லாட்டரி -கிங் PLUS வரி கட்ட விரும்பாத பாரி வள்ளல்…!!!

லாட்டரி -கிங் PLUS வரி கட்ட விரும்பாத 

பாரி வள்ளல்…!!!
இரண்டு நாட்களுக்கு முன்னர், பல நாளிதழ்கள்,
வார இதழ்களில் –
முழுப்பக்க விளம்பரங்கள். பிறந்த தின
வாழ்த்துக்களைத் தெரிவித்து.. !!

அதில் ஒரு சாம்பிள் கீழே –

Doctor pari venthar

வாழ்த்துபவர் -லாட்டரி கிங் என்று அழைக்கப் படும்

சந்தியாகு மார்ட்டின் அவர்களின் துணவியார்.

மார்ட்டின் சிறைக்குச் சென்ற பிறகு, தங்களை
நிலைப்படுத்திக்கொள்ள அவரது துணைவியார்
அரசியல் பலம் பெற விரும்பினார். தமிழ்நாட்டின்
முக்கிய கட்சிகள் அவரை ஏற்றுக் கொள்ள தயங்கியபோது,
அதை வரவேற்று, இந்திய ஜனநாயக கட்சியின்
தலைவர் டாக்டர் பாரி வேந்தர் அவர்கள்
பெருமகிழ்வுடன் அவரை அந்தக் கட்சியின்
துணைப் பொதுச் செயலாளராக நியமனம்
செய்திருக்கிறார். மேற்கண்ட புகைப்பட விளம்பரம்
அதன் நன்றியறிதலாக கூட இருக்கலாம்.

வாழ்த்தப்படுபவர், தமிழ் மக்களுக்கு
இரண்டு பெயர்களில் பரிச்சயமானவர்.
டாக்டர் பாரி வேந்தர்
மற்றும் டாக்டர் டி.ஆர்.பச்சமுத்து.
முதலில் இவர்கள் தொடர்புடைய,
அண்மையில் செய்தித் தாள்களில் வெளிவந்த சில
தகவல்களை கீழே தருகிறேன்.

—————–

Central Crime Branch of Chennai police
arrested alleged lottery kingpin
Santiago Martin’s wife Leema Rose
in Coimbatore on Friday –
after the seizure of `7.2 crore from
the house of one Nagarajan, Martin’s
alleged accomplice, police said.

…..”He earns around Rs.8 crore
through illegal sale of lottery in
Tamil Nadu every day,”

(http://newindianexpress.com/states/
tamil_nadu/article1513248.ece)

—————-

The income-tax (I-T) department has
seized Rs 6.75 crore in cash

and incriminating documents —
receipt of donations,
inflating expenditure,
diverting funds of trusts and
evading income tax —
from the SRM Group of Companies.
(http://www.sify.com/finance/i-t-sleuths-
raid-srm-group-s-premises-news-default-
ngucO2bhceg.html)
In the case of SRM group of institutions,
the extent of evasion was around Rs.200
crore, a sum that would mean a tax of
Rs.60 crore.

(http://www.thehindu.com/news/national/tamil
-nadu/it-searches-in-state-yield-taxable-
income-of-over-rs-150-
crore/article4928714.ece )

———————-
சாதாரண கணித ஆசிரியராக ஒரு பாலிடெக்னிக்கில்
தன் வாழ்க்கையைத் துவக்கிய ஒருவர், இன்று
பல்லாயிரக்கணக்கான கோடிகள் பெறுமானமுள்ள
ஒரு மிகப்பெரிய கல்வி நிறுவனத்திற்கு சொந்தக்காரராக
ஆகி இருப்பது அவரது மறுக்க முடியாத,
வியக்கத்தக்க திறமைக்கு அசைக்க முடியாத சான்று ..!

இப்பேற்பட்ட சாதனையைப் புரிந்திருப்பவர்
எப்பேற்பட்ட திறமை பெற்றிருக்க வேண்டும் ..!

ஆனால் – இந்த சாதனை நேர்மையான வழியில்
நிகழ்த்தப்பட்டதா என்று நினைக்கும்போது …..

இந்திய ஜனநாயக கட்சியைத் துவக்கியதும்,
புதிய தலைமுறை தொலைக்காட்சியை,
வார இதழை, துவக்கியதும் அடுத்தடுத்த சாதனைகள்.

latest சாதனை திரைப்படத் துறையில் இறங்கி,
ஒரே சமயத்தில் 4 திரைப்படங்களின் தயாரிப்பில்
முத்திரை பதிக்கக் கிளம்பியிருப்பது !

புத்திசாலியான மனிதர் – அடுத்து மத்தியில்
எந்த கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது என்பதை
கணக்குப் போட்டு, பாஜக வுடன் கூட்டணி சேர
டில்லியில் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.
பாஜக தலைமை எந்த முடிவுக்கு வரும் என்பதை யூகிக்க
முடியவில்லை.

ஆனால் – தமிழக பாஜக இவருடன் கூட்டு சேருவதை
ஒரு பரவச நிலையில் பார்க்கிறது. பாரி வள்ளலின்
“பசை” தேர்தலுக்கு அளப்பிலா உதவியாக
இருக்கும் அல்லவா !
பல சமயங்களில் தகுதியும், திறமையும்
இல்லாதவர்களிடம் –
பதவியும், அதிகாரமும் இருப்பதைக் கண்டு
நான் ஆதங்கப்பட்டிருக்கிறேன்.
இப்போதோ – “இப்பேற்பட்ட”

திறமைசாலிகளிடம்

ஆட்சியும் அதிகாரமும் கிடைத்தால் -என்ன
விளைவுகள் நிகழுமோ என்று நினைத்து
அஞ்சுகிறேன் …!!!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to லாட்டரி -கிங் PLUS வரி கட்ட விரும்பாத பாரி வள்ளல்…!!!

  1. சைதை அஜீஸ்'s avatar சைதை அஜீஸ் சொல்கிறார்:

    படித்தவன் தவறு செய்தால் அய்யோ என்று போவான்

  2. kinarruthavalai's avatar kinarruthavalai சொல்கிறார்:

    எல்லாம் நமது தலையெழுத்து என்று நொந்துக் கொள்வதை விட வேறென்ன செய்வது?

  3. separa's avatar separa சொல்கிறார்:

    “இப்பேற்பட்ட” திறமைசாலிகளிடம் ஆட்சியும் அதிகாரமும் கிடைத்தால் -என்ன விளைவுகள் நிகழுமோ என்று நினைத்து அஞ்சுகிறேன் …!!என்னவோ முன்னே பின்னே எதுவுமே அறியாதவர் போல என்ன “பில்டப்” வேண்டியிருக்கு? நேற்றுத்தானே ஒரு கேடீஸ்வரரின் கதையை வெளியிட்டீர். அடுத்து வரும் பாஜகவிற்கு இந்த அளவு சாதுர்யம் இல்லையென்ற நிலை வரக்கூடாதென்பதால்தான் இவர் உதவுகிறார். நாட்டில் கட்சிகளின் வருமானத்திற்கு எல்லாவித வரியும் உண்டு என்றொரு நிலைவந்தாலே பாதிப் பிரச்சினை குறையும் இவர்களைப் போன்றோரின் நடவடிக்கையும் கட்டுப்பாட்டிற்குள் வரும். உங்களுக்கே இவ்வளவு தெரிந்தால் ப.சி கட்டுப்பாட்டில் இருக்கும் வருமான வரித்துறைக்கு எவ்வளவு தெரிந்திருக்க வேண்டும். அவர்கள் சும்மா இருக்கவில்லையா?

  4. இரா.வெங்கட்டரமணி's avatar இரா.வெங்கட்டரமணி சொல்கிறார்:

    திரு பாரிவள்ளலின் அசுர வளர்ச்சியும் அபரிமித சொத்தும்
    அதன் மீதான வர் ஏய்ப்பும், மாணவர் ஒருவர் தான் அளித்த
    நன்கொடையை (CAPITATION என்று வாசிக்கவும்) திரும்பக் கேட்டு
    தொடர்ந்த பின்னணியில் வெளிவந்தது. வழக்கு இன்னமும்
    நிலுவையில் உள்ளது. வள்ளலும் அவரது மகனும் “முன்
    ஜாமின்” பெற்றிருக்கிறார்கள்.
    புதிய தலைமுறை அவருக்கு வந்த நெருக்கடிகளை சமாளிக்க
    ஆரம்பிக்கப்பட்டது. (வேறென்ன SRM-ஐ கைமாற்றிவிடச்
    சொல்லி வந்த நிர்பந்தம் தான்). கட்சி, வரவை செலவில் காட்ட
    ஆரம்பிக்கப்பட்டது. திரைப்படங்களை இவர் நேரிடையாக
    தயாரிக்கவில்லை. இவரது ஆசி மற்றும் நம்பிக்கைக்குரிய
    திரு.மதன் (cartoonist இல்லை) என்பவரால் தயாரிக்கப்படுகிறது.
    தனியார் கல்லூரிகளில் CAPITATION என்பது SRM-ல் ஆரம்பித்து
    SRM-இல் முடியவில்லை என்பது கனிமொழியின் நண்பர் Rev.Fr.
    ஜெகத் கஸ்பரின் அருள்மொழி. SRM- not for profit Trust என்கிற
    பெயரில் நடத்தப்படுகிறது.
    மதுரையிலும் திருச்சியிலும் லாட்டரி பிசினஸில் கொடிக்கட்டி
    பறந்த தொழில் முற்றிலுமாக முடங்கிப் போய்விட்டது.
    அனேகமாக சேகரும் ராமதாஸும் வேறு தொழில் செய்து கொண்டு
    இருக்கக் கூடும். காரணம் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியின்
    லாட்டரி ஒழிப்பு நடவ்டிக்கை. ஆனால், மார்ட்டினின் லாட்டரி
    பிசினஸ் தொடர்கிறது. இவர் முந்தைய கலைஞர் ஆட்சியில்
    அகில உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்கும், பொன்னர்-சங்கர்
    (?) திரைப்படத்திற்கும் பேருதவி செய்திருக்கிறார். இந்த ஆட்சியில்
    சிறை. இவரும் கூட SS Music என்கிற சேனலை நடத்துகிறார். அதில்
    முக்கிய நிகழ்ச்சி லாட்டரி குலுக்கல்தான். அதுவும் லைவ்வில்.

    ஒன்று தெரிகிறது. பெரிய அளவில் வளர எதோ ஒரு வகையில்
    அரசியல் தலைவர்களின் “ஆசி” தேவை. வளர்ந்த பின்னர்
    அரசியல் தேவை.

    பணம் வந்த பிறகு, அது எப்படி வந்தது என்பதை யாரும் கேட்க
    மாட்டார்கள். (நீர்பறவை படத்தில் கூட இந்த வசனம் வருகிறது)

  5. V.Ramaiah's avatar V.Ramaiah சொல்கிறார்:

    திரு காவிரிமைந்தன் அவர்களே,
    வணக்கம்.

    ஊட்டியில் செய்தியாளரிடையே பேசிய
    பாஜக தலைவர் இல.கணேசன் சொல்லி இருக்கிறார்-

    “அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளையும் பாஜக
    எதிர்க்கிறது. ஆனால் நல்ல கொள்கையுடய
    தேமுதிகவை நாங்கள் வரவேற்கிறோம். தேமுதிக
    தலைவர் விஜயகாந்துக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர்
    ராகுல் காந்தி பிறந்த நாள் வாழ்த்து செய்தி அனுப்பியதன்
    மூலம் தேமுதிகவை காங்கிரஸ் தனது பக்கம் இழுக்க
    முயற்சி செய்கின்றது”.

    தேமுதிக வைப் போலவே நல்ல கொள்கையுடைய
    இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைப்பது பற்றி
    இல.கணேசன் ஏன் ஒன்றும் கூறவில்லை ?
    உங்களுக்கு எதாவது தோன்றுகிறதா ?

  6. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    வருக நண்பரே,

    இந்திய ஜனநாயக கட்சியைப் பொறுத்த வரை
    அதன் ஒரே (option) நிலை பாஜக வுடன்
    கூட்டு சேருவது என்பது தான். எனவே
    இந்த கூட்டைப் பற்றி முடிவெடுக்க பாஜக விற்கு
    இப்போது அவசரமில்லை.

    ஆனால் தேமுதிக வுடன் கூட்டு வைத்துக் கொள்ள
    காங்கிரஸ் முயற்சிக்கிறது. தேமுதிக வுடன்
    கூட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்று
    தமிழக பாஜக வும் விரும்புவதால் காங்கிரசின் நிலை
    அதற்கு எரிச்சலை உண்டு பண்ணுகிறது.

    ஆனால் பாஜக டில்லி தலைமை எந்த அளவிற்கு
    இந்த கூட்டணிகளில் விருப்பம் காட்டுகிறது
    என்பது இதுவரை வெளிப்படையாகத் தெரியவில்லை.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • separa's avatar separa சொல்கிறார்:

      காங்கிரசுக்கோ பாஜகவிற்கோ தமிழகத்தைப் பொறுத்தவரை சுவரொட்டி ஒட்டும் அளவிற்குக் கூட கடைநிலைத் தொண்டர்கள் என்றுமே இல்லை நடுத்தர மக்களை நம்பிப் பயனில்லை. புத்தி மாறிக் கொண்டே இருப்பவர்கள் மேட்டுக்குடியினர் வாக்களிக்க வர மாட்டார்கள். எனவே கை கொடுப்பது இந்தக் கடைநிலைத் தொண்டர்களே. கழகங்கள் மாற்றி மாற்றி இலவசங்களைத் தருவதே இந்தத் தொண்டர்கள் நிரந்தரமாக “கடைநிலை” தொண்டர்களாக இருக்க வேண்டுமென்பதற்காகவே.
      காங்கிரசுக்காவது, யாராவது மேடை கொடுத்தால் வாய் வலிக்குமளவிற்குப் பேசும் பேச்சாளர்கள் இருக்கிறார்கள் ஆனால் பாஜகபவிற்கு அதுவும் இல்லை. எனவே கலைஞரின் கழகம் ஊழலில் சிக்கித் தவிக்கும் நிலையில், பாஜக அதனுடன் இணைவது கடினம்.. அகில இந்திய அளவில் பிரதமர் கனவில் இருக்கும் அ இ அ தி மு க மதச் சார்பின்மை கட்சி பாஜக என்று அதனைச் சேர்த்துக் கொள்ளாத வகையில், தேமுதிகவுடன் இணைவது மட்டுமே இருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு
      காங்கிரசளவிற்கு பணம் தர பாஜக முன்வராது என்பதால், தேமுதிக காங்கிரசை நாடும். தமிழகத்தில் காங்கிரசுக்கு நேரடியாக திமுக தோழமையும் (கூட்டுக் களவாணி என்பதால் வேறு வழியில்லை) வாக்கினைப் பிரிக்க தேமுதிகவிற்கு (முன்பு செய்தது போல) மறைமுகமாக பண உதவி செய்வதால் அதன் தோழமையும் கிடைக்கும் தேமுதிகவிற்குப் பாராளுமன்றம் தேவையில்லை என்பதால் வெற்றி பற்றிக் கவலைப்படாமல் அ இ அ தி மு க மற்றும் பாஜகவின் வாக்கு வங்கியைப் பிரிக்க வேலை செய்யலாம் எல்லோருக்கும் வெற்றி செத்துப் போவது பாஜக மற்றும் திமுக மட்டுமே. .

  7. srini's avatar srini சொல்கிறார்:

    sir, when are you going to write about the famous historical food security bill and the heart attack drama…?

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      thank you Srini.

      I collected lot of data on this subject with an idea of
      writing an article.

      But I am afraid – I may (also ..!) get heart-attack if once again
      I have go thro the ordeal of writing an article on this ….!!!
      (It is causing so much of agony and pain even to think )

      ( But – we shall defenitely discuss about this !!)

      With all best wishes,
      Kavirimainthan

  8. separa's avatar separa சொல்கிறார்:

    I may (also ..!) get heart-attack “”– மாரடைப்பு வருவதற்குக் காரணம் ரத்தத்தில் கொழுப்பு சேர்ந்து, ரத்தம் ஓடும் குழாய்களில் அடைப்பு உண்டாவதே. அதன் அடிப்படை காரணம் நல்ல ஊட்டச்சத்துள்ள ஆனால் விரைவில் செரிமானம் ஆகாத ஆகாரம் மற்றும் ஓடியாடி வேலை செய்ய வேண்டாத சொகுசான வாழ்க்கை எனவே இப்படிச் சொல்லும் இவர்கள் எல்லோரும் வறுமைக் கோட்டிற்கு மேலிருப்பவர்கள் என்று முடிவு செய்வது விஞ்ஞானபூர்வமான முடிவு. எனவே இனிமேல் யார் யாருக்கு மாரடைப்பு வருகிறதோ (அரசியல்வியாதிகள் விதி விலக்கு) அவர்கள் எல்லோரும் வறுமைக் கோட்டிற்கு மேலிருப்பவர்கள் எனத் தீர்மானிக்கப்பட வேண்டும் இதற்காக “வறுமைக் கோட்டு அடையாள அட்டை” ஒன்று தயாரிக்கப்பட்டு, ரு 1500 கோடி செலவில் அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும். இதற்காக மக்கள் வருடா வருடம் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் எனவே சில பல கோடிகளில் தனியார் மருத்துவ மனைகளில் அரசு செலவில் இலவசமாக கண்காணிப்பு இயந்திரங்கள் நிறுவ இம்மன்றம் முடிவு செய்கிறது. இந்த விதத்தில் அனைத்து மக்களும் வருடா வருடம் மருத்துவப் பரிசோதனை செய்யவும், விஞ்ஞான பூர்வமாக வறுமைக் கோட்டினை வரையறுக்கவும் இயலுமென்பதால், இந்த திட்டத்தை அம்மையார் உடல் நலம் சரியில்லாத காலத்து நினைவாக அமுல்படுத்துவோம்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.