புதிய இலட்சிய – புரட்சித் தலைவர் …!!!

புதிய இலட்சிய – புரட்சித் தலைவர் …!!!

rahulgandhi
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது.

அனைத்து ஊடகங்களும் இதைப்பற்றி மாறி மாறி அனைத்து
தரப்பினரிடமும் விவாதித்து களைத்து விட்டன.

கொள்ளு புகழ் லாலு மற்றும் சில புகழ்பெற்ற
கூட்டணி கிரிமினல்களை
காப்பாற்ற என்ன வழி என்று கூட்டணிக்கட்சிகளிடையே
காங்கிரஸ் கலந்தாலோசனையும் நிகழ்த்தி விட்டது.

பல நாட்களுக்கு முன்னரே “அன்னை” சோனியா காந்தி,
ம.ம.சிங்க், ப.சிதம்பரம், கபில் சிபல், வீரப்பமொய்லி,
சுஷில் ஷிண்டே போன்ற மூத்த – முதிய காங்கிரஸ் தலைகளை
கொண்ட காங்கிரஸ் “கோர்” கமிட்டி கூட்டத்திலும் இது குறித்து
விவாதித்து கிரிமினல்களைக் காக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு
விரோதமாக ஒரு சட்டம் கொண்டு வருவது என்று
தீர்மானிக்கப்பட்டு விட்டது.

பின்னர் ராஜ்ய சபாவிலும் ஒரு மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.
பல கட்சிகள் எதிர்த்ததால் –
அது “செலெக்ட் கமிட்டி” பரிசீலனைக்காக அனுப்பப்பட்டது.

பின்னர் மசோதா பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு,
நிறைவேற்றப்படும் முன்னர் – கொள்ளு லாலுவின் வழக்கில்
செப்டம்பர் 30 ந்தேதி தீர்ப்பு வந்து விடுமென்று பயந்து,
அந்த “ராஜ-மாதா” விசுவாசியைக் காக்க வென்றே ஒரு அவசரச் சட்டத்தை
கொண்டு வருமாறு “அன்னை” உத்திரவிட,
அமெரிக்கா போகும் முன்னர் அவசர அவசரமாக இரவு 11 மணிக்கு
கேபினட் கூட்டத்தைக் கூட்டி, அவசர சட்டத்திற்கு “அப்ரூவல்” வாங்கி
ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.

ஜனாதிபதி 3 நாள் தெற்கே வந்திருந்ததால் – அவசர சட்ட மசோதா
(அதிருஷ்டவசமாகவோ – திரதிருஷ்டவசமாகவோ )
ராஷ்டிரபதி பவனில் காத்திருக்க நேர்ந்தது.

ஜனா. திரும்பியதும் திரும்பாததுமாக – பாஜக அவரைச் சந்தித்து
மசோதாவில் கையெழுத்து போட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டது.

ஆம் ஆத்மி – அர்விந்த் கெஜ்ரிவாலும் ஜனா. விற்கு கையெழுத்து
போட வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அதற்குள்ளாக டெல்லியைச் சேர்ந்த சர்மா என்பவர் அவசர சட்டத்தை
ஜனா. ஏற்க தடை விதிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு
தாக்கல் செய்தார்.

நாடெங்கும் அனேக செய்தித்தாள்களும், தொலைக்காட்சி மீடியாக்களும்
இந்த அவசர சட்டத்திற்கு எதிராக கருத்தும், கண்டனமும் தெரிவித்தன.

டெல்லி திரும்பிய ஜனா. ஜாக்கிரதையுணர்வுடன் அரசாங்கத்திடம்
பல கேள்விகளை எழுப்பினார். இரண்டு கேபினட் அமைச்சர்களை
நேரில் வந்து தனக்கு விளக்கம் அளிக்குமாறு கூறினார்.
இப்போதைக்கு தான் கையெழுத்துப் போட முடியாதென்றும்,
பிரதமர் நாடு திரும்பிய பிறகு அவரிடமும் இது குறித்து விவாதித்த பிறகு
தான் – தான் இதை முடிவு செய்ய முடியுமென்று கூறினார்.

இத்தனையும் நிகழ்ந்த பிறகு
மக்கள் அனைவரும்,
அனேகமாக எதிர்க்கட்சிகள் அனைத்தும்,
அனைத்து தொலைக்காட்சி மீடியாக்களும் –
இந்த அவசர சட்டத்திற்கு எதிராக கிளம்பி விட்டார்கள்
என்பதை அறிந்த பிறகு –

ஜனாதிபதியும் இந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல்
திருப்பி அனுப்பி விடுவார் என்பதை அறிந்த பிறகு –

திடீரென்று கிளம்பினார் புதிய இலட்சிய – புரட்சித்தலைவர்…..
டெல்லியில் ப்ரஸ் க்ளப்பில் – காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்
அஜய் மாக்கன் அவசர சட்டத்தின் அவசியத்தைப் பற்றி
செய்தியாளர்களுக்கு விளக்கிக்கொண்டிருப்பதை அறிந்தார்.

அறிவிப்பு இல்லாமல் வந்த புயலைப்போல் திடீரென்று
சொல்லாமல் கொள்ளாமல்
செய்தியாளர் கூட்டத்தில் நுழைந்தார்.
“அவசர சட்டம் ஒரு குப்பை – கிழித்து குப்பைத் தொட்டியில்
போடத்தான் லாயக்கு”
“இது வரை அவசர சட்டம் குறித்து அரசாங்கம் செய்தது
அனைத்தும் அபத்தத்தின் உச்ச கட்டம் – அதாவது “நான்சென்ஸ்”
என்று அறிவித்து விட்டு உடனடியாக வெளியேற முயன்றார்.

செய்தியாளர்கள் அவரிடம் மேற்கொண்டு கேள்விகள் கேட்க
சூழ்ந்து கொண்டபோது – கடன் காரர்களிடமிருந்து தப்பி ஓடும்
கடனாளி போல், செக்யூரிடி உதவியுடன் ஓடி மறைந்தார்…!!!

இத்தனை நாளும் இந்த இளவரசர் எந்த உலகத்தில் இருந்தாரோ
தெரியவில்லை. திடீரென்று வந்தார் –
தனது திருவாய் திறந்து “புரட்சிக் கருத்துக்களை” கூறினார் –
மறைந்து விட்டார் …!!

இப்போது பொது மக்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்கள் …

அவசர சட்டம் “நான்சென்ஸ்” என்றால் –

இதைக் கொண்டு வரச்சொன்ன ” அன்னை சோனியா”,
காங்கிரஸ் “கோர்” கூட்டத்தில் கலந்து கொண்டு
அதற்கு “ஆமாம்” போட்ட திருவாளர்கள் ப.சிதம்பரம்,
ஷிண்டே, கபில் சிபல், மொய்லி, ஏ.கே.அந்தோனி மற்றும்
மூத்த – முதிய காங்கிரஸ் தலைகள்,

அந்த உத்திரவை அப்படியே ஏற்றுக்கொண்டு
அமெரிக்கா போகும் அவசரத்திலும் – மத்திய கேபினட் கூட்டத்தை
கூட்டி, பொறுப்பாக “அப்ரூபல்” செய்த பிரதமர் ம.ம.சிங்க்
ஆகியோர் ….. என்ன ? என்ன ? என்ன ?
புதிய இலட்சிய-புரட்சித் தலைவர் இதையும் கொஞ்சம் அர்ஜெண்டாக
விளக்கினால் – மக்களுக்கும், மீடியாவிற்கும்
அநாவசியமான சந்தேகங்கள் – அவரைப் பற்றி தான் ( !!! )
எழுந்து தவிப்பதை தவிர்க்கலாம்…!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to புதிய இலட்சிய – புரட்சித் தலைவர் …!!!

  1. nparamasivam1951's avatar nparamasivam1951 சொல்கிறார்:

    ஆமாம். புதிய புரட்சி தலைவர் (தனது தூக்கத்தில் இருந்து ) இதோ இதோ பாருங்கள்
    பாருங்கள். எல்லோரும் மோடி பற்றி பேசாமல் என்னையும் (நானும் ரவுடி தான்)
    ஆட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள்.
    பரமசிவம், சென்னை.

  2. Srini's avatar Srini சொல்கிறார்:

    NAMO DELHI SPEECH – HIGHLIGHTS

    India ruled by three governments:
    In Delhi, there are multiple governments – one belonging to ‘maa’, one to ‘beta’ and another to ‘damaad’. Apart from this, there is a coalition government too.

    Happiest Chief Minister of India:
    If anybody is happy here in Delhi, it is the Delhi Chief Minister. She doesnt have any work except ‘cutting ribbons’. If there is a law and order problem, she blames the Centre. She passes the buck up or down. When girls are raped in Delhi, the Delhi CM portrays a very motherly image and then tells the girls to be home by early evening. Any mother, any family can tell their daughters to stay home. What is the CM doing? What is her responsibility?

    CWG SCAM :
    Commonwealth Games has destroyed India’s credibility and robbed it of sportsman’s spirit. One should watch others and learn… like China and Korea, which showcased themselves at the Olympics and attracted global attention. Such games are a vehicle of branding the country in the world. Nations smaller than us are striding ahead today, way ahead than us. It is only us which is marching backward. India, a country of billions, has become the target of jeers.

    Today’s State of Delhi government:
    Delhi government is like the drunkard who stopped buying newspapers after it carried reports on the evil consequences of drinking and his wife forced him to quit liquor. When this government is mired in corruption, instead of finding a solution, it stops functioning. This government is paralyzed.

    Gandhi govt:
    The present UPA government is immersed in ‘Gandhi-worship’. It means they worship the notes which have Gandhi’s image on it. This government is so corrupt that you can’t count the money, you have to weigh it.

    Electricity in Delhi :
    More than 60 years after Independence, smaller countries are doing better than us. We are regressing instead of progressing. People don’t have electricity in this capital city. Even the Prime Minister’s house has generators. There are several places in the capital which do not get electricity for 24 hours despite having numerous power stations producing 20,000 MW power.

    Indian Railways:
    All the UPA’s success stories are run by the states, look at what happens to central departments like Railways. Railways is under Delhi government. In 1980, Railways was 61,000 kilometres and in 31 years, has only seen additional lines of 3000 kilometres. Look at what happened to the aviation sector – loss of 54,000 crores in seven years and a 30,000 crore revival package.

    MMS – The village woman:
    How dare Nawaz Sharif call India’s Prime Minister a village woman? India is a country of 1.2 billion people, we will never tolerate this. Where does Nawaz Sharif get such audacity? Nawaz was making the statement in front of Indian Journalists whom he invited for Breakfast. Why our Journalist didn’t walk out of the place when they hear bad comments about our PM. The PM has no respect within his party, how will he have respect in the world? His own party calls him ‘nonsense’; Congress ke vice president ne PM ki pagdi uchal di hai.

    Obama sharanagathi : T
    he PM was prostrating himself in front of Obama – marketing India’s poverty. He should have stood tall and said we are a young country – what a shame. This poverty you speak of Mr PM, is it a state of mind? That is the way the shahzada (prince) defined it.

    WHEN NAMO FINSISHED HIS SPEECH IN DELHI TALKING ABOUT “SHAHZADA” – THERE IS A POSTING ABOUT “SHAHZADA IN THIS BLOG THRASHING HIM

  3. Asok's avatar Asok சொல்கிறார்:

    பல இந்தியர்களுக்கும் பெரும்பாலுமான இந்திய முஸ்லிம்களுக்கு இவன்தான் தெய்வம். ஆனால் அது மோடி வரக்கூடாது என்பதற்காகவே பேசப்படும் விதண்டாவாதம். இவன்களை ஆதரிப்பவர்களுக்கு நாட்டு பற்றுக் கிடையாது. எனக்கு மனதில் பட்டது என்னவென்றால், பி ஜே பி ஆட்சிக்கு வந்தாலும் நிச்சயமாக மந்திரத்தில் மாங்காய் காய்க்க போவதில்லை. நாட்டில் பாலும் தேனும் ஓடப் போவதில்லை.ஆனாலும் இவன்களை போன்ற ஒரு ஆட்சி இனி இல்லை என் நினைக்கலாம். பி ஜே பி யும் கடந்த முறை ஆட்சியில் இருக்கும்போது 1984ல் சீக்கியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு ஒன்றும் முடிவெடுக்கவில்லை. அல்லது போபால் தொழிற்சாலை விபத்திற்கு ஒன்றும் செய்யவில்லை. ஃபோஃபர்ஸ் விஷயத்திலும் ஒரு ஆணியும் பிடுங்கிவிடவில்லை. ஆகையால் இவர்களும் நமக்கு ஒன்றும் செய்யப் போவதில்லை ஆனாலும் தேசதுரோகம் செயல்கள் இந்த அளவிற்கு இருக்காது. அப்படியெல்லாம் இல்லை இவர்கள் மைனாரிடிக்கு எதிரானவர்கள் என்று சொன்னால் நிரூபிக்காமல் நாம் எதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படியே சொன்னாலும் இந்தக் காங்கிரஸ் இதுவரை இஸ்லாமியர்களுக்கு என்ன செய்துவிட்டது? என்னை பொருத்தவரை காங்கிரஸும், பிஜேபியும் தமிழ் நாட்டு தி மு க, அ தி மு க போல்தான். இவர்கள் ஆளும் போது அவர்களை மறைமுகமாக காப்பாற்றுவது இவர்கள் ஆளும் போது அவர்களை காப்பாற்றுவது இப்படித்தான் இருக்கும். ஆகையால் இங்கே போலவே மத்தியிலும் மாற்றி மாற்றி இவர்களை ஆட்சிக் கட்டிலில் அமர வைப்பது தவறில்லை. அட்லீஸ்ட் நாளடைவில் பரம்பரை ஆட்சி ஒழியலாம் இதனால். எப்படியும் சுஷ்மா, சுப்ரமணியம் சாமி, போன்ற திருடர்களை மோடி தள்ளி வைத்து ஆட்சி செய்ய முடியாதுதான். இதுவெல்லாம் தெரிந்தே நாம் இவர்களை ஆதரிக்க காரணம் நமது எதை திண்றால் பித்தம் தெளியும் என்கிற நிலைமையில் நாம் இருப்பதுதான். இஸ்லாமிய நண்பர்கள் கண்டிப்பாக இதற்கு ஏடாகூடமாக கருத்து தெரிவிப்பார்கள். ஆனால் மனசாட்சியை தொட்டு பேசினால் எல்லாம் நன்மையாக முடியும்.

    • venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

      நண்பரே
      ஆளும் மற்றும் ஆளத் தகுதியுள்ள கட்சிகள் மீதான
      தங்களின் வெறுப்பு புரிகிறது. இவர்கள் இஸ்லாமியர்களுக்கு
      என்ன செய்திருக்கிறார்கள் என்கிற கேள்வி புரியவே
      இல்லை.
      இஸ்லாமியர்களுக்கென்று தனியாக என்ன செய்திருக்க
      வேண்டும் என்பதை விளக்குவீர்களா?
      சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் சாமியை “திருடர்கள்” பட்டியலில்
      சேர்த்துவிட துணிந்தது எவ்விதம்? சுஷ்மா பற்றி ஏதேனும்
      குற்றச்சாடுகள் அதன் உண்மை ஏதேனும் உங்களுக்குத்
      தெரியுமா? தெரிந்தால் விளக்க முடியுமா?

      • Asok's avatar Asok சொல்கிறார்:

        நண்பரே, உங்களின் பல வாதங்களை இந்த பதிவுகளில் படித்திருக்கிறேன். நான் உங்கள் அளவு அனுபவம் இல்லாதவனாக இருப்பேன். நான் வெளி நாட்டில் இருப்பதால் நீங்கள் பத்திரிக்கைகளில் படிக்கும் அளவிற்கு எனக்கு வாய்ப்பும் இல்லை நேரமும் கிடைப்பதில்லை. எனினும் இஸ்லாமியர்கள் காங்கிரஸிடம் என்ன எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை அவர்கள் தான் சொல்ல வேண்டும். ஒரு வேளை Common Civil Code பி ஜே பி வந்தால் கொண்டு வந்து விடுவார்களோ என்ற பயம் கூட இருக்கலாம். காங்கிரஸ் அவர்களுக்கு ஏதாவது செய்திருந்தால் இதற்காகதான் நமது இஸ்லாமிய நண்பர்கள் அவர்களை கண்மூடித்தனமாக ஆதரிக்கிறார்கள் என் எண்ணலாம். ஆனால் புத்திசாலியான காங்கிரஸ் இஸ்லாமிய நண்பர்களை ஏதோ ஒரு உருப்புடாத காரணத்தை காட்டி பயமுறுத்தி வைத்திருக்கிறார்களோ என் எண்ணத்தோன்றுகிறது. இது இந்தியர்களை பிரித்தாளும் சூழ்ச்சியே ஆகும். பி ஜே பி ஆட்சிக்கு வந்தாலும் Common Civil Code கொண்டு வராது. அவர்களும் அரசியல் தெரிந்தவர்கள் தான். அப்படிப் பட்ட சட்டம் வந்தால் வெளி நாடுகளில் வாழும் இந்திய மக்களின் வாழ்வாதாரம் என்னவாகும் என்பதை நிச்சயமாக யோசிப்பார்கள். இதெல்லாம் சுதந்திரம் அடைந்த காலக் கட்டத்தில் செய்திருந்தால் மட்டுமே சாத்தியம். மற்றபடி நீங்கள் சுஷ்மாவையும், சுவாமியையும் சுத்தமானவர்கள் என்று நினைத்தால் நான் ஒன்றும் செய்யமுடியாது. ஏதாவது உங்கள் மனம் கோணும் படி எனது கருத்திருந்திருந்தாலும் அதில் மாற்றங்கள் செய்ய நான் கையாளாகாதவனாக இருக்கிறேன். நன்றி.

        • பந்து's avatar பந்து சொல்கிறார்:

          சுஷ்மா கர்நாடகாவின் ‘அயர்ன் ஓர் சுரங்க புகழ்’ ரெட்டி சகோதரர்களின் பெரிய ஆதரவாளர் என்பது தான் நினைவுக்கு வருகிறது!

  4. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    காங்கிரஸ் தலைமையின் (ஆட்சியின் தலமை எனக் கொள்க)
    இன்னதென்று தெளிவாக தெரிந்த பின்னர், இவ்விஷயத்தில்,
    தனது கருத்தென்று, மசோதாவைக் கிழித்துக் குப்பையில் போடச்
    சொல்லிவிட்டார்.
    பொதுவாக இம்மாதிரி கருத்தெல்லாம் திருவாள்ர். திக்விஜய்
    சிங்தான் சொல்லுவார். அது நாடு முழுக்க பல விதங்களில்
    பிரசுரமாகி, உட்கட்சி எதிர்கட்சி வித்தியாசமெல்லாம் பாராது,
    விமர்சனத்திற்கு ஆளான பின்னர், அது கட்சியின் கருத்தல்ல;
    என் கருத்தென்பார். எல்லாம் ஆறிப் போய்விடும்.
    இம்முறை அந்த டெக்னிக்கை, திரு ராகுலே செய்திருக்கிறார்.
    எதிலும் மாறுதலும் வித்தியாசமும் தேவைப்படுகிறதல்லவா?
    ——
    திரு ராகுலின் உண்மை அபிப்ராயமே அதுதானோ என்னவோ?

    பழம் தின்று கொட்டைப் போட்ட பழைய பெருச்சாளிகளைப்
    புறந்தள்ளிவிட்டு, கட்சியில் எந்த நிலையிலும் “புதுரத்தம்”
    என்பதுதான், ராகுலின் தகப்பனார், ராஜீவின் நோக்கமாக
    இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, கட்சிக்குப் புதுரத்தமெல்லாம்
    தேவைப்ப்டாமல் போய்விட்டது. எல்லாம் தலை கீழ்.

    ராகுலின் கருத்து உள்நோக்கம் கொண்டதில்லை என்கிற
    நிலையில், அதை ஏற்பதில் தவறு இருக்க முடியுமா? ஒரு
    ம்சோதவின் துணை கொண்டு, குற்றப் பின்னணி உள்ளவர்களின்
    பாராளுமன்ற பதவிகள் பாதுகாக்கப்படக் கூடாதென்பதுதானே
    உங்கள் கருத்தும்?????!!!!

  5. reader's avatar reader சொல்கிறார்:

    //. என்ன ? என்ன ? என்ன ?
    புதிய இலட்சிய-புரட்சித் தலைவர் இதையும் கொஞ்சம் அர்ஜெண்டாக
    விளக்கினால் – மக்களுக்கும், மீடியாவிற்கும்
    அநாவசியமான சந்தேகங்கள் – அவரைப் பற்றி தான் ( !!! )
    எழுந்து தவிப்பதை தவிர்க்கலாம்…!//

    விடை இங்கே!

    http://www.theunrealtimes.com/2013/09/29/in-pictures-the-story-behind-rahul-gandhis-ordinance-is-nonsense-remark/

  6. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    நான் என்ன சொல்ல வந்தேனோ அதையே Asok சொல்லி என் வேலையை இலகுவாக்கி விட்டார் நன்றி.
    1 எட்யூரப்பா பற்றிய மோடி கருத்து என்ன?
    2.காவிரி நீர் பங்கீட்டு பற்றிய மோடி கருத்து என்ன?
    3.கருணா ஜெயா பற்றிய மோடி கருத்து என்ன?
    4.swiss வங்கிகளில் பணம் போட்டு வைத்திருக்கும் இந்தியர்கள்
    பட்டியலை மோடி வெளி விடுவாரா?
    5.நதி நீர் இணைப்பு திட்டத்தை இவர் தொடங்குவாரா?
    6.இவர் கூட்டணி ஆட்சி அமைத்து,கூட்டணி கட்சிகள் தத்தம்
    மாநிலங்களில் ஊழல் செய்தால் இவர் எடுக்கும் நிலைப்பாடு என்ன?
    7இவர் பிரதமரானால் முதல்,இரண்டு,மூன்று,நான்கு ஐந்தாம் ஆண்டுகளில் என்னென்ன Visible மாறுதல்களை இந்திய மக்கள் எதிர்பார்க்கலாம்.
    மேற்கண்ட என் வினாக்கள் ஒரு மாதிரிக்காகவே.இன்னும் நிறைய உள்ளன.
    வாலு போச்சு கத்தி வந்தது டும் டும் டும்.

    • Asok's avatar Asok சொல்கிறார்:

      நன்றி கண்பத்,
      இதே விணாக்கள் என்னிடமும் உண்டு. சும்மாவே இவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் ஏதும் செய்ய முடியாது. இந்த நிலையில், இப்போது காங்கிரஸ் நாட்டை வைத்திருக்கும் நிலைமையில் இவர்களும் 20/25 வருடங்கள் ஆண்டால்தான் ஒரு சிறிய மாற்றத்தையாவது கொண்டுவரமுடியும். புண் புரையோடி கிடக்கும் இந்த வேளையில் இவர்கள் மட்டும் என்ன மந்திரம் செய்துவிட முடியும்? நம் வாழ்க்கை இப்படித்தான் என்று தலையில் அடித்துக் கொண்டு போக வேண்டியதுதான்.

  7. maasianna's avatar maasianna சொல்கிறார்:

    I agree with Asok. ragul is best sorry worst acteur. this time we are support Modi

  8. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    nation need a change and is inevitable!
    அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், மோடியை எல்லோரும் மோடி மஸ்தான்னு மந்திரவாதியாக பார்க்குறீங்க. கனவு காண்பது தவறில்லை .
    கடந்த ஆட்சியில் எப்படி எந்த ஆணியையும் புடுங்கவில்லையோ அதேபோல் இப்போது “மீண்டு” வந்தாலும் புடுங்கக்கூடிய ஆணிகள் அனைத்தும் தேவையற்றவையாகவே இருக்கும்.
    ஆனாலும் காங்கிரஸ் எனும் கொள்ளையர்களுக்கு நிச்சயமாக ஒரு பாடம் புகட்டியே ஆகவேண்டும்

    • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

      @சைடை அஜீஸ்
      நண்பரே,
      உண்மையில் நாம் காங்கிரஸ் எனும் கொள்ளையர்களுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்றால் அதற்கு 2019 தேர்தலிலும் ஒட்டு போடாமல் இருப்பதே சரியான வழி.2014 தேர்தலில் அவர்கள் தோற்பது நிச்சயம் என அவர்களுக்கே தெரியும்.எனவே அவர்கள் காத்திருப்பது 2019 தேர்தலுக்கே.

      • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

        சைதை என்பதில் ஏற்பட்ட பிழைக்கு மன்னிக்கவும்

        • venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

          சுப்ரீம் கோர்ட்டோ அல்லது தேர்தல் ஆணையமோ
          காங்கிரஸ் இந்தியாவில் “இனி தேர்தலில் போட்டியிடவே
          கூடாது” என்கிற மாதிரியான ஆணையை/உத்தரவைப்
          பிறபித்துவிட்டால் மகிழ்வீர்கள் போலிருக்கிறது. ஆனால்,
          அது நடக்காது என்பது திண்ணம்.

  9. c.venkatasubramanian's avatar c.venkatasubramanian சொல்கிறார்:

    -politics is the last resort of a scoundrel -Jhonson

  10. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    தற்போதைய சட்டங்களின்படி, தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள்
    தங்கள் சொத்து விவரங்க்களை தேர்தல் ஆணையத்திற்கு தர வேண்டும்.

    இத்துடன் கூட இன்னும் சில விதிகளைச் சேர்த்தால்
    எப்படி இருக்கும் ?

    உதாரணத்திற்கு –

    1) வேட்பாளர்கள் – தங்கள் கடைசி 3 ஆண்டுகளின் வருமான வரி
    அறிவிப்புக் கணக்கை (Income tax Report filed with the Income tax authorities)
    தேர்தல் கமிஷனுக்கு தர வேண்டும். இவை அனைத்தும்
    பப்ளிக் டொமைனில் போடப்பட வேண்டும்.

    2) தங்கள், மற்றும் தங்கள் குடும்பத்தினர் அனைவரது
    அனைத்து வங்கிக்கணக்குகளின் கடைசி 6 மாத ஸ்டேட்மெண்ட்
    தரப்பட வேண்டும்.

    3) இந்தியாவைத்தவிர வேறெந்த வெளிநாட்டிலும் வங்கிக்கணக்கு
    இல்லை என்று உறுதிமொழி கொடுக்கப்பட வேண்டும். அப்படி
    எதாவது கணக்கு இருந்தால் – அவற்றைப் பற்றிய விவரங்கள் தரப்பட
    வேண்டும்.

    4) வேட்பாளர்களின் பாஸ்போர்ட் தேர்தல் கமிஷனிடம் ஒப்படைக்கப்பட
    வேண்டும். புதிய ஆட்சி அமைந்த பிறகு தான் அவை திரும்பத் தரப்பட
    வேண்டும். ( தங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பாஸ்போர்ட் இல்லை
    என்பதை உறுதிப்படுத்த வேண்டும்…..??? )

    யோசியுங்கள் – உங்களுக்கு கூட நிறைய தோன்றும் ….

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்
    .

  11. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    யோசிக்க சொன்னதினால் யோசித்தேன். யோசனை
    பலரோடும் ஒத்துப் போகவேண்டும். “வெகுஜன விரோதம்”
    வந்துவிடக் கூடாது என்கிற அதீத ஜாக்கிரதை உணர்வோடு
    சிந்திக்கையில் உதித்தது:
    1) சோனியா, ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிடவேக்
    கூடாது;
    2) லாலு, முலயாம் மற்றும் மாயாவதி கண்டிப்பாக வரும்
    பாராளுமன்றத்திலே அங்கத்தினராக இருக்க வேண்டும்;
    3) தமிழகத்திலே முப்பத்தொன்பதையும் அம்மா வசம்
    தந்துவிட வேண்டும்,
    4) சிதம்பரம் இனி தேர்தல் என்பதை எண்ணவும் கூடாது;
    5) உமா பாரதி கண்டிப்பாக மத்திய அமைச்சரவையில்
    இடம் பெற்றிருக்க வேண்டும்;
    6) அமர் சிங் அல்லது அவரளவிற்கு தகுதி படைத்த ஒருவர்
    floor manager ஆக இருக்க வேண்டும்;
    7) ப ச க-விற்கும் பா ஜ-விற்கும் உத்திர பிரதேசத்திலே
    புரிந்துணர்வு இருந்த காரணத்தினால், அம்மையார் மாயாவதி
    கண்டிப்பாக ஏதேனும் ஒரு வகையில், மோடிக்கு “ஒத்துழைக்க”
    வேண்டும்;
    8) தமிழ் இனத் துரோகியான கருணாநிதிக்கு தக்கதொரு
    பாடத்தைத் தமிழர்கள் கற்றுத் தர வேண்டும்,
    9) காங்கிரஸை தோற்கடித்து, தமிழர்கள் யாரென்பதை
    உலகுக்கு உணர்த்த வேண்டும்,
    10) தமிழர்களின் உணர்வு எத்துணை மேலானது என்பதை
    பாராளுமன்றத்திலே நிரூபணம் செய்ய, செந்தமிழன்
    சீமானை அல்லது அவரது இல்லக்கிழத்தியை தேர்தலில்
    வெற்றிப் பெறச் செய்ய வேண்டும்,
    நிறைய யோசனைகள் வந்த வண்ணமிருக்கிறது. பணியினை
    முடித்துவிட்டு தொடர்கிறேன்.

  12. GOPALASAMY's avatar GOPALASAMY சொல்கிறார்:

    SONIA IS MOST CLEVER. BEFORE ELECTIONS, SOMEHOW MODI WILL BE CAUGHT BY CBI.
    I READ SOMEWHERE, SONIA IS THE FOURTH RICHEST POLITICAL LEADER IN THE WORLD.
    ALL MUSLIMS WILL WHOLE HEARTEDLY SUPPORT SONIA ONLY.
    CBI IS THE STRONGEST ALLY FOR SONIA. THAT IS WHY POLES APART MULAYAM AND MAYA SUPPORT UPA.
    MODI MAY ATTRACT CROWD. MAY GET SOME PERCENTAGE OF VOTES ALSO. BUT NOBODY CAN DEFEAT SONIA.
    BJP CAN NOT CHANGE THE WHOLE SYSTEM IF SELECTED TO POWER. BUT CORRUPTION WILL BE LESS. AND BJP WILL NOT DO ANYTHING AGAINST INDIA.
    BUT I HOPE, Mr. VENKATRAMANI WILL BE HAPPY TO SEE SONIA BACK AS UNQUESTIONABLE LEADER IN INDIA.

  13. venkataramani's avatar venkataramani சொல்கிறார்:

    11) கட்டாய விருப்ப ஓய்விலிருக்கும் கோவிந்தாச்சார்யா
    மோடிக்கு அருகிலிருக்க அனுமதிக்க வேண்டும்;
    12) தன்னை மீறி கட்சி என்பதில்லை; எனவே, எதற்கும்
    யாருக்கும் எப்போதும் பதில் சொல்ல்த் தேவையில்லை
    என்பதை மோடி அறிந்திருந்த போதும், எடியூரப்பாவை அருகில்
    வைத்துக் கொள்ள வேண்டும்;
    13) சரண்சிங் மற்றும் ஜெகஜீவன் போன்றோர் இல்லையே
    என்கிற குறையே வேண்டாம். எடியைத் துணை பிரதமராக்கி
    விட வேண்டும்.
    14) ரெட்டி பிரதர்ஸை உரிய வகையில் அங்கீகரித்து விட
    வேண்டும்.
    15) ம்ஹாஜன் இல்லாக் குறையே தெரியாமல் ரெ.பிரதர்ஸ்
    பார்த்துக் கொள்ள வேண்டும்;
    16) பா ஜ-வில் இருந்தால் போதும், யாரும் எங்கும் எதையும்
    வெட்டி எடுக்கலாம் என்பது சட்டமாக வேண்டும்.
    ecological imbalance என்பதை நாடு முழுமைக்கும் பொதுவில்
    வைக்கப்பட வேண்டும்;
    17) பா ஜ வந்தால் ஊழலே இருக்காது. நாட்டுக்கு யாதொரு
    தீமையும் எங்கிருந்தும் வாராது என்கிற மாயை நீர்த்துப்
    போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்;
    18) இலங்கையில் உடனடியாக “தமிழ் ஈழம்” மலர, இந்திய
    ராணுவம் நாம் தமிழரோடு சேர்ந்து, ராஜபக்சேவோடு
    போர் தொடுக்கும் என்று தொடர்ந்து பொய்யுரைத்து வர
    வேண்டும்;
    19) உறவுக்கு கை கொடுப்பது திராவிட பண்பாடு. நட்புக்கு
    கை கொடுப்பது தேசிய பண்பாடு. அதை காக்கும் வண்ணம்
    அம்மாவை எல்லா சிக்கல்களிலிருந்தும் காக்க வேண்டும்;
    20) அம்மாவை அணுக (முன்னாள்) மருத்துவர் மைத்ரேயனை
    பயன்படுத்திக் கொள்ள வேண்டும். (தம்பித்துரையும்,
    ரபி பெர்னாடும், நடராசனும் “அதற்கு” சரிவர மாட்டார்கள்
    என்பதை உணர வேண்டும்;
    21) அம்மாவின் ஆதரவு பெறப்பட்டால் ஓட்டளிப்பது
    எப்படி என்பது பற்றி ஒவ்வொரு நாளும் வகுபெடுக்க
    வேண்டும். அப்படியும் விரல் தவறிவிட வாய்ப்பிருக்கிறது;
    22) அம்மா டெல்லி வந்த பின்னரே எந்த கூட்டமாய் இருந்தாலும்
    கூட்டவேண்டும். அம்மா எப்போதும் மக்கள் அலையில் சிக்கி
    கொள்ளும் வாய்ப்பிருக்கிறது;
    இன்னமும் இருக்கிறது யோசனைகள். சொல்லவா?
    வேண்டாமா?

    • Dr.Mohankumar's avatar Dr.Mohankumar சொல்கிறார்:

      Mr.venkatramani –

      It is a request on behalf of the readers of
      this blog.
      Please stop this NONSENSE.
      Instead of seeing this sort of “blabbering” –
      it is better we dont see your remarks at all.

      A request to Mr. Kavirimainthan –
      either please advise this gentleman not to blabber like this OR
      dis-allow his remarks.

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் வெங்கட் ரமணி –

      தயவு செய்து இத்தகைய அர்த்தமற்ற பின்னூட்டங்களை
      நிறுத்திக் கொள்ளுங்கள்.

      மாறுபட்ட கண்ணோட்டத்தில் கூறப்பட்டாலும் கூட –
      அறிவுபூர்வமான, அர்த்தமுள்ள, இந்த வலைத்தளத்திற்கு
      மேலும் பயன்படக்கூடிய கருத்துக்களையே நான்
      பின்னூட்டங்க்களில் எதிர்பார்க்கிறேன்.

      இதை கேலிக்கூத்தாக்க முயற்சிக்க வேண்டாம்.

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  14. separa's avatar separa சொல்கிறார்:

    அன்புள்ள காவேரி மைந்தன்
    “இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?” என்ற உங்கள் எண்ணம் எனக்குப் பிடித்திருக்கிறது இந்த நம்பிக்கை இருந்தால் விரைவில் மாற்றங்கள் வரும். போட்டியிடும் வேட்பாளர், பொதுவாக ஒரு அரசாங்கப் பணியில் சேர்வோருக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

    1. வேட்பாளர் தன் குடும்ப உறவினர் பெயரைப் பதிவு செய்ய வேண்டும். இதில் பதிவு செய்யாத எவர் பேரில் சொத்து இருந்தாலும் முறைப்படி அதன் பேரில் வேட்பாளருக்கு உரிமையில்லை எனவும், அது அவர்கள் சொத்தாகவும், வேட்பாளர் அறிவிக்க வேண்டும்.
    2. உறவினர் (மனைவி, துணைவி, இணைவி மற்றும் திருமணமாகாத மகன், மகள்) எவர் பேரில் சொத்து இருந்தாலும் அந்த விவரங்களும் தரப்பட வேண்டும்.
    3. வேட்பாளர் மற்றும் அவர் உடனடி உறவினர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பின் அவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
    4. விவரம் தரப்பட்டவை பொதுமக்களறிய வெளியிடப்பட்டு, இவற்றில் குறிப்பிடாமல் ஏதேனும் சொத்துக்களிருந்தால் அவை யார் பேரில் இருக்கிறதோ அவரே அதற்கு பாத்யதை உடையவர் என்று அறிவிக்கப்பட வேண்டும். அச்சொத்துக்களின் மீது வழக்கு போடவோ, உரிமை கொண்டாடவோ வேட்பாளர் மற்றும் அவர் உறவினர் எவருக்கும் உரிமையில்லை என்றும் வேட்பாளர் கையெழுத்திட வேண்டும்.

  15. GOPALASAMY's avatar GOPALASAMY சொல்கிறார்:

    THANK YOU Dr. MOHAN KUMAR AND K M.
    I THOUGHT OF SKIPPING THE READERS COMMENTS BECAUSE OF SRI. VENKATARAMANI.

  16. separa's avatar separa சொல்கிறார்:

    எனது முந்தைய பின்னூட்டத்துடன், இதையும் சேர்த்துக் கொள்ளவும்.
    1. ஒருவர் ஒரு பதவியை ஒரு முறைதான் வகிக்க வேண்டும் அமைச்சர் மற்றும் இதர பதவிகளையும் ஒருவர் அதிகபட்சம் இரண்டுமுறையே வகிக்கலாம்
    a. (அதாவது பஞ்சாயத்துஉறுப்பினராக ஒரு முறை வெற்றி பெற்றால் அடுத்த முறை அவர் அதைத் தவிர நகர மன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் போன்ற உறுப்பினர் பதவிக்கு மட்டுமே போட்டியிட அனுமதிக்கப்படவேண்டும். அப்படியே மற்ற பதவிக்கும். ஒருவர் அதிக பட்சம் ஐந்து வருடங்கள் மட்டுமே எப்பதவியும் வகிக்கலாம். இந்த வகையில் அதிகாரிகள் அரசியல் வியாதிகள் உறவு வலுப்பட வாய்ப்பில்லை. கொள்கை முடிவுகள்கட்சி சார்ந்த ஒன்றானதால், தனிப்பட்டவர் தொடர்ந்து பதவியில் இருந்துதான் ஆகவேண்டுமென்ற கட்டாயமில்லை. திரு ஜோதிபாசு, ,கலைஞர் போல வெள்ளிவிழா, வைரவிழா என்றெல்லாம் கொண்டாட வழியில்லை)
    2. ஒரு குடும்பத்தில் ஒரே சமயத்தில், ஒருவர் மட்டுமே தேர்தலில் போட்டியிடலாம் –
    a. இவ்வகையில் வாரிசு ஆட்சிக்கு வழி வகுப்பதால் இது தவிர்க்கப்பட வேண்டும் அண்மையில் விருப்ப ஓய்வு எடுத்த பாராளுமன்ற உறுப்பினர் பலரின் வாரிசுகள் ஓசையில்லாமல், பொறுப்பான பதவிக்கு வந்துவிட்டார்கள். (A senior office-bearer of the Congress said Deora handed his resignation to party president Sonia Gandhi last week and is learnt to have pushed for son Milind Deora’s inclusion as minister of state in the council of ministers. Milind is a second-time MP from South Mumbai.) ஆனால், இது வாக்களிக்கும் மக்களை அவமதிப்பதாக அண்மையில் ஒருவருக்கு நீதிமன்றம் தண்டனையளித்திருக்கிறது அது உண்மையா?)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.