அம்பானி என்ன பொய்யரா..?இருக்காதே ..! அவர் பெரும் பணக்காரர் ஆயிற்றே ..!!

அம்பானி என்ன பொய்யரா..?  இருக்காதே ..! அவர் பெரும் பணக்காரர் ஆயிற்றே ..!! anil-tina பணக்காரர் என்றால், பெருந்தொழிலதிபர் என்றால் – எதையும் செய்யும் துணிச்சல் தானாக வந்து விடுகிறது. எவ்வளவு அசால்டாக பதில் சொல்கிறார்..! இந்தியாவின் டாப் டென் பணக்காரர்களில் ஒருவர், சர்வசக்தியுள்ள தொழிலதிபர் – சிபிஐ யிடம் கொடுத்த வாக்குமூலத்தை கோர்ட்டில் இல்லவே இல்லை என்கிறார். ஒரு கம்பெனியை அவருடையது தானே என்று கேட்டால் நினைவில்லை என்கிறார். 2005ல் அந்த கம்பெனிக்கு வங்கிக் கணக்கு துவங்க அப்ளிகேஷன் கையெழுத்து போட்டது நீங்கள் தானே என்று பேப்பரைக் காட்டினால், கையெழுத்து என்னுடையது தான் ஆனால் கம்பெனி என்னுடையதா இல்லையா என்பது எனக்கு நினைவு இல்லை என்கிறார். உங்களுடன் கூட போடப்பட்டிருப்பது உங்கள் மனைவியின் கையெழுத்து தானே என்று கேட்டால் – இருக்கலாம் (இல்லாமலும் இருக்கலாம் …!!) என்கிறார். குற்றவாளிக் கூண்டிலேற்றி இருக்க வேண்டியவர்களை சாட்சியாக கூப்பிட்டது எப்படி ? வேறெந்த நாட்டிலாவது இப்படி நடக்குமா ? நேற்று முன்தினம் நடந்த விசாரணையில் பல்டி அடித்து விட்டதால் “hostile witness” ஆக மாறி விட்டதாக சிபிஐ தெரிவித்தது. ஸ்வான் டெலிகாம் பற்றி தான் கேள்விப்பட்டதே இல்லை என்றும் அதைப் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லி விட்டார். (ஸ்வான் கம்பெனியில் அனில்அம்பானியின் RADAG கம்பெனிக்கு 9.9% பங்கு உள்ளது எனவே இது அவர்களது பினாமி கம்பெனி என்பது சிபிஐ யின் வாதம்.) இதில் வேடிக்கை என்னவென்றால் ஸ்வான் டெலிகாம் கம்பெனிக்கு புதிதாக ஒரு வங்கிக்கணக்கு துவங்கும் விண்ணப்ப பாரத்தில், அனிலும் அவரது மனைவி(முன்னாள் நடிகை) டினா அம்பானியும் தான் கையெழுத்து போட்டிருக்கிறார்கள் ! “நீங்கள் நிறைய விஷயங்களை மறந்து போகிறீர்கள்- கொஞ்சம் நினைவு படுத்திப் பாருங்கள்” என்று நீதிபதி கூறுகிறார். அப்படியும் வழிக்கு வராததால், “பொய் சாட்சி கூறுவதன் விளைவுகள் பற்றி தெரியுமா” என்று நீதிபதி கேட்கிறார். “என் மீது வழக்கு தொடரப்படலாம். நிரூபிக்கப்பட்டால், தண்டனையும் விதிக்கப்படலாம் – நான் நன்கு அறிவேன்” என்கிறார் தொழிலதிபர் ! அவரைப் பின் தொடர்ந்து மறுநாள் சாட்சி கூறும் தர்ம பத்தினியும் “அய்யோ – கம்பெனிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் – கம்பெனிகளைப் பற்றி எல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது. நான் சும்மா வீட்டை கவனித்துக் கொள்ளும் மனைவி மட்டுமே. என்ன – கூட கொஞ்சம் சமூக சேவையும் செய்வேன் (!). ஒரு ஆஸ்பத்திரி கூட நடத்தி வருகிறேன். 57 படுக்கைகள் உள்ள பெரிய ஆஸ்பத்திரி. நீங்கள் அவசியம் வர வேண்டும் (!!) என்று கோர்ட்டிலேயே – நீதிபதியையே அழைக்கிறார். என்ன துணிச்சலாக பதில் சொல்கிறார் பாருங்கள் – என்று சொல்கிறார் என் நண்பர் ஒருவர். துணிச்சலுக்கென்ன – பாதி மந்திரிகள் இவர் கோட் பாக்கெட்டில். மீதி மந்திரிகள் இவர் அண்ணன் கோட் பாக்கெட்டில். ஏன் வராது துணிச்சல் ? அரசாங்கத்தையே பாக்கெட்டில் வைத்திருக்கும் இவர்களைக் கண்டு தான் மற்றவர்கள் கொள்ள வேண்டும் அச்சம் ! oru suggestion – இந்தியாவில் உள்ள டாப் 100 பணக்காரர்களின் சொத்துக்கள் அனைத்தையும் அரசுடைமை ஆக்கினால் என்ன ? நம் நாட்டின் பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடுமே !!

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to அம்பானி என்ன பொய்யரா..?இருக்காதே ..! அவர் பெரும் பணக்காரர் ஆயிற்றே ..!!

  1. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    அச்சம் என்பது மடமையடா
    அஞ்சாமை அம்பானியின் உடமையடா…………..

    டா என்பது பாட்டு வரிகள் என்பதால் இப்படி எழுத வேண்டியதாகி விட்டது.

    இன்றைய ஜனாதிபதி முதல் மற்ற அத்தனை அமைச்சர்கள் முதல் சொன்ன வார்த்தைகள்

    பெரும் தொழில் அதிபர்களை அரசாங்கம் தொந்தரவு செய்யக்கூடாது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும்.

  2. ஜோதிஜி திருப்பூர்'s avatar ஜோதிஜி திருப்பூர் சொல்கிறார்:

    நம் நாட்டின் பாதி பிரச்சினைகள் தீர்ந்து விடுமே !!

    காது வலி போய் கழுத்து வலி வந்த கதையாக மாறிவிடும்

  3. இரா.வெங்கட்டரமணி's avatar இரா.வெங்கட்டரமணி சொல்கிறார்:

    பணக்காரன் பின்னாலும் பைத்தியக்காரன் பின்னாலும் எப்போதும்
    பத்து பேர் இருப்பார்கள் என்பது பிரசித்தமான சொல்வடை. அரசியல்
    மற்றும் ஆட்சி அதிகார ஆசியும் பெற்றுள்ள பெரும் பணக்கார
    தொழிலதிபன் பின்னால் “எல்லோரும்” இருப்பார்கள் (?!)
    போலிருக்கிறது.
    தொழில் செய்வோர் ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு மாட்டைத்
    தூக்கி ஆட்டில் போட்டு என்கிற வகையிலான “பித்தலாட்ட”
    வேலைகளைச் செய்து வருவது எங்கும் வாடிக்கை தான்.
    தமிழ் நாட்டு அரசியல்வாதி ஒருவர், அரசு சொத்தை வாங்கிய வழக்கில்
    அவருடைய கையொப்பத்தை கோர்ட்டில் மறுத்ததை, திருவாளர் அம்பானி
    அல்லாது அவருடைய வழக்கறிஞருக்கு நினைவுக்கு வந்திருக்க
    வேண்டும்.
    பணக்காரர்களின் மனைவிகள் மற்றும் பெண் பிள்ளைகள் குடும்பம்
    சார்ந்த தொழில் அமைப்புகளில் பெரும்பாலும் பெயரளவு பங்குதாரர்கள்
    என்பதை கவனத்தில் கொள்ளவும்.
    “இம்மாதிரியான” பிரச்சனைகளில் ஏன் தீவிரமான நடவடிக்கைகள்
    இல்லையென்றால், இது தனி நபர் சார்ந்த பிரச்சனையில்லை;
    பல ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்க்கை பிரச்சனையென
    ஆட்சியாளர்களும் வங்கியாளர்களும் பதில் உரைப்பர். நம்மில் பலரும்
    அதை நம்புவோம். எனவே, இம்மாதிரியான ஆசாமிகளின் சொத்துக்களை
    அரசுடமையாக்குவது என்பது இந்தியாவில் சாத்தியமில்லை.

  4. ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

    அம்பானி இவ்வாறு உரைத்திருப்பதில் கோபப்பட என்ன இருக்கிறது? நடப்பது மக்கள் ஜனநாயகமாக இருந்தால்தான் கோபப்பட முடியும். பெரு முதலாளிகளின் ஆட்சி நடக்கும் நாட்டில் இதெல்லாம் சகஜம் சார்! அம்பானிதான் பிரதமர், டாடா தான் நிதி மந்திரி. இப்போது ஆட்சியில் இருப்பதாக நாம் சொல்லிக்கொள்பவர்களெல்லாம் இவர்களின் சேவகர்களாக இருப்பவர்கள்தாம். இவர்கள் யாரைச் சொல்லியும் குற்றமில்லை. இந்த ஜனநாயக பொருளாதார அமைப்பு அவ்வடிப்படையிலானது. மரத்தில் நெல்லிக்கனி வேண்டுமென்றால் நெல்லி மரம் நட்டிருக்க வேண்டும். தெரியாமல் கருவேலையை நட்டிருந்தால் விபரமறிந்த பின்னாவது வெட்டியெறிய வேண்டும். அல்லது கருவேலையில் நெல்லிக்கனியை எதிர்பாராமலாவது இருக்க வேண்டும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.