நாட்டையே நாசமாக்கிய
இரண்டு பொருளாதார மேதைகள்…
உலகின் மிக வேகமாக வளரும் நாடுகளில் –
இரண்டாவது இடத்தை வகிக்கிறது…
மிகப்பெரிய ஜனநாயக வல்லரசாக வளர்ந்து
கொண்டிருக்கிறது …
உலகம் மதிக்கும் (மதிப்பதாகச் சொல்லப்படும் ..)
மிகச்சிறந்த 2 பொருளாதார நிபுணர்களின்
உருவாக்கத்தில், இந்தியா உலக நாடுகளின்
மத்தியில் பெருமிதத்துடன் உலா வரப்போகிறது …..
என்றெல்லாம் ஆகாயத்தில் கோட்டையைக் கட்டிவிட்டு,
அதையும் தவிடுபொடியாக்கி சிதைத்து விட்டனர்
நம் நாட்டின் சாபக்கேடாக வந்த 21ஆம் நூற்றாண்டின்
மிகச் சிறந்த இரண்டு பொருளாதார மேதைகளுமாகச்
சேர்ந்து.
அதல பாதாளத்திற்கு சரிந்து விட்ட ரூபாயின் மதிப்பு –
ஆபத்தான வரம்பில் அந்நியச் செலாவணி பற்றாக்குறை-
ஏற்றுமதி, இறக்குமதியில் மிகப்பெரிய இடைவெளி,
உற்பத்தியில் படுவேகமான சரிவு,
பயங்கரமான விலைவாசி ஏற்றம்,
தங்கத்திற்கு கட்டுப்பாடு,
பெட்ரோலிய பொருட்களுக்கு கட்டுப்பாடு,
எத்திசை நோக்கினும் ஊழல்,
லட்சக்கணக்கான கோடிகளில் ஊழல்
ஸ்பெக்ட்ரம் ஊழல்,
நிலக்கரி ஊழல்,
ரெயிலில் ஊழல், கப்பலில் ஊழல்,
ஹெலிகாப்டரில் ஊழல் –
ஆதாரங்கள் அழிப்பு, பைல்கள் ஒழிப்பு,
அனைத்தையும் மூடி மறைக்க –
திசை திருப்ப – புதிது புதிதாக சட்டங்கள் !
உணவு பாதுகாப்பு – உயிர் பாதுகாப்பு,
கற்பழிப்பிலிருந்து பாதுகாப்பு …. என்றெல்லாம்..!
இத்தனை நாட்கள் அத்தனை இந்தியரும்
பட்டினியால் செத்துக் கொண்டிருந்ததை
புதிய மணிமேகலை வந்து நிறுத்தி விட்டார் என்று
எரிச்சல் வரும் அளவிற்கு
தொலைக்காட்சிகளில் காசு கொடுத்து பிரச்சாரங்கள்….
எப்படி இவ்வளவு மோசமான நிலைக்கு
நாம் தள்ளப்பட்டோம் ?
2012 ஜனவரியில் ஒரு டாலர் 45 ரூபாய்
என்றிருந்த நிலையிலிருந்து இன்றைய தினம் ஒரு டாலர்
66 ரூபாய் …ஒன்றரை வருடத்திற்குள் ரூபாயின்
மதிப்பில் 35 % சரிவு…
(இந்த அளவிலாவது சரிவைத் தடுத்து நிறுத்திய
பெருமையும் ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர்
ரகுராம் ராஜன் அவர்களுக்குத்தான் போய்ச்சேரும் )
இன்று சர்வதேச சந்தையில் மிகக்கேவலமாகப் பார்க்கப்படும்
அளவிற்கு ரூபாயின் மதிப்பு குறையக் காரணமானவர்கள்
யார் …?
புள்ளி விவரங்கள் சொல்கின்றன –
2004ல் காங்கிரஸ் பதவியேற்றபோது –
நடப்புக் கணக்கில் (CURRENT ACCOUNT) 22 பில்லியன்
டாலர் உபரியாக( SURPLUS ) இருந்திருக்கிறது.
இந்த 9 வருடங்களில் படிப்படியாக, உபரியை ஒழித்துக்
கட்டி விட்டு, பற்றாக்குறையை கொஞ்சம் கொஞ்சமாக
ஏற்றிக் கொண்டே வந்து, இன்றைய தினம்
89 பில்லியன் டாலர் பற்றாக்குறை என்கிற நிலைக்கு
கொண்டு வந்து நிறுத்தி இருப்பவர்கள் யார் … ?
2004ல் 10 பில்லியன் டாலர் என்கிற அளவில் இருந்த
மூலதனப் பொருட்களின் இறக்குமதி படிப்படியாக உயர்ந்து
இன்று 91.5 பில்லியன் டாலராக உயர்ந்திருப்பதற்கு
யார் காரணம் ….?
மூலதனப் பொருட்களின் இறக்குமதி என்றால் –
அது உற்பத்திக்கு உதவக்கூடிய கச்சாப் பொருட்களின்
இறக்குமதியாக இருக்க வேண்டும். அப்போது தான்
அந்த கச்சாப்பொருட்கள், நம் நாட்டில் உற்பத்திப்
பொருட்களாக மாற்றப்பட்டு மீண்டும் ஏற்றுமதிப்
பொருட்களாக மாறி –
இறக்குமதிச் செலவை ஈடுகட்டும் –
அந்நியச் செலாவணியை ஈட்டிக் கொடுக்கும் –
மீட்டுக் கொடுக்கும்.
ஆனால் இவர்கள் எதை இறக்குமதி செய்தார்கள் ..?
பெட்ரோலும், தங்கமும் தான் இறக்குமதி அதிகரிப்புக்கு
காரணம் என்று சொல்வது பச்சைப்பொய், புளுகு
என்பதை புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றன.
பெட்ரோலும் தங்கமும் தவிர – பெரும்பாலானவை
உபயோகிப்பாளர் பொருட்கள் (CONSUMER GOODS).
சொல்லவே கேவலமாக இருக்கிறது –
சீனாவிலிருந்து சமையலறை சாமான்கள் (பீங்கான்
பாத்திரங்கள், கரண்டிகள், கத்திகள், ஸ்பூன்கள் )
முதற்கொண்டு – கொசுவலை, கொசு அடிக்கும் பேட்,
பேட்டரியில் இயங்கும் விசிறி, பர்னிசர் சாமான்கள்,
பள்ளிச் சிறுவர்களுக்கான ஸ்டேஷனரி பொருட்கள்
வரை இந்தியாவின் முக்கிய துறைமுகங்கள்
அனைத்திலும் கண்டெய்னர் கண்டெய்னராக
வந்து இறங்குகின்றன.
கன்யாகுமரியிலிருந்து ஜம்மு வரை,
கட்சிலிருந்து கொல்கத்தா வரை அனைத்து
ஊர்களிலும் லட்சக்கணக்கில் விற்கப்படுகின்றன.
ஏன் நம்மால் இந்த பொருட்களை உற்பத்தி செய்ய
முடியாதா ?
இந்த பொருட்களைக்கூடவா தயாரிக்க வக்கில்லாமல்
போய் விட்டோம் நாம் ?
இவை விலை மலிவாக இருப்பதால் உள்நாட்டு
பொருட்கள் பகிஷ்கரிக்கப்படுகின்றன. இந்த வகையிலான
இறக்குமதியைத் தடுத்து, உள்நாட்டு உற்பத்தியை
பாதுகாக்க, ஊக்குவிக்க தவறியவர்களா
பொருளாதார மேதைகள் ….?
ஆடம்பரப் பொருட்கள் – விலையுயர்ந்த வெளிநாட்டு
கார்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், செல்போன்கள்,
கம்ப்யூட்டர்கள் – கோடிக்கணக்கில் டாலர்களைக்
கொட்டிக் கொடுத்து இறக்குமதி செய்ய அரசு
அனுமதிப்பது ஏன் …?
இதே பொருட்கள் நம் நாட்டிலேயே
தயாரிக்கப்படுகின்றனவே ?உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட
இத்தகைய பொருட்களை ஊக்குவிப்பது அரசின்
கடமை இல்லையா ? இந்த இறக்குமதி பொருட்கள்
என்ன அந்த அளவிற்கு இன்றியமையாத் தேவைகளா ..?
ஆடம்பர -உபயோகப் பொருட்களின்(CONSUMER GOODS)
இறக்குமதியை கட்டுப்படுத்தத் தவறியவர்கள்
பொருளாதார மேதைகளா …?
உற்பத்திக்குத் தேவைப்படும் மூலதனப் பொருட்கள்
மட்டுமே இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை உறுதி
செய்யத்தவறிய இவர்கள் பொருளாதார மேதைகளா …?
கடந்த 9 ஆண்டுகளில், உபயோகப் பொருட்களின்
இறக்குமதி 79% உயர்ந்திருக்கிறது.
அதே சமயம் உள்நாட்டு உற்பத்தி 56 சதவீதம்
வீழ்ச்சி அடைந்திருக்கிறது என்று புள்ளி விவரங்கள்
கூறுகின்றன.
தொடர்ந்து உற்பத்தி குறைவதையும்,
இறக்குமதி அதிகரிப்பதையும் –
பிரதமராகப்பட்ட ஒரு இண்டர்னேஷனல் பொருளாதார
மேதையும், நிதியமைச்சராகப்பட்ட இன்னொரு
பொருளாதார மேதையும் சற்றும் கவலைப்படாமல்
வாய்ப்பந்தல் போட்டு மூடி மறைத்து –
மேக்கப் போட்டுக்கொண்டிருந்திருக்கின்றனர்.
இன்னமும் வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
நம் நாட்டில் மட்டும் தானா பிரச்சினை –
உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் உண்டான
பிரச்சினை இது என்கிறார்கள்.
இந்தியப் பொருளாதாரம் அடிப்படையில்
மிக பலமாக இருக்கிறது. எந்த சக்தியாலும் இதை
அசைக்க முடியாது என்று சொன்னவர்களும்
இதே மேதைகள் தானே ?
வெட்கம், மானம், சூடு -சொரணை இருந்தால்
தங்களின் இயலாமைக்காக
மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு
பதவியை விட்டு என்றோ ஓடிப்போயிருக்க வேண்டும்.
(கூற வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது …
நண்பர்களும் தங்கள் கருத்துக்களை பின்னூட்டங்களில்
தெரிவிக்கலாம்..)



Good work. Auditor Gurumoorthy’s article reg this would help you better.
ஏன் இப்படி கோவம் கண்ணாபின்னான்னு வரது. தப்பு உங்க மேலே.
இங்கேயே தயாரிக்க எல்லா வளமும் இருக்கும். தயாரிச்சா என்ன ஆகும். அவனவன் குடும்பம் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைவான். தேவையில்லாத கேள்வியெல்லாம் கேட்பான். எங்களுக்கு என்ன பிரயோஜனம்.
இதுவே நாங்க இறக்குமதி செஞ்சா எங்களுக்கு என்ன லாபம்ன்னு உங்களுக்குச் சொல்லத்தான் நினைப்போமோ?
உள்ளூர் கல்லூரியில் படித்தவன் எவனாவது இப்ப மத்திய அரசாங்கததின் அமைச்சராக இருக்கிறார்களா? எல்லாமே ஆக்ஸ்போர்டு கேம்பிரிட்ஜ். அவங்க சொல்றது உங்களுக்கு புரியல. அது உங்க மேலத்தான் குத்தம்.
I totally agree with you as we’ll as MGSP. We are made as fools by these ECONOMISTS. N.Paramasivam
நம் மத்திய வங்கியின் புதிய ஆளுநர் ஏதோ மந்திரம் போட்டு,நாணய மதிப்பை உயர்த்துவார் என்று சொல்லப்படுகிறது. கீழே குறிப்பிட்டிருப்பது, அவர் உடனடியாக எடுத்த சில நடவடிக்கைகள் குறித்த எனது கருத்துக்கள். ஆனால் இந்திய அரசியல் அமைப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் நிதியமைச்சகத்தின் ஆளுமையில்தான் இருப்பார் புதியதாக எதுவும் செய்ய இயலாது என்பது வெள்ளிடைமலை.
இந்தியாவின் நல்ல காலம் கஜினி முதல் காங்கிரஸ் வரை, இத்தனை ஆண்டுகால கொள்ளையர்களின் படையெடுப்பையும் சமாளித்திருக்கிறது; வளர்ந்திருக்கிறது; இனியும் சமாளிக்கும் என்று நம்புவோம். காலம் பதில் சொல்லும். காத்திருப்போம்
• பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், வங்கிகளுக்கு வழங்கப்படும் நிதியின் வட்டியை குறைத்தல். இந்திய வங்கிகள், வெளிநாடுகளில் நிதியை திரட்டுவதில் இருக்கும் தடைகளை நீக்குதல். – ஏற்கனவே பணப்புழக்கம் அளவுக்கதிகமாக இருப்பதால்தான் விலைவாசி உயர்வு ஏழை பணக்கார வேறுபாடு என்று இருக்கையில், அதே “கந்துவட்டிக் கலாச்சாரம்” தொடரப்படுவது, ஒரு தாற்காலிகமான (ஒரு வேளை தேர்தல் முடியும்வரை) சந்தைக் குறியீட்டின் மதிப்பை உயர்த்தும் முயற்சியாக இருக்குமே தவிர நிரந்தரப் பலன் தராது.
•
கிராமப் பகுதிகளில் அதிகமான வங்கிகளை துவக்கும் நோக்கில், புதிய வங்கிகளுக்கு எளிதாக அங்கீகாரம் வழங்க நடவடிக்கை.- இது நல்லது. உள்னாட்டு வங்கியா பன்னாட்டு வங்கியா என்பதனைப் பொறுத்தே பலன் தெரியும்.உள்நாட்டு வங்கியானால் ஒருவேளை இந்தியப் பணம் இங்கேயே மறுமுதலீடு செய்யப்படும் பன்நாட்டு வங்கியானால் அதிகார பூர்வமாக அப்பணம் வெளியே செல்லும் மறைமுகமாக இந்தியா சுரண்டப்படும். ஆனால் இன்றைய நிலையில், கிராமப் பகுதிகளில் அதிகமான வங்கிகளை துவக்கும் பணிக்கு முக்கியமான காரணம், ஆதார் அடையாள அட்டையின் மூலம் மக்களுக்குத் தேர்தலுக்கு முன் பணம் வழங்குவதற்காகவே. .
•
இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களை வாங்கவும், முதலீடு செய்யவும் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துதல். – ஏற்கனவே டாலருக்கு நிகரான ருபாயின் மதிப்பு அதிகமாக இருக்கையில் வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்வது, வாங்குவதற்காக உண்டாகும் பணப்பரிவர்த்தனையால், மறுபடியும் இந்தியப்பணம் வெளியேறும் வாய்ப்பு இருக்கிறது.அது நாணய மதிப்பினை இன்னும் மோசமாகவே ஆக்கும், ஒருவேளை இப்பொழுது “உள்ளே வந்த கருப்புப்பணம்” நியாயமான வருவாயாக அவற்றில் முதலீடு செய்யக் கூட உதவும். மேலும் . “கட்டுப்படுகளைத் தளர்த்தல்” என்பது இந்த வருவாயின் மூலம் எப்படி வந்த்து கேட்கக்கூடாது என்று ஒரு நிபந்தனையாகக் கூட ஒப்புக்கொள்ளப்படலாம். பெரும்பாலும் இந்த முதலீடும் சீனாவிற்கே செல்லும்.
o வெளிநாட்டு இந்தியர்களின் முதலீட்டை, இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை. – எப்பொழுது இப்பணம் உள்ளே வருமோ, அப்பொழுதே அறிவிப்பில்லாமல், அவை வெளியேயும் போக வாய்ப்புள்ளது பிரதமரின் பொருளாதார ஆலோசகராக, முன்பு இவர் கொண்டு வந்த நடவடிக்கையால்தான் இன்று இந்திய முதலீடுகள் எந்தவிதக் கட்டுப்படுமின்றி ஊகபேர அடிப்படையில், வெளியே அறிவிப்பு இல்லாமல் சென்றது நாணய மதிப்பும் சரிந்ததாகச் சொல்லப்படுகிறது. ஊகபேரத்தைத் தடைசெய்ய முடியாது என்றாலும், கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து அதன் தாக்கத்தை (சுனாமி ஏற்படுமுன் அறிய முயலுவது போல) ஏதேனும் ஒரு வழி காண முயலாமல், இதனை ஊக்குவிப்பது பிரச்சினையை சரிசெய்ய உதவாது.
• உடனடி தேவையாக வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்தல். இதனால், பணவீக்கம் சிறிதளவு ஏற்பட்டாலும், முதலீட்டுக்கு உரிய லாபம் கிடைக்கும். சந்தையில் பணப் புழக்கம் அதிகரிக்கும். – இதுவரை இந்த அரசு கண்மூடித்தனமாக “பன்னாட்டு நிறுவனங்கள் எந்தவிதக் கட்டுப்படுமின்றி முதலீடு செய்ய அனுமதித்ததுதானே அனைத்துப் பிரச்சினைக்கும் காரணம் இதன் பாதிப்பு தானே, பணவீக்கம் சிறிதளவு அதிகரித்து, சந்தையில் பணப் புழக்கம் அதிகரித்து, விலைவாசி உயர்ந்தது. இன்று நாம் அனுபவிப்பது புதியதாக என்ன சொல்கிறார்?
• வங்கியின் வராக்கடன்களை வசூலிக்க, புதிய குழு அமைத்து, அதன் பரிந்துரைகளை அமலுக்கு கொண்டு வருதல்.- இது நல்ல முடிவு என்றாலும், நடந்தால்தான் பேசப்பட வேண்டிய ஒன்று. இது வசூலிக்கப்பட வேண்டிய ஒன்று மானியமாகவோ, சலுகைகளாகவோ தள்ளுபடி செய்யப்பட்டால், மறுபடியும் “பழய குருடி” கதைதான்
• ரூபாயின் மதிப்பை உயர்த்துதல், பணவீக்கத்தை கட்டுக்குள் வைக்க தேவையான கடுமையான நடவடிக்கைகளை உடனே எடுத்தல். – இது என்னவென்று இவருக்கும், ப சி மற்றும் மன்மோகன் சிங்குக்கும் தான் விளங்கும் வெறும் வாய்ச்சொல் போலத் தோன்றுகிறது. விவரம் தெரிந்தபின்னரே விவாதிக்கலாம்
• டாலரை நம்பி இருக்காமல், ரூபாயை அடிப்படையாக வைத்து, வர்த்தகம் நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்தல்.- “”ஏற்கனவே ஈரான் பெட்ரோலை இதனடிப்படையில் வழங்க முன்வந்ததாகச் பத்திரிக்கைச் செய்திகள் வெளிவந்த நிலையில், நம் அரசை மறைமுகமாக ஆளும் அமெரிக்கா அனுமதிக்கவில்லை என்பதுவும் செய்தி இது உண்மையாக இருக்க வாய்ப்புண்டு யூரோ வந்தபின் டாலர் மதிப்பை இழக்க ஆரம்பித்துள்ளது அதனால் இன்னொரு டாலர் தவிர்த்த பரிவர்த்தனைக்கு அமெரிக்கா ஒருபொழுதும் ஒப்புக்கொள்ளாது எனவே முன்னாள் ஐ எம் எஃப் ஊழியர்களான நம் MMS, PC கூட்டு இதனை நீர்த்துப் போகவே செய்யும் நம் மத்திய வங்கி ஆளுநருக்குத் தனி அதிகாரம் கிடையாது. முதுகெலும்பு உண்டா என்பது போகப் போகத்தான் தெரியும்.
• இந்நடவடிக்கைகளை, முடிந்தளவு சில வாரங்களிலேயே நடைமுறைக்கு கொண்டு வர, முயற்சி மேற்கொள்ளப்படும்,” என, ரகுராம்ராஜன் தெரிவித்துள்ளார். என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை ஆனால் இந்நடவடிக்கைகள் “சில வாரங்களிலேயே மேற்கொள்ளப்படும் அதனால் நாணய மதிப்பு உயருமென்றால், இந்த நடவடிக்கைகள் (சாதாரணமாகவே தோன்றுகிறது எங்கிறவகையில், ஏன் முந்தைய மத்திய வங்கி ஆளுநர் மேற்கொள்ளவில்லை?) ஆனால் அப்படி மேற்கொள்ளப்பட்டால் என்ன நடக்கும் என்று மட்டும் தெரிகிறது பிரதான எதிர்க்கட்சி (????!!!!) என்ற பெயருடன் நடமாடிக்கொண்டிருக்கும் பாஜகவும் இதனை எதிர்க்காது என்பது மட்டும் உண்மை ஏனெனில் அவர்களுக்கும் சில லாபங்கள் கிடைக்குமே!!
ஊகபேரம் கட்டுப்பாட்டுக்குள் வராதவரை நிலைமை மாறாது. இன்றைய உலகளாவிய பொருளாதார வீழ்ச்சிக்கு இது ஒரு பெரும் காரணி. திரு ரகுராம் ராஜன் பதவியேற்றதால் அவர் புதியதாக எதோ செய்யப்போகிறார் என்ற “ஊகத்தின்” அடிப்படையில், பங்குச் சந்தை சற்றே உயர்ந்திருக்கிறது ஆனால், இவர்தான் அண்மைக்காலத்தில் நம் பிரதமரின் பொருளாதார ஆலோசகராக இருந்தார் என்பதுவும், இவர் ஆலோசனையின் பேரில்தான் மத்திய வங்கி சில நடவடிக்கைகள் எடுக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டது என்பதுவும், அது முதல் நாணய மதிப்பு குறையக் ஆரம்பித்தது என்றும் வெளினாட்டு ஆங்கில நாளிதழ் ஒன்றில் கட்டுரை வெளியாகியுள்ளது. இவர் தனது முந்தைய உறவு காரணமாக, ஐ எம் எஃப் நிதி நிறுவனத்திடமிருந்து உதவி பெற்றுத்தருவார் என்பது ஆட்சியாளர்களின் கணிப்பு என்று இந்திய ஆங்கில நாளிதழில் வெளியான கட்டுரை கூறுகிறது காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
நண்பர் காவிரிமைந்தன் அன்பான கவனத்திற்கு,
நான் இப்பொழுது அதிகமாக பின்னூட்டம் இடுவதில்லை.
காரணம் இது ஒரு வீண் வேலை என நினைப்பதால்.
தேர்தல் என்று ஒன்று இருக்கும் வரை நமக்கு விடிமோட்சம் கிடையாது.
அடுத்த பாராளுமன்ற தேர்தல் அபத்தத்தின் உச்சகட்டமாக அமையும்
ஒருவருக்கும் பெரும்பான்மை இன்றி கொள்ளையர்களின் கூட்டணி அமையும்
.
“அடுத்த லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றால், மூன்றாவது முறையாக, பிரதமராக பதவியேற்பீர்களா…’ என, என்னிடம், திரும்ப திரும்ப கேட்கப்படுகிறது. நானும், இதற்கு பல முறை பதில் அளித்து விட்டேன். அடுத்த லோக்சபா தேர்தலுக்குப் பின், காங்., மேலிடம், எனக்கு எந்த பணி கொடுத்தாலும், அதை செய்வதற்கு ஆர்வமாகவும், தயாராகவும் இருக்கிறேன். பிரதமர் பதவிக்கு, ராகுல் தான், சரியான தேர்வு. அவரின் தலைமையின் கீழ் பணியாற்ற, தயாராக இருக்கிறேன். இது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயமும் கூட. நான், ஒரு திறந்த புத்தகம். என் நடத்தை குறித்து, யாராவது ஆய்வு செய்தால், அதை தடுக்க மாட்டேன். அரசியல் கட்சிகளை பொறுத்தவரை, நிரந்தர எதிரிகளும் இல்லை; நிரந்தர நண்பர்களும் இல்லை. திரிணமுல் காங்கிரசுடன் கூட்டணி அமைவதற்கு, எதிர்காலத்தில் வாய்ப்பு உள்ளது. மம்தா பானர்ஜி, சில காலத்துக்கு முன், காங்கிரசில் இருந்தவர். அவரின் கட்சியுடன் கூட்டணி அமைந்தால், அது, காங்கிரசுக்கு மகிழ்ச்சியைத் தரும். திரிணமுல் மட்டுமல்ல; ஒருமித்த கருத்துடைய, மதச் சார்பற்ற, எந்த கட்சியுடனும், கூட்டணி அமைக்க, காங்., தயாராக உள்ளது. பயங்கரவாதம், தொடர்ந்து நமக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதை தடுக்க வேண்டும்.”
என்றெல்லாம் உளரும் மண்மோகனிடம் என்ன எதிர்பார்க்கமுடியும்?.அவர் நாட்டின் சாபக்கேடு.உங்கள் சமீபகால பதிவுகள் மிகவும் உணர்ச்சிகொந்தளிப்பக இருப்பதால் இதை எழுதுகிறேன்.இதனால் உங்கள் உடல நலம் பாதிக்கும் வாய்ப்புதான் அதிகம்.எனவே அதிகமாக strain செய்து கொள்ள வேண்டாம்
நன்றி,வணக்கம்.
பொருளாதார மேதைகளால் இந்திய பொருளாதாரம்
சாய்ந்துதான் போய்விட்டது. நிமிர்த்தவும், ரூபாயின்
மதிப்பு டாலரை மிஞசவும், அம்மா பிரதம்ரனால் தான்
முடியும். மோடிக்கு இன்னமும் கொஞச நாட்களுக்கு
குஜராத்தை ஆளும் அதிகாரம் இருப்பதினாலும், அவரும்
எதற்கும் ஆசைப்படாதவர் என்பதினாலும்,
லாலு பிரசாத் யாதவை நிதியமைச்சராக ஆக்கிவிடலாம்.
எதிர்காலம் பொற்காலம் தான்.
தமிழர்களும் பீகாரிகளும் அடைந்த, அடைந்து கொண்டிருக்கும்
இன்பம் நாடு முழுமைக்கும்தான் பரவட்டுமே.
வணக்கம்.உங்களிடம் ஒரு கேள்வி? இதற்கு அவர்கள் மட்டுமே காரணம் அல்ல.ஆசை உள்ள அனைவரும்தான்.
Corruption is the main cause for all these issues. The corruption starts from us only. We should practice to live within our means, which is the real prestige. If all of us try to practice simplicity in our life style without comparing the other countries, the political situation will also change. We should not forget that golden words “Government is the reflection of the people’s thoughts”.
Just for patriotism I will not buy poor quality INDIA made goods.If u r unable to manufacture a quality pin or mosquito bat,——–useless,kindly start from scratches
Mr.venkatasubramanian –
If you cannot live with indian products it is better you vacate this country
and move out to the country of your choice GOODS.
Unless BJP returns to power with near about majority, the next coalition government could be a disaster, each party (with vested interests) pulling in different directions. That might worsen the existing situation. We can only hope for the best.
ஒவ்வொரு இந்தியனுக்கும் வர வேண்டிய கோபம் தான். ஆனால் இதற்கு எந்த தனிப்பட்ட நபரையும் சுட்டி காட்டுவது சரியல்ல. நாம் நமது வேலயை சரியாக செய்யும் போது எல்லாம் சரியாக நடக்கும்