கொள்ளை போகிறது நாடு – பதை பதைக்கிறோம் நாம் – சிரிக்கிறார்கள் பொறுப்பில் இருப்பவர்கள் …

கொள்ளை போகிறது நாடு –
பதை பதைக்கிறோம் நாம் –
சிரிக்கிறார்கள் பொறுப்பில் இருப்பவர்கள் …

japan volcano

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கடந்த
6 நாட்களில் மட்டும் 5% குறைந்திருக்கிறது.

ஒரே நாளில் பங்குச் சந்தையில்
இரண்டு லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்.

நினைத்தபோது இந்த நாட்டிற்கு உள்ளே கொண்டு
வந்து விட்டு, நினைத்தபோது கூட்டமாக டாலரை
தூக்கிக்கொண்டு பறக்கும் அந்நிய முதலீட்டாளர்கள்.

போன வருடம், அதற்கு முந்தைய வருடம் எல்லாம்
அமெரிக்க பொருளாதார நிலையுடன் ஒப்பிட்டு தங்கள்
காலரை உயர்த்தி விட்டுக் கொண்ட பொறுப்பில் இருக்கும்
பொருளாதாரச் சீமான்கள் எல்லாம் இன்று ரூபாய்
மதிப்பிழப்பைப் பற்றி யாராவது கேள்வி கேட்டாலே
“don’t create panic” என்று அதட்டுகிறார்கள்.

ரூபாயின் மதிப்பு குறைந்தால் –
அன்றிரவே பெட்ரோல் விலை, டீசல் விலை
ஏறி விடுகிறது.அதன் காரணமாக காய்கறி விலை
ஏறி விடுகிறது. அரிசி, பருப்பு, எண்ணை,
எரிவாயு – என்று சகலமும்
விலையேறி விடுகின்றன.

இவற்றை பற்றி எல்லாம்
இந்த நாட்டின் குடிமக்கள் கலவரப்படாமல் –
மந்திரிகளா கவலைப்படுகிறார்கள் ?

இந்த அதல பாதாளச் சரிவிலும், பளபளவென்ற
மேக்கப் முகத்துடன் சிரித்துக்கொண்டே தான் போஸ்
கொடுக்கிறார்கள். இந்த நாட்டின் கதியை நினைத்து
நாம் தான் பதறுகிறோம்.

ஒன்றா இரண்டா – எதைச் சொல்வது இந்த
சீரழிவுக்கு காரணமாக ?

போன வாரம் வெளிவந்த ஒரே ஒரு விஷயத்தை
மட்டும் இங்கு கொஞ்சம் விவரமாக சொல்கிறேன் –
1.76 லட்சம் கோடி ரூபாய் –
வங்கிகளின் திரும்ப வராத கடன்கள் ..!!!
பங்குச் சந்தை பல்டி அடிக்காமல் என்ன செய்யும் ?
பாராளுமன்றத்தில்(ராஜ்ய சபா) மத்திய அமைச்சர்
( Minister of State for Finance
Namo Narian Meena ) கொடுத்துள்ள
தகவலின்படி, ஜூன் 2013 -ல் பொதுத்துறை
வங்கிகளிடம் நிலுவையில் இருந்த வாராக்கடன்களின்
மொத்த தொகை 1.76 லட்சம் கோடி ( repeat –
1.76 LAKH crores ).

பொதுத்துறை வங்கிகள் என்றால் –
அரசு வங்கிகள் – அதாவது நம் வங்கிகள் !

நாம் கொடுத்துள்ள கடன் 1.76 லட்சம் கோடி
திரும்ப வரவில்லை என்றால் எப்படிப் பதறுவோம்.. ?
மந்திரி – கூலாக, பார்லிமெண்டிலேயே –
இதில் கவலைப்பட ஏதுமில்லை. நிலவரம் தொடர்ந்து
கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது என்கிறார்.

1.76 லட்சம் கோடி பொது மக்களின் பணம் அம்பேல்
என்பது இவருக்கு கவலைப்பட வேண்டிய விஷயம்
இல்லையாம் ! கூர்ந்து கவனித்து வருகிறாராம் !
நாம் நமக்குள் பேசிக்கொள்ளும்போது –
அவன் அப்பன் பணமா பாழாப்போகுது,
கவலைப்பட என்போம் –
இங்கு நடப்பதை என்னவென்று சொல்லலாம்..?!

இந்த பணம் கடன் தானே – எப்படியும் வசூல்
செய்து விடுவார்களே என்று நினைப்பவர்களுக்கு –

பொதுத்துறை வங்கிகளின் – வாராக்கடன்களின் வசூலிப்பு
நிலவரம் எப்படி இருக்கிறது பார்க்கிறீர்களா ….?

2011-12- முழு நிதியாண்டில் 79,117 வழக்குகளின்
மூலம் ரூபாய் 1700 கோடியும்

2012-13-ல் 97,701 வழக்குகளின் மூலம்
ரூபாய் 1905 கோடியும்-

வசூல் செய்திருக்கிறார்கள். 1.76 லட்சம் கோடி எங்கே ?
1905 கோடி எங்கே என்று நினைக்கிறீர்களா ?

வழக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்தாலே உங்களுக்கு
புரிந்து விடும். இவை அனைத்தும் உங்களைப்போல,
என்னைப்போல உள்ள வீட்டுக்கடன், வாகனக் கடன்
வாங்கிய அப்பாவி கடன்காரர்கள் தான்.

பெருச்சாளிகளை எல்லாம் –
இவர்கள் தொடுவார்களா ?
எத்தனையோ முறை முயன்றாகி விட்டது –
இந்த பெருங்கடன்காரர்களின் பட்டியலை கொஞ்சம்
வெளியிடுங்களேன் என்று. ஊஹூம் – அசையவே
இல்லை எந்த வங்கியும் (நிதியமைச்சகம் அனுமதி
கொடுத்தால் தானே ?)

கல்விக் கடன் வாங்கி விட்டு திரும்ப கொடுக்க முடியாத
மாணவர்களின்/பெற்றோர்களின் புகைப்படங்களையும்,
விலாசத்தையும் (பெண்களாக இருந்தால் கூட) சற்றும்
தயங்காமல் வெளியிடும் வங்கிகள் இத்தகைய
பெருங்கடன்காரர்களின் பட்டியலை வெளியிட மறுப்பதேன் ?

முதல் காரணம் –
அத்தனை பேரும் பெரும் பணக்காரர்கள்,
பெரும் தொழிலதிபர்கள், பெரும் வணிகர்கள்.

இரண்டாவது காரணம் – அவர்களுக்கு
கொடுக்கப்பட்ட கடன் – வரைமுறை தாண்டியது.
விவரம் வெளிவந்தால், கடன் கொடுத்த வங்கியும்
மாட்டிக்கொள்ளும்.

மூன்றாவது – மிக முக்கியமான – காரணம் –
அவர்கள் அதிகாரமிக்க, ஆட்சியில் இருக்கும்,
அரசியல்வாதிகளுக்கு வேண்டியவர்கள்.

மார்ச் 2009-ல் 4.87 % ஆக இருந்த இந்த
வாராக்கடன்களின் நிலை –
மார்ச் 2012-ல் 8.24% ஆக உயர்ந்து,
மார்ச் 2013-ல் 10% ஆக வந்து நிற்கிறது.

யார் பொறுப்பு இவற்றிற்கெல்லாம் …?
வெள்ளையர்களிடமிருந்து மீட்ட சுதந்திரத்தை
இன்று இந்த கொள்ளையர்களிடம் பறிகொடுத்து விட்டு
தவிக்கிறது இந்த நாடு.

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

14 Responses to கொள்ளை போகிறது நாடு – பதை பதைக்கிறோம் நாம் – சிரிக்கிறார்கள் பொறுப்பில் இருப்பவர்கள் …

  1. என்ன செய்யலாம்….?

    • Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

      கழுதைக்குப்போட்டாலும்,காங்கிரசிற்கு போடாதீர்!

      • ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

        களவாணிப் பய கட்சி பேதமின்றி நீக்கமற நிறைந்திருக்கிறான்.
        ஆயுதம் தூக்குவதொன்றுதான் ஒரே வழி!
        அல்லது அமைதியாய் அவரவர் வழியில் அவரவரை பாதுகாத்துக்கொண்டு செல்ல வேண்டும். இவ்வழியில் இப்போது பயணித்துக் கொண்டிருக்கிறேன். வெள்ளைக்காரனுக்கெதிராய் திரண்டதுபோல் கூட்டங்கூட்டமாய் மக்கள் திரள் இக்கொள்ளைக்கூட்டத்திற்கெதிராய் ஆயுதங்களுடன் ஒருநாள் அணி சேரும். அப்போது நானும் இணைந்து கொள்வேன். மற்றபடி ஓட்டுக்கட்சிகளை நம்பிக்கொண்டிருப்பவர்கள் நம்பிக்கொண்டே இருங்கள். வாழ்த்துக்கள்.

  2. Rajagopalan.R.'s avatar Rajagopalan.R. சொல்கிறார்:

    காவிரிமைந்தன்,

    செய்தியைப் பாத்தவொடனே உங்களைத்தான் நெனச்சேன்.
    கரெக்டா போட்டுட்டீங்க. ஓட்டுக் கேக்க வருவாங்க ஓட ஓட வெரட்டணும்.

    • ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

      ஓட்டுக் கேட்டு வருபவர்களை ஓட ஓட விரட்டுவதுதான் தண்டனை என்று அப்பாவியாய் ஒருவர் சொல்லும்போது, மக்கள் என்றுதான் திருந்தப்போகிறார்களோ என்று பெருமூச்சுதான் பதிலாக வருகிறது!!!!

    • ரிஷி's avatar ரிஷி சொல்கிறார்:

      ஓட ஓட விரட்டுவதென்பதெல்லாம் ஒரு தண்டனை என்று நினைக்கும் அப்பாவிகள் நிறைந்திருக்கும் உலகில்… மாற்றம் எப்படி வரும் என நினைக்கையில் பெருமூச்சுதான் வருகிறது..!!!

  3. Bagath's avatar Bagath சொல்கிறார்:

    Really so fedup to read this content.. Can you please advice what to do? even though we can avoid voting, it will be taken as KALLA VOTTU. I have been following ur posts. All are really good. I have a small question why do not u start a party. You have good views & knowledge.

  4. Paramasivam's avatar Paramasivam சொல்கிறார்:

    If they collect even 20% of dues from big defaulters, the recovery will be substantial. This can be done by publishing those big defaulters in all national/regional newspapers and attaching their property (at least upto the dues) Instead, we are taking all recovery measures from poor/ unemployed education loanees, vehicle/home loanees, loans of all sundry small amounts. People are losing confidence in our economy.

  5. bandhu's avatar bandhu சொல்கிறார்:

    இன்னும் எந்த அளவுக்கு ஆபத்தான நிலையில் நம் பொருளாதாரம் இருக்கிறது என்று யாரும் புரிந்து கொண்டது போல தெரியவில்லை. அமெரிக்காவில் பத்து வருடத்திற்கு ஒரு முறை தவறாமல் வரும் ரிசஷன் மூலம் நிலையில்லா தன்மை குறித்த புரிதல் பெரும்பாலான மக்களுக்கு இருக்கிறது. நம் நாட்டில் முழு அளவில் ரிசஷன் நாம் பார்க்காதது. மக்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று பயமாக இருக்கிறது. இருந்தா ராஜா. இல்லன்னா பக்கிரி என்ற நிலைமைக்கு எத்தனை பேர் பழகிக்கொள்ள முடியும்? பயமாக இருக்கிறது!

  6. separa's avatar separa சொல்கிறார்:

    “நிலக்கரிச் சுரங்கத்தை ஏலத்திற்குதானே விட்டோம் அவர்கள் இன்னும் தோண்டியெடுத்து விற்கவில்லையே எப்படி நஷ்டமாகும்” என்று கேட்டவரை இன்னமும் நம் நிதியமைச்சராக வைத்திருக்கையில், உங்களுக்கு இப்படியொரு அச்சம் ஏன் வந்தது?
    நாளையே நம் ப.சி “வங்கியில் கோடிக்கணக்கில் பணம் பாதுகாப்பாக வைத்திருக்க பாதுகாப்பு வசதிகளுக்காக நிறைய செலவழிக்க வேண்டும் எனவே ஊரிலுள்ள பெரிய மனிதர்களிடம் கொடுத்து வைத்திருக்கிறோம் அவ்வளவுதான் ஜப்பானில் (வங்கிகள் நம்) பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க வாடகை வசூலிக்கிறார்கள் தெரியுமா? இங்கே அரசு வங்கிகளின் பணத்தை இப்பெரிய மனிதர்கள் பாதுகாப்பாக வைத்திருக்க எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கவில்லை என்பதாவது தெரியுமா?” என்று சொன்னால் (சொல்வார்) நீங்கள் என்ன செய்வீர்கள்? இப்படி கண்டதுக்கெல்லாம் கவலைப்பட்டால், அல்சர் வந்து கஷ்டப்படுவீர் தெரியுமா?

  7. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    T,N,சேஷனுக்கும்,மண்மோகன் சிங்கிற்கும் உள்ள வேறுபாடு என்ன?

    T.N சேஷன் பதவி ஏற்கும் வரை இந்திய தலைமைதேர்தல் அதிகாரி பதவி எந்த முக்கியத்துவமும் இல்லாத பதவி என நினைத்தோம்.

    மண்மோகன் சிங் பதவி ஏற்கும் வரை இந்திய பிரதம மந்திரி பதவி மிக முக்கியத்துவம் வாய்ந்த பதவி என நினைத்தோம்.

  8. c.venkatasubramanian's avatar c.venkatasubramanian சொல்கிறார்:

    Nenju porkkudhilliye——–we r INDIANS

  9. Ganpat's avatar Ganpat சொல்கிறார்:

    மொத்த 70 கோடி வாக்களர்களில் 5 கோடி பேர் சௌகரியமாக வாழ்கிறர்கள்
    மீதம் 65 கோடி பேர் மிகுந்த சிரமத்தில் வாழ்கிறார்கள்.

    சௌகரியமாக வாழ்பவர்கள்..தொழிலதிபர்கள்,ஊடக உரிமையாளர்கள்,அரசியல் வாதிகள்,அரசு அதிகாரிகள்,professionals மற்றும் வியாபாரிகள்.

    சிரமத்தில் வாழ்பவர்கள் எழ்மைக்கோட்டிற்குள் இருப்பவர்கள்.விவசாயிகள்,வேலைஅற்றோர் ஏனையோர்.

    நம் துரதிருஷ்டம்,முதல் பிரிவினருக்கு தங்கள் நிலை தொடர யார் ஆட்சிக்கு வரகூடாது என தெரிந்திருக்கிறது.இரண்டாம் பிரிவினருக்கு தங்கள் நிலை மாற யார் ஆட்சிக்கு வரவேண்டும் என தெரியவில்லை.

    கெட்டு குட்டிச்சுவராகிப்போன அரசு நிர்வாகத்தை புதியதாக வரும் காங்கிரஸ் இல்லாத அரசும் அவ்வளவு எளிதில் சரி செய்யமுடியாது.அந்த நம்பிக்கையில் தான் காங்.இந்த முறை பதவி இழப்பினும்,அடுத்த தேர்தலில் மீண்டும் வருவது உறுதி என் நம்பிக்கையுடன் உள்ளது.

    இதே அடிப்படையில்தான் DMK and AIADMK மாறி மாறி மாநில ஆட்சியைப்பிடித்து,நம்மை சூறையாடிக்கொண்டிருக்கின்றன.

    நிலைமை மாற இன்னும் பல வருடங்கள் ஆகும்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.