அய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோக்கியர்களைக் காக்க ஒரு அவசர சட்டமா ..?

அய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோக்கியர்களைக் காக்க ஒரு அவசர சட்டமா ..?
கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்காக யாராவது பதவியில் இருக்கும்
எம்.எல்.ஏ.வோ எம்.பி.யோ
கோர்ட்டால் தண்டிக்கப்பட்டால், உடனடியாக அவர்கள் தங்கள்
பதவியை இழந்து விடுவார்கள் ( automatic disqualification on sentence
for a criminal offence ) என்று அண்மையில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
வழங்கி இருந்தது.

முன்னதாக – மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் இத்தகைய பதவியிழப்புக்கு
(Representation of Peoples Act) எதிராக பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
தண்டிக்கப்பட்டவர்கள் அப்பீல் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள
காலமான 3 மாதகாலம் வரை, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விதிகள் அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு கூறி இருந்தது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை செல்லாக்காசு ஆக்கும்விதத்தில், மத்திய அரசு ஒரு அவசர சட்டத்தை இயற்றி -குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக நேற்று அனுப்பி இருக்கிறது. (குடியரசுத் தலைவர் 3 நாள் சுற்றுப்பயணமாக தெற்கே வந்திருக்கிறார் – இன்னும் ரப்பர் ஸ்டாம்ப் அடிக்கப்படவில்லை !!)

இந்த அவசர சட்டத்தின்படி, தண்டனை விதிக்கப்பட்டால், தானாகவே
உடனடியாக அவர்கள் பதவியிழக்க மாட்டார்கள் என்றும் 3 மாத காலம் வரை அவர்கள் தொடர்ந்து பதவியில் இருக்கலாம் என்றும் ஓட்டெடுப்பில் கலந்து கொள்ள மட்டுமே அவர்களுக்கு உரிமை இருக்காது என்றும் ஒரு விதி … செய்யப்பட்டுள்ளது !

 

அரசாங்கத்தில் பணி புரியும் அரசு ஊழியர்களுக்கென்று சட்டங்கள்
இருக்கின்றன. (Central /State Civil Services Condct Rules, ) இவற்றின்படி,
அரசு ஊழியர் ஒருவர் கோர்ட்டால் தண்டிக்கப்பட்டால், உடனடியாக
ஆட்டோமாடிக் காக பதவியை இழந்து விடுவார்( stands automatically
dismissed from service). அவர் அப்பீல் செய்து, உயர்நீதிமன்றத்தில்
தடை பெறும் வரை சட்டம் காத்திருப்பதில்லை !

நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரு விதி என்றால் –
MLA, MP -க்களுக்கு மட்டும் ஏன் இதிலிருந்து விதிவிலக்கு ?

இதற்கான மசோதா இன்னும் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கே
வரவில்லை. அப்படி என்ன அவசரம் – அவசர சட்டத்திற்கு என்கிறீர்களா ?

ரஷீத் மசூத் என்கிற காங்கிரஸ் MP யும், திருமதி சோனியாவின்
அதி தீவிர ஆதரவாளரான லாலு ப்ரசாத் யாதவ் MP யும்
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் கீழ் பதவியை இழக்கக்கூடிய சூழ்நிலை
ஏற்பட்டுள்ளது.

தன் பக்தர்களைக் காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் தலைவி
(என்கிற பகவான்) அவசரம் அவசரமாக ஒரு அவசர சட்டத்தை
அனுப்பி இருக்கிறார்.

எதிர்ப்புகளையும் மீறி – அவசர சட்டம் கையெழுத்து போடப்படுமா ?
(ரப்பர் ஸ்டாம்ப் அடிப்பதில் என்ன கஷ்டம் இருக்க முடியும் என்கிறீர்களா ?) எப்போதாவது…… ரப்பர் ஸ்டாம்புகளும் மக்கர் செய்வது உண்டே …!!

 

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to அய்ய்ய்ய்ய்ய்ய்ய்யோக்கியர்களைக் காக்க ஒரு அவசர சட்டமா ..?

  1. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    காங்கிரஸ் ஆட்சி என்ற மணிமகுடத்தில் இதுவும் ஒரு வைரக்கல். அவர்களுக்கு காப்பது கடமை. நமக்கு பார்த்துக் கொண்டிருப்பதே பொறுப்பு.

  2. kala's avatar kala சொல்கிறார்:

    ithaiyellaam pothumakkal vottirku vida vendum

  3. c.venkatasubramanian's avatar c.venkatasubramanian சொல்கிறார்:

    Naattammai theerpe maathu

  4. Sriram's avatar Sriram சொல்கிறார்:

    Need freedom from congress Govt.

  5. D. Chandramouli's avatar D. Chandramouli சொல்கிறார்:

    Good that our honorable President has returned the ordinance to the government.

  6. sridhar's avatar sridhar சொல்கிறார்:

    today’s press meet to defend the congress stand on the Ordinance was suddenly interuppted by Rahul Gandhi to speak against it.

    The ugly drama has been enancted without even an iota of shame.

    Knowing Rahul’s power in the government, this clearly shows that congress want the media to get diverted for some silent work that is going to happen.

  7. கிரி அனகை. சென்னை.'s avatar கிரி அனகை. சென்னை. சொல்கிறார்:

    கோடாலி காம்பும் முறிந்து விட்டதா இல்லை நாடகமா தெரிய வில்லை, ரப்பர் ஸ்டாம்பும் மக்கர் செய்து விட்டது .

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.