இது fraud இல்லை -ஆனால் fraud மாதிரி… – வக்கீலின் விளக்கம் !

உச்சத்தில் இருக்கும் அரசியல் தலைவரின்
மாப்பிள்ளை என்றால் சும்மாவா ?
அவர் எது செய்தாலும் தவறு இல்லை – சப்பைக் கட்டு
கட்ட ஹரியானா முதலமைச்சரிலிருந்து
உச்சநீதிமன்றத்தின் டாப் லாயர் வரை – அத்தனை
பேரும் காத்திருக்கிறார்கள் -சேவை செய்ய …!
மாப்பிள்ளையைப் பொறுத்த வரையில் –
சட்டங்கள் என்றுமே மீறப்படுவதில்லை –
just கொஞ்சம் (சில சமயங்களில் நிறைய)
வளைக்கப்படுகின்றன -அவ்வளவே !!
ஏற்கெனவே சில தடவை இந்த topic பேசப்பட்டது.
ஆனால் -அவர் அதிருஷ்டம் –
ஒவ்வொரு முறையும் இந்த topic மேலே
வரும்போதெல்லாம், வேறேதாவது
கிளம்பி ( அல்லது கிளப்பப்பட்டு) இதை அழுத்தி
விடும்.
இப்போது பேசப்படும் விவகாரம் –
ஒரு தனியார் (அவரும் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தான்)
கம்பெனிக்குச் சொந்தமான 3.5 ஏக்கர் நிலத்தை
7.5 (ஏழரை கோடி ரூபாய் )க்கு வாங்குகிறார்.
பத்திரத்தில் கார்பரேஷன் வங்கி செக் ஒன்றின்
எண் எழுதப்பட்டு, அதன் மூலம் ஏழரை கோடி ரூபாய்
(ஒரே செக் மூலம்) பணம் கொடுக்கப்பட்டு
விட்டதாக காட்டப்படுகிறது. இதில் விற்றவர்,
வாங்கியவர் இருவரின் கம்பெனி சார்பாகவும்
கையெழுத்திடப்பட்டு இருக்கிறது. இவர் கொடுத்ததாகச்
சொல்கிறார். அவர் பெற்றுக் கொண்டு விட்டதாக
சொல்கிறார்.
வேடிக்கை என்னவென்றால், நிலத்தின் விலையாக
7.5 கோடி ரூபாய்க்கு செக் கொடுப்பவரின் கணக்கில்
இருப்பு வெறும் ஒரு லட்சத்து சொச்சம் ரூபாய் தான்.
ஒரு லட்சத்தை கணக்கில் வைத்துக் கொண்டு
7.5 கோடி ரூபாய்க்கு செக் கொடுக்கிறார். நிலத்தை
விற்றவர் அந்த செக்கை வங்கியில் டெபாசிட்
செய்திருந்தால் – பணம் இல்லை என்று சொல்லி
(bounce ஆகி) செக் திரும்ப வந்திருக்கும்.
கணக்கில் பணம் இல்லாமல் ஒருவர் –
bounce ஆகக்கூடிய செக்கை கொடுப்பது
சட்டப்படி கிரிமினல் குற்றம்.
இவர் மாட்டாததற்கு காரணம் – செக்கை வாங்கியவர்
அதை டெபாசிட் செய்யவே இல்லை – பணமாக்க
முயற்சிக்கவே இல்லை (இதை, காங்கிரஸ் எம்.எல்.ஏ.
தனது தலைமையின் உறவுக்கு கொடுத்த காணிக்கை என்று
நீங்கள் கருதினால் நான் என்ன செய்ய முடியும் ?)
இதை ஆழமாகத் தோண்டி விசாரித்த IAS அதிகாரி
கண்டுபிடித்த மற்றுமொரு கிரிமினல் விஷயம் –
பத்திரத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் செக் நம்பர்
மேற்படி மாப்பிள்ளையின் வங்கிக் கணக்குக்கு
உரித்தானது இல்லை !
வேறொரு கம்பெனியின் செக் நம்பரை எழுதி,
அதன் மூலம் பணம் கொடுக்கப்பட்டு விட்டது என்று
மாப்பிள்ளை சொல்ல,
ஆமாம் ஆமாம் எனக்கு பணம் கிடைத்து விட்டது
என்று அந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும்
(ஜால்ரா) அடித்துச் சொல்லி இருக்கிறார்.
இப்படி ஒரு லட்சம் ரூபாய் மூலதனம் வைத்து
தொழில் துவக்கிய மாப்பிள்ளை இப்படி ஓசியிலேயே
ஏழரை கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை
வாங்கியதோடு – விட்டாரா?
அந்த நிலத்தை, வியாபார நோக்கில் ப்ளாட் போட்டு
விற்க, அரியானா அரசின் அனுமதியைப் பெற்று
(அங்கும் தான் காங்கிரஸ் முதல்வர், தலைமைக்கும்
அதன் சொந்தங்களுக்கும் சேவை செய்யவென்றே
தண்டனிட்டு காத்திருக்கிறாரே !) –
59 கோடி ரூபாய்க்கு ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனிக்கு
விற்று விடுகிறார்.
இப்படி 5 காசு செலவழிக்காமல் 59 கோடி ரூபாய்
பண்ணும் வித்தை உங்களில் யாருக்காவது தெரியுமா?
தெரியும் என்றால் –
நீங்கள் இருக்க வேண்டிய இடம் இது இல்லை …!
இதைப்பற்றி மாப்பிள்ளையின் வக்கீல் –
(உச்சநீதிமன்றத்தில் தொழில் செய்யும் டாப் டென்
வக்கீல்களில் ஒருவர்)-
ஒரு பேட்டியில் கூறும்போது, “கணக்கில் ஒரு லட்சம்
ரூபாய் வைத்துக் கொண்டு ஏழரை கோடிக்கு செக்
கொடுப்பதனாலேயே இது குற்றமாகி விடாது.
அந்த செக் திரும்ப வந்ததா ?
அந்த செக் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு
bounce ஆனால் தான்,
அப்போது கூட – செக்கை வாங்கியவர் புகார்
கொடுத்தால் தான் அதை குற்றம் என்று சொல்ல முடியும்”
அதாவது சுருக்கமாக வக்கீல் சொல்வது
என்னவென்றால் –
இது fraud இல்லை -fraud மாதிரி … !!!
இதெல்லாம் தலைமைக்கு பிடித்து,
அல்லது தெரிந்து தான்
செய்கிறார்கள் என்று யாரும் நினைத்து விடக்கூடாது.
ஏனெனில் அவர்கள் எல்லாம் தியாகச்செம்மல்கள்.
எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து,
இந்நாட்டு மக்களை உய்விக்கவென்றே இங்கு
வந்து குதித்திருக்கிறார்கள். மக்களுக்காக உழைப்பதே
அவர்களது வாழ்நாள் லட்சியம்.
நேற்று அவர்களே “தேசீய உணவு பாதுகாப்பு
திட்டத்தை” துவங்கி வைக்கும்போது
சொல்லி விட்டார்கள் –
“இந்த நாட்டின் ஒவ்வொரு ஏழையையும் பசியின்
கொடுமையிலிருந்து பாதுகாப்பது” தான் அவர்களது
லட்சியமென்று.



//எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து,
இந்நாட்டு மக்களை உய்விக்கவென்றே இங்கு
வந்து குதித்திருக்கிறார்கள்.//
athu intha makkalukku
puriyavillaiye sir.
Sir, Any news about First citizen of india….
nothing at present please.
with all best wishes,
kavirimainthan
//இந்த நாட்டின் ஒவ்வொரு ஏழையையும் பசியின்
கொடுமையிலிருந்து பாதுகாப்பது//
ப.சி.? 🙂
“பசியின் கொடுமை” = ப.சி.யின் கொடுமை …?
என்ன கொடுமை இது !- பிரமாதம் ரிஷி –
எனக்குத் தோன்றவே இல்லையே ..!
-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்
Loot in all possible manner