutes will kill like brutes. –When these men, society’s victims, find a victim, they take a lifetime’s frustrations out on him or her. Their murders and rapes are unlikely to be refined. மிருகம் போல நடந்து கொள்பவரை, திருத்த முடியாது என்றொரு நிலையிருக்குமானால், அம்மிருகத்தைக் கொல்வதில் தவறில்லை வெறி பிடித்திருக்குமோ அதனால் கடித்தால் உயிருக்கு ஆபத்து வருமோ என்ற ஊகத்திலெயே, தெரு நாய்களைக் கொல்ல இந்த சமுதாயம் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்குச் சற்றும் குறையாத ஆனால், ஒரு பெண்ணைக் கற்பழித்ததோடுமட்டுமல்லாமல்,அவள் உள்ளுறுப்புகளை கைகளால் வெளியே எடுக்க வேண்டுமெனில், அது மிருகத்தனம் இந்த மனித மிருகங்களைக் கொல்வதில் தவறில்லை. இங்கு சட்ட ரீதியாக மட்டுமல்ல, மனிதாபிமான அடிப்படையிலும் நடந்த குற்றம் மிருகத்தனமானது என நிரூபித்த பின், இதில் இருவேறு கருத்து கிடையாது.
      Their brutality might appal (UPSET) a court and nauseate the middle class, by whose standards they are judged, but it is a product of what the community has made of them. – இந்த சமுதாயத்திற்கென ஒரு சட்டம், விதி என்றிருக்கையில், அதனை மீறுபவர்களுக்குத் தண்டனை தரப்பட வேண்டும் அது முடிவான தீர்வல்ல. இதனால் வேறெங்கும் இது போலக் குற்றங்கள் நடைபெறாது என்றெல்லாம் எண்ணினால் அது அறிவீனம். ஆனால் இது போன்ற குற்றங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது. வெறி பிடித்த ஓநாய்கள் இன்னமும் உலவிக் கொண்டுதானிருக்கிறது.
      This is what should shock the collective conscience of the community.- உண்மையே ஆனால் இந்த ஒரு குற்றத்தை மட்டுமே நாம் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டதால், இது சரியா தவறா என்று விவாதிக்க வேண்டுமேயல்லாமல், பொதுவான கருத்தைச் சொல்லி இக்குற்றத்தின் கொடூரத்தை மறக்கவோ, மறைக்கவோ முயலவேண்டாம். நாளை இது நம் குடும்பத்திற்கே நடக்கலாம்.
      பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியையும் மாற்றுக் கோணத்தில் ஆய்வது அறிவுஜீவிகளின் அடையாளம் என்ற் ஒரு எண்னத்தில், சிலர் இதனைக் குற்றமேயில்லை மனித மனம் பழுதடைந்த நிலை என்று கூறினால், அவர்கள் இருக்க வேண்டிய இடம், அறிவுக் குறைவான மக்கள் வசிக்கும் இந்த நாடல்ல.

      • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

        சும்மா உணர்ச்சி வசப்படுவதில் பயனில்லை sepra.
        இங்கு விவாதிக்கப்படுவது இரண்டு..
        நடந்த குற்றத்திற்கு என்ன தண்டனை.?
        குற்றம் நடந்தது ஏன்?
        இரண்டையும் போட்டு நீங்கள் குழப்பிக்கொள்கிறீர்கள்.

        சரி இந்த நான்கு குற்றவாளிகளை தூக்கிலிட்டு விடுவோம்.தன மகளின் சினேகிதியை கற்பழித்து அவள் குடும்பத்தை நிர்மூலம் ஆக்கிய ரதொரை என்ன செய்தோம்?
        //The Ruchika Girhotra Case involves the molestation of 14-year-old Ruchika Girhotra in 1990 by the Inspector General of Police Mr. Shambu (S.P.S. Rathore) in Haryana, India. After she made a complaint, the victim, her family, and her friends were systematically harassed by the police leading to her eventual suicide. On 22 December 2009, after 19 years, 40 adjournments, and more than 400 hearings, the court finally pronounced Rathore guilty under Section 354 IPC (molestation) and sentenced him to six months imprisonment and a fine of Rs 1,000. The CBI had opposed Rathore’s plea and had sought an enhancement of his sentence from six months to the maximum of two years after his conviction. Rejecting his appeal against his conviction by a Central Bureau of Investigation (CBI) special court, Chandigarh District Court on 25 May sentenced the disgraced former police official to one and a half years of rigorous imprisonment, enhancing his earlier six-month sentence and immediately taken into custody and taken to the Burail prison.[1][2] On 11 November 2010, the Supreme Court granted bail to S P S Rathore on the condition that he should not leave Chandigarh.//

        மீண்டும் சொல்கிறேன்.அந்த நான்கு பேர் அந்தஸ்து உள்ளவர்களாக இருந்திருந்தால் இந்நேரம் FIR கூட பதிவாகி இருக்காது.

        எப்போ நம் நாட்டில் பிச்சைக்காரனுக்கும் பிரதமருக்கும் சட்டமும் தண்டனையும் ஒன்று என்ற நிலை வருகிறதோ அன்று நாம் பேசுவோம்.நன்றி.

    • எழில்'s avatar எழில் சொல்கிறார்:

      கவலை அற்க ஸ்ரீநி. SEPARA எழுதுவது Venkatramani எழுதுவது போலவே இருக்கிறது. (இதனை Venkatramain கருத்துக்களின்பால் கொண்ட புகழுரையாக கொள்ளப்படல் வேண்டும்.)

      • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

        அப்புறமென்ன – நண்பர் ஸ்ரீநி யின் .. குறை தீர்ந்தது !!??

        வெங்கட்ரமணி இங்கே இருக்கிறார் என்பதை
        நான் மட்டும் தான் உணர்கிறேன் என்று நினைத்தேன்…..!!
        எழில் அழகாகக் கூறி விட்டார் …!!

        -வாழ்த்துக்களுடன்,
        காவிரிமைந்தன்

  11. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    ஏன்? ஸ்ரீநி,Ganpat போன்ற பெயர்களிலும் “அவர்” இங்கு இருக்கலாமே? 😉

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.