“அமுக்கப்பட்டு” விட்டதா விவகாரம் –
“அன்னை”யைப்போல் பேசியவர் யார் ……??
————
இந்தியாவின் தலைமை வழக்குரைஞர் – அட்டர்னி ஜெனரல்
(குலாம் எஸ்ஸாஜி) வாஹன்வதி அவர்களுக்கு பாவம் அன்று
போதாத நேரம்….!
செப்டம்பர் மாத துவக்கத்தில் ஒரு நாள் – ஒரு பெண்மணியிடமிருந்து
தொலைபேசி அழைப்பு ஒன்று வருகிறது. தான் திருமதி சோனியா காந்தி
அவர்களின் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகக் கூறுகிறார்.
(திருமதி சோனியா காந்தி அவசர மருத்துவ சிகித்சைக்காக
செப்டம்பர் 1 ந்தேதி அமெரிக்கா சென்றிருப்பதாக
ஏற்கெனவே பத்திரிகைத் தகவல்கள் கூறி இருந்தன ! ).
அடுத்து சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு தொ.பேசி அழைப்பு. பேசுபவர் –
தன்னை திருமதி சோனியா காந்தி என்றும், தான் நியூயார்க்கிலிருந்து
பேசுவதாகவும் சொல்லிக்கொள்கிறார். அவர் பேசும் தோரணையும்
குரலும் கிட்டத்தட்ட திருமதி சோனியா காந்தி அவர்களை பிரதிபலிக்கிறது !
பேசியவர் – திரு வாஹன்வதியிடம், அவரது சமீபத்திய செயல்பாடுகள் –
பல முக்கிய வழக்குகளை அவர் கையாளும் விதம் –
முக்கியமாக நிலக்கரி ஊழல் சம்பந்தப்பட்டவை –
தமக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும்,
-எனவே அவர் இவற்றிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது என்றும்
அவர் தன் பதவியிலிருந்து விலகுவதைப் பற்றியும் யோசிப்பது நல்லது
என்றும் கூறி இருக்கிறார்.
கலவரமாகிப் போன அட்டர்னி ஜெனரல், சில சீனியர் காங்கிரஸ்
தலைவர்களிடமும், சட்டத்துறை அதிகாரிகளிடமும் இது குறித்து
அவசரமாக கலந்து பேசி இருக்கிறார். ஆனால் – அவர் கலந்து பேசியவர்கள்,
திருமதி சோனியா காந்தி இது போல் நேரடியாக யாரிடமும் பேசும்
வழக்கம் உடையவர் அல்ல என்றும் பேசியவர் அவராக இருக்க
வாய்ப்பில்லை என்றும் கூறி இருக்கிறார்கள்.
பின்னர், ஏஜி இது குறித்து சட்ட அமைச்சரிடமும், உள்துறை அமைச்சரிடமும் கலந்து பேசி இருக்கிறார். விளைவாக இது குறித்து விரைவாக விசாரணை நடத்தி உண்மையை கண்டறியும்படி சிபிஐ பணிக்கப்பட்டு இருக்கிறது.
சட்ட அமைச்சர் கபில் சிபல் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க
விரும்பவில்லை. உள்துறை அமைச்சர் ஷிண்டே இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மட்டும் கூறி இருக்கிறார்.
இதன் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமான
காரியமாகத் தெரியவில்லை.
ஏஜி யின் தொலைபேசியில் காலர் ஐடி இருக்கும்.
இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை. பேசியவர் நியூயார்க்கிலிருந்து
பேசுவதாகச் சொல்லி இருக்கிறார். வெகு சுலபமாக எங்கிருந்து
அழைப்பு வந்தது, சம்பந்தப்பட்டவர்கள் யாரென்பதை போலீஸ் நினைத்தால் கண்டு பிடித்து விடலாம்.
இதன் பின்னர் சில விவரங்கள் தெரியவந்துள்ளன.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவரும்,
சட்டத்துறையைச் சேர்ந்த ஒரு சீனியர் அதிகாரியும் சேர்ந்து,
பலகுரலில் – முக்கியமாக திருமதி சோனியா காந்தியைப் போல் –
பேச வல்ல –
பொதுத்துறையில் பணி புரியும் ஒரு பெண்மணியை
இதுபோல் பேச வைத்துள்ளனர் என்றும் –
சிபிஐ விசாரணையில் தெரிய வந்திருப்பதாகத் தெரிகிறது.
சாதா போலீசிலிருந்து – சிபிஐ போலீசுக்கு வழக்கை மாற்றுவதாக
அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த வழக்கு பின்னர்
சிபிஐ யிலிருந்து டெல்லி போலீசுக்கு மாற்றி விடப்பட்டிருக்கிறது.
(டெல்லி போலீஸ் – மத்திய உள்துறை அமைச்சகத்தின்
கட்டுப்பாட்டுக்குள் வருகிறது …!)
ஆனால் – டெல்லி போலீஸ் இதுவரை வழக்கு எதுவும் பதிவு
செய்ததாகத் தகவலில்லை-
செப்டம்பர் துவக்கத்தில் நிகழ்ந்த சம்பவம்.
செப்டம்பர் மாதம் முடிந்து விட்டது.
மிக முக்கியமான மோசடி- அச்சுறுத்தல் சம்பவம் இது.
நாட்டில் மிக உயர்ந்த பதவியில் இருக்கும் ஒருவரைபோல் பேசி,
ஒரு மிக முக்கியமான ஊழல் வழக்கில் தலையிட
முயற்சி நடந்திருக்கிறது.
இதை நிகழ்த்தி இருப்பவர் – காங்கிரஸ் கட்சியிலேயே
முக்கிய பொறுப்பில் இருப்பவர் என்றும் தெரிகிறது.
இப்படி பேசி, ஏஜியை மிரட்ட முயன்றவர்களின் நோக்கம்
எதுவாக இருக்க முடியும் …? நிலக்கரி ஊழல் விவகாரத்தை
சுப்ரீம் கோர்ட்டில் கையாள, அவர்கள் விரும்பும் ஒருவரைக்
கொண்டு வர செய்யப்பட்ட முயற்சியாக இருக்கலாம்…!
இவ்வளவு பெரிய மோசடி முயற்சி ஒன்று நடந்திருக்கும்போது –
மேல் நடவடிக்கை எதுவும் இல்லாமல் –
கிணற்றில் போட்ட கல்லாக விஷயம் இருப்பது எதனால் ..?
காங்கிரஸ் கட்சித் தலைமை எதுவுமே நடக்காதது போல்
மௌனமாக இருப்பது எதனால் ? தலைமையின் பெயரை வேறு
பயன்படுத்தி இருக்கிறார்கள்…!
சம்பந்தப்பட்டவர்கள் யார் என்று தெரிந்து தான் சும்மா இருக்கிறார்களா ?
இந்த விஷயம் அப்படியே அமுக்கப்பட முயற்சிகள் நடக்கின்றனவா …?
ஏன்……. ??? இதன் பின்னணி என்ன ….?




அட போங்க சார், ராணுவத்தினர் 2 (5?) பேர் தலையை உள்ளே வந்து வெட்டி எடுத்துட்டு போயிருக்கிறதே நம்ப அரசாங்கம் ஒன்னுமில்லைன்னு சொல்லிடிச்சி. நம்ம ‘ஆக்ரோஷமான’ பிரதமரை கிராமத்து பொம்பளைனு சொன்ன நவாஸ் ஷெரிஃபுடன் விருந்து சாப்டுறார் அந்த கிராமத்து பொம்பளை. சைனா தாராளமாக நாலா பக்கமும் உள்ளே வந்து பிக்னிக் இருந்துட்டு போறான். இது எதை பற்றியும் கவலைப் படாம காங்கிரஸ் கும்பல் சம்பந்தமில்லாத ஏதேதோ பேசிக்கிட்டு திரியுது. (திரு வெங்கட்ரமணி இதெல்லாம் நமது இந்திய நாட்டில் நடக்கவே இல்லை அல்லது இதுக்கும், பிரதமருக்கும், சோனியாவுக்கும் என்ன சம்பந்தம் என்று கூட கேட்கலாம்) அதுக்கு அப்புறம் யார் என்ன பண்ணா இந்த அரசாங்கம் கவலை பட போகுது?
நான் எண்ணியதை திரு அசோக் அவர்கள் அப்படியே தெரிவித்து உள்ளார்.
N.Paramasivam