ஜட்ஜ் விசாரிக்க விரும்பாத
அந்த வழக்கு …?
அந்த நாள் தோற்றம் …!
இந்த நாள் தோற்றம் …!

நீண்ண்ண்ண்ட நாட்களுக்கு முன்னர் –
அதாவது திருமதி இந்திரா காந்தி
அகில இந்திய காங்கிரஸ்
தலைவராக இருந்த காலத்தில் –
காங்கிரஸ் கட்சியின் டெல்லி அலுவலகத்தில்,
டைப்பிஸ்டாக கேரளத்தைச் சேர்ந்த ஒருவர்
பணி புரிந்து வந்தார். இந்திரா காந்தி பிரதமராக
இருந்தபோது, 1980-ல் அந்த நபரை தனது
அதிகாரபூர்வ உதவியாளராக்கி – அரசாங்க
பணியாளராகவும் ஆக்கினார்.
அல்லும் பகலும் – 24 மணி நேரமும் அந்த மனிதர்
திருமதி இந்திரா காந்தியின் வீட்டிலேயே இருந்து
A to Z ( கட்சி முதல் அரசு, மற்றும் தனிப்பட்ட
காரியங்கள்) வரை கவனித்துக் கொண்டார்.
இந்திரா காந்தியைப் பொறுத்தவரை அவர் தவிர்க்க
முடியாதவராகி விட்டார். மிகுந்த செல்வாக்கான
நிலைக்கு உயர்ந்தார். இந்திரா காந்தியை அணுக
யார் விரும்பினாலும், இவரது தயவு அவசியம்
தேவை என்கிற அளவிற்கு…!
1984-ல் இந்திராவின் மறைவிற்குப் பின்னர்,
பிரதமராகப் பொறுப்பேற்ற ராஜீவ் காந்திக்கும்,
ராஜீவின் மறைவிற்குப் பின்னர் அவரது துணைவியார்
திருமதி சோனியா காந்திக்கும் தனிப்பட்ட
உதவியாளராக தொடர்ந்து பணி புரிந்தார்.
அரசியலைத் தொடர்ந்து கவனித்து வருபவர்கள்
இதற்குள் நீங்களே புரிந்து கொண்டிருப்பீர்கள் –
அவர் தான் திருவாளர் வின்செண்ட் ஜார்ஜ்.
பின்னொரு காலத்தில் – NDA ஆட்சிக்கு வந்தபோது,
2001 ஆம் ஆண்டு – சிபிஐ –
இந்த நபர் மீது – வருமானத்திற்கு மிஞ்சிய
சொத்து சேர்த்திருப்பதாக – லஞ்ச ஊழல் தடுப்பு
சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்தது.
நவம்பர் 1984 முதல் டிசம்பர் 1990 க்கு
இடைப்பட்ட காலத்தில் அளவிற்கு மிஞ்சிய
சொத்துக்களை வாங்கிக் குவித்ததாகப் புகார்.
டில்லி, பங்களூர், சென்னை, கேரளா ஆகிய
இடங்களில் விலையுயர்ந்த கட்டிடங்களையும்,
விவசாய நிலங்களையும் வாங்கியதாகவும்,
வங்கிக் கணக்கில் ரொக்கமாக 1.5 (ஒன்றரை)
கோடி ரூபாய் வரை பணமும் வைத்திருந்ததாக
குற்றச்சாட்டு.
1990 க்குப் பிறகு – பெரிய அளவில்,
பல சமயங்களில் ரொக்கமாக வங்கிகளில் டெபாசிட்
செய்திருப்பதாகப் பதிவு.
நவம்பர் 1991 -ல் 1.25 கோடி
டிசம்பர் 1991 -ல் 41 லட்சம்
டிசம்பர் 1992 -ல் 70 லட்சம்
மார்ச் 1995 -ல் 20 லட்சம்
ஜனவரி 1996-ல் 71 லட்சம்
மார்ச் 1997 -ல் 30 லட்சம்
நவம்பர் 1999 -ல் 25 லட்சம் –
அப்பாடா – அவ்வளவு தான்..!மூச்சு விடலாம் !
மேற்கொண்டு தொடர முடியாதபடி –
2001-ல் தான் வழக்கு வந்து விட்டதே !
2001-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு சரி.
பிற்பாடு 2004-ல் ஆட்சி மாறி காங்கிரஸ்
அதிகாரத்திற்கு வந்த பிறகு விசாரணை கிடப்பில்
போடப்பட்டது.
12 வருட (தீவிர..?) விசாரணைக்குப் பிறகு,
இறுதியாக இந்த ஆண்டின் துவக்கத்தில் சிபிஐ,
இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில்
போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றும்,
எனவே வழக்கை மூடி விடலாம் என்றும் கோர்ட்டில்,
CLOSURE REPORT தாக்கல் செய்தது.
ஆனால் – இதை ஏற்றுக்கொள்ளாத
சிபிஐ கோர்ட், குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க இதுவரை
கிடைத்துள்ள ஆதாரங்களே போதும் என்றும்,
ஜார்ஜ் மீதான வழக்கு தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்
என்றும் உத்திரவு போட்டது. அதைத் தொடர்ந்து
ஆகஸ்ட் 30ந்தேதி ஆஜராகும்படி ஜார்ஜுக்கு சம்மனும்
அனுப்பப்பட்டது.
இதை எதிர்த்து ஜார்ஜ் டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு
வழக்கு தொடர்ந்தார். தன்மீதான குற்றச்சாட்டுகளை
நிரூபிக்க ஆதாரம் இல்லை என்று சிபிஐ கூறியிருக்கும்
நிலையில் மேலும் தன் வழக்கைச் தொடர்ந்து
நடத்துவது தவறு என்றும், சிபிஐ கோர்ட்டின் உத்தரவை
ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதை விவரமாக முதலில் விசாரித்த உயர்நீதிமன்ற
நீதிபதி ஜே.ஆர்.மிர்தா அவர்கள்
கடைசி நாளின்போது – தான் இந்த வழக்கை மேற்கொண்டு
விசாரிக்க விரும்பவில்லை என்றும் இதை வேறு நீதிபதிக்கு
மாற்ற வேண்டும் என்றும் கூறி விசாரணையை
தள்ளி வைத்து விட்டார். அவர் தன் செயலுக்கு காரணம்
எதையும் கூறாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை
அளித்தது.
இத்தோடு நிற்கவில்லை வழக்கு. அதன் பின்னர்
வேறோரு நீதிபதியின் முன் வழக்கு விசாரணைக்கு
வந்தது.விசாரணைக்கு எடுத்துக்கொண்ட
-Justice Veena Birbal –
சிபிஐ கோர்ட்டில் இந்த வழக்கை மேற்கொண்டு தொடர
இடைக்காலத்தடை விதித்திருக்கிறார்…!!
———
பின் குறிப்பு – ஆக 84-90ல் நிகழ்ந்த
லஞ்ச ஊழல் குற்றங்களுக்காக, 11 ஆண்டுகளுக்குப்
பிறகு 2001-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டு,
அதன் பிறகு ஒரு 12 ஆண்டுகள் விசாரணை
செய்யப்பட்டு, இறுதியாக 2013-ல் தகுந்த
ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறி
தள்ளுபடி செய்ய முயற்சிகள் நடக்கின்றன.
இப்போதே சம்பந்தப்பட்ட திருவாளர் ஜார்ஜுக்கு
65-70 வயது இருக்கலாம். ஒருவேளை
இந்த வழக்கு தொடர்ந்து நடத்தப்பட்டால் –
தீர்ப்பு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆகாது ..?
அதன் பிறகு அப்பீல் செய்ய உயர் நீதிமன்றம்
இருக்கிறது. உச்ச நீதிமன்றம் இருக்கிறது.
ஜார்ஜுக்கு அடைக்கலம் கொடுக்க ஏகப்பட்ட
காட்பாதர்களும், காட்மதர்களும் வேறு இருக்கிறார்கள்.
இவை எல்லாவற்றையும் தாண்டி வழக்கில்
இந்த நபருக்கு எதாவது தண்டனை உறுதியானால்,
அப்போது இவருக்கு 90-95 வயது ஆகி இருக்கும்
என்று தோன்றுகிறது !
உலகில் இந்தியாவைத் தவிர வேறு எந்த நாட்டிலும் –
இவ்வளவு விரைவாக குற்றவாளிக்கு தண்டனை
கிடைக்காது ..!
நாம் அதிருஷ்டம் செய்தவர்கள்.
கொடுத்து வைத்தவர்கள் ..
வாழிய பாரத மணித்திருநாடு…..
வந்தே மாதரம் – வந்தே மாதரம்.




ஏய் (இவரின் வக்கீல் இப்படியும் பேசலாம்; உரிமையுள்ளவர்தான்) மை லார்ட்! (இப்படித்தான் வக்கீல் ஆரம்பிக்க வேண்டுமெனக் கற்றுக் கொடுக்கப்பட்டதால், சொல்லப்பட்ட வார்த்தை, அவ்வளவே இதனால் மரியாதை தரப்பட்டதாக எல்லாம் நினைத்துக் கொள்ளக்கூடாது) இப்பவும் என் கட்சிக்காரர் தவறு செய்தாரா இல்லையா என யாரும் கேட்கக் கூடாத நிலையில், அவர் ஒரு வேளை வழக்கில் தண்டனை பெற நேர்ந்தால் என்ன செய்வது என்ற மன உளைச்சலிலேயே இத்தனை வருடம் இருந்திருப்பதால், அவருக்கு, இதுவே பெரிய தண்டனை என்று கருத வேண்டும் எனவே அவரை விடுதலை செய்வதுடன், இத்தகு மன உளைச்சலுக்குக் காரணமான இவ்வழக்கினை நடத்துபவரிடம் இதற்கான இழப்பீடு தரும்படி கனம் கோர்ட்டார் உத்தரவிடவேண்டும்
அளவுக்கு அதிகமாக அல்லது அறிந்த வருமானத்திற்கு அதிகமாக
சொத்து குவிப்பவர்கள் எல்லோருமே ஆட்சி அதிகாரத்தில்
உள்ளவர்களாக, அதிகார மட்டத்தோடு மிக நெருங்கிய தொடர்பு
உடையவர்களாக, தொடர்பு உடையவர்களின் உறவுகளாக
இருக்கிறார்கள். வழக்கெதிலும் சிக்காத வரை HIGH PROFILE-க்குரிய
சர்வ லட்சணங்களோடு திரிகிறார்கள். மாட்டிக் கொண்ட பின்னர்,
will meet the case in the court of law என்பார்கள். கோர்ட்டுக்குப் போகும்
முன்னர் (உங்களுக்கு வந்தாலும் வரக்கூடிய) நெஞ்சு வலி வந்து
மருத்துவமனைகளில் ஓய்வு எடுப்பார்கள்.
ஒரு வழிய்யாக கோர்ட்டுக்குப் போனால் வாய்தா மேல் வாய்தா
வாங்கி, தாக்கீதான அனைத்து documentary evidences-ஐயும் இந்தியாவில்
உள்ள அணைத்து மொழிகளிலும் கேட்டு வாங்கி, பின்னர் தாய்
மொழியிலும் கேட்டுப் பெற்று, வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியின்
காரணாமாய் புனையப்பட்டதாகச் சொல்லி, நீதிபதி (பெஞ்சாய்
இருப்பின் நீதிபதிகள்) மீது நம்பிக்கை இல்லையெனச் சொல்லி,
வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற்க் கோரி மனு செய்து, அது
குறித்த தீர்ப்பு வரும் வரை விசாரனைக்குத் தடை கோரி, மாறுதல்
ஆன பிறகு அரசு தரப்பு வழக்கறிஞரை மாற்ற்க் கோரி, மீண்டும்
எல்லா மொழிகளிலும் “எல்லாவற்றையும் பெற்று”…… இப்படியாகத்
தான் high profile ஆசாமிகள் மீதான வழக்குகள் நடைபெறுகின்றன.
—-
அது சரி. ””ஐயோ என்னை விட்டு விடுங்கள். எல்லாவிதமான
நெருக்குதல்களும், அச்சுறுத்தல்களும் வருகிறது. வேறு
யாரையாவது வைத்து எப்படி விருப்பமோ அப்படி வழக்கை
நடத்துங்கள்”” என்று விட்டுப் போனாரே ஆச்சார்யா என்கிற
வழக்கறிஞர். அது சம்மந்தமான விவரங்கள் தங்களிடம்
இல்லையோ.
vande madharam. vande madadharam. We can find this in India only. Even if somebody highlight, then people are there to substantiate the wrong doer. Just by quoting another wrong-doer, they cannot escape. People should view these looting above politics. Who knows, if this case may become another “scam”
Paraman
பிறிதொன்றும் நினைவுக்கு வருகிறது. சுமார் 35 ஆண்டுகளுக்கு
முன்னர், தமிழக செய்தி விளம்பரத் துறையில் உதவி பொது ஜன
அலுவலராக ஒருவர் இருந்தார். அப்போதைய அவரது மற்றும்
அவரது மனைவி இருவரது பொருளாதார நிலை ஊர் மெச்சும்படி
எல்லாம் இல்லை. அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தில்
அவர் பணியில் இருந்த காலத்தில் வீட்டுக்குத் தேவையான உப
கரணங்களை எல்லாம் “தவணை” முறையில் வாங்கும் நிலையில்
தானிருந்தார். பின்னர் சென்னையில் அரசு பணியுடன் கழகப்
பணியும் சேர்த்து செய்து கொண்டிருந்த போது கூட பெரிய மாற்ற்ம்
இல்லை. மனைவி வீடியோ காசெட் வாடகைக்கு விடுவதைத்
தொழிலாக செய்யத் துவங்கினார். பின்னர் நிகழ்ந்த ஆட்சிமாற்றத்தில்
வந்த தலைமையுடன் நெருக்கமான நட்பு வந்து “வசதிகள்”
பல்கி பெருகி. இன்றைய தினம் பல நூறு கோடி மதிப்பு மிகுந்த
சொத்துகளுக்கு சொந்தக்காரர். தமிழகத்தில், தஞ்சை மாவட்டத்தில்
இலங்கையில் நடந்த போர்க் கொடுமை நினைவிடத்திற்கு ஐயா
தான் பூமிதானம்.
ஆனால், அவரது மனைவிதான் நட்புக்காக இவரை தியாகம்
செய்துவிட்டார். சொந்த வாழ்வின் சோகங்களையெல்லாம் மறந்து
தமிழர் நலனுக்கும், கழக நலனுக்குமென அவ்வப்போது ஏதேனும்
பேசுவார். நிறைய தமிழறிஞர்கள் பின்புலமும் உண்டு. இவர் கூட
ஒரு பத்திக்கை நடத்துகிறார். யாராவது வாங்கி வாசிக்கிறார்களா
என்பது தெரியவில்லை.
முப்பது ஆண்டுகளுக்கு மேலாக காந்தி குடும்பத்துக்கு சேவை
செய்து, திரு. ஜார்ஜ் ச்ம்பாதித்து வைத்திருப்பதைக் காட்டிலும்
சுமார் இருபதாண்டுகளில் (சசிகலா)நடராஜன் சம்பாதித்திருப்பது
அதிகமாக இருக்கலாம். விசாரித்து எழுதுங்களேன்.
நன்றி வெங்கட்டரமணி.
(இந்த விளக்கம் அனைவருக்கும் சேர்த்து ..)
இந்த “விமரிசனம்” தளம் விறுவிறுப்பாகவும்,
இயன்ற வரை தமிழில் அதிகம்
வெளிச்சத்திற்கு வராத,
புதிய விஷயங்களைக் கொண்டதாகவும்,
சுவையானதாகவும் (அதனால் தான்
‘பில்டப்’புகள் – Mr.separa )
அதே சமயம் நம்பகத் தன்மை கொண்டதாகவும் –
இருக்க வேண்டும் என்று முயற்சித்து
என்னால் இயன்ற வரை –
அந்த வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் சொல்லும் விஷயங்கள் அனேகமாக
தமிழகம் ஏற்கெனவே நன்கு அறிந்தது தான்.
நான் இதில் புதிதாக சொல்லும்படி எதுவுமில்லை.
எனவே தகுந்த தகவல்கள் கிடைக்கும்போது
அவசியம் எழுதுகிறேன்.
(மேலும், சில சமயங்களில் நான் சொல்ல
நினைக்கும் சில விஷயங்களையும்,
சொல்லத் தவறிய சில செய்திகளையும்,
பின்னூட்டம் எழுதும் நண்பர்களே விவரமாக
எழுதி இடைவெளியை நிறைவு செய்து
விடுகிறார்கள் -உங்களைப் போல …!!
பிறகென்ன குறை ..!! )
சரி தானே நண்பரே …. ?
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
**இந்த “விமரிசனம்” தளம் விறுவிறுப்பாகவும்,
இயன்ற வரை தமிழில் அதிகம்
வெளிச்சத்திற்கு வராத,
புதிய விஷயங்களைக் கொண்டதாகவும்,
சுவையானதாகவும் (அதனால் தான்
‘பில்டப்’புகள் – Mr.separa )
அதே சமயம் நம்பகத் தன்மை கொண்டதாகவும் –
இருக்க வேண்டும் என்று முயற்சித்து
என்னால் இயன்ற வரை –
அந்த வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.**
முழுதும் உண்மை. எங்கிருந்து செய்திகளைப் பிடிக்கிறீர்கள்?
நன்றி நண்பரே.
இந்த வலைத்தளத்திற்கு ஆவலோடு வரும்
நண்பர்களின் மன வெளிப்பாடு –
அவர்களுக்கு
சரியான விஷயங்களைத் தர வேண்டும்
என்கிற தணியாத ஆர்வம்,
தீவிரமான தேடுதல் –
இவை தான் எனக்குத் துணையும்
தூண்டுதலும்.
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
George main role as Sonia personal PA in the last 10 years is to appoint Malayalees in top posts in Central Govt. In fact, I heard all Malayalees meet him once to pay their obeisance before taking up their posting in Delhi. Malayalee lobby is now even bigger than Hindi lobby.