மணிமேகலையின் அட்சய பாத்திரம் “டாலர்” கொண்டு வராதா … !!

கலைஞர் அவர்களே -மணிமேகலையின் அட்சய பாத்திரம்
“டாலர்” கொண்டு வராதா … !!

நேற்று கலைஞர் பேச்சு –

சோனியா தன் மனதில் தோன்றிய மிகப்பெரிய
காரியத்தை செய்து முடித்துள்ளார்.
இந்த நாட்டில் உள்ளோர் அத்தனை பேரின்
பசியையும் போக்க வேண்டுமானால்
எத்தனையோ மணிமேகலைகள் தேவைப்படுவர்.
அத்தனை மணிமேகலைகளையும் ஒன்றாகச் சேர்த்தது
போல் – ஒரே மணிமேகலையாக சோனியா
இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.

திருவாளர் வீரமணி அறிக்கை –

‘வாழும் மனிதர்க்கெல்லாம் வயிற்றுக்குச் சோறிடும்’
கருணைச் சட்டத்தைக் கொண்டு வந்த
சோனியா அம்மையார் பாராட்டுதலுக்குரியவர்.
—————–

இன்றைய கலைஞரின் நீண்ட அறிக்கையிலிருந்து
கொஞ்சம் – கொஞ்சம் ….
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது ரூபாயின்
மதிப்பு 16.22 ஆகவும், வாஜ்பாய் பிரதமராக
இருந்தபோது ரூபாயின் மதிப்பு 45.31 ஆகவும்
இருந்ததுதான், தற்போது பிரதமர் மன்மோகன் சிங்
அவர்களின் ஒன்பதாண்டுக்கால ஆட்சியில்
ரூபாயின் மதிப்பு 68.80 என்ற அளவிற்கு வரலாறு
காணாத வகையில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்க
வேண்டிய அதிர்ச்சி யூட்டும் நிலை உருவாகி இருக்கிறது.

….கடந்த வெள்ளிக்கிழமை,
ஒரே நாளில் 193 காசுகள் ரூபாயின் மதிப்பில்
இழப்பு ஏற்பட்டது. அதாவது பத்தாண்டுகளில்
இல்லாத அளவிற்கு ஒரே நாளில்
3 சத விகிதம் வீழ்ச்சி அடைந்தது.

….மொத்தத்தில், நடப்பாண்டு, ஜனவரி முதல்,
இதுவரை, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின்
மதிப்பு 19.50 சதவிகிதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி
கண்டுள்ளது. இது இந்தியப் பொருளாதாரத்தில் –
இதுவரை
கண்டும்
கேட்டுமிராத காரிருளாகும்.

.…சர்வதேச சந்தையில் மிகக் குறைவாக மதிப்பிடப்படும்
கரன்சி தற்போது இந்திய ரூபாய்தான் என்று
“தி எகானமிஸ்ட்” ஏடு குறிப்பிட்டுள்ளது.
….மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள்,
தான் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றபோது,
பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்தது என்றும்;

முன்னாள் நிதியமைச்சர் மேற்கொண்ட பல்வேறு
நடவடிக்கைகளால் அரசின் பொருளாதார சுமை அதிகரித்து
விட்டதாகவும்;

ஆனால் அதேநேரத்தில் தொழில் வளர்ச்சியோ,
அல்லது வேளாண் மேம்பாடோ எதிர்பார்த்த அளவுக்கு
நிகழவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் அவரும் ரூபாயின் மதிப்பு எப்போது வலுவடையும்
அல்லது உயரும் என்பதற்கு காலக்கெடு எதையும்
நிர்ணயிக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.
…..“அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்”

அதாவது, “இருப்பது, இயற்றக்கூடியது,
இனியும் ஈட்டக்கூடியது ஆகியவற்றின் அளவு அறிந்து
செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ளாவிட்டால்,
வலிமையோ அல்லது வளமோ இருப்பதுபோல்
தோன்றினாலும் கூட இல்லாமல் மறைந்து போய் விடும்”
(திருக்குறள்-கலைஞர் உரை)
என்ற அய்யன் வள்ளுவரின் எச்சரிக்கையை
கருத்திலே கொண்டு பொருளாதாரத் திட்டங்கள் வகுக்கப்பட
வேண்டும்.

—————-

இது மிக விவரமாக விவாதிக்கப்பட
வேண்டிய விஷயம்.

இப்போதைக்கு, அவசரத்துக்கு –
இரண்டே இரண்டு சின்ன கேள்விகள் ..

1) இங்கே “அளவறிந்து வாழாதான்” என்று
கலைஞர் மறைமுகமாகச் சாடுவது யாரை ?
(ப.சி.யையா அல்லது ம.மோ.சி.யையா ?
சோனியா அம்மையாரை அல்ல- என்பது வெளிப்படை !)

2) ஒரு வேளை சோற்றுக்கு கூட வக்கில்லாமல் இருந்த
இந்த நாட்டு பிச்சைக்காரர்கள் அத்தனை பேருக்கும்
ஒரே மணிமேகலையாக வந்து சோறு போட்ட
அம்மையாரின் “அட்சய பாத்திரத்தில்” “டாலர்”
கொண்டு வர முடியாதா ?

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to மணிமேகலையின் அட்சய பாத்திரம் “டாலர்” கொண்டு வராதா … !!

  1. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    சீட்டுக்கட்டினைப் போலக் கட்டமைக்கப் பட்டிருக்கும் பொருளாதாரம் சீக்கிரம் வீழட்டும். புதிய நடைமுறையினை உருவாக்க மறுபடி முதலில் இருந்து ஆரம்பிப்போம்.

  2. VIYASAN's avatar VIYASAN சொல்கிறார்:

    ///அத்தனை மணிமேகலைகளையும் ஒன்றாகச் சேர்த்தது
    போல் – ஒரே மணிமேகலையாக சோனியா ///
    கலைஞருக்கு அறளை (Senile) பெயர்ந்து விட்டது அதனால் தான் இத்தனை காலம் அவருக்கும் அவரது குடும்பத்துக்கும் சோறு போட்ட தமிழை இப்படியெல்லாம் கேவலப்படுத்துகிறார் போல் தெரிகிறது. 🙂

  3. kinarruthavalai's avatar kinarruthavalai சொல்கிறார்:

    தாத்தாவுக்கு சோனியா மணிமேகலை அல்ல. MONEYமேல்கலை தெரிந்தவர். டாலர் மட்டுமா கொண்டுவருவார்? டாலரை மற்றைய நாட்டு வங்கிகளுக்கு கொண்டு செல்ல உதவியவரும் சோனியா எங்கின்ற அன்னிய பன்னிதானே? இது இன்றைய நன்றி அறிதல் தாத்தாவுக்கு. தூ நாதாரிக் கூட்டம்.

  4. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    இன்றில்லா விட்டாலும் நாளையாவது மாறும் அல்லவா ?

  5. rathnavel natarajan's avatar rathnavel natarajan சொல்கிறார்:

    யாருக்கும் வெட்கமில்லை.

  6. தமிழ்ச்செல்வன்'s avatar தமிழ்ச்செல்வன் சொல்கிறார்:

    நடப்பு அரசியலை மிக அருமையாக பதிவாக வெளியிட்டமைக்கு நன்றி

  7. c.venkatasubramanian's avatar c.venkatasubramanian சொல்கிறார்:

    Idhuthan Mu Ka vin endrum maradha kusumbuththanam.pakaivanuku arulvai nannenje

  8. இரா.வெனங்கட்டரமணி's avatar இரா.வெனங்கட்டரமணி சொல்கிறார்:

    ஆதிரை அளித்த பிச்சையை முதலில் மணிமேகலை ஏற்ற பின்னர்,
    அமுதசுரபியிலுள்ள அன்னம் அற நெறியில் சேர்த்த பொருள் குறையாது
    வளர்வது போல, வளர்ந்தது. அது ஹண்ட காயசண்டிகை வியந்து,
    மணிமேகலையிடம், “எனது தீரா பசியையும் தீர்த்தருள்க” என்
    வேண்டினாள். மணிமேகலை அளித்த அன்னத்தினால், விருச்சிக
    முனிவரின் கோபத்தால் தனக்கேற்பட்ட பன்னிரண்டு ஆண்டு
    பசிப்பிணி தீர்ந்த அவள், “வட திசைப் பெண்னே” என்று மணிமேகலையை
    விளித்து தனது சோகக் கதையைக் கூறியதாக காப்பியத்தின் ”உலக
    அறவி புக்க காதை”யில் வருகிறது.
    (உணவு உறுதி மசோதா பற்றியோ, சோனியாவின் உரை பற்றியோ
    (பிரதமரை மீறி சோனியாவின் பேச்சு என்ற தலைப்பில் வந்த
    செய்தியைத் தவிர) எதுவும் பெரிதாக தெரியாது) ஆனால்,
    திருமதி.சோனியாவின் மூலம் அல்லது அவரது ஆசியால், இவரது
    பசி (பசி தான்) தீர்ந்திருக்கக் கூடும்.
    ”ஆபுத்திரன் கையிலுள்ள அன்னம் தீரா அமுதசுரபியில் உண்ண
    விருப்பமுள்ள யாவரும் வாரீர்” என்று காவிரிப்பூம்பட்டினத்தில்
    (அக்காலத்தில்) அமைந்த எப்போதும் திறந்திருக்கும்
    சக்கரவாளக்கோட்டையிலிருந்து அழைப்பு வரும் காப்பியத்தில் வருகிறது.

    பசி தீர வேண்டுமானால் நாம் இக்காலத்தில் அம்மாதிரியான
    இடமிருந்தால் தேடிப் போக வேண்டியதுதான்.

  9. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    அம்மாடியோவ் – தலை சுற்றுகிறது…!
    கலைஞர் நிஜமாகவே “மணிமேகலை”யை
    முழுவதுமாகப் படித்திருப்பாரா …?
    படித்திருந்தால் இப்படிக் கூறுவாரா ?

    – போகட்டும்.
    “டாலர்” ப சி தீர்க்க இடம், வழி எதாவது
    தெரிந்தால் சொல்லுங்கள் நண்பரே …

    -வாழ்த்துக்களுடன்,

    காவிரிமைந்தன்

  10. AAR's avatar AAR சொல்கிறார்:

    Sonia is Panam megalai, Kasu megalai, Thuttu megalai, Money Money megalai.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.